உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 3/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1991
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1990
  • ‘எங்கள் புதல்விகள் நெருங்கிய பாசத்துடன் இருக்கும்படி உதவி செய்தது’
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1991
  • ஆட்கள் என்னைப்பற்றி புறங்கூறினால் நான் என்ன செய்யவேண்டும்?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 3/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

தாமதித்தல் “நீங்கள் எப்போதுமே தாமதமாகப் போகிறீர்களா?” (ஆகஸ்ட் 8, 1990) என்கிற கட்டுரையை நான் பெரிதும் போற்றுகிறேன். மற்றவர்களுக்காக காத்திருக்கும் சமயங்களில் பிரயோஜமான விதத்தில் நேரத்தை பயன்படுத்திக்கொள்ள, அந்நிலைமைகளை எதிர்பார்த்து, படிப்பதற்கு புத்தகங்களைக் கொண்டுவரும்படி நீங்கள் சிபாரிசு செய்திருந்தீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிச்சயமாகவே நடைமுறை பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது.

I.D., நைஜீரியா

வீம்புக்காரர்கள் நான் பள்ளியில் அடிக்கப்படுவதாக பயமுறுத்தப்படாவிட்டாலும், அடிக்கடி என்னை பிள்ளைகள் கேலி செய்வதுண்டு, ஏனெனில் என் தாய் வேறு தேசத்தைச் சேர்ந்தவளாக இருப்பதால் வித்தியாசமான தோற்றமுடையவள். பள்ளியில் வீம்புக்காரர்கள் பற்றிய உங்களுடைய கட்டுரை (டிசம்பர் 8, 1990) அவர்களை அசட்டை செய்துவிடும்படி சொன்னது. அது எனக்கு உதவி புரிந்திருக்கிறது. அந்தச் சிறுவர்களில் அநேகர் பிளவுபட்ட குடும்பங்களிலிருந்து வருகிறார்கள், அவர்களுடைய ஏமாற்றத்தை மற்ற சிறுவர்களின் பேரில் காட்டுகிறார்கள் என்பதை நான் இப்போது உணருகிறேன். உங்களால் இளம் தலைமுறையினரை விளங்கிக்கொள்ள முடிகிறதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

M.D., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!”-வை கண்டுபிடித்தார் சிகைதிருத்தகத்தில் என்னுடைய முறைக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது நேரத்தை கடத்த உதவக்கூடிய ஒரு பத்திரிகைக்காக தேடினேன். என்னை அறியாமலேயே அநேக நிமிடங்கள் விழித்தெழு! என்ற பத்திரிகை ஒன்றை படிப்பதில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். அதன் பல்வேறு கட்டுரைகளில் அடங்கியிருந்த செய்தியின் மறைவான அழகில் நான் ஆழமாக உட்படுத்தப்பட்டதைக் கண்டு நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன்.

H.P.C., பிரேசில்

செல்லப் பிராணியைக் கவனிப்பது: நான் ஒரு மிருக புகலிடத்தில் பணிபுரிகிறேன், பொது மக்களுக்குச் செல்லப் பிராணிகளைக் கவனிப்பதன் உத்திரவாதங்களைப் பற்றிக் கற்றுக்கொடுக்க அடிக்கடி சொற்பொழிவுகளைக் கொடுக்கிறேன். “செல்லப் பிராணி ஒன்றை நீங்கள் உண்மையிலேயே கவனிக்க முடியுமா?” (ஆகஸ்ட் 8, 1990) என்கிற உங்கள் கட்டுரையைப் பள்ளியின் ஒரு பெரிய விழாவிற்கு முந்தின நாளில் பெறுவதில் கிளர்ச்சியடைந்தேன். அந்தக் கட்டுரை என் உடன் பணியாளர்களில் ஒரு நல்லபிப்பிராயத்தை உண்டுபண்ணிற்று, அதை ஆண்டு முடிவில் நாங்கள் வெளியிடும் செய்திக் கடிதத்தில் பயன்படுத்த விரும்புகிறார்கள். அடிக்கடி ஜனங்கள் அந்தச் சமயத்தில் உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக, ஒரு பிராணியை செல்லமாக வளர்க்க தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகிலும் ஒருவர் செல்லமாக வளர்க்கும் ஒரு பிராணியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்திக்கவேண்டிய உண்மைகளையும் உத்தரவாதங்களையும் நீங்கள் எடுத்துரைத்த விதம் மனதில் பதியவைப்பதாக இருந்தது.

C.S., ஐக்கிய மாகாணங்கள்

புறங்கூறுதல் ஒரு வருடத்திற்கு முன் நான் தீங்கு விளைவிக்கும் புறங்கூறுதலுக்கு பலியானேன். நான் முதலில் விசனமடைந்து, புண்பட்டேன். ஆனால் என் தந்தையும் நானும் அந்த வதந்தியைப் பின்தொடர்ந்து கண்டுபிடித்து அதே நாளில் அதை நிறுத்தினோம். இந்தக் கட்டுரை (நவம்பர் 8, 1990) முற்றிலும் பொய்யான இந்த வதந்தியை மறந்துவிடும்படி எனக்கு உதவி செய்தது.

P.M., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு வயது பதினேழு, சிலர் என்னைப் பற்றி புறங்கூறினார்கள். ஓர் இரவு அவர்களில் ஒருவரை நான் கண்டேன், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வீட்டிற்கு திரும்பியபோது, புறங்கூறுதலைப் பற்றிய கட்டுரையை பார்த்தேன். என்னுடைய ஜெபங்களுக்கு விடையளித்ததற்காக யெகோவாவுக்கு மனப்பூர்வமாக நன்றி செலுத்தினேன். அப்படிப்பட்ட நபரை எப்படி கையாளவேண்டுமென்று நான் கற்றுக்கொண்டேன், என்னை மிக முக்கியமானவனாகக் கருதக்கூடாதென நான் கற்றேன். கடைசியாக, அவர்கள் என் வாழ்க்கை காலமெல்லாம் என்னைப் பற்றி பேசுவதற்கு நான் அவ்வளவு முக்கியமானவனல்ல, மேலும் அதைவிட முக்கியமாக, அவர்கள் பரவச் செய்த காரியம் உண்மையல்ல என்பதை என்னுடைய உண்மையான நண்பர்களும் யெகோவாவும் அறிந்திருக்கிறார்கள். இளைஞர்களின் தேவைகளை நீங்கள் அறிந்திருப்பதற்காக உங்களுக்கு நன்றி.

L.U., பிரேசில்

புகைபிடிப்பதை நிறுத்த பத்து வழிகள் நான் 40 வருடங்களாக புகைபிடித்துக் கொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட துளையீட்டு மருத்துவமுறை, அறிதுயில் நிலை, மற்றும் பல்வகை மாத்திரைகள் ஆகிய யாவற்றையும் முயற்சி செய்து வந்திருக்கிறேன். ஆகையால் ஒரு மண்டையோடு புகைபிடிப்பதைக் காட்டும் உங்களுடைய அட்டைப் படம் என்னை பலமாக பாதித்தது. (செப்டம்பர் 8, 1990) ஜெபத்தின் மூலம் நான் புகைபிடிப்பதை நிறுத்தப்போகிறேன்.

B.H., ஐக்கிய மாகாணங்கள்

மரணம் விற்பனைக்கு உங்கள் கட்டுரையில் (செப்டம்பர் 8, 1990) எழுதப்பட்டிருந்த அனைத்தும் கற்பிக்கிறதாகவும், உண்மையாகவும் இருந்தது. எனக்குத் தெரியும், ஏனெனில் நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக புகைபிடித்துக் கொண்டிருந்தேன். அதன் விளைவு: புகையிலை என்னிடம் இல்லாதபோது களைப்பு, வியர்வை, மற்றும் கெட்ட மனநிலைதான். நான் புகைபிடிப்பதை நிறுத்திவிட தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய தீர்மானம் வெறும் இரண்டு மாதங்களே நீடித்தது. சிறிது காலத்திற்குப் பின் நான் யெகோவாவின் சாட்சிகளுடன் படிக்க ஆரம்பித்தேன். 2 கொரிந்தியர் 7:1-ல் உள்ள பைபிள் ஆலோசனையைப் பொருத்திக்கொள்ள கற்றுக்கொண்டேன், கடைசியில் புகைபிடிப்பதை விட்டேன். விரைவில் நான் ஒரு சாட்சியாக முழுக்காட்டப்பட நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன்.

A.P., ஸ்பெய்ன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்