உடல் வாழ்க்கையை அனுபவிப்பதற்கென்று அதிசயமாக உண்டாக்கப்பட்டது!
விஞ்ஞானிகள் நமது உடல் அதிசயமாக உண்டாக்கப்பட்டிருப்பதாக, வடிவத்திலும் அமைப்பிலும் அது உண்மையில் ஒரு விந்தையாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். நமது உடலின் உறுப்புக்கள் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கையில் நமக்கு முழுமையாக ஆச்சரியமாக இருக்கும் காரியங்களை நம்மால் செய்யவும் அனுபவிக்கவும் முடிகிறது.
உதாரணமாக, உங்கள் கைகளைப் பாருங்கள். வேலையில் அல்லது விளையாட்டில் அநேக காரியங்களைச் சாதிப்பதற்காக நேர்த்தியாக அவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுதேகூட உங்கள் கைகள் நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தப் பத்திரிகையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனவா? அப்படியென்றால் பத்திரிகையை உங்கள் கண்களிலிருந்து சரியான தொலைவில் வைப்பதற்காக உங்கள் மேற்கைகள் சரியான கோணத்தில் வளைந்து இருக்கின்றன. அது உங்கள் கைகளிலிருந்து நழுவி விடுவதைத் தடை செய்ய உங்கள் விரல்கள் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கின்றன. நீங்கள் பக்கத்தைத் திருப்புகையில், அவை என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதைச் செய்ய அந்த விரல்கள் மூளையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கைகள் இல்லாமலிருப்பது எத்தனை இழப்பாக இருக்கும்!
இந்தப் பக்கங்களை வாசிப்பதில் உங்கள் கண்களும்கூட ஈடுபட்டிருக்கின்றன. பக்கத்திலுள்ள வார்த்தைகள் மற்றும் படங்களின் உருவங்களை உங்கள் கண்களுக்குள்ளும் பின்னர் உங்கள் மூளைக்குள்ளும் கொண்டு செல்வதில் வியப்பூட்டும் நரம்புகளின் ஒரு பின்னல்வலையும் மற்ற உடல் உறுப்புக்களும் உட்படுத்தப்படுகின்றன. கண்கள் உருவாக்கும் மின்னாற்றல் அலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இங்கே இவை ஏட்டிதழிலுள்ள உருவங்களுக்கு ஒத்திருக்கும் காட்சி பதிப்புக்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. நமது கண் பார்வை எத்தனை முக்கியமானது, அது இழக்கப்படும்போது எத்தனை துயர் மிகுந்ததாயிருக்கிறது!
மனித மூளையின் எடை சுமார் மூன்று பவுண்டுகள் மட்டுமே. அது உங்கள் கைக்குள் அடக்கமாயிருக்கும் வகையில் சிறியதாயிருக்கிறது. ஆனால் அது ஒரு விந்தையாக, பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கல் வாய்ந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது. அது நம்மை யோசிக்கவும், பார்க்கவும், உணரவும், பேசவும் நமது இயக்கங்களை இணைக்கவும் செய்கிறது. புரிந்துக் கொள்ள இயலாத இந்த மூளையின் காரணமாக நாம் அழகிய சூரிய அஸ்தமனங்களை, சுவையான உணவை, நமது முகத்தை வந்து தொடும் கோடைத் தென்றலை, பிரமிக்க வைக்கும் மலைகளின் மகத்துவமான காட்சிகளை, குழந்தையின் சிரிப்பை, மலரின் மணத்தை, நாம் நேசிக்கும் ஒருவரின் ஸ்பரிசத்தை நம்மால் அனுபவிக்க முடிகிறது. இவைகளில் பெரும் பகுதியை நமது பங்கில் உணர்வுள்ள எந்த ஒரு முயற்சியும் இல்லாமலேயே நாம் அனுபவிக்கிறோம். இந்த ஆச்சரியமான மூளையில்லாமல், நாம் எதையுமே அனுபவிக்க இயலாது.
சங்கீதக்காரனின் வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்”பட்டிருக்கிறேன்!—சங்கீதம் 139:14.
என்றபோதிலும் இந்த எல்லா நேர்த்தியான சாதனங்களும் இருந்தபோதிலும், உடல் கடைசியாக ஆற்றலிழந்துவிடும் ஒரு நேரம் வந்துவிடுகிறது. நாம் வியாதிப்பட்டு, முதுமை அடைந்து பின்னர் மரித்துவிடுகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகில் அத்தனை துன்பங்கள் இருப்பதால் நாம் ஆரோக்கியமாக இருக்கையிலும்கூட வாழ்க்கையை அவ்வளவாக அனுபவிக்க முடிவதில்லை. தொல்லைத்தரும் இந்த நிலைமைகள் எப்போதுமே இருக்குமா? அல்லது நமது உடல்கள் வியாதி, வயோதிபம் மற்றும் மரணத்தின் நாசங்களிலிருந்து விடுபட்டதாக இப்பொழுது நாம் அனுபவிப்பதைவிட பூமியின் மீது முடிவில்லா வாழ்க்கையை மிகவும் முழுமையான ஒரு கருத்தில் அனுபவித்துக் களிக்கும் பொருட்டு என்றுமாக நிலைத்திருப்பதற்காக அவை உண்மையில் வடிவமைக்கப்பட்டனவா?
விழித்தெழு! இந்த விஷயங்களை ஆராயவிருக்கின்றன. நமது வியத்தகு உடல் உறுப்புக்களில் ஒரு சிலவற்றை நாம் சிந்திப்போம்: கை, கண் மற்றும் மூளை. (g88 6⁄8)