இளைஞர் கேட்கின்றனர் . . .
ஆட்கள் என்னைப்பற்றி புறங்கூறினால் நான் என்ன செய்யவேண்டும்?
“என்னுடைய பள்ளியில் 95 சதவீத மாணவர்கள் புறங்கூறுகிறார்கள்,” என்று நியு யார்க் உயர்நிலை (இடைநிலை) பள்ளி மாணவன் ஒருவன் கூறினான். புறங்கூறுதலுக்கான பிரதான பொருள்? “மற்ற மாணவர்கள்: அவர்களுடைய சாயல், அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார்கள், யாருக்கு யார் பிரியம், அவர்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் என்ன சொல்லிக்கொள்கிறார்கள்.”—பதினேழு (Seventeen) பத்திரிகை, ஜூலை 1983.
என்றபோதிலும், புறங்கூறுதல் எதிர்மறையான காரியங்களிடமாகச் சாய்வு கொண்டதும், மற்றவர்களுடைய நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதாயும் இருக்கிறது.a புறங்கூறுதல் உலகமெங்குமுள்ள இளைஞர் மத்தியிலும் பெரியவர்கள் மத்தியிலும்கூட காணப்படும் ஒரு பழக்கமாக இருப்பதால், நீங்கள்தாமே புண்படுத்துகின்ற புறங்கூறுதலின் பலியாளாக இருக்கக்கூடும் (அல்லது என்றாவது ஒரு நாள் அப்படியாகக்கூடும்). அப்படியானால், நீங்கள் என்ன செய்யலாம்? அந்தப் புண்படுத்தும் வாயை அடைப்பதற்கு ஏதாவது வழியிருக்கிறதா?
புறங்கூறுதலின் வேதனை
அதைக் குறித்து எந்தச் சந்தேகமுமில்லை: தனிப்பட்ட விஷயங்கள் மற்றவர்களுடைய காதுகளுக்குச் செல்லும்போது அல்லது உங்களைப்பற்றி பொய் வதந்திகள் பரப்பப்படும்போது, அது உண்மையிலேயே புண்படுத்துகிறது. புண்பட்டிருக்கும் காலப்பகுதியில் கோபமும் பழிவாங்கும் உணர்ச்சிகளும் இடம்பெறக்கூடும். “நீங்கள் அந்த நபரைப் புண்படுத்தவேண்டும் என்று உங்களை உணரச்செய்கிறது,” என்கிறார் புறங்கூறுதலுக்குப் பலியான ஒருவர். மற்றொருவர் சொன்னார்: “உங்கள் மனம் உடைந்துபோனதாக உணருகிறீர்கள்; உங்கள் முதுகில் குத்தினதுபோல் இருக்கிறது. அவர்களுடன் நீங்கள் மறுபடியும் பேசக்கூடாது என்று உணரும்படிச் செய்கிறது. உங்களுடைய நம்பிக்கை போய்விடுகிறது. அந்தப் பிரச்னையைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.”
ஆம், புறங்கூறுதல் அநேக இளைஞரை இக்கட்டான நிலைக்குள்ளாக்கி செயல்படமுடியாதபடிச் செய்துவிடுகிறது. ஒரு மாணவி தன்னைப்பற்றி மோசமான விதத்தில் புறங்கூறுவதில் ஈடுபட்டவர்களை முகம்கொடுத்துப் பார்க்கப் பிடிக்காமல் வேறொரு பள்ளிக்கு மாறிச்சென்றுவிட்டாள். என்றபோதிலும், பழிவாங்குதலோ, கோபமோ அல்லது செயல்படாதபடிச்செய்திடும் வெட்க உணர்வோ நிலைமையைச் சற்றும் முன்னேற்றுவிக்காது. முரணானப் பேச்சுகளைக் கையாளுவதற்கு அதைவிட திறமையான வழிகள் இருக்கின்றன.
அளவுக்குமிஞ்சி பிரதிபலிப்பதைத் தவிருங்கள்!
நீங்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் இதை நினைவில் கொண்டிருங்கள்: “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்.” (நீதிமொழிகள் 14:17) இதன் செய்தி யாது? அளவுக்கு மிஞ்சி பிரதிபலிக்காதீர்கள்! அவசரப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அநேகமாக அவை தீர்க்கமுடிகிறதைக்காட்டிலும் அதிகமான பிரச்னைகளை உருவாக்குகின்றன. பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” ஏன்? ஆட்கள் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதை நீங்கள் அவ்வளவு எளிதாகத் தடை செய்ய முடியாது. பேசப்படுவதுதானே வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கிறது. சாலொமோன் மேலுமாகக் கொடுத்த புத்திமதி: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; . . . அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.”—பிரசங்கி 7:9, 21, 22.
சாலொமோன் எதிர்மறையான புறங்கூறுதலை நியாயநிரூபணம் செய்துகொண்டில்லை. அது வாழ்க்கையில் ஓர் உண்மை என்பதைத்தான் மதித்துணருகிறான். உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை நீங்கள் விரும்பாததுபோல, மற்றவர்களைப் பற்றி பேசாமல் அப்படியே விட்டுவிட்டிருக்கக்கூடிய காரியங்களை நீங்களும் பேசியிருப்பீர்கள் என்பது உண்மையல்லவா?
பெட்ரீஷியா மேயர் ஸ்பக்ஸ் புறங்கூறுதல் (Gossip) என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு சொன்னாள்: “பெரும்பாலான புறங்கூறுதல்கள் வேண்டுமென்றே வெளிப்படுவதல்ல, ஆனால் . . . யோசிக்காமல் பேசப்படும் காரியங்களே . . . அதிக ஆழமாக சிந்திக்கும் அவசியமிராத எதோ ஒரு காரியத்தைச் சொல்ல வேண்டும் என்ற ஆசையின் விளைவாக இருக்கிறது. எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமுமின்றி புறங்கூறுகிறவர்கள் மற்றவர்களைப்பற்றி வார்த்தைகளையும் நிகழ்ச்சித் துணுக்குகளையும் வழங்குகிறார்கள்.” இதை நீங்கள் உணர்ந்துகொள்வது உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவும்.
புறங்கூறுதலைக் கையாளுவதற்கு வழிமுறைகள்
“பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்,” என்று நீதிமொழிகள் 14:15 சொல்லுகிறது. இது புறங்கூறுதலைத் திறம்பட்டவிதத்தில் கையாளுவதற்கான வழியை அமைதலோடு திட்டமிடுவதைக் குறிக்கிறது.
புறங்கூறுதல் எவ்வளவு வினைமையானது என்பதை நினைத்துப்பார்ப்பதிலிருந்து நீங்கள் ஆரம்பிக்கலாம். ஒருவேளை, உங்களைக்குறித்து பேசப்பட்டுவருகிற ஒரு காரியம், உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும் அல்லது உண்மையற்றதாயிருக்கும் ஒரு காரியம் உண்மையிலேயே வேடிக்கையானதாய், உங்களுடைய ஆள்தன்மையை உண்மையில் பாதிக்காத காரியமாய் இருக்கக்கூடும். வேறு வார்த்தைகளில் குறிப்பிடவேண்டுமானால், ஒரு புயல்மழையின் சமயத்தில் உங்கள் சொந்த வீட்டிற்கு வெளியே உங்களை நீங்கள் பூட்டிக்கொண்டதை அல்லது பயிற்சி செய்யும்போது உங்களுடைய கால்சட்டை கிழிந்துவிட்டதை உலகம் அறியக்கூடாது என்று விரும்பியிருப்பீர்கள், ஆனால் அது இப்பொழுது தெரியவந்திருக்க, அது உண்மையிலேயே உங்கள் தன்மைக்குச் சேதத்தை உண்டாக்குகிற காரியமா? ஒருவேளை வதந்தியை மறையச் செய்வதற்குரிய மிகச் சிறந்த வழி, நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்துவதேயாகும்.
ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு வதந்தி உண்மையிலேயே உங்களுக்கு விருப்பமற்ற அல்லது உங்களைப் புண்படுத்துவதாயிருக்கிறது என்றால் அப்பொழுது என்ன? அது உண்மையிலேயே உங்களுடைய மதிப்புக்கு அல்லது நற்பெயருக்கு நிரந்தர கேட்டை ஏற்படுத்துவதாய் இருக்குமா—அல்லது சீக்கிரத்தில் அது அப்படியே மறைந்துவிடுமா? பின் குறிப்பிட்ட காரியம் உண்மையாக இருக்குமானால், புயலைக் கடக்கவிடுவதே மேலானது. முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அல்லது குற்ற உணர்வுடையவர்களாகக் காணப்படுவதற்குப் பதிலாக இது “சாதாரணமாக நடப்பதுதான்” என்றிருந்துவிடுவது அந்த வதந்திக்கு எண்ணை ஊற்றுவதைத் தவிர்க்கும். நீதிமொழிகள் 26:20 சொல்லுகிறது: “விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.”
சில சமயங்களில் கண்டுகொள்ளாமல் இருக்குமளவுக்கு காரியம் சாதாரணமான ஒன்றாய் இல்லாமல் இருக்கலாம். பழிதூற்றுதல் போன்று ஒரு தனிப்பட்ட குற்றத்தை ஒருவர் இழைத்திருப்பாரென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்களுக்குப் பின்வரும் புத்திமதி கொடுத்தார்: “நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து.” (மத்தேயு 18:15) அப்படிச் செய்யும்போது, அந்தத் தீய பேச்சு எங்கு துவங்கியது என்பதைக் கண்டுபிடிக்கவும், அந்த வதந்தியைத் தொடங்கிவைத்தவருடன் காரியங்களை அமைதலுடன் கலந்தாலோசிப்பதும் கூடிய காரியமாயிருக்கும்.
உண்மைதான், அந்த நபர் ஒரு கிறிஸ்தவனாக இருக்க மாட்டார். ஆனால் அவர் நியாயமானவராக இருப்பாரென்றால், அந்த நபர் சாதகமாகப் பிரதிபலிப்பார். அந்த முழு விவகாரமும் ஒரு தப்பெண்ணத்தால் உண்டானது என்பது தெரியவரலாம். ஒருவேளை பகைமை அதன் வேராக இருக்குமானால், உங்களுக்கிடையே அதைச் சரிசெய்துகொள்ளலாம்.
என்றபோதிலும், ஒரு வதந்தியின் மூலத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அப்படிக் கண்டுபிடித்தாலும், அந்த நபர் தன்னுடைய யோசனையற்ற செயலுக்குரிய பொறுப்பை ஏற்கமாட்டார். அப்பொழுது என்ன செய்வது? இயேசு கிறிஸ்து “விபரீதமான” பேச்சுக்கு பலியாளானார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (எபிரெயர் 12:3) என்றபோதிலும் இயேசு தம்முடைய பிரசங்க வேலையை விட்டுவிட்டு வேதனையைத் தரும் இந்தப் பேச்சை ஆரம்பித்தவரைக் கண்டுபிடிக்கப் போகுமளவுக்கு அவர் சலித்துக்கொள்ளவில்லை. மாறாக, அவர் சொன்னார்: “ஞானமானது அதன் பிள்ளைகளால் [செயல்களால், NW] நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்.”—மத்தேயு 11:19.
நியாயமாக இருப்பவர்கள் தம்முடைய நல்ல செயல்களைக் கவனித்து, புண்படுத்தும் அப்படிப்பட்ட பேச்சுகள் ஆதாரமற்றவை என்ற முடிவுக்கு வருவார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அதுபோல, உங்களுடைய நடத்தைதானே புறங்கூறுதலுக்கு எதிரான மிகச் சிறந்த தற்காப்பு நடவடிக்கையாக இருக்கட்டும். உங்களுடைய உண்மையான நண்பர்களுக்கு உங்களைப் பற்றிய உண்மை தெரியுமாதலால், அவர்கள் ஆதாரமற்ற கதைகளை நம்பமாட்டார்கள். இருந்தாலும், உங்களைப் பற்றிய ஒரு பொய் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். பெரும்பாலும் அவர்கள் தவறாக அறிவிக்கப்பட்டிருப்போரை சந்திக்கும்போது அவர்களைத் திருத்தி அந்த வதந்தியை ஒன்றுமில்லாததாக்கிடச் செய்யக்கூடும்.
ஆனால் அந்தக் கதை ஏற்கெனவே நன்கு பரவிவிட்டது என்றால், அப்பொழுது என்ன? பெரும்பாலும், அது நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு அதிக மோசமாக இல்லை. மற்றும் மக்கள் எந்த ஒரு நிலையைக் குறித்தும் எப்பொழுதுமே பேசிக்கொண்டிருப்பதில்லை. எப்பொழுதுமே பேசுவதற்கு ஏராளமான விவகாரங்கள் இருப்பதால், சீக்கிரத்தில் அல்லது எப்பொழுதாவது ஒரு நாள் கவனம் உங்களைவிட்டுக் கடந்துவிடும். என்றபோதிலும், நீங்கள் அமைதலாக வேதனைப்பட்டுக்கொண்டிராதேயுங்கள். உங்களுடைய உணர்ச்சிகளை உங்கள் பெற்றோரில் ஒருவரிடமோ அல்லது முதிர்ந்த ஒரு நபரிடமோ ஏன் பகிர்ந்துகொள்ளக்கூடாது? அநேக சமயங்களில், காரியங்களைப் பேசிவிடுவது, ஒரு பிரச்னையை சரியான நோக்குநிலையில் அமைத்திட உதவுகிறது.
பாடம் கற்றுக்கொள்ளும் ஓர் அனுபவம்
புறங்கூறுதலின் பலியாளாக இருப்பது சில நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கிறது. உதாரணமாக, யோசனையற்ற பேச்சுகள் எந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடியதாயிருக்கிறது என்பதை நீங்கள் தனிப்பட்டவிதத்தில் அனுபவித்திருப்பதால், வதந்தியைப் பரப்புவதில் நீங்கள் ஒருவராக இருக்கக்கூடாது என்று ஏன் தீர்மானிக்கக்கூடது?
நீங்கள் புறங்கூறுதலுக்குப் பலியாளாகியிருப்பது உங்களுடைய ஆள்தன்மையில் சில குறைகளை வெளிப்படுத்தியிருக்கலாம், அதாவது பழிவாங்குதல் போன்ற மனச்சாய்வை வெளிப்படுத்தியிருக்கலாம். அல்லது வதந்தியைவிட உங்கள் கர்வம்தானே பெரிய பிரச்னையாக இருக்கக்கூடும். உங்களுடைய மதிப்பைக் குறித்து அதிகக் கவலைப்படுகிறவர்களாக இருப்பது, ‘எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணும்படி,’ செய்திருக்கக்கூடும். (ரோமர் 12:3) உங்களைக் குறித்து அதிகக் கவலைப்பட்டுக்கொள்ளாதிருப்பதற்கான செயலில் ஈடுபடுவதற்கு இதுவே சமயமாயிருக்கும்.
மறுபட்சத்தில், உங்களுடைய பங்கில் நிதானக் குறைவு வதந்தி பரவுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பதை நீங்கள் உணரக்கூடும். உதாரணமாக “தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிற” ஒருவனாகப் பெயர்பெற்றிருக்கும் ஓர் இளைஞனிடம் உங்களுடைய இருதய நினைவுகளை வெளிப்படுத்தினீர்களா? (நீதிமொழிகள் 13:3) அப்படியென்றால், அடுத்தமுறை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்கள் உங்களைப்பற்றி புறங்கூறுவதற்கு இடம் கொடுக்காத வகையில் பழிக்கிடந்தராதவகையில் நீங்கள் கவனமாக நடந்துகொள்ளுங்கள்.—1 பேதுரு 2:15-ஐ ஒப்பிடவும்.
ஆம், காரியங்களைப் பொறுமையுடன், தயவுடன் கையாளுங்கள், மதிகெட்ட வதந்திகளுக்கும் மேலாக உங்களை உயர்த்திட முடியும்—ஒருவேளை அவற்றை நிறுத்திடவும் முடியும். (g89 7/22)
[அடிக்குறிப்புகள்]
a 1990 அக்டோபர் 8, விழித்தெழு!-வில் தோன்றிய “புறங்கூறுதல்—அதில் தீங்கு என்ன இருக்கிறது?” பார்க்கவும்.
[பக்கம் 23-ன் படங்கள்]
சில சமயங்களில் ஒரு வதந்தியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதும் புறங்கூறியவரோடு நேருக்கு நேர் கலந்துபேசுவதும் கூடியகாரியமாகும்