உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 9/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1991
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1991
  • ‘எங்கள் புதல்விகள் நெருங்கிய பாசத்துடன் இருக்கும்படி உதவி செய்தது’
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1990
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 9/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

விளையாட்டுகளில் ஜெபம் “பைபிளின் கருத்து: போட்டி விளையாட்டுகளில் ஜெபம்—கடவுள் செவிகொடுக்கிறாரா?” (மே 8, 1991) கட்டுரைக்கு நன்றி. கைப்பந்தாட்ட விளையாட்டுக்கு முன்பு நான் ஊக்கமாக கடவுளிடம் ஜெபிப்பதுண்டு. முக்கிய விளையாட்டுகளின் போது, வெற்றி பெற பெலத்தைக் கொண்டிருப்பதற்காக நான் ஜெபித்தேன். (அந்த விளையாட்டுகள் எதிலும் நாங்கள் ஒருபோதும் வெற்றியடையவில்லை.) இப்படிப்பட்ட ஜெபங்கள் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக இருக்கவில்லை என்பது இப்பொழுது எனக்குத் தெரியும்.

M.A.L.S., பிரேஸில்

மழைக்காடுகள் முற்றுகையின் கீழ் மழைக்காடுகள் பற்றிய (பிப்ரவரி 8, 1991) இதழை சுற்றுப்புறச்சூழல் மற்றும் புதுப்பிக்கப்படத்தக்க இயற்கை வளங்களுக்கான பிரேஸிலியன் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க தீர்மானித்தேன். அவர்கள் பதில் அனுப்பியிருந்தனர்: “காடுகளை அழித்தலைப் பற்றி தெரிவித்த விழித்தெழு! பத்திரிகையின் ஒரு பிரதியை எங்களுக்கு அனுப்பி வைத்தமைக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் முன்முயற்சியை பாராட்டுவதற்கும் பத்திரிகையின் உயர்ந்த தரத்தை சுட்டிக் காண்பிக்கவும் நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இது கூட்டாக உயிரின வாழ்க்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியை வளர்க்க நிச்சயமாகவே உதவிசெய்யும்.”

C.H.A.S., பிரேஸில்

ஆஸ்துமா ஆஸ்துமா பற்றிய கட்டுரைகளுக்கு நன்றி. (மார்ச் 8, 1991) எனக்கு 16 வயது, ஏறக்குறைய பிறப்பிலிருந்தே இந்த நோயினால் நான் அவதியுறுகிறேன். உணர்ச்சி சம்பந்தமான மன இறுக்கங்களும் ஒருசில உணவு பொருட்களும் நோய்க்கு ஆரம்பமாக இருக்கக்கூடும் என்பது எனக்கு தெரியாதிருந்தது. இப்பொழுது உங்கள் ஆலோசனையை நான் கடைப்பிடிக்கப் போகிறேன். A.D., ஸ்பய்ன்

மூன்றே மாதங்களில் 12 தடவைகள் மருத்துவமனை ஊர்தியில் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் தீராத ஆஸ்துமா நோயாளியான எனக்கு கட்டுரை அக்கறைக்குரியதாக இருந்தது. என் ஆஸ்துமாவை கவலைக்குரிய ஒரு நோயாக இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாகவே நான் கருதுவதுண்டு. ஆனால் ஒரே இரவில் மூன்று முறை சுவாசிப்பதில் தடை ஏற்பட்டு அவதியுற்றப் பின்பு, நான் ஒழுங்காக மருந்து எடுக்க தீர்மானித்தேன். இப்பொழுது மூன்று ஆண்டுகளாக நான் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவில்லை.

S.M., ஆஸ்திரேலியா

விவாக உறவினர் பத்து ஆண்டுகளுக்கு முன் நானும் என் கணவரும் விவாகம் செய்து கொண்டது முதற்கொண்டு, என் விவாக உறவினரோடு ஒன்றன் பின் ஒன்றாக போரட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இயேசு முன்னறிவித்த வண்ணமாக, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தப் பின்பு பிரச்னைகள் அதிகரித்தன. (மத்தேயு 10:35) கடந்த மாதம் சண்டை அந்த அளவுக்கு அதிகரித்துவிட்டதால் சில சமயங்களில் எனக்கு மனஉளைச்சலாக இருந்தது. ஆனால், விவாக உறவினர் பற்றிய கட்டுரைகளுக்கு என்னுடைய போற்றுதலை வார்த்தைகளால் வெளியிடமுடியாது. (ஜனவரி 8, 1991) மாமியாரின் உணர்ச்சிகளையும் பயங்களையும் பற்றி அத்தனை உட்பார்வை கிடைத்ததால் கடந்த காலத்தில் ஏன் சில காரியங்கள் சொல்லப்பட்டன, செய்யப்பட்டன என்பதை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என்னுடைய பங்கில் கூடுதலான கடின உழைப்போடு ஒருவேளை நாங்கள் அனைவரும் ஒருநாள் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். J.P., ஐக்கிய மாகாணங்கள்

முன்னாள் இனவெறியன் “நான் உலகத்தை மாற்ற முயன்றேன்” என்ற வெர்ஜில் டியூக்ஸின் கதையை நான் எவ்வளவு அனுபவித்து படித்தேன் என்பதை என்னால் உங்களிடம் சொல்ல முடியாது. (ஜூன் 8, 1991) இனவெறியின் பாதிப்புகளையும் அது எத்தனை கொடூரமானதாக இருக்கக்கூடும் என்பதையும் அது என்னை உணரச் செய்தது.

J.N., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு பிள்ளையின் பார்வையினூடே உங்கள் கட்டுரை (ஜனவரி 8, 91) அத்தனை புரிந்துகொள்ளுதலோடு எழுதப்பட்டிருந்ததால், பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் எனக்குத் தெரிந்த எல்லா தாய்மார்களிடமும் பத்திரிகையை இயன்ற அளவு அளிக்க நான் உந்துவிக்கப்பட்டேன். என் மகன்கள் படிக்கின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டுரையை வெகுவாக போற்றினார். என் மகன்களில் ஒருவனுடைய ஆசிரியர் பொருள் கையாளப்பட்ட விதத்திற்காக புகழ்ச்சியான வார்த்தைகளைக் கொண்டிருந்தாள். எனக்கும்கூட நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு பெற்றோராக இருப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இது போன்ற கட்டுரைகள் எங்கள் பிள்ளைகளுக்கு உதவ எங்களுக்கு துணையாக இருக்கிறது.

M.P.R., இத்தாலி

மத வரலாறு “மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்” தொடருக்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். பல்வேறு மத பின்னணிகளையுடய அநேக ஆட்களை நான் எதிர்ப்படுகிறேன். இந்தக் கட்டுரைகள், மதத்தின் வரலாற்றை ஆரம்பத்திலிருந்து தற்காலம் வரையாக கண்டுபிடிக்க அநேகருக்கு உதவி செய்யும்.

D.S., ஐக்கிய மாகாணங்கள்

மத வரலாறு பற்றிய தொடரை நான் வாசித்து வருகிறேன். பள்ளியில் எப்போதும் படித்ததைக் காட்டிலும் நான் நிச்சயமாகவே அதிகத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். B.J., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்