புதிய ஏய்ட்ஸ் அபாயங்கள்?
ஒரு வேளை உலகம் முழுவதிலும் இன்று 100 இலட்சத்திலிருந்து 200 இலட்சம் ஆட்கள் ஏய்ட்ஸ் நோயுண்டுபண்ணும் வைரஸ் உடையவர்களாக இருக்கின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கானடா மாநிலத்தில் 10,000-லிருந்து 20,000 பேர் வரையாக இதனால் பாதிக்கப்பட்டிருக்க, இந்நோய் பரவுவது குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். ஆகவே சுகாதார அமைச்சரகம், “ஏய்ட்ஸ் பற்றிய உண்மைத் தகவல்” என்ற தலைப்பில் ஒரு சிற்றேட்டை தயாரித்திருக்கிறது.
சிற்றேடு, அடிக்கடி கேட்கப்படும் எச்சரிப்புகளாகிய, பாதிக்கப்பட்ட துணைவர்களோடு பாலுறவுக் கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட ஒருவரால் பயன்படுத்தப்பட்ட ஊசியை அல்லது விசைப்பீற்று மருந்தூசியை உபயோகிப்பதற்கு எதிராகவும் எச்சரிக்கைகளைக் கொடுக்கிறது. என்றபோதிலும் வைரஸ் இரத்தத்திலிருப்பதால் தோலில் துளைப்போடும் மற்ற கருவிகளில் விசேஷமான ஆபத்து இருப்பதை அது விளக்குகிறது. உதாரணமாக காதைக் குத்துவதற்கும், பச்சைக் குத்துவதற்கும் துளையிட்டு மருத்துவம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் கருவிகளை பாதிக்கப்படுவதற்குரிய சாத்தியமான வழிமுறைகளாக சிற்றேடு குறிப்பிடுகிறது. “பாதிக்கப்பட்ட ஒருவரின் சவரக்கத்தியை அல்லது பற்குச்சியை பயன்படுத்துவதும்கூட ஆபத்தானது” என்கிறது சிற்றேடு. (g88 6⁄22)