எமது வாசகரிடமிருந்து
முதியோர் ஆகஸ்ட் 8, 1993 ஆங்கில விழித்தெழு! “புரிந்துகொள்ளுதலோடு வளர்ந்து பெரியவராதல்” என்ற கட்டுரைக்கு நான் உங்களுக்கு நன்றிசொல்ல வேண்டும். அந்தக் கட்டுரை என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என்னுடைய அம்மாவுக்கு ஏறக்குறைய 90 வயதாகிறது. என் அம்மா தனியாக செல்லக்கூடாது என்றாலும், தனியாக வெளியே செல்ல தீர்மானித்து, கீழே விழுந்து தன் கையை முறித்துக்கொண்டார்கள். நன்றாக காயம் ஆறிவிட்டது, ஆனால் அவர்களைத் தனியே விடமுடியாது. கிறிஸ்தவ கூட்டங்கள் சிலவற்றுக்கு என்னால் செல்ல முடியாமல் இருந்திருக்கிறது, சிலசமயங்களில் நான் யெகோவாவுக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணுவதாக நினைப்பதுண்டு. ஆனால் நீங்கள் எனக்கு அதிகமாக உதவிசெய்திருக்கிறீர்கள். நான் மனச்சோர்வடையும்போது இந்தக் கட்டுரையைப் பற்றி சிந்திக்கிறேன்.
B. T., ஐக்கிய மாகாணங்கள்
மன்னிப்பு இப்பொழுதுதானே “பைபிளின் கருத்து . . . கடவுளுடைய மன்னிப்பு எவ்வளவு பூரணமானது?” (மார்ச் 8, 1994) கட்டுரையை வாசித்துமுடித்தேன். இது உண்மையில் எனக்குத் தேவையான ஒன்றாக இருந்தது. நம்முடைய கடவுள் பாவங்களை நீக்கும்போது, அவை ஒழிந்துபோகின்றன, துடைத்தழிக்கப்படுகின்றன, கழுவப்படுகின்றன என்பதைக் காண இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. இந்தக் கடிதத்தை எழுதுகையில், நான் உண்மையில் மனசமாதானமாய் உணருகிறேன்.
J. W., ஐக்கிய மாகாணங்கள்
யெகோவா இருதயத்தைப் பார்க்கிறார், நம்முடைய பாவங்களைத் துடைத்தழிக்க அவர் மனமுள்ளவராய் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது ஆறுதலளிப்பதாய் இருந்தது. யெகோவாவின் மன்னிப்புக்கு நான் அத்தனை பாத்திரமற்றவளாக உணருவதுண்டு, ஆகவே நான் மனச்சோர்வுற்றிருந்தேன். நான் தற்கொலை பற்றிகூட சிந்தித்திருக்கிறேன். சபையிலுள்ள நெருங்கிய நண்பர்கள் எனக்கு உதவிசெய்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் எனக்கு திரும்ப நம்பிக்கையூட்டப்படுதல் தேவையாக இருக்கிறது, இந்தக் கட்டுரை எனக்கு உதவியது.
K. H., ஐக்கிய மாகாணங்கள்
மூக்குக்கண்ணாடிகள் “மூக்குக்கண்ணாடியை ஒரு நோட்டமிடுதல்” (அக்டோபர் 8, 1993) கட்டுரைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. எனக்கு கண்ணில் ஏதோ பிரச்னை இருப்பதும் கண் மருத்துவர் ஒருவரிடம் நான் செல்ல வேண்டும் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது, ஆனால், நான் அதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். உங்கள் கட்டுரையைப் படித்த பிறகு, நான் ஒரு சந்திப்பு திட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன். நான் அவ்விதமாக செய்ததுபற்றி மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தக் கட்டுரை எனக்குச் சரியான நேரத்தில் வந்தது.
J. W., இங்கிலாந்து
உண்மையுள்ள தந்தையும் மகனும் “என்னுடைய தந்தையின் உண்மையுள்ள முன்மாதிரி” கதையை நான் தொடர்ந்து படித்துமுடித்தேன். (டிசம்பர் 22, 1993, ஆங்கிலம்) இந்தக் கட்டுரை கடவுளுடைய சேவையில் அதிகத்தைச் செய்ய என்னை ஊக்குவித்திருக்கிறது. மரணம் வரையாக யெகோவாவைச் சேவிக்க வேண்டும் என்ற (தந்தை மற்றும் மகனின்) உறுதியான தீர்மானம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 18 வயதில் நான் முழுக்காட்டப்பட்டபோது கொண்டிருந்த உறுதியை புதுப்பித்திருக்கிறது. இதுபோன்ற கட்டுரைகள் உலகம் முழுவதிலுமுள்ள அநேக மற்ற இளைஞரின் இருதயங்களையும் நெகிழச்செய்யும் என்று நான் நம்புகிறேன்.
C. M., இத்தாலி
வண்ணத்துப்பூச்சிகள் “ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கையில் ஒரு நாள்” (ஜனவரி 8, 1994) கட்டுரைக்கு நன்றிதெரிவிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பதை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த மாதம் நானும் என் மனைவியும் ஸயன் தேசிய பூங்காவில் மகிழ்ந்து பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தோம். நாங்கள் இந்தப் பத்திரிகையை சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று வண்ணத்துப்பூச்சி ஒன்று தரையில் இறங்கிவந்து தன் சிறகுகளை தட்டையாக விரித்தது. அவை ஏன் அப்படிச் செய்தன என்பது முன்பு ஒருபோதும் எங்களுக்கு தெரியாது! அந்தக் கட்டுரை யெகோவாவின் படைப்பின் அதிசயங்களைப் போற்றுவதற்கு உண்மையில் எங்களுக்கு உதவிசெய்தது.
C. B., ஐக்கிய மாகாணங்கள்
சிடுசிடுப்பான பெற்றோர் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னுடைய பெற்றோர் ஏன் இத்தனை சிடுசிடுப்பாக இருக்கிறார்கள்?” (நவம்பர் 8, 1993, ஆங்கிலம்) கட்டுரையை நான் வெகுவாக போற்றினேன். என்னுடைய அம்மா சமீபகாலமாக அதிக சிடுசிடுப்பாக இருந்துவருகிறார்கள். பொருளாதார கஷ்டங்களும் அதோடுகூட மற்ற பொறுப்புகளுமே அவர்களுடைய சிடுசிடுப்புக்கு மிகப் பெரிய காரணங்கள் என்பதைப் புரிந்துகொள்ள கட்டுரை உண்மையில் எனக்கு உதவிசெய்தது. இப்பொழுது நான் என்னால் முடியும்போது அதிகமாக உதவிசெய்து நான் அவர்களைக் கட்டி அணைத்து நான் அவர்களை நேசிப்பதைச் சொல்லப்போகிறேன்.
T. B., ஐக்கிய மாகாணங்கள்
நாங்கள் 7 மற்றும் 12 வயதுகளில் இருக்கும் இரண்டு பையன்களின் பெற்றோர். இந்தக் கட்டுரையில் நீங்கள் எழுப்பி இருக்கும் பல்வேறு விவாதங்கள் எங்களுடைய குடும்பத்தில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கின்றன. எங்களுடைய பையன்களுக்கு காரியங்களை விளக்க முயன்று தோற்றுப்போனோம். இந்தக் கட்டுரை உண்மையில் எங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலாக இருந்திருக்கிறது. ஏற்கெனவே இது எங்கள் நிலைமையில் எங்களுக்கு உதவியிருக்கிறது.
R. P. மற்றும் A. P., ஐக்கிய மாகாணங்கள்