உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 10/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அபாயத்திலிருக்கும் குழந்தைகள்
  • காந்த ஏற்ற இறக்கங்கள்
  • நோய் மிகவும் காலந்தாழ்த்தி நிர்ணயிக்கப்பட்டது
  • பெரிய அலைகள்
  • இத்தாலியில் மிதமீறிய அளவுகளில் குடிப்பவர்கள்
  • குழந்தைப் பருவ அழுத்தம்
  • அபிமானிகளா அல்லது காப்பாளர்களா?
  • எறும்பினிடத்துக்குப் போ
  • சத்தியமேயன்றி வேறொன்றுமில்லை
  • பூனைகளின் வாழ்க்கை
  • குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்
    விழித்தெழு!—2005
  • மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்
    குடும்ப ஸ்பெஷல்
  • சமுகத்தைச் சீரழிக்கும் குடிப்பழக்கம்
    விழித்தெழு!—2005
  • உலகைக வனித்தல்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 10/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

அபாயத்திலிருக்கும் குழந்தைகள்

தங்களுடைய பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தையும் உணர்ச்சிப்பூர்வமான ஆரோக்கியத்தையும் மதிக்கும் பெற்றோர், கெடுதி விளைவிக்கும் டி.வி. நிகழ்ச்சிகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதாக குழந்தைப் பருவ மனோதத்துவத்தில் உலகப் புகழ் நிபுணர் டாக்டர் ஜெரார்ட் லெஸ்ஸர் எச்சரிக்கிறார். முதிர்ச்சியடையாத இளம் மனதினால் டெலிவிஷனில் அவர்கள் பார்க்கின்றவற்றில் கற்பனையிலிருந்து நிஜத்தைப் பிரித்தெடுக்க இயலாது என்பது லெஸ்ஸரின் கருத்தாகும். டப்ளினின் ஈவினிங் ஹெரால்ட் அறிக்கை இவ்விதமாகக் குறிப்பிடுகின்றது: “டெலிவிஷன் விளம்பரங்களோடு சம்பந்தப்பட்ட காமிக் வன்முறையும், வியாபார துவக்கத்தில் பரிசு அளிக்கும் உத்திகளும் மற்றும் விண்வெளி கேலித் திரைப்படங்கள் போன்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் நயமான குரலில் பேசும் நிபுணருக்குச் சம அளவில் தீங்கு செய்வதாக இருக்கிறது.” டெலிவிஷனில் காட்டப்படும் வன்முறையையும் கொலையையும் தினசரி பார்ப்பது, பெல்ஃபாஸ் அல்லது பெய்ரூட் தெருக்களில் பிள்ளைகளை உலாவ அழைத்துச் செல்வதற்கு ஒப்பாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

காந்த ஏற்ற இறக்கங்கள்

பூமியின் காந்தமண்டலம் சூரியனின் கதிர்வீச்சினால் அடிக்கடி இடைஞ்சல்களுக்கு உள்ளாகிறது. சூரியனின் கறைத்தடம் உண்டுபண்ணும் சூரிய கதிரொளியும் காந்தப் பாதைகளும் திசையறிகருவிகளில் பல டிகிரி பிழைகளுக்குக் காரணமாயிருக்கக்கூடும். இதன் காரணமாக தினந்தோறும் காந்த பாதைகளை கண்காணித்துவருவது விமான மற்றும் கடல் பிரயாணங்களுக்கு எந்த வினைமையான திசைமாற்றத்தையும் பற்றி எச்சரிப்பைக் கொடுக்கக்கூடும். ஸ்கட்லாந்தில் எடின்பரோவிலுள்ள நிலஉலக இயற்பியல் ஆய்வாளர்கள், தொழில்துறை, வியாபார மற்றும் இராணுவ உபயோகங்களுக்காக காந்த செயல்திறத்தின் முன்னறிக்கைகளைத் தயாரித்துவருகிறார்கள். எடின்பரோ ஆய்வுக் குழுவிலுள்ள உறுப்பினர் டாக்டர் டேவிட் கெரிட்ஜ் காந்த மண்டல வேறுபாடுகள் உண்டுபண்ணும் மின்னோட்டங்கள் தொலைப்பேசி கம்பிகள், டெலிவிஷன் கம்பி வடங்கள், மின்இயக்க சாதனங்கள், மின்சார கம்பிகள் மற்றும் தானியங்கி ரயில்வே சிக்னல்களுக்குச் சேதத்தையோ அல்லது கோளாறுகளையோ உண்டுபண்ணக்கூடும்” என்று சொன்னதாக லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காண்பிக்கிறது.

நோய் மிகவும் காலந்தாழ்த்தி நிர்ணயிக்கப்பட்டது

“பூர்வ எகிப்தியர் நவீன மனிதனுக்கு தொல்லைக்கொடுத்துவரும் அதேவிதமான பெரும்பாலான நோய்களாலும் காயங்களாலுமே பாதிக்கப்பட்டிருந்தனர்” என்பதாக வால் ஸ்டீரீட் ஜர்னர் குறிப்பிடுகிறது. இது எப்படி தெரிகிறது? “கணக்கிடும் ஊடுகதிர் உள் தளப் படமுறை ஆய்வின் மூலமாக.” ஒரு ரொட்டியின் துண்டங்களைப் போல, [சுற்றிப் போர்த்து வைக்கப்பட்ட பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடலை] குறுக்கு வெட்டுவாக்கில் இந்த ஆய்வாளர்கள் பார்வையிடுகிறார்கள். கம்ப்யூட்டர்கள் இவைகளின் உட்புறத்தை முப்பரிமாண உருவமாக மீண்டும் இணைத்து உருவாக்குகின்றன.” பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல்களைத் திறந்து கூறுபாடுகளை ஆய்வு செய்வது அவைகளை அழிப்பதாக இருக்கிறது. ஊடுகதிர்கள் எலும்புகளின் மீது செயலாற்றினாலும் மிருதுவான உடல் திசுக்களின் உருவங்களை அவை கூர்மையாக தோற்றுவிப்பதில்லை. ஆய்வின் மூலமாக மருத்துவர்கள், கட்டிகள், கல்லீரலில் கல், சர்க்கரை வியாதி, தமனிகள் உணர்ச்சியற்று போவது, ஒட்டுயிர்க் கொல்லி, எலும்பு முறிவுகள் இன்னும் மற்றவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் “இந்த நோயாளிகளுக்கு நோய் நிர்ணயம் மிகவும் காலந்தாழ்த்தி, 3,000 ஆண்டுகளுக்குப் பின்பாகச் செய்யப்பட்டிருக்கிறது” என்பதாக ஜர்னல் குறிப்பிடுகிறது.

பெரிய அலைகள்

வடகிழக்கு அட்லான்டிக்கில் அலைகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இங்கிலாந்தின் தென்மேற்கு முனைக்கு அப்பால் 25 ஆண்டுகளாக மதிப்பிடப்பட்டுவரும் அலைகளின் அளவு, சராசரியாக 25 சதவிகிதம் கூடுதலான உயரத்தை எட்டியிருப்பதாக விஞ்ஞான பத்திரிகை இயற்கை அறிவிப்பு செய்கிறது. ஆனால் இது ஏன் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை. தவறான அளவுகள், வானிலையில் மாற்றங்கள், ஆகியவற்றை தள்ளுபடி செய்தபிறகு, ஆய்வாளர் ஒருவர் இவ்விதமாக ஒப்புக்கொள்கிறார்: “தெளிவான விளக்கம் இதற்கு இல்லை.” ஆனால் பாதிப்புக்களையோ எளிதில் உணரமுடிகிறது. இங்கிலாந்தில் கார்னிஷ் கரை நெடுகிலுமாக உள்ள அலைமிதவை ஆட்டக்காரர்கள் உயரமான அலைகளினால் கிடைக்கும் செயற்கை உதவியை வரவேற்றாலும் பெரிய அலைகளின் தாக்குதலை தாங்கும் வகையில் கரைக்கு அப்பால் உயரமான மற்றும் பலமான துளைப்போடும் தளவாடங்களும் மேடைகளும் தேவைப்படுவதால் எண்ணெய் மற்றும் வாயு தொழிற்சாலைகளுக்குச் கூடுதலாக செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் மிதமீறிய அளவுகளில் குடிப்பவர்கள்

சாராய சத்துள்ள பானங்களைக் குறித்து பேசுகையில், இல் கொரி டெல்லா சேரா என்ற ஒரு மில்லன் செய்தித்தாள், “50 லட்சத்துக்கும் மேற்பட்ட இத்தாலியர்கள், மிதமான அளவு என்று கருதப்படுவதற்கு மேல் இரண்டு மடங்கு அதிகமாக குடிக்கிறார்கள்” என்று தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பின்படி, தினசரி உட்கொள்ளக்கூடிய அளவு ஆண்களுக்கு இரண்டு அவுன்சுகளுக்கும் (சுமார் 4 கோப்பை திராட்ச ரச மதுபானத்தில் அல்லது ஒன்றரை லிட்டர் பீரிலுள்ள அளவு) பெண்களுக்கு ஓர் அவுன்சுக்கும் மேல் செல்லக்கூடாது. கருவுற்றிருக்கையில் பெண்கள் முற்றிலுமாக சாராய சத்துள்ள பானங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைச் செய்கிறார்கள். என்றபோதிலும் இத்தாலியில் மக்கள் தொகையில் 9.2 சதவிகிதத்தினர் தினந்தோறும் நான்கு அவுன்சுக்கும் அதிகமாக சாராய சத்துள்ள பானங்களை உட்கொள்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது! இப்படிப்பட்ட மதிப்பீடுகள் இத்தாலியை சாராய சத்துள்ள பானங்களின் பயனீட்டளவில் ஐரோப்பாவில் இரண்டாவது இடத்திலும் உலகில் எட்டாவது இடத்திலும் வைக்கிறது. இப்படியாக அளவுக்கு அதிகமான குடியே இத்தாலியில் 30 சதவிகித மருத்துவமனை பிரவேசத்துக்கு காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கூடுதலாக, சாராய சத்துள்ள பானங்களின் துர்ப்பிரயோகமே, 40 சதவிகித சாலை விபத்துக்களுக்கும், 50 சதவிகித மனித கொலைக்கும், 25 சதவிகிதம் தற்கொலைக்கும், 20 சதவிகிதம் வேலை செய்யுமிடத்திலும் வீட்டிலும் நடைபெறும் விபத்துக்களுக்கும் காரணமாயிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

குழந்தைப் பருவ அழுத்தம்

அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுதல் போன்ற அழுத்தங்கள் நிறைந்த சம்பவங்களோடு ஆஸ்துமா, மூட்டு வீக்கம் மற்றும் வெள்ளணு பெருக்க நோய் போன்ற பிணிகளை சம்பந்தப்படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க சுகாதாரம் பத்திரிகையின் ஓர் அறிக்கையின்படி, மனோதத்துவ ஞானி கிறிஸ்டோபர் கோ, “பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுதல் மிகச் சிறிய குழந்தைகளுக்குக் குறிப்பாக எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும்” என்றும் “இது தடைகாப்பு அமைப்பில் தடையை உண்டுபண்ணக்கூடும் என்றும் கருதுவதாக” தெரிகிறது. “ஆறுமாதங்களுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்குப் பகல்நேர காப்பகங்களும்கூட ஆபத்தாக இருக்கக்கூடும்” என்று அவர் கருத்து தெரிவிக்கிறார். “உடல் ஆரோக்கியத்தை மிகுதியாக்குவதற்கு நம்முடைய பிள்ளைகளில் உணர்ச்சிப்பூர்வமான ஸ்திரத்தன்மையைப் பேணி வளர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும்” என்று டாக்டர் கோ முடிக்கிறார்.

அபிமானிகளா அல்லது காப்பாளர்களா?

பிரிட்டனில் நாய் சண்டையானது, நூறு ஆண்டுகளாக சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தும் அதில் பொதுமக்களின் விருப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று RSPCA (விலங்குகளை துன்புறுத்துவதை தடை செய்யும் ஓர் அமைப்பு) தெரிவிக்கிறது. வார இறுதி நாட்களில் அமெரிக்க சண்டை நாய்களை அல்லது ஸ்டபோர்ட்ஷீயர் புல்டெரியர்களையும் வைத்து, குறைந்தபட்சம் ஒரு நாய்சண்டையாவது ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுவதால், பிரிட்டன், விலங்கு அபிமானிகள் நிறைந்த தேசம் என்ற அதன் உரிமைப்பாராட்டலை வேகமாக இழந்து வருகிறது. மாறாக, “நாங்கள் விலங்கு காப்பாளர்கள் நிறைந்த ஒரு தேசமாக இருக்கிறோம்” என்பதாக இதன் மேற்பார்வையாளரான சார்லஸ் மார்ஷல் உறுதியாகச் சொல்கிறார். அதிகமாக விலங்குகளை துன்புறுத்துவதற்கிருக்கும் மனசாய்வு, “நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கொடூரமான காலங்களுக்கு அடையாளமாக இருக்கிறது, கொடூரமான வீடியோக்கள், கொடூரமான காலங்கள்” என்பதாக அவர் மேலுமாகச் சொல்கிறார்.

எறும்பினிடத்துக்குப் போ

இப்பொழுதெல்லாம் மக்கள் வெறுமென ஞானத்தை மட்டும் பெற்றுக் கொள்வதற்கு மேலாக—உடல் ஆரோக்கியமடைவதற்கும் பணக்காரராவதற்கும்கூட—எறும்பினிடத்துக்கு போகிறார்கள். கனிவள ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்கள், “கறையான், பூமியின் அடியிலுள்ள விலையேறப்பெற்ற தாதுப் பொருட்களிடமாக தங்களை வழிநடத்தக்கூடும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்பதாக டோக்கியோவின் தி டெய்லி யூம்ரி குறிப்பிடுகிறது. எவ்விதமாக? பூச்சுகள் தண்ணீரைத் தேடி ஆழமாகத் தோண்டுகையில், அவை மண்ணை மேல்பரப்புக்குக் கொண்டுவருகின்றன. இதனால் உருவாகும் எறும்பு புற்றுகளை ஆராய்ந்தபோது, இது கனிவள ஆய்வில் ஈடுபாடு கொண்டவர்களை கீழே இருக்கும் கனிப்பொருட்களிடமான வழிநடத்தியிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு விவசாயி, ஓர் எறும்பு புற்றிலிருந்து மின்மினுக்கும் ஒளி வீசுவதை கவனித்ததாகச் சொல்லப்படுகிறது. அதை ஆராய்ந்தபோது, அவை சிறிய மாணிக்கங்கள் என்பது தெரிய வந்தது. இது அதற்கு கீழே புதைந்து கிடந்த வைரங்களின் செல்வத்துக்குக் கொண்டுவிட்டது. ஆனால் சீனாவில் அக்கறை அந்தப் பூச்சுகளில் தானே இருக்கிறது. சீன உடல்நல நிபுணர்கள் “கடினமாக உழைக்கும் பூச்சுகளிலிருந்து உற்பத்திச் செய்யப்படும் பொடி கீல்வாத மூட்டு வீக்கத்தையும் இன்னும் மற்ற அநேக நோய்களையும் குணமாக்க முடியும் என்று உரிமைப் பாராட்டுவதாக” ஏஷியா வீக் குறிப்பிடுகிறது. பொடியாக்கப்பட்ட இந்த உயிரினங்களில் புரதமும் துத்த நாகமும் மிகுதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலுமாக, “பீக்கிங்கிலும் ஜியாங்சு மாகாணங்களிலுமுள்ள மதுவடிக்கும் தொழிற்சாலைகள் எறும்பு சத்து மருந்தை பல ஆண்டுகளாக தயாரித்து வருகின்றன,” என்கிறது அறிக்கை.

சத்தியமேயன்றி வேறொன்றுமில்லை

பிரிட்டன் நாட்டு நீதிமன்றங்களில் பத்து பிரதிவாதிகளில் ஒன்பது பேர் பொய் சொல்கிறார்கள் என்பதாக பிரிட்டிஷ் நீதிபதிகளின் சங்கத் தலைவர் ஜான் ஹோஸ்கிங் தெரிவிக்கிறார். என்றபோதிலும் மதசார்பான அல்லது மதசார்பற்ற பிரமாணங்களைச் செய்கையில் சத்தியமே பேசுவதாகச் சொல்கிறார்கள். பைபிள் அல்லது மற்ற பரிசுத்த புத்தகங்களை வைத்து பிரமாணஞ் செய்வதை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், இப்படியாக ஆணையிட்டு உறுதி செய்வது, பொய் சொல்தை தடை செய்வதில் தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். மதசம்பந்தமான பிரமாணங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்களும்கூட இது அவ்விதமாக பிரமாணம் செய்பவர்களை “அவர்கள் செய்யும் காரியம் எத்தனை பவித்திரமானது என்பதைப் பற்றி நின்று சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை” மட்டுமே அளிப்பதை நம்புவதாக லண்டனின் சுதந்திரம் குறிப்பிடுகிறது. ஏன் இப்படிப்பட்ட ஒரு நேர்மையின்மை? ஹோஸ்கிங்கின்படி, “மக்கள் பயம் கொண்டவர்களாக, பொய் சொன்னால், அதற்கேற்ப அனுபவித்தே தீர வேண்டும் என்று நம்பிய ஒரு காலம் இருந்தது. ஆனால் அது இப்பொழுது குறைந்து கொண்டே போகிறது.”

பூனைகளின் வாழ்க்கை

பலமாடிக் கட்டிடங்களிலிருந்து கான்க்ரீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட கோளாறுக்காக நியு யார்க் நகரில் சிகிச்சைப் பெற்ற தொண்ணூறு சதவிகித பூனைகள் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க விலங்கு மருத்துவ சங்கத்தின் பத்திரிகையின் படி கால்நடை மருத்துவர்கள், சுமார் 500 அடிகள் (சுமார் 32 மாடிகள்) உயரத்திலிருந்து விழுந்து வெறுமென சிறிய காயங்களோடு தப்பிய ஒரு பூனை வித்தகரை 48 மணிநேரங்கள் கழித்துக் காப்பாற்றினார். இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க வீரச் செயலுக்குக் காரணமாயிருப்பது என்ன? பூனைகள் கால்களை செங்குத்தாக பரப்பிக் கொள்ளும் வகையில் அதனுடைய தசைகளை அவைகள் தளர்த்த முடிவதை மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பின்னர் வான்குடை மிதவைப் பாணியில், இந்த விலங்கு இயன்ற அளவு தன் உடலைப் பரப்பிக் கொள்ள இது ஒரு காற்று தடுப்புக் கருவியாக செயல்பட்டு, இதனால் மோதலின் பாதிப்பு குறைய கீழே இறங்குகிறது. சுழல் பொருள்களின் இயக்க இயல்பு, கைகள் கால்கள் கொண்டு தவழ்ந்திறங்க விலங்குக்கு உதவி செய்கிறது. (g88 9⁄88)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்