எமது வாசகரிடமிருந்து
காதல் பாடல்கள் இப்போதுதானே, “இளைஞர் கேட்கின்றனர் . . . காதல் பாட்டுகளில் இருப்பது போல் காதல் இருக்கிறதா?” கட்டுரையை நான் வாசித்தேன். (செப்டம்பர் 1990) கட்டுரை திறமையாக எழுதப்பட்டிருந்தது, உட்பார்வை நிறைந்ததாயுமிருந்தது. விவாகம் செய்துகொள்ளும் நிலையில் இல்லாதவர்களுக்கு எல்லாக் காதல் பாடல்களுமே கெடுதி விளைவிப்பவை என்று நான் புரிந்துகொண்டேன். ஆனால் விவாகமானவர்களும்கூட காதல் பாடல்கள் கேட்பதை நிறுத்திவிட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துமா?
D. K., ஐக்கிய மாகாணங்கள்
கட்டுரை, காதல் பாடல்களை ஆணித்தரமாகக் கண்டனம் செய்வதற்கு அல்ல, ஆனால் இப்படிப்பட்ட அநேக பாடல்கள் காதலையும் விவாகத்தையும் பற்றி போலியானதும் ஆரோக்கியமற்றதுமான கருத்தையே கற்பிக்கின்றன என்பதைக் காண்பிக்கவே உதவியது. என்றபோதிலும், ஒரு பாடல் காதல் கருத்துகளை வெளிப்படுத்துகிறது என்ற உண்மைதானே, தானாகவே அதைக் கிறிஸ்தவர்களுக்கு ஆட்சேபத்துக்குரியதாக ஆக்குவதில்லை. இதன் காரணமாவே இளைஞர்களுக்கு அவர்கள் தெரிவு செய்யும் இசையில் வேறுபாடுகளைக் கண்டறிகிறவர்களாக இருக்கும்படியாக அவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுக்கப்பட்டது. விவாகமான கிறிஸ்தவர்களும் அதேவிதமாகவே வழிநடத்தப்பட வேண்டும்.—ஆசிரியர்.
காதல் பாடல்கள் உண்மையில் காதல் எவ்விதமாகக் காண்பிக்கப்படுகிறது என்பதையும் எவ்விதமாக அது கொடுக்கப்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது என்பதாக நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஓர் உறவுக்காக உழைத்து நல்லக் காலங்களிலும் கெட்டக் காலங்களிலும் அதில் நிலைத்திருக்க வேண்டும் என்பதைக் கடைசியாக இந்தக் கட்டுரை என்னை உணரவைத்தது.
M. Z., ஐக்கிய மாகாணங்கள்
புறங்கூறுதல் நான் புறங்கூறுதலைப் பற்றி “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளை வாசித்தபோது (அக்டோபர் மற்றும் நவம்பர் 1990), நான் அழவே ஆரம்பித்துவிட்டேன், ஏனென்றால் அவர்கள் சொல்லியிருந்த அனைத்துமே எனக்குச் சம்பந்தப்பட்டவையாக இருந்தன. நான் ஒரு வதந்தி பரவுவதற்கு உதவியாயிருந்தேன், அது என்னை உட்பட அநேகரை உண்மையில் புண்படுத்திவிட்டது. அநேகருடைய மதிப்பை நான் இழந்துபோனேன், என்னைப் பற்றிய வதந்திகளும்கூட பரவின. கட்டுரை எனக்கு உதவியது. உங்களுக்கு எவ்வாறு நன்றிகூறுவதென்றே எனக்குத் தெரியவில்லை.
J. P., ஐக்கிய மாகாணங்கள்
ஸ்டிராய்டுகள் சமீப காலங்களில், ஸ்டிராய்டுகளைப் பற்றிய உங்கள் கட்டுரைகளைக் குறித்து நான் அதிகம் யோசித்துக்கொண்டிருக்கிறேன். (ஏப்ரல் 1990) என் ஒன்றுவிட்ட சகோதரன் குளிர்கால ஒலிம்பிக்கில் ஓரிரண்டு பதக்கங்களை வென்றான். என்றாலும் மிகச் சிறந்து விளங்குவதில் அவன் திருப்தியாக இருக்கவில்லை. அவன் இன்னும் மேம்பட்டு விளங்க விரும்பினான். இரண்டு ஆண்டுகள் ஸ்டிராய்டுகளைப் பயன்படுத்தியப் பின்பு, வழக்கமாயிருந்ததைவிட இன்னும் பாதி எடை கூடினான். அந்தப் பவுண்டுகள் உறுதியான தசைகளாக இருந்தன. ஆனால் அவன் அதிகமதிகமாக கோபங் கொள்கிறவனாயும் வம்புச்சண்டைக்காரனாகவும் ஆனான். 1990-ல் அவன் விளையாட்டுப் போட்டிக்காக லேக் ப்ளாசிட்டுக்குப் போகவிருந்தான். மாறாக, குளிர்காலத்தை அவன் கல்லறையில் கழித்துக்கொண்டிருப்பான். ஸ்டிராய்டுகள் அவனை கொன்றுவிட்டன.
A. N., ஐக்கிய மாகாணங்கள்
குறிப்பிடத்தக்கது, அக்கறையுள்ளது நான் இப்போதுதானே (நவம்பர் 1990) விழித்தெழு! பத்திரிகையை வாசித்துமுடித்தேன். இந்தப் பிரதி விசேஷமாகக் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மற்றப் பத்திரிகைகள் தகவல்நிறைந்தவையாக இருக்கக்கூடும், ஆனால் அநேகமாக அவை என்னை துயரத்தில் அல்லது செயலற்ற நிலையில் விட்டுச்செல்கின்றன. விழித்தெழு! பிரச்னைகளுக்குத் தீர்வு கொண்டுவருவது கடவுளுடைய நோக்கமாக இருப்பதைப் பற்றிச் சொல்லுகிறது. அது மிகவும் புரிந்துகொள்ளுதலோடும், நேர்மையாகவும், ஒளிவுமறைவின்றியும் ஆனால் அக்கறையுடனும் எழுதப்பட்டுள்ளது. உடனடியாக வெளியேச் சென்று இந்தச் சமுதாயத்திலுள்ள மக்களுக்கு இதை அளிக்காமல் என்னால் இருக்கமுடியவில்லை. உங்களுக்கு மிக்க நன்றி!
S. D., ஐக்கிய மாகாணங்கள்
புகையிலை புகைப்பதனால் வரும் ஆபத்துகளைத் தெளிவான முறையில் நீங்கள் விளக்கினீர்கள். (செப்டம்பர் 1990) நான் புகைபிடிப்பவன், இப்பழக்கத்தில் எந்த ஆட்சேபமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பொறுப்புள்ள முறையில் புகைப்பதில் என்ன தவறு இருக்கிறது? அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியபடியே, ‘நான் ஒரு காரியத்தை செய்ய விரும்புகிறேன் ஆனால் மற்றொன்றை செய்வதை என்னால் நிறுத்தமுடியாது.’ இந்தக் கேள்வியின் பேரில் வெறுமென வேதவாக்கியங்களைச் சுட்டிக்காண்பிப்பது போதது என்பதாக நான் நினைக்கிறேன்.
S. S., ஜெர்மன் கூட்டரசு குடியரசு
புகைப்பதற்கு எந்த ஒரு “பொறுப்புள்ள” வழியும் இல்லை என்பதை மருத்துவ ஆய்வு தெளிவாகக் காண்பிக்கிறது. நச்சுத்தன்மையுள்ள புகையைச் சுவாசிக்கக் கட்டாயப்படுத்தப்படும் புகைக்காத பெரும்பாலானவர்களுக்கு நிச்சயமாகவே இது ஆட்சேபத்துக்குரியதாகும். ஆகவே கட்டுரை, காரியத்தைப் பற்றிய வேதபூர்வமான கருத்தையும், நிக்கோடீனுக்கு அடிமைப்பட்டிருக்கும் புகைப்பவர்களுக்கு உதவிசெய்ய உண்மையான, நடைமுறைக்குப் பயனுள்ள படிகளையும் வழங்கியது. சந்தர்ப்ப சூழலை நோக்குமிடத்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள், தெய்வீக உதவியோடு ஒருவர் தவறுசெய்வதிலிருந்து ‘பாதுகாக்கப்படமுடியும்’ என்பதைக் காண்பிக்கிறது. (ரோமர் 7:21–25)—ஆசிரியர்.
வாழ்க்கைப் பணியைத் தெரிந்து கொள்ளுதல் “நான் என்ன வாழ்க்கைப் பணியைத் தெரிந்துகொள்ள வேண்டும்?” கட்டுரைக்கு மிக்க நன்றி. (ஜூன் 1990) பல்கலைக்கழகத்துக்குச் செல்ல நான் விரும்பினேன், ஆனாலும் பல்வேறு பிரச்னைகளின் காரணமாக என் கனவை நான் கைவிட வேண்டியதாயிற்று. இதற்கிடையில், நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். உங்கள் கட்டுரை எனக்கு நிச்சயமாகவே வெகுவாக உதவியது. இனிமேலும் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. எனக்கு இப்போது ஒரு பகுதிநேர வேலை இருக்கிறது, நான் முழு-நேர சுவிசேஷ வேலை செய்துகொண்டிருக்கிறேன். வேறு எந்த வாழ்க்கைப் பணியும் இதைவிட அதிகம் திருப்தியளிப்பதாக இருக்க முடியாது.
A. P., இத்தாலி