உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 4/8 பக். 4-7
  • அபாயத்தில் இருப்பது யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அபாயத்தில் இருப்பது யார்?
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆபத்திலிருப்பவர்கள்
  • இரத்தமேற்றுதலில் அபாயங்கள்
  • நம்பிக்கையான இரத்த பரிசோதனை?
  • எய்ட்ஸ் ஏன் இவ்வளவு பரவலாகப் பரவியிருக்கிறது?
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ் பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டியது
    விழித்தெழு!—1992
  • எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினருக்கு ஒரு பேராபத்து
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 4/8 பக். 4-7

அபாயத்தில் இருப்பது யார்?

ஏய்ட்ஸ் கிருமி எங்கிருந்து வந்தது? அது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது என்பதே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மருத்துவ வட்டாரங்களின் கருத்தாக இருந்து வருகிறது. ஆப்பிரிக்க பச்சை நிறமுள்ள ஒரு குரங்கில் இதே போன்ற கிருமி இருக்கிறது. இந்தக் கிருமிகளுள்ள குரங்குகளோடு நெருங்கிய தொடர்பின் மூலமாக அந்தக் கிருமி மனிதர்களுக்குள்ளும் சென்றுவிட்டது என்பதாக கருதப்படுகிறது.

ஆனால் ஏய்ட்ஸுக்குக் பலியானவர்கள் முதலில் ஐக்கிய மாகாணங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். கிருமி அவர்களை எவ்விதமாக அடைந்திருக்கக்கூடும்? ஹாயிட்டி தீவின் மூலமாக என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. 1970-ம் பத்தாண்டுகளின் மத்தியில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியின்போது ஹாயிட்டி தீவினர் அநேகர் ஆப்பிரிக்காவுக்கு வந்திருந்தார்கள். பின்னால் ஹாயிட்டியில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, இந்தக் கிருமிகளுள்ள ஆண்புணர்ச்சிக்காரர்கள் ஏய்ட்ஸை நியு யார்க்குக்கு எடுத்துச் சென்றார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறது.

என்றபோதிலும் இந்தக் கருத்துக்களை ஆப்பிரிக்கர்கள் பலமாக எதிர்த்து இவற்றை “விளம்பர சூழ்ச்சி” என்பதாக அழைக்கிறார்கள். ஆப்பிரிக்க மருத்துவ பிரசுரத்தின் பதிப்பாசிரியரான டாக்டர் V.A. ஒரின்டா உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலா பயணிகளே ஆப்பிரிக்காவுக்கு ஏய்ட்ஸைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதாக குறிப்பிடுகிறார். ஏய்ட்ஸ் கிருமி எங்கிருந்து வந்தது என்பது நிச்சயமாக எவருக்கும் தெரியாது என்பது யாவரும் ஒப்புக்கொள்ளும் விஷயமாகும்.

எப்படியிருந்தாலும், உயிரைப் போக்கும் அந்த நோய், பல வருடங்களாக, ஜக்கிய மாகாணங்களில், ஒளிந்திருந்து, அமைதியாகவும் பயங்கரமாகவும் ஏராளமாகவும் பெருகி வந்திருக்கிறது. வெகு சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தானே அடையாளங் கண்டு கொள்ளப்பட்ட பின்பு இது வேகமாக உலகின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பதாக மாறிவிட்டிருக்கிறது.

ஆபத்திலிருப்பவர்கள்

உடலின் நெகிழ்ச்சி பொருட்கள், குறிப்பாக இரத்தம் மற்றும் விந்து ஆகியவற்றின் பரிமாற்றத்தின் மூலமாகவே ஏய்ட்ஸ் பரவுகிறது. ஏய்ட்ஸ் கிருமிகளுள்ள ஒரு நபரோடு பாலுறவுக் கொள்ளும் எவரும் ஆபத்திலிருக்கிறார்கள். ஆண்புணர்ச்சிக்காரர்களின் பாலின பழக்கங்கள் குறிப்பாக அவர்களை இதனால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகச் செய்கிறது. ஆம் ஐக்கிய மாகாணங்களில், ஏய்ட்ஸ் நோயாளிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆண்புணர்ச்சிக்காரர்கள் ஆவர். சிலர் ஏய்ட்ஸ்-ஐ சிற்றின்ப நோய் என்று அழைப்பதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.

பின்பு 1982-ல் ஆண்புணர்ச்சி பழக்கமில்லாத ஒருவர் ஏய்ட்ஸ் நோய்க்குப் பலியானார். இவர் போதை மருந்தை நரம்பிற்குள் செலுத்திக்கொண்டு அதைத் துர்பிரயோகம் செய்யும் பழக்கமுள்ளவராக இருந்தார். கிருமிகள் சுத்தமாக ஒழிக்கப்படாத ஊசிகளை உபயோகிப்பதன் மூலம் அவர்கள் போதை மருந்தை மட்டுமல்லாமல், அவர்களுடைய தோழர்களின் இரத்ததிலுள்ள ஏய்ட்ஸ் கிருமிகளையும் ஊசியின் மூலம் உட்செலுத்திக் கொண்டார்கள். போதை மருந்தை நரம்பிற்குள் செலுத்திக் கொள்ளும் ஆட்கள், ஏய்ட்ஸால் எளிதில் தாக்கப்படும் இரண்டாவது தொகுதியாக சீக்கிரத்தில் ஆனார்கள்.

ஏய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தத்தைக் குடித்துவிட்டு வரும் கொசுக்களால் கடிக்கப்படுகிறவர்களுக்கு இந்த ஆபத்து இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துமா? ஏய்ட்ஸ் இவ்விதமாக கடத்தப்படுவதற்கு ஆதாரம் எதுவுமில்லை. “கறைப்படிந்த ஊசியை உபயோகிக்கும் உடல் நல பராமரிப்பாளர்கள், கொசு கொண்டுச் செல்லக்கூடியதைக் காட்டிலும் அதிகமான இரத்தத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பிருக்கிறது” என்பதாக ஏய்ட்ஸ் ஆராய்ச்சி தலைவர் டாக்டர் ஹேரால்ட் ஜாபி குறிப்பிடுகிறார். “ஆனால் அது சாத்தியமில்லை என்று சொல்லலாம் என்று நினைக்காதீர்கள்” என்பதாகவும் அவர் சொல்லுகிறார்.

ஆண்புணர்ச்சிக் காரர்களையும், போதை மருந்தை துர்பிரயோகம் செய்பவர்களையும் தவிர, ஏய்ட்ஸ் நோயால் தாக்கப்படக்கூடிய மற்றொரு தொகுதி, இரத்தத்தை எளிதில் இழந்துவிடும் ஆட்கள். இவர்களுக்குப் பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையில் Factor VIII என்றழைக்கப்படும் ஒரு கெட்டியான திரவம் கொடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்யும் 5000 வித்தியாசமான நபர்களின் இரத்த ஊனீரிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. “அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வரும் Factor VIII கெட்டி திரவத்தைப் பயன்படுத்தும் தேசங்களில் இதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது” என்பதாக பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை தி லான்செட் குறிப்பிடுகிறது. ஆகவே ஜெர்மனியில் ஏய்ட்ஸ் கிருமிகளுக்கு எதிர்பொருளைக் கொண்டிருந்த, எளிதில் இரத்தத்தை இழந்துவிடும் ஆட்களின் சதவிகிதம் 1980-ல் பூஜ்யத்திலிருந்து 1984-ல் 53 சதவிகிதமாக உயர்ந்தது.

ஆனால் ஏய்ட்ஸ் கிருமி சிறு நீரிலும் உமிழ்நீரிலும் கண்ணீரிலுங்கூட கண்டுப் பிடிக்கப்பட்டிருக்கிறது. உடலின் இந்த நெகிழ்ச்சி பொருட்களின் பரிமாற்றத்தினால் இந்த நோய் வரக்கூடுமா? இவ்விதமாக எவருக்கும் ஏய்ட்ஸ் வந்ததாக எந்த ஆதாரமுமில்லை. இத்தகைய நெகிழ்ச்சி பொருட்களினால் அது கடத்தப்படுவது சாத்தியமில்லை என்பதே இன்றைய மருத்துவ கருத்தாக இருக்கிறது. என்றபோதிலும் வாஷிங்டன் D.C.யிலுள்ள நரம்பியல் வல்லுநர் டாக்டர் ரிச்சர்ட் ரெஸ்டெக் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த நெகிழ்ச்சிப் பொருட்களில் கிருமிகள் இருக்குமானால், அது இந்த வழிகள் மூலமாகவுங்கூட கடத்தப்படலாம் என்று நம்புவதே அறிவுள்ளதாக இருக்கிறது.”

கடந்த நவம்பர் மாதம், தி நேஷனல் கேத்தலிக் ரிப்போர்டர், ஏய்ட்ஸ் பரவலாக இருப்பது, நற்கருணையின்போது ஒரே திராட்சரச குவளையில் அனைவரும் பங்குகொள்வதைக் குறித்துக் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதாக தெரிவித்தது. ஜார்ஜியாவிலுள்ள அட்லான்டாவில், ஐக்கிய மாகாண நோய்க் கட்டுப்பாடு மையத்தில் இந்தப் பழக்கத்தைக் குறித்து விசாரணை நடந்தபோது, தற்காலிக நிர்வாகி டாக்டர் ரோனால்ட் R. ஹாப்கின்ஸ் ஏய்ட்ஸ் இவ்விதத்தில் கடத்தப்படுவதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதாக குறிப்பிட்டார். என்றபோதிலும், ஆதாரமில்லாதது தானே, “ஆபத்து இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது” என்பதாகவும் அவர் சொன்னார்.

ஏய்ட்ஸினால் அவதிப்படுகிறவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதனால் ஏய்ட்ஸ் பரவுவதற்குச் சாத்தியம் இருப்பதன் காரணமாக, ஆட்கள் கவலைப்படுவது ஆச்சரியமாக இருக்கிறதா? என்றபோதிலும் உடன் மாணவர்களின் மூலமாக தங்களுடைய பிள்ளைகளுக்கு ஏய்ட்ஸ் வராது என்பதாக பெற்றோர்கள் அநேக சமயங்களில் உறுதியளிக்கப்படுகிறார்கள். இதற்கு அத்தாட்சியாக, ஏய்ட்ஸ் நோயாளிகள் அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களை முத்தமிட்டு அதே தட்டில் உணவு உட்கொண்டு, ஒரே கழிப்பறை வசதிகளை உபயோகித்த போதிலும், அவர்களுக்கு இந்த நோயை கடத்துவதில்லை என்பதாகச் சொல்லப்படுகிறது. என்றபோதிலும், நியு யார்க் எழுத்தாளர் வில்லியம் F. பக்லே, Jr. பெற்றோரின் கவலைக்குறித்து அனுதாபப்பட்டு பின்வருமாறு சொல்லுகிறார்:

“[பிரபல ஏய்ட்ஸ் நோயாளி] ராக் ஹட்சன், ஒரு பில்லி சூனிய மருத்துவரின் குடிசையிலிருந்து அல்ல, ஆனால் ஒரு நவீன வசதியுள்ள மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டபோது, அவருக்கு சிகிச்சை அளித்த தாதிகள் அனைவரும் அவர்களுடைய உடைகளை எரித்துவிடும்படியாகச் சொல்லப்பட்டனர். நோயாளிக்கு உணவு, தாள் மற்றும் ப்ளாஸ்டிக் தட்டில் பரிமாறப்பட்டது. அவர் ப்ளாஸ்டிக் முள் கரண்டியையும், கரண்டியையும் உபயோகித்தார். இவை பின்னால் எரிக்கப்பட்டன.” நோய் தொற்றிக்கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதை மருத்துவமனை பணி ஆட்கள் நம்பவில்லையென்றால், ஏன் இத்தனை முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள்?

இரத்தமேற்றுதலில் அபாயங்கள்

மறுபட்சத்தில் ஏய்ட்ஸ் கிருமிகளுள்ள ஒரு நபரின் இரத்தத்தை ஏற்றிக்கொள்வதன் முலம் இது பரவக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. இரத்ததானம் செய்பவர்கள் ஏய்ட்ஸ் கிருமிகளை உடலில் கொண்டிருந்து ஆனால் அவர்களுக்கு நோய்குறிகள் எதுவும் இல்லாவிட்டாலுங்கூட மற்றவர்களுக்கு ஏய்ட்ஸை இவர்கள் கடத்தக்கூடும்.

சான் பிரான்ஸிஸ்கோவில் ஒரு குழந்தைக்குப் பிறந்தவுடனே பல முறைகள் இரத்தமேற்றியபோது, பின்னால் அதற்கு ஏய்ட்ஸ் நோய் வந்தது. இந்தக் குழந்தைக்கு இரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் அந்தச் சமயம் ஆரோக்கியமாகவே இருந்தபோதிலும் ஏழு மாதங்கள் கழித்து ஏய்ட்ஸ் நோயாளியானார். இரத்த தானம் செய்தவரும் அவருடைய இரத்தத்தைப் பெற்றுக்கொண்ட குழந்தையும் இறந்தனர்.

ஆஸ்திரேலியாவில் உரிய காலத்துக்கு முன்பே பிறந்துவிட்டிருந்த 4 குழந்தைகளுக்கு இரத்தமேற்றிய பின் ஏய்ட்ஸ் நோய் வந்துவிட்டது. நால்வருக்கும் இரத்த தானம் செய்த அந்த நபருக்கு ஏய்ட்ஸ் நோய் எதிர்பொருள் இருப்பது பின்னால் தெரியவந்தது. நால்வரில் மூவர் ஏழு மாதங்களுக்குள் இறந்தனர்.

ஐக்கிய மாகாணங்களில், ஜார்ஜியா நகரில் ஒரு பையன் ஒரே ஒருமுறை இரத்தமேற்றிக் கொண்ட பின்னர் ஐந்தரை வருடங்களில் ஏய்ட்ஸினால் மரித்தான். இரத்ததானம் செய்தவர் ஒரு ஆண்புணர்ச்சிக் காரராக இருந்தார். இரத்த தானம் செய்த சமயத்தில் இவருக்கு நோய்க் குறிகள் எதுவுமில்லை. ஆனால் பின்னால் இவர் இரத்தத்தைச் சோதித்தபோது, ஏய்ட்ஸ் கிருமிகள் இருப்பது தெரிய வந்தது. ஜார்ஜியா மருத்துவ மனையின் மருத்துவர்கள் பினவருமாறு தெரிவிப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது: “இந்த நோயாளிக்கு இரத்தமேற்றிய பின்பு இரத்த தானம் செய்த இந்த நபரின் இரத்தம் பலருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”—The New England Journal of Medicine.—மே, 1985, பக்கம் 1256.

ஆய்வு ஒன்று பின்வருமாறு அறிக்கைச் செய்தது. ஏறக்குறைய 40 சதவிகிதமான நோயாளிகள் இரத்தமேற்றுதலோடு சம்பந்தப்பட்ட ஏய்ட்ஸ் நோயாளிகள் இவர்கள் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதினராகவும் இருக்கின்றனர். அநேகமாக இவர்கள் பக்கவழி இரத்த நாளம் போன்ற அறுவை சிகிச்சைச் சம்பந்தப்பட்ட இரத்தமேற்றுதலை அதிகமாக ஏற்றுக்கொண்டவர்கள்.—The New England Journal of Medicine—ஜனவரி 12, 1984.

ஏற்றப்பட்ட இரத்தத்திலிருந்து ஏய்ட்ஸ் கிருமிகளைப் பிரித்தெடுப்பதற்கு நிச்சயமான வழி ஏதாவது இருக்கிறதா என்ற முக்கியமான கேள்வியை இது எழுப்புகிறது.

நம்பிக்கையான இரத்த பரிசோதனை?

ஏய்ட்ஸுக்கு காரணமான கிருமிகளைத் தனிப்படுத்தியபோது, ஒரு மனிதன் ஏய்ட்ஸினால் ஒரு தடவைப் பாதிக்கப்பட்டும், நோய் எதிர்ப்புப் பொருட்களை விருத்தி செய்து கொண்டும் இருக்கிறானா என்பதை இரத்தப் பரிசோதனையின் மூலம் அறிந்துகொள்வது கூடிய காரியமானது.

இதனால் பிரச்னைத் தீர்த்துவிட்டதாக பத்திரிக்கையாளரும் அநேக மருத்துவ ஆட்களும் நினைத்ததாக தோன்றியது. உதாரணமாக 1985, ஆகஸ்ட் 12-ன் நியூஸ்வீக், இந்தப் பரிசோதனை, “பெரும்பாலான வல்லுநர்களின் கருத்துப்படி, ஏய்ட்ஸ் இனிமேலும் இரத்தத்தின் மூலமாக பரவாது என்பதை உறுதி செய்கிறது” என்பதாக குறிப்பிட்டது.

ஆனால் உயர் அபாயப் பிரிவுகளிலுள்ள ஆட்களுக்குக் கொடுக்கப்பட இருக்கும் ஐக்கிய மாகாணங்களின் சமுதாய உடல்நல சேவையின் திருத்தி அமைக்கப்பட்ட கையேடு அதைச் சொல்வதில்லை. மாறாக அது பின்வருமாறு சொல்லுகிறது: “கிருமிகளைக் கடத்தும் அனைவரையும் இந்தப் பரிசோதனையால் கண்டுபிடித்துவிட முடியாது. ஏனென்றால் கிருமிகளை உடலில் கொண்ட, ஒவ்வொருவரும் நோய் எதிர்பொருளைக் கொண்டிருப்பது நிச்சயமில்லை . . . உங்களுக்கு இந்தக் கிருமிகள் இருந்தாலுங்கூட உங்களுடைய இரத்தம் பரிசோதிக்கப்படுகையில், கிருமிகளின் எதிர்பொருளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதுச் சாத்தியமாக இருக்கிறது. அது அவ்விதமாக சம்பவித்தால், அந்த இரத்தமானது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். இந்த நோயாளிகள் HTLV-III மற்றும் ஏய்ட்ஸினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பார்கள்.”

“நோய் எதிர்பொருள் பரிசோதனையின் எதிர்மறையான விடை, அந்த நபர் கிருமிகளிலிருந்து விடுபட்டவராக இருக்கிறார் என்பதற்கு உத்தரவாதமளிப்பதில்லை. . . . இது ஏனென்றால் கிருமிகளால் அண்மையில்தானே ஒருவர் தாக்கப்பட்டிருந்தால், எதிர் பொருட்கள் விருத்தியாகி இராது” என்பதாக மே 1985 ஐக்கிய மாகாணங்களின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பத்திரிகை FDA கன்சூமர் சொன்னது.

பெருநகர் சுகாதார ஹார்வர்ட் பள்ளியில் புற்றுநோய் உயிரியல் துறையின் தலைவர் டாக்டர் மைரன் எஸக்ஸ் பின்வருமாறு சொன்னதாக நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. 90 சதவிகிதம் [பாதிக்கப்பட்ட இரத்தத்தை] இந்தச் சோதனையால் கண்டுபிடித்துவிடலாம் என்பது வெகுவாக சாத்தியமற்றதாக இருக்கிறது. என்னுடைய மிகச் சிறந்த யூகத்தின்படி 75-80 சதவிகிதமே இந்தப் பரிசோதனையின் மூலம் கண்டுக் கொள்ளலாம். அதற்கு மேல் முடியுமென்றால் இது எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.”

இந்தப் பரிசோதனை, கிருமிகளைக் கொண்ட எல்லா இரத்தத்தையும் கண்டுபிடிக்க தவறுவது மட்டுமல்லாமல், டைம் பத்திரிகை குறிப்பிட்ட விதமாகவே, “இரத்த பரிசோதனையைப் பெரிய அளவில் செய்வதற்குப் பெரும்பாலான தேசங்களுக்கு இது பெருஞ் செலவை உட்படுத்துவதாக இருக்கிறது.”

நியூஸ் வீக் நடத்திய வாக்கெடுப்பில் பேட்டி காணப்பட்டவர்களில் 21 சதவிகிதத்தினர் அவர்களோ அவர்களுக்கு அறிமுகமான மற்றவர்களோ இரத்தமேற்றுதலைத் தேவைப்படுத்தும் அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ள மறுப்பதாக தெரிவித்தனர். ஒருவேளை அநேக ஆட்கள், பிரபலமாகி வரும் இரத்தமில்லாத அறுவைச் சிகிச்சைத் துறையில் வல்லுநர்கள் கவனமாக திட்டமிட்டு வகுத்திருக்கும் முறைகளைப் பயன்படுத்தும் மருத்துவர்களை இப்பொழுது நாடிச் செல்வார்கள். (g86 4/22)

[பக்கம் 5-ன் படம்]

தன்னில் ஏற்றப்படும் இரத்தத்தில், ஏய்ட்ஸ் கிருமிகள் இல்லை என்று நோயாளி நிச்சயமாயிருக்கக்கூடுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்