மனிதர் தீர்வுகளைத் தடுகின்றனர்
“இரு சாராருக்கும் அழிவு நிச்சயம்” என்றர்த்தப்படும் தி மாட் [MAD - Mutual Assured Destruction] என்ற தத்துவம் நெறிதவறியது. ரஷ்யப் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லுவதற்கு நம் திறமையில் நம் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் ஏதோ பயங்கரமான மற்றும் மோசமானதாயிருக்கிறது. மேலும் அது அதிகக் குற்றமுள்ளதாயிருக்கிறது—அது கூடிய காரியமென்றால்—ஒரு பொதுவான, சரித்திரப்பூர்வமான, நிரூபணம் தேவையற்ற மற்றும் முரண்பாடான விளக்கம் இவற்றின் தேவையை நிறைவேற்றுவதற்காக நம் சொந்த ஜனங்களை அணுவால் அழிக்கப்படுவதற்கு உட்படுத்தும் நிலையை வேண்டுமென்றே அதிகரிப்பது.” ஐக்கிய மாகாணத்தில் மேல் சட்ட சபையின் அங்கத்தினரான வில்லியம் ஆம்ஸ்ட்ராங் என்பவரால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் பதிலுக்குப் பதில் போர் நடத்தும் திறமையின் அடிப்படையில் அமைந்த ஓர் இராணுவத்தைப் பற்றி அமெரிக்கர் அநேகர் உணரும் அசெளகரியத்தைப் பிரதிபலிக்கிறது.
ஒரு மாற்றீடாக, 1983, மார்ச் மாதத்தில் ஐக்கிய மாகாணத்தின் ஜனாதிபதி ரீகன் நட்சத்திரப் போர்கள் என்று பிரபலமான அறியப்பட்டிருந்த எஸ்.டி.ஐ. [SDI - Strategic Defence Initiative] நடத்த திட்டமிட்டிருந்தார். அவர் கூறினார்: “நமக்கு அணு ஆயுதங்களைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்தினரை, அவர்களது தாலந்துகளை மனிதகுலத்துக்காகவும், உலக சமாதானத்துக்காகவும் திருப்பும்படி அழைத்தேன்: நமக்கு இந்த அணு ஆயுதங்களை சக்தியற்றதாகவும் வழக்கில் இல்லாமல் போகும்படியும் வழிவகை செய்யும்படியாக.”
எதிரிகள் தங்கள் குறியிலக்கை அடைவதற்குள் அவர்களது ஏவுகணைகளை அடித்து வீழ்த்தி அதனால் அமெரிக்காவையும் அதன் கூட்டணிகளையும் காப்பாற்றும் கவர்ச்சிகரமான, உயர்ந்த தொழில் நுட்பக் கருவிகள்—X-கதிர் லேசர்கள், மின்காந்த இரயில் துப்பாக்கிகள், இயந்திரக் கொலைவாகனங்கள், நடுநிலைத்துகள் கற்றை ஆயுதங்கள்—இவற்றை ரீகன் காட்சிப்படுத்திப் பார்த்தார்.
என்றபோதிலும், எஸ்.டி.ஐ. மேற்கூறியவற்றிலிருந்து பரவலாகவும், கோபாவேசத்துடனும் சர்ச்சைக்கு (விவாதத்துக்கு) உட்படுத்தப்பட்டிருக்கிறது. தீர்மானிக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஒரு நீர்ப்புகாத “குடை”யை உண்டாக்குவது தொழில்துறைப்படி கூடாதகாரியம் என்று எதிர்தரப்பினர் வாதிடுகின்றனர்—மற்றும் ஒழுகும் “குடை” அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பயனற்றதாயிருக்கிறது. மற்ற எதிர்ப்புகளைச் சேர்த்துப் பார்க்கையில், ஓர் ஐ.மா. காங்கிரஸ் மனிதர் ஏளனமாகக் கூறியது யாதெனில், “எஸ்.டி.ஐ. முறை வேறு நோக்கு நிலையில் எண்ணப்படலாம், வெற்றி பெறலாம், அறிவு நுட்பத்தால் தோற்கடிக்கப்படலாம், மனிதராலன்றி ஆனால் கம்ப்யூட்டர்களால் மட்டுமே இயக்கப்படும் இவை ஆயுதக் கட்டுப்பாடுகளின் ஒப்பந்தங்கள் பலவற்றை மீறி ஓர் அனல் அணு யுத்தத்தைத் தூண்டக்கூடும். . . . அது ஒரு கெட்ட முறை அல்ல.”
சோவியத் யூனியனும் எஸ்.டி.ஐ. முறைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. வாளைப் பயன்படுத்துவதற்கு ஒரு கேடயத்தைக் கட்டுவதற்கு மட்டுமே அமெரிக்கா விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர். அதற்குப் பதிலாக, ஐ.மா. அலுவலர்கள், சோவியத் நாட்டினர் இரகசியமாக தங்கள் சொந்த இராணுவ தந்திர முறைகளை விருத்தி செய்வதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எந்த விதத்திலாவது, எஸ்.டி.ஐ. முறை, அதை விருத்தி செய்வதற்கு அல்லது அதைப் பிரித்து வைத்தலுக்கும் விலையுயர்ந்த ஒன்றாக நிரூபிக்கும். 12,600 கோடி ஐ.மா. டாலரிலிருந்து 1.3 உடன் 18 பூஜ்யங்கள் சேர்ந்த மதிப்புடைய ஐ.மா. டாலர் அளவாக மதிப்பீடு கூறுகிறது. ஒப்பிடுகையில், முழு ஐ.மா. உள் மாநில பெரும்பாதை ஒழுங்குமுறை 12,300 கோடி டாலர் மதிப்புள்ளது! இருந்தபோதிலும், 100 கோடிக்கணக்கான டாலர்கள் ஐ.மா. காங்கிரஸால் எஸ்.டி.ஐ. ஆராய்ச்சிக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
ஆயுதக்குறைப்பின் எதிர்பார்ப்பு
சோவியத் இராணுவத்துறை கூறுவதாவது: “அணு பேராபத்தைத் தடுப்பதற்கு அணு ஆயுதக் குறைப்பு மிக அதிகமான நம்பத்தகுந்த உத்தரவாதமாயிருப்பதாக நம்பி இருக்கின்றனர்.” உயர்ந்த இலக்குகள் நிலைநிற்பவையாய் இல்லாமல் ஆயுதப் பந்தயம் முழு வேகத்தில் தொடருகிறது.
ஆயுதப் பரிகரணத்திற்கு அடிப்படையான தடை? நம்பிக்கையின்மை. சோவியத் இராணுவ பலம் 1987, [Soviet Military Power 1987] என்ற ஐ.மா. இராணுவ வெளியீட்டுத்துறையின் வெளியீடு ஒன்று சோவியத் யூனியனை, உலக ஆதிகத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. U.S.S.R. இராணுவத் துறையால் வெளியிடப்படும் வென்ஸ் தி த்ரெட் டு பீஸ் [Whence the Threat to Peace] “‘உலகை ஆளும்’ ராஜாங்க நோக்கத்தை”க் கொண்டிருப்பதாக ஐ.மா.வைப் பற்றிப் பேசுகிறது.
ஆயுதக் கட்டுப்பாட்டைப் பற்றிய பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும், இரு தரப்பினரும், மற்றவரை சுயநல நோக்குநிலை கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். மேற்கூறப்பட்ட சோவியத் வெளியீடு ஐக்கிய மாகாணத்தை, “பலத்தின் நிலையிலிருந்து சர்வதேசக் காரியங்களை நடத்தும்” ஒரு முயற்சியில், “அனைத்து தரப்புகளிலும் ஆயுதக் குறைப்பை நோக்கிய முன்னேற்றத்திற்குத் தடைக்கல்”லாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது.
ஐக்கிய மாகாணம் எதிர்வாதம் செய்து, ஆயுதக் குறைப்பு என்பது “இருப்பிலிருக்கும் இராணுவ நன்மைகளைப் பூட்டுவதற்கு . . . மேலும் [மாஸ்கோ] ஆயுதக் குறைப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் சோவியத் இராணுவத்தின் குறிக்கோள்களை இன்னும் தொடருவதற்குரிய ஒரு வழியாகவும் மேற்கத்திய இராணுவக் கோட்பாடுகளுக்கும் திட்டங்களுக்கும் உள்ள பொதுப்படையான ஆதரவை மட்டமாக எடைபோடுவதையும் பார்த்துக் கொள்ளும்” சோவியத் யூனியனின் வெறும் ஒரு திட்டம் என்று கூறுகிறது.—சோவியத் இராணுவ பலம் 1987.
நடுத்தர தூர ஏவுகணைகளை நீக்குவதற்கான சமீப ஒப்பந்தம் ஒரு மிகப் பெரிய முன்னேற்றப் படியாகத் தோன்றுகிறது. அணு ஆயுதங்களை மட்டுப்படுத்துவற்கு மாத்திரமல்ல மெய்யாகவே குறைப்பதற்காக இதுவரையில் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தமான அது இருக்கிறது. இருந்தபோதிலும், அத்தகைய உடன்படிக்கை, சரித்திரப் புகழ் வாய்ந்ததாக இருப்பினும், எல்லா அணு ஆயுதங்களையும் நீக்கிவிடவில்லை.
சரிபார்க்கும் பிரச்னை
என்றபோதிலும், அணு ஆற்றல் படைத்துள்ள அனைவருமே உண்மையில் மொத்த ஆயுதப் பரிகரணத்திற்கு ஒத்துக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். எந்த நாட்டையாகிலும் அல்லது எல்லா நாடுகளையும் ஏமாற்றுவதிலிருந்து—தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விட்டொழிக்காமலிருப்பதிலிருந்து அல்லது அவற்றை இரகசியமாக உண்டாக்குவதிலிருந்து எது தடை செய்யும்?
ஐ.மா. படைக் கட்டுப்பாடும் ஆயுத ஒழிப்பு பிரதிநிதித்துவ ஸ்தபனத்தின் முன்னாள் நடத்துநர், கென்னத் அடெல்மன் கூறினார்: “அணு ஆயுதங்களை நீக்குவது என்பது எவரும் கற்பனை செய்து பார்க்கையில், குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்யும் பரந்தளவில், மற்றும் அழைக்கப்படாமல் தலையிடுதலைத் தேவைப்படுத்தும் . . . அது, அதற்குப் பதிலாக எல்லா நாடுகளின் பங்கிலும் அந்நிய தலையீட்டிற்குப் புதுமையான வெளிப்படையை அர்த்தப்படுத்தும்.” எந்த ஒரு நாடும் அத்தகைய வெளிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுமா என்பது கற்பனை செய்வதற்குக் கடினமாயிருக்கிறது.
ஆனால் மேலுமாக, இத்தகைய எதிர்க்கமுடியாத தடைகளையெல்லாம் எப்படியோ நாடுகள் மேற்கொண்டுவிட்டதாகவும், ஆயுதங்களைப் பரிகரித்து விட்டதாகவும் நாம் வைத்துக்கொள்வோம். குண்டைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் அறிவும் தொழில் நுட்பமும் இன்னமும் இருப்பிலிருக்கும். வழக்கப்படியான போர் ஆரம்பிக்கையில், அது பெரிதாகி, அணு ஆயுதங்களை மறுபடியும் தயார் செய்து—அதைப் பயன்படுத்தும் அளவிற்கு ஆகிவிடும் சாத்தியம் எப்போதுமே இருக்கிறது.
முதல் அணுகுண்டை அபிவிருத்தி செய்வதற்கு உழைத்த பெளதிக அறிஞர்களில் ஒருவரான ஹேன்ஸ் பேத் என்பவர் சமீபத்தில் கூறினார்: “நாம் இவ்வேதாளத்தைக் கட்டுப்படுத்தக்கூடும் என்று நாங்கள் எண்ணினோம். அது மீண்டும் புட்டிக்குள் புகாமல் இருக்கிறது, ஆனால் அதை அடக்கக்கூடும் என்று எண்ணியதற்கு நியாயமான காரணங்கள் அப்போதிருந்தன. இது ஏமாற்றமாக இருந்ததை இப்போது நான் அறிகிறேன்.” (g88 8⁄22)
[பக்கம் 7-ன் படம்]
அணுத்தாக்குதலுக்கு எதிராகக் காத்துக் கொள்ளுதல், ஒரு தாக்குதலை எதிர்த்துப் பதில் தாக்குதல் செய்வதைவிட மேம்பட்டது என்று சிலர் வாதிடுகின்றனர்