வியப்பூட்டும் பாதம்
“தன் சொந்த கைகளினால் ஒட்டிக்கொண்டு அரசர் அரமனையிலிருக்கிற வீட்டுப்பல்லி” என்பதாக பைபிள் நீதிமொழிகள் 30:28-ல் சொல்கிறது. அதன் பாதங்கள் கைகளைப் போல் காட்சியளிக்கின்றன, ஆனால் எந்தக் கைகளும் செய்ய முடியாத அருஞ்செயல்களை அவை செய்கின்றன. மனிதனுடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த யெகோவாவின் படைப்புகளில் இது மற்றொன்றாகும்—இந்த விஷயத்தில், இன்று துணியை ஒட்ட வைப்பதற்கு, சின்னஞ் சிறிய கொக்கிகளைக் கொண்ட மேற்பரப்பையுடைய பரவலாகப் பயன்படுத்தப்படும் வெல்க்ரோ தயாரிப்பாகும்.
மத்தியதரைக் கடல் பகுதிகளுக்கு வருகைத்தரும் பார்வையாளர்கள், மிகச் சாதாரணமாகக் காணப்படும் டேரன்டோலா மோரிட்டானிக்கா என்ற இந்தச் சிறிய வீட்டுப்பல்லி சுவர்களின் மீதும் அறையின் உட்புறக் கூரையின் மீதும் குறுநடை ஓட்டமிட்டு கண்ணாடி ஜன்னல்கள் மீதும்கூட விரைவாக பயணம் செய்வதைப் பார்த்து வியப்படைகின்றனர். ஒரு சமயம் திருவாளர் பல்லி அதன் பாதத்திலுள்ள உறிஞ்சி குழிவுகள் அல்லது ஒருவேளைப் பசைப் பொருளினால்கூட அவ்விதமாகச் செய்வதாகக் கருதப்பட்டது. ஆனால் அப்படிக் கொடிதாக எதுவுமில்லை!
மகத்துவமுள்ள திட்ட அமைப்பு புத்தகம் பக்கம் 184-ல் சொல்வதாவது: “பல்லியின் ஒவ்வொரு கால் விரலிலும் மேடு போன்ற தொலியைத் தாங்கியிருக்கும் தசைத்திண்டு இருக்கின்றது. நுண்ணோக்காடியில் பார்த்தால், ஒவ்வொரு தொலியிலும் நூற்றுக்கணக்கில் சின்னஞ்சிறிய தடித்த கட்டைமுள் மயிர்ப் போன்ற வடிவங்கள் நீட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. இது போததென்பது போல், மேலுமாக இதைப் பெரிதாக்கிப் பார்க்கையில், ஒவ்வொரு தடித்த கட்டை முள் போன்ற அமைப்பும், தட்டு வடிவ முனைகளைக் கொண்ட, சிறிய கிளைகளாகப் பிரியும் 2000 வரையான ‘தூரிகை’ முனைகளைக் கொண்டிருக்கின்றன. இது மொத்தமாக சுமார் 10 கோடி குறிப்பிடத்தக்க இணைவு முனைகளை அளிக்கின்றது.”
இலட்சக்கணக்கான கண்ணுக்குப் புலப்படாத மிக நுட்பமான கொக்கிகள், கரடுமுரடான மேற்பரப்பில் பற்றிக்கொள்கின்றன—கண்ணாடியின் மீதும்கூட. கொக்கிகள் விடுவித்துக் கொள்வதும் மீண்டும் பற்றிக் கொள்வதுமான இயக்க ஏற்பாடு நம்புதற்கரியதாக இருக்கிறது. பல்லி தன் விரலின் நுனியை மேல்நோக்கி வளைக்க, கரடுமுரடான மேற்பரப்பிலிருந்து கொக்கிகள் விலகிக் கொள்கின்றன. கால்விரல் இன்னும் மேல்நோக்கி வளைந்து கொண்டிருக்க, இது அடுத்த அடியை எடுத்து வைத்து பின்னர் கால்விரலைக் கீழே பதிய வைக்கிறது. சிறிய கொக்கிகள் மீண்டும் கரடுமுரடான மேற்பரப்பில் சேர்ந்திணைந்து கொள்கிறது—பூனை மரத்தின் மீது ஏறுகையில், மாற்றி மாற்றி தன்னுடைய வளைநகத்தை நீட்டியும் பின்னுக்கு இழுத்தும் கொள்வது போல இது இருக்கிறது.
ஆகவே சிறிய வீட்டுப்பல்லி வியப்பூட்டும் தன் பாதத்தால் வியப்பூட்டும் அருஞ்செயல்களைச் செய்கின்றது. (g89 3/22)
[பக்கம் 31-ன் படம்]
வீட்டுப்பல்லியினுடைய “வெல்க்ரோ” பாதத்தின் அடிப்புறம்