எய்ட்ஸ் பெற்றோரும் குழந்தைகளும் அறிய வேண்டியது
துரதிர்ஷ்டவசமாக எய்ட்ஸ் நோய் உள்ள அநேக இளவயதினர் காரியத்தில், எய்ட்ஸ் பற்றி ஒன்றும் அறியாத அநேக வயதுவந்தவர்களின் சமநிலையற்ற சிந்தனையின் காரணமாக அவர்களுடைய பிரச்னைகள் அடிக்கடி கூட்டப்படுகின்றன. அநேகருடைய காரியத்தில் பெற்றோரே தங்கள் சொந்த பிள்ளைகளின் மனங்களை நோயுற்றவர்களுக்கு எதிராக தப்பெண்ணம் கொள்ளும்படி செய்திருக்கின்றனர். மருத்துவர்கள் அபாயமில்லை என்று சொன்ன பிறகும், பள்ளி மேற்பார்வையாளர்களும் தலைவர்களும் எய்ட்ஸ் தொற்றிய மாணாக்கர்களை அனுமதிக்க மறுத்திருக்கின்றனர். ஆகவே HIV தொற்றிய குழந்தைகளையுடைய அநேக பெற்றோருக்கு இரகசியம் என்பதே சங்கேதச் சொல்லாக இருக்கிறது. அவர்கள் பயப்படுகிறார்கள், சிலருடைய காரியத்தில், நல்ல காரணத்தோடே தங்கள் பிள்ளைகள் சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்படுவர், துர்ப்பிரயோகிக்கப்படுவர் அல்லது அதிக மோசமானது நடந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
உதாரணமாக, எய்ட்ஸ் தொற்றப்பட்ட மகளையுடைய ஒரு தாய், அயலகத்தாரினால் பிரச்னை வரும் என்று பயப்பட்டதால் அவர்களுடைய குழந்தைகளுடன் தன்னுடைய குழந்தை விளையாடுவதை தடுத்து நிறுத்தி வைத்தாள். “உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் உங்கள் குழந்தை எய்ட்ஸ் நோயை கொண்டிருக்கிறது என்பதை அறிய நீங்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் ஜனங்கள் விசித்திரமான காரியங்களைச் செய்கிறார்கள்.” அறிக்கைகள் பிரகாரம், இது மிகையாக இல்லை. பெற்றோர் தங்களுடைய சிறந்த நண்பர்கள் மற்றும் அயலகத்தாரால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இருப்பதை உணருவதற்கு பதிலாக அல்லது ஒரு வாழ்த்துதல் சொல்வதற்கு பதிலாக, நண்பர்கள் வீதியில் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றிருக்கின்றனர். எய்ட்ஸ் சம்பந்தமான நிந்தை ஆழ்ந்த தப்பெண்ணங்களை உண்டுபண்ணியிருப்பதால் உரிமையாளர்கள், எய்ட்ஸ் தொற்றப்பட்ட குழந்தையுடன் குடும்பம் உள்ளே பிரவேசித்தபோது, புண்படுத்தும் சொற்களினால் சத்தம் போட்டு, சிற்றுண்டி விடுதிகளை விட்டு வெளியேறியிருக்கின்றனர். தகப்பன்மார் தங்கள் வேலையை இழந்திருக்கின்றனர். மற்றவர்கள் வெடிகுண்டுகளினால் பயமுறுத்தப்பட்டிருக்கின்றனர். இன்னும் மற்றவர்களுடைய விஷயத்தில், அவர்களுடைய வீடுகள் நெருப்பிட்டு கொளுத்தப்பட்டன.
எய்ட்ஸ் உள்ள குழந்தைகள் சகாக்களின் கொடிய நகைச்சுவைக்கு இலக்காகியிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஓர் எய்ட்ஸ் பலியாள், இரத்தமேற்றுதல் மூலம் அந்த நோயை தொற்றிக்கொண்டார். இந்த நபர் பள்ளி நண்பர்களால் ஓர் ஒத்தபாலினபுணர்ச்சிக்காரன் என்று அநேகமுறை குற்றஞ்சுமத்தப்பட்டார். அவர்கள் இப்படி அவரை நிந்திப்பார்கள்: “உண்மையிலேயே, நீ எப்படி எய்ட்ஸ் நோயைப் பெற்றாய் என்று எங்களுக்குத் தெரியும்.” அந்தக் குடும்பத்தினர் தங்கள் சர்ச் அங்கத்தினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டனர். அசிங்கமான மொட்டைக் கடிதங்கள் வந்து சேர்ந்தன. அவர்களுடைய புல்தரை முற்றத்தில் குப்பைக்கூள மூட்டைகள் எறியப்பட்டன. ஒருவர் முன்ஜன்னல் வழியாக ஒரு துப்பாக்கிக் குண்டால்கூட சுட்டார்.
“இது ஒரு மூடிமறைக்கும் காரியம்” என்று எய்ட்ஸ் தொற்றப்பட்ட குழந்தையையுடைய ஒரு தாய் சொன்னார், “அதுவே அவ்வளவு தனிமையைக் கொண்டுவருகிறது.” தி நியூ யார்க் டைம்ஸ் தன்னுடைய குரலைக் கூட்டுகிறது: “எய்ட்ஸ் நோய் நிர்ணயம் செய்யப்பட்ட 13 வயதுக்குட்பட்ட 1,736 அமெரிக்கக் குழந்தைகளில் பெரும்பான்மையினர் தங்களுடைய நோயினால் தனியே ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். தங்களை அவர்கள் வெறுத்து ஒதுக்கிவிடலாம் என்பதால், தங்களுடைய நண்பர்கள் அல்லது பள்ளித்தோழர்கள் ஆகியோரிடமாக தங்கள் நிலையை மறைத்துவைக்க வற்புறுத்தப்படுகின்றனர்.” மேலும், கடைசியாக, தி டொரொன்டோ ஸ்டார் பத்திரிகை இந்தக் குறிப்பை அளித்தது: “ஒரு சிறுவன் மரித்தபிறகும்கூட அநேக குடும்பங்கள் உண்மையை வெளிக்காட்ட பயப்படுகின்றனர், அது குழந்தை இழப்பினால் சேர்ந்து வரக்கூடிய வேதனையையும், தனிமையையும் அதிகரிக்கிறது.”
நீங்கள் அறிய வேண்டியது
எய்ட்ஸ் ஆட்களை மதிப்பதில்லை என்பதை ஒப்புகொள்ள வேண்டும். ஒரு பணக்காரரை, ஏழையை, இளைஞரை, மிகவும் சிறியவரை, மற்றும் வயதானவரை, இப்படி எல்லாரையும் தொற்றக்கூடும். சில தேசங்களில், இளவயதினரிடையே எய்ட்ஸைப் பற்றிய ஒரு மோசமான, மேலோட்டமான கருத்தே இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு “வளரிளமைப் பருவத்தினருக்கு எய்ட்ஸ் எவ்வளவு ஒரு பெரிய அபாயம் என்பதைப் பற்றிய எந்த ஒரு கருத்தும் இல்லை” என்பதாக நியூ யார்க் நகர எய்ட்ஸ் நிபுணர் ஒருவர் சொன்னார்.
உதாரணமாக, ஒரு பெரிய அமெரிக்க நகரின் இளம் வயதினரிடையே நடந்த ஆய்வு, ஆரம்பத்திலேயே சிகிச்சையளித்தால், எய்ட்ஸ் நோயை குணமாக்கக்கூடும் என்று சுற்றாய்வுக்கு உட்பட்டவர்களில் 30 விழுக்காடு பேர் நம்பினர் என்பதை வெளிக்காட்டியது. எய்ட்ஸ் நோய்க்கு இதுவரைக்கும் எந்தப் பரிகாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்ப்பட்ட ஒருவரை வெறுமென தொடுவதன் மூலமோ அல்லது அவருடைய சீப்பைப் பயன்படுத்துவதன் மூலமோ ஒருவர் எய்ட்ஸ் நோயினால் தொற்றப்படுவதில்லை என்பது மூன்றில் ஒரு பகுதியினருக்கு தெரியவில்லை. ஐக்கிய மாகாணங்களின் மற்றொரு பகுதியில், 860 வளரிளமைப் பருவத்தினரிடையே 16 முதல் 19 வரை வயதுள்ளவர்களிடையே நடந்த சுற்றாய்வு, 22 விழுக்காட்டினர், எய்ட்ஸ் கிருமி ஆண்விந்துவினால் கடத்தப்படக்கூடும் என்பதை அறியாதிருந்தனர் மற்றும் 29 விழுக்காட்டினர், அது பெண்ணின் கருப்பைவாய்க் குழாயில் உண்டாகும் கசிவுகளினால் கடத்தப்படக்கூடும் என்பதை அறியாதவர்களாக இருந்தனர்.
தொற்றப்படுவதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதியிலும், மற்றும் எய்ட்ஸ் உண்மையில் தோன்றியிருக்கும் காலத்திலும், பலியாட்கள் நோய்பரப்பும் நிலையில் உள்ளனர் மற்றும் எய்ட்ஸ் கிருமியை மற்றவர்களுக்குக் கடத்தவும்கூடும். இருந்தபோதிலும், சரீரத்திற்கு வெளியே அந்தக் கிருமி சீக்கிரமாய் செத்துவிடுவதால், எய்ட்ஸ் பலியாளோடு கைகுலுக்குவதன் மூலமோ அல்லது அவரைக் கட்டித் தழுவுவதன் மூலமோ அது கடத்தப்பட முடியாது. அதேபோலவே, சிலர் பயம் கொள்ளுவது போல, அந்தக் கிருமி கழிப்பிட இருக்கைகளில் உயிர்வாழ முடியாது. ஓர் எய்ட்ஸ் பலியாள் உபயோகப்படுத்திய தண்ணீர் ஊற்றிலிருந்து உடனே தண்ணீர் குடிப்பதால் எய்ட்ஸ் இல்லாத மாணாக்கர்கள் அந்த நோயினால் தொற்றப்படக்கூடும் என்பதாக பள்ளி முதல்வர்களும், மேற்பார்வையாளர்களும் பயந்தார்களா? தொற்றப்படாத நபரின் இரத்த ஓட்டப்பாதைக்குள் பிரவேசிக்கக் கிருமிக்கு எந்த ஒரு வழியும் இல்லையாதலால் இந்தப் பயங்கள் நியாயமற்றவை என்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர்.
ஊசிகள் உபயோகப்படுத்தப்படுவதால் காதுகள் குத்துவது பற்றிய அபாயத்தைக் குறித்து மருத்துவர்கள் அடிக்கடி வினவப்படுகின்றனர். நோய் தொற்றப்பட்ட சாதனம் உபயோகப்படுத்தப்பட்டால் அது எய்ட்ஸ் கிருமி தொற்றப்படுவதற்கான ஒரு வழியாக இருக்கக்கூடும் என்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். முத்தமிடுவதைப் பற்றி என்ன? “எய்ட்ஸ் உடையவரோ அல்லது HIV-யினால் தொற்றப்பட்டவரோ உங்களை முத்தமிட்டால் மற்றும் உங்கள் உதடுகளில் அல்லது வாயில் இரத்தம் கசியும் வெட்டுக்காயம் அல்லது புண் இருந்தால் அது தொற்றலாம். ஆனால் அது அநேகமாக நேரிடாது,” என்று ஒரு நிபுணர் கூறினார். இருப்பினும், அது சாத்தியமானதே.
சந்தேகத்திற்குட்பட்ட குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினாலும்கூட ஒரு மருத்துவரின் முழுமையான பரிசீலனையும், இரத்தப் பரிசோதனையும்தான் நீங்கள் தொற்றப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய ஒரே வழியாகும்.
மேலும், கடைசியாக, நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் பெற்றோருக்கு உண்மையுள்ளவர்களாக இருங்கள். மற்றவர்கள் எல்லாருடைய உதவியையும் நீங்கள் இழந்தாலும், அவர்களே உங்களுக்கு உறுதுணையாக இருந்து, உங்களுக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் கொடுப்பார்கள். ஞானமாயிருந்து போதமருந்தையும் விவாகத்துக்கு முன்னான பாலுறவையும் வேண்டாமென சொல்லுங்கள். அது உங்கள் உயிரைப் பாதுகாக்கக்கூடும். பாலுறவு மற்றும் நோய் தொற்றப்பட்ட ஊசிகள் மூலமாக எய்ட்ஸ் நோய் தொற்றப்பட்ட அநேக இளைஞர்கள் தாங்கள் கெட்ட கூட்டுறவினால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாகவே, அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் அவர்களுக்கு இப்பொழுது ஆழ்ந்த அர்த்தத்தை உடையதாயிருக்கிறது. “மோசம்போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் (மோசமான கூட்டுறவு, NW) நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்”—சில சமயங்களில், நீங்கள் உங்கள் உயிரையும்கூட இழக்க நேரிடும்.—1 கொரிந்தியர் 15:33. (g91 7⁄22)