வானம் நீல நிறமாயிருப்பது ஏன்?
விண்வெளியின் பரந்த அண்டப்பகுதியை இருள் மூடிக்கொண்டிருக்கிறது. மனித கண்களுக்குப் புலனாகிற விண்வெளியின் அண்டப்பகுதியை, பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்தையே நாம் வானம் என்று அழைக்கிறோம். இந்த ஆகாய விரிவான வானத்தை அண்ணாந்து பார்க்கையில், அநேகர், ‘வானம் நீல நிறமாயிருப்பது ஏன்?’ என்று வியப்படைந்திருக்கின்றனர். ஏன் கண்ணுக்குப் புலனாகிற நிறமாலையின் மற்ற அடிப்படை நிறங்களான ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாயில்லை?
சூரிய ஒளி பல்வேறு அலைநீளங்களுடைய ஒளியைக் கொண்டுள்ளது. இவை கண்ணுக்குப் புலனாகும் நிறமாலையின் பல்வேறு நிறங்களாக காணப்படுகின்றன. இந்த ஒளி அலைகளில் மிக நீளமானது சிவப்பாகவும், மிக குறுகியது நீலம் அல்லது ஊதாவாகவும் இருக்கிறது. நம்முடைய வளிமண்டலத்திலுள்ள வாயு மூலக்கூறுகள் நீண்ட அலை நீளத்தையுடைய சிவப்பு ஒளியைவிட குறுகிய அலை நீளத்தையுடைய நீல ஒளியை அதிகமாக சிதறல் அடையச் செய்கிறது. இதன் விளைவாக தெளிவான வானம் நீல நிறமுடையதாய் இருக்கிறது. தூசிப் போன்ற திடப்பொருட்களின் எண்ணற்ற துகள்களைக் கொண்ட, பூமியைச் சுற்றியுள்ள காற்று ஒரு கண்ணாடியில் பட்டெறிவது போல காண்புநிலை தோற்றத்தைக் கொடுக்க ஒளியை சிதறல் அடையச் செய்கிறது.
மறுபட்சத்தில், சூரியன் தொடுவானுக்கு அருகில் இருக்கையில், சூரிய ஒளி கண்ணை வந்தடைய அதிகமான அளவு வளிமண்டலத்தினூடாக பயணம் செய்கிறது. நீளமான அலைகள் குறுகிய அலைகளைவிட சிறப்பாக ஊடுருவி வானத்தை ஆழமான ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற தோற்றத்தை எடுத்துக்கொள்ளச் செய்கிறது. காற்றிலுள்ள திட துகள்கள் சிவப்பு நிறத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கின்றன. அதேவிதமாகவே புகை அல்லது அடர்த்தியான மேகங்கள் வானத்தை நிரப்ப, எல்லா வண்ணங்களின் ஒளி அலைகளும் சிதறல் அடைகின்றன. இது வானத்தைச் சாம்பல் நிறமாகத் தோன்றச் செய்கிறது.
வளிமண்டல வானங்களில் காணப்படும் கடவுளுடைய வியப்பூட்டும் இந்த ஒளியின் உபயோகம் சங்கீதக்காரனின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”—சங்கீதம் 19:1. (g90 8/22)