“மண்டை ஓட்டுக்குள்ளே ஒரு முழு பிரபஞ்சம்”
“மனித மூளை, மண்டையோட்டுக்குள்ளிருக்கும் ஒரு முழு பிரபஞ்சமாக இருக்கிறது. நடைமுறையில் எல்லையற்ற சாத்தியங்களைக் கொண்ட ஒரே மனித உறுப்பாக இது இருக்கிறது,” என்பதாக சோவியத் விஞ்ஞானியும் மூளை நிபுணருமான நட்டாலையா பெக்டெரீவா குறிப்பிடுகிறார்.
அந்தச் சாத்தியங்கள் ஆராயப்பட, மூளை பயன்படுத்தப்பட்டு பயிற்சி செய்யப்பட வேண்டும். மனிதன் தன்னுடைய மனதை ஈடுபடுத்துவதற்கு அதிமுக்கியமான காரியம் மூளையை வடிவமைத்தவராகிய யெகோவா தேவனைப் பற்றி ஆராய்வதாகும்.
ஆகவே ஞானியான நீதிமொழி எழுத்தாளர் சொன்னதாவது: “அதை [ஞானத்தை] வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறது போல் தேடுவாயாகில், அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.”—நீதிமொழிகள் 2:1–5, NW.
அந்த விலைமதிப்பில்லா “தேவனை அறியும் அறிவைக்” கண்டடைய உங்கள் மூளையை நீங்கள் உபயோகிக்கிறீர்களா? (g89 2/8)