உயரமான பாய்மரக் கப்பல்கள் சிட்னிக்கு கவர்ச்சியூட்டுகிறது
“நான் மீண்டும் கடல்களுக்குச் செல்ல வேண்டும்,
ஆள் நடமாட்டமில்லா கடலையும் வானையும் நோக்கிச் செல்ல வேண்டும்,
நான் கேட்பதெல்லாம் ஓர் உயரமான கப்பலும்
அதைத் திசையறிந்து செலுத்த ஒரு விண்மீனுமே.”
இங்கிலாந்தின் 20-வது நூற்றாண்டு அரசு கவி ஜான் மாஸ்பீல்டு “கடல்-காய்ச்சல்” என்ற தன்னுடைய நாட்டுப்பாடலில் அந்த வார்த்தைகளை எழுதியபோது, உயரமான கப்பல்கள், பார்வையாளர் மீது கொண்டுவரக்கூடிய கிளர்ச்சியூட்டும் பாதிப்பை ஒருவேளை கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார். ஆனால் உயரமான பாய்மரக் கப்பல்களின் காட்சி நிச்சயமாகவே உள்ளூர் சிட்னி வாசிகளையும் பார்வையாளர்களின் கூட்டத்தையும் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே கவர்ந்துவிட்டது. 1988, ஜனவரி 26-ம் நாள் அன்று ஆஸ்திரேலியாவின் தினமாக இருந்தது. சிட்னி துறைமுகத்தில் ஆஸ்திரேலியாவின் இருநூறாம் ஆண்டுவிழாவின் துவக்கத்தையொட்டி மிகவும் சுறுசுறுப்பாக கப்பல்கள் இயங்கிக் கொண்டிருந்தன.
பார்வையாளர் கப்பல், நீர்வழியை அடைத்துக் கொண்டிருக்க, இருபது லட்சமாக மதிப்பிடப்படும் பாதசாரிகள் துறைமுகத்தின் கரைப் பகுதியில் வரிசையான நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் பெரிய பாய்மரக்கப்பல்களின் தொகுதியில் ஏன் இப்படிப்பட்ட அசாதாரணமான ஓர் ஆர்வம்? ஏனென்றால் இது 200 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்திலுள்ள போட்ஸ்மெளத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் கடற்பயணத்தின் மறுநடிப்பின் ஒரு பாகமாக இருந்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த 11 பாய்மரக் கப்பல்கள் 1787, மே 13-ம் தேதி இங்கிலாந்தை விட்டு புறப்பட்டு, 1788, ஜனவரி 26-ம் தேதி சிட்னி கோவுக்கு வந்து சேர்ந்தது.
நீர்வழிச் செலவில் முதல் கடற்பயணம் ஒரு வெற்றி
ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பும் குடியேற்றமும் (Australian Discovery and Colonisation) என்ற தன்னுடைய புத்தகத்தில், சாமுவேல் பென்னட் அந்த முதல் கப்பற்படையைக் குறித்து சுவாரசியமான விவரங்களைத் தருகிறார். அவர் எழுதுகிறார்: “வைட் தீவு [இங்கிலாந்து] கப்பல்களடங்கிய கப்பற்படையின் கூடுமிடமாக நியமிக்கப்பட்டது . . . பட்டாளத்தில் 200 கடற்துறை வல்லுநர்கள் இருந்தார்கள், . . . இவர்களில் நாற்பது பேர் தங்கள் மனைவிகளையும் குடும்பங்களையும் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள், 81 பேர் சுதந்திர மனிதர்களாகவும் 696 பேர் கைதிகளாகவும் இருந்தனர். ஆகவே குடியேற்ற நாட்டின் ஸ்தபகர்களின் மத்தியில் இரண்டு கைதிகளுக்கு ஒரு சுதந்திர மனிதர் இருந்தார். . . . கைதிகள் பெரும்பாலும் இங்கிலாந்திலுள்ள வேளாண்மை மாவட்டங்களிலிருந்து வரும் வாலிபர்களாக இருந்தனர். . . . ஒரு சிலரே வினைமையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். மொத்தமிருந்த அறுநூற்று தொண்ணூற்று ஆறு பேரில், ஐம்பத்தைந்து பேர் மாத்திரமே ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட காலங்களுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்கள். பெரும்பாலானோரின் தண்டனைத் தீர்ப்பு அவர்கள் நிலத்தில் இறங்கியவுடன் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வந்துவிடும்.”
இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட பயணத்தில் எத்தனைப் பேர் உயிரிழந்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. எண்ணிக்கை 14-லிருந்து சுமார் 50 வரை வித்தியாசப்படுகிறது. உலகில் பாதி தூரத்தைச் சுற்றி வர 11 சிறிய கப்பல்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்களை நெருக்கி அடைத்து எட்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கடற்பயணத்தில் வெகு சிலரே மரணமடைந்ததும் ஒரு கப்பலும்கூட காணாமற் போகாதிருந்ததும், கடற்பயணம் மற்றும் அமைப்பு முறையின் மகத்தான சாதனையாக இருந்தது.
மறுநடிப்பு ஆரம்பமாகிறது
ஆகவே 1987, மே 13-ம் தேதி, பாய்மரக் கப்பல்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் படகுகளின் குழு செய்ததுபோலவே, மீண்டும் இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மெளத்தை விட்டுப் புறப்பட்டது. மறுநடிப்பின் அதிகாரப்பூர்வமான ஆரம்பத்துக்கு 11 என்ற கப்பல்களின் எண்ணிக்கையை சரியாக கொண்டிருப்பதற்காக அன்று நான்கு கப்பல்கள் வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தெற்கே ஆஸ்திரேலியாவை நோக்கி பயணமான ஏழு கப்பல்களை கேனரி தீவில் டெனரிஃபில் இன்னும் இரண்டும், சிட்னியில் கடைசி இரண்டும் கப்பற் குழுவைச் சேர்ந்து கொண்டன. அப்படியென்றால் இது, சிட்னி துறைமுகத்தில் பிரவேசிக்க முழு எண்ணிக்கையான 11 கப்பல்களும் பக்கவாட்டான கயிறுகளால் பாய்மர நடுவுடன் இணைக்கப்பட கைவசம் இருந்ததை அர்த்தப்படுத்தியது.
தெரிந்துகொள்ளப்பட்ட கப்பல் மார்க்கமும் முதலில் மேற்கொள்ளப்பட்ட எட்டு மாத கடற்பயணத்தை ஒத்ததாக இருந்தது: டெனரிஃப், ரி யோ டி ஜெனிரோ, கேப் டவுன் பின்னர் சிட்னி. ஆனால் இந்த முறை மொரீஷியஸில் லூயிஸ் துறைமுகத்திலும் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஃபிரிமேன்டலிலுமாக கூடுதலாக இரண்டு இடங்களில் அது நிற்கும்படிச் செய்யப்பட்டது. சிட்னி துறைமுகத்துக்குத் தெற்கே, பாட்டனி பே, அவை கடைசியாக கூடுமிடமாக இருந்தது. இங்கிருந்து ஒன்றாகச் சேர்ந்த கப்பல் குழு, 1988, ஜனவரி 26-ம் தேதி செவ்வாய் காலை ஒளி அலங்காரம் செய்யப்பட்ட துறைமுகத்துக்குள் மிதந்து வந்தது.
ஒரே மாதிரியானது ஆனாலும் மாறுபட்டது
மறுநடிப்பில் கப்பல்களின் தோற்றமும் அளவும் இயன்ற வரை அக்காலத்திலிருந்தது போலவே இருந்தபோதிலும், அநேக அம்சங்களில் அங்கு குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. 20-வது நூற்றாண்டு நேர் பகர்ப்புகள் மிகவும் செளகரியமானதாக, சில மிகவும் ஆடம்பரமானவையாகவும் இருந்தன. அவைகள் என்ஜின்களைக் கொண்டவையாக துறைமுகங்களில், வெளியே செல்லவும் உள்ளே வரவும் வசதியுள்ளவையாக, செயற்கை மின் உற்பத்தி சாதனங்கள், தாழ் தட்ப வெப்பத்தில் உணவு பொருட்களை பதனம் செய்யும் கருவிகள், சலவை செய்யும் இயந்திரங்கள், ஈரம் உலர்த்தும் கருவி, துவலைக்குழாய், தண்ணீர் உற்பத்தி செய்யும் சாதனங்கள் போன்ற வசதிகள் பொருத்தப்பட்டவையாக இருந்தன.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இருட்டான முடைநாற்றமுள்ள உறைவிடங்களில் நெருக்கி, அடைக்கப்பட்ட கைதிகளின் நிலைமையிலிருந்து இது என்னே ஒரு வித்தியாசம்! பெரும்பாலானவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு நல்ல வானிலையும் பகல் வெளிச்சமும் இருக்கையில் மாத்திரமே கப்பல் தள மேடையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற சமயங்களில், சிறை தளமேடையைப் போன்ற காவல்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். கப்பல் அறை ஒதுக்கிடங்கள் 3 அடி தள்ளி அமைக்கப்பட்டிருந்த மரப் பலகைகளாக இருந்தன; அவை 7 அடி 6 அங்குலம் நீளமும் 6 அடி அகலமுமாயிருந்தன. ஒவ்வொரு அறையிலும் ஐந்து பேர் தங்கினர்!
கண்காட்சியை சிறப்பிக்க மற்ற உயரமான கப்பல்கள்
மறுநடிப்பில் பக்கவாட்டான கயிறுகளால் பாய்மர நடுவுடன் இணைக்கப்பெற்ற படகு குழு ஒப்பிடுகையில் சிறியதாகவே இருந்தது. அதில் மிகப் பெரியது 159 அடி உயரமானதாய் நீரில் இடங்கொள்ளும் அதன் அளவு 530 டன்களாக மாத்திரமே இருந்தது. ஆகவே காட்சியை சிறப்பிக்க மற்ற தேசங்கள் விழாவில் கலந்துகொள்ள உயரமான பாய்மரக் கப்பல்களை அனுப்பிவைக்குமாறு அழைக்கப்பட்டன. பிரதிபலிப்பு பிரமாதமாக இருந்தது. சாதாரணமான, 13 டன்கள் முதல், உயரத்தில் 361 அடியும் கப்பல் பாய்மர உயரத்தில் 165 அடியும் நீரில் இடங்கொள்ளும் அளவில் 4,729 டன்களையும் கொண்ட ஜப்பானின் மிக உயரமான மூன்று பாய்மரங்களையுடைய மரக்கலம் நிப்பான் மாரு வரையாக, சுமார் 200 இப்படிப்பட்ட கப்பல்கள் சிட்னிக்கு வந்தன. சித்திர வேலைப்பாடுள்ள பாய்மரக் கப்பல்கள் போலந்து, ஓமன், இந்தியா, உருகுவே, ஸ்பய்ன், ஐக்கிய மாகாணங்கள், நெதர்லாந்து போன்ற பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்தன.
வருகையாளர்கள் கப்பல்களில் பல சிட்னிக்கு கப்பலோட்டிகளின் 620 மைல் சமுத்திர பந்தயத்தில் கலந்து கொள்ள டாஸ்மானியா தீவிலுள்ள ஹோபார்டில் கூடின. அவை பின்பு அருகாமையிலிருந்த பாட்டனி பேயிலிருந்து புறப்பட்டு முதல் படகுகளின் குழுவின் மறுநடிப்பு செய்த 11 கப்பல்களின் குழாமை வரவேற்க துறைமுகத்தில் வரிசையாக நிற்க தயார் நிலையிலிருந்தன.
ஆக, 1988-ம் ஆண்டு அந்த ஒளிமிக்க ஜனவரி 26-ம் தேதி ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள பார்வையாளர்கள் கண்ணுற்ற கவர்ச்சியான காட்சி இதுவே. இப்பொழுது சுமார் 160 லட்சம் மக்களின் தாயகமாக இருக்கும் விசாலமான, பழுப்பேறிய வெயில் வாட்டான ஆஸ்திரேலியா தேசத்தில் ஐரோப்பியர்கள் குடியேறி 200 ஆண்டுகளானதை இது தெரிவித்தது. (g88 9⁄8)
[Full-page picture on page 17]