அந்தப் படுகொலை நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?
‘அந்தப் படுகொலை உண்மையிலேயே நடந்ததா? அதைப் பொருட்படுத்த வேண்டுமா? நான் ஏன் கவலைப்படவேண்டும்?’ என்று சிலர் கேட்கக்கூடும்.
மனிதவர்க்கம் கவலைப்பட வேண்டியதற்கு ஒரு காரணம், சரித்திரம் மீண்டும் எழுதப்படாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கே. கான்சன்ட்ரேஷன் முகாமில் உயிர்தப்பிய பிரைமோ லேவி என்பவர், அந்தக் கான்சன்ட்ரேஷன்–முகாம் சிந்தை உண்மையிலேயே இறந்துவிட்டதோ என்று சந்தேகிக்கிறார். அவர் இப்படியாகக் கேட்டார்: “அதில் எவ்வளவு திரும்பியிருக்கிறது அல்லது திரும்பிக்கொண்டிருக்கிறது? அச்சுறுத்தல்களால் கர்ப்பமாயிருக்கும் இவ்வுலகில் இந்த ஓர் அச்சுறுத்தலையாவது இல்லாமற் செய்ய நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யக்கூடும்?”
இப்படிப்பட்ட ஒரு பயங்கரச் செயல் மறுபடியும் நடக்குமா என்பது குறித்து யோசிக்கும் பலருடைய யோசனையை லேவி இப்படியாக வெளியிட்டுள்ளார். சமீப கால சரித்திரம் எவ்விதம் விடையளிக்கிறது? அநேக நாடுகளில் 1945 முதல் இருந்துவந்திருக்கும் கொடுமைகள், இனக் கொலைகள், உயிரோடு வதைத்தல், மரிக்கத் துணிந்துள்ள குழுக்கள், “காணாமற்போன” அல்லது “இல்லாமற்போகச் செய்யப்பட்ட” ஆட்கள் ஆகியவற்றின் சரித்திரம்தானே, கான்சன்ட்ரேஷன் முகாம்களில் ஆட்களை வதைப்பது நியாயம் என்பதாக எண்ணின மனப்பான்மை இன்னும் உயிரோடிருக்கிறது, சுறுசுறுப்பாய் இயங்கிவருகிறது என்பதை நிரூபிக்கிறது.
தப்பிப்பிழைத்தவர்களுக்கு—அதில் மாண்டவர்களின் பிள்ளைகளுக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் அது பொருட்படுத்த வேண்டிய காரியமாயிருக்கிறது. சரித்திரம் என்பது உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் பேரிலும் உண்மையில் வாழ்ந்த மக்களின் பேரிலும் சார்ந்த ஒன்று. இயேசு ஒரு கற்பனை மனிதரா என்பது பொருட்படுத்தவேண்டிய ஒன்றா? நெப்போலியன் அல்லது இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமது உண்மையில் வாழ்ந்தவர்களா அல்லது கற்பனையின் படைப்புகளா என்பது பொருட்படுத்தவேண்டிய காரியங்களா? ஆம், நிச்சயமாக. சரித்திரத்தின் போக்கு இந்த மனிதர்களால் மாற்றப்பட்டிருக்கிறது.
அதுபோலவே, சரித்திரம் முழுவதிலும் நாகரிக மனிதவர்க்கத்தின் கெளரவத்திற்கு அந்தப் படுகொலை மிகப் பெரிய அடியாக இருந்திருக்கிறது. அதைப் பிரைமோ லேவி இப்படியாக விவரிக்கிறார்: “இத்தனை குறுகிய காலத்தில் அத்தனை அநேக உயிர்கள் ஒருபோதும் அழிக்கப்பட்டதில்லை, அதுவும் தொழில்நுட்பத் திறமும், கொள்கை வெறியும், கொடுமையும் தெளிவுறக் கலந்து நிகழ்ந்ததில்லை.”
ஆனால் அது நடந்தது என்பதையே சந்தேகிக்கும் ஆட்களும் இருக்கின்றனர். அந்தப் படுகொலை ஒரு சரித்திர உண்மையா என்று கேள்வி கேட்கின்றனர். (g89 4/8)