உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 7/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 7/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கடன் அட்டைகள் “பிளாஸ்டிக் பணம்—உங்களுக்கு ஏற்றதா?” (மார்ச் 8, 1994) என்ற கட்டுரையை விசேஷமாகப் படித்து அனுபவித்தேன். சில வருடங்களுக்கு முன்பு, நானும் என் மனைவியும் எங்கள் அட்டைகளை அழித்தபின்பும், செலுத்திமுடிப்பதற்கு அதிக காலம் எடுத்த, மனக்கவலையூட்டிய கிரெடிட் கார்டு கடனில் நாங்கள் சிக்கிக்கொண்டதை உணர்ந்தோம். எனினும், வசதிக்காக சமீபத்தில்தான் நாங்கள் ஒரு புதிய அட்டையை வாங்கினோம். பிளாஸ்டிக் பணம், அதன் ஆபத்துகள் பற்றி உங்களுடைய காலத்திற்கேற்ற ஞாபகப்படுத்துதல்கள், அதை இந்தத் தடவை துர்ப்பிரயோகம் செய்யாதபடி தீர்மானத்தோடு இருப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்திருக்கிறது.

M. B. மற்றும் D. B., ஐக்கிய மாகாணங்கள்

விலங்குக் கதைகள் துருவ கரடிகள் பற்றிய “வடகனடாவின் மலைக்கவைக்கும் ராட்சதர்கள்” என்ற கட்டுரைக்கு உங்களுக்கு நன்றி. (டிசம்பர் 8, 1993, ஆங்கிலம்) அது மிக அருமையாக எழுதப்பட்ட கட்டுரையாக இருந்தது. சொல்லப்பட்ட உண்மைகள், யெகோவா நம்முடைய அனுபவித்தலுக்காக விலங்குகளைப் படைத்திருப்பது எவ்வளவு அன்புக்குரியதாக இருந்தது என்பதை உண்மையிலேயே நான் போற்றும்படி செய்தது.

D. C., ஐக்கிய மாகாணங்கள்

“சிங்கங்களை ஒரு கூடூ கெளரவம் இழக்கச் செய்கிறது” (நவம்பர் 22, 1993, ஆங்கிலம்) என்ற உங்கள் கட்டுரை களிப்பூட்டியது. இந்த நகரவைக்கப்பட முடியாத வெண்கல கூடூவை தாக்குவதற்காக, அந்தக் கோபங்கொண்ட தாழ்வுபடுத்தப்பட்ட காளைக் கூடூ முயற்சிசெய்வதை என் மனதில் அப்படியே கற்பனைசெய்யமுடிந்தது. மேலும் சிங்கங்களின் பெருமைத்தனத்தை மறையும்படி அது செய்த முறை—ஒரே வேடிக்கையாய் இருந்தது! அது யெகோவா நகைச்சுவையை விரும்புகிறார் என்பதைக் காண்பிக்கிறது.

A. L., ஐக்கிய மாகாணங்கள்

“விலாங்குமீன்களின் ரகசியங்களை ஆராய்தல்” என்ற தலைப்புப் பொருளை நீங்கள் ஆழமாக ஆராய்ந்த விதத்தைக் குறித்து நான் கிளர்ச்சியடைந்தேன். (அக்டோபர் 22, 1993, ஆங்கிலம்) இந்தச் சிருஷ்டிகள் பைபிளுடைய படைப்பு பதிவின் உண்மைத் தன்மையை நிரூபிக்கின்றன, மேலும் பரிணாமக் கொள்கையை நிரூபிக்க எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் தவறென ஒதுக்கிவிடுகின்றன.

C. S. S., பிரேஸில்

எனக்கு வயது 11. “உலகத்தைக் கவனித்தல்” பிரிவில் “எலி வணக்கமா” என்றழைக்கப்பட்ட பகுதி உண்மையில் எனக்குப் பிடித்திருந்தது. (பிப்ரவரி 8, 1994) இந்தியாவிலுள்ள ஒரு கோவிலில் பூசாரிகள் மரிக்கும்போது, அவர்கள் எலிகளாக மறுபிறப்பை அடைவதன்மூலம் ரட்சிப்பை அடைகிறார்கள் என்று அந்தக் கட்டுரை விளக்கியது! அவை உண்மையில் எலிகள் அல்ல, கடவுளின் தூதர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். விசித்திரமே!

E. L., ஐக்கிய மாகாணங்கள்

விடுமுறை நாட்கள் “விடுமுறை நாட்கள்—சில பிள்ளைகள் ஏன் அவற்றை கொண்டாடுவதில்லை,” என்ற தொடருக்காக நான் உங்களுக்கு ரொம்ப நன்றிகூற விரும்புகிறேன். (நவம்பர் 22, 1993, ஆங்கிலம்) “நாங்கள் எதையோ இழந்தவர்களைப் போல உணரவில்லை!” என்ற பகுதி என்னைக் கண்ணீர்விட வைத்தது. என் நம்பிக்கைகளை என் உடன் வகுப்பு சகாக்களிடம் எடுத்துச்சொல்லுவதில் நான் தனிமையில் இருப்பதாகப் பல தடவைகள் உணர்கிறேன். இந்தக் கட்டுரை நான் ஒருபோதும் தனிமையில் இல்லையென்பதையும், என்றும் தனிமையில் இருக்கப்போவதும் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள எனக்கு உதவிசெய்தது.

B. P., ஐக்கிய மாகாணங்கள்

எனக்குத் தெரிந்தவரை இதுவரைக்கும் நான் கிறிஸ்மஸ் கொண்டாடியதில்லை. மற்ற பிள்ளைகளைக் கண்டு பொறாமைப்பட்ட சமயங்கள் உண்டு. மேலும் இந்தக் கட்டுரை வருவதற்கு சற்றுமுன்பு தான் நான் ஒரு கிறிஸ்மஸ் விருந்துக்கு அழைக்கப்பட்டேன். நான் அதை மறுத்துவிட்டேன். எனக்கு அதுவரை என்ன தெரிந்திருந்திருந்ததோ அதைக்கொண்டு ஏன் என்று விளக்க முயற்சிசெய்தேன். ஆனால் ஜப்பானிலும் வருடாந்தர கொண்டாட்டமாக மாறியிருக்கிற கிறிஸ்மஸ் எப்படி பேய்களோடு தொடர்புள்ள ஒரு பொய்மத கொண்டாட்டமாக இருக்கிறது என்பதைக் காண்பதில், நான் சரியானதைச் செய்தேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

K. I., ஜப்பான்

இரட்டை வாழ்க்கை “இளைஞர் கேட்கின்றனர் . . . இரட்டை வாழ்க்கை வாழ்தல்—ஏன் கூடாது?” (டிசம்பர் 22, 1993, ஆங்கிலம்) என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்கு நன்றி. எனக்கு வயது 15. ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். ஆனால், நான் ஆவிக்குரிய காரியங்களில் நன்றாகவே செயல்படவில்லை, மேலும் சத்தியத்தை விட்டு நான் மெதுவாக விலகிப் போவதுபோல தொடர்ந்து நான் உணர்கிறேன். ஒரு காரணமானது என் பெற்றோர் அளவுக்கு அதிகமாகக் கண்டிப்பாக இருக்கிறதாகும். தவறு என்று நான் அறிந்தபோதிலும், அவர்கள் தடைசெய்த ஏதோவொன்றை செய்யும்படி அடிக்கடி உணர்கிறேன். நான் கட்டுரையைப் படித்தபோது, யெகோவா தேவன் எனக்கு உதவியை அனுப்புவதுபோல உணர்ந்தேன். பெற்றோருக்கு மறைவாகக் காரியங்களைச் செய்தது நான் மட்டும் அல்ல என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் நான் தொடர்ந்து வாசித்தபோது, நான் உணர்ந்ததுமாதிரியே மற்றவர்களும் உணர்ந்தனர் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது எளிதானதாக இருக்காது என்று எனக்குத் தெரியும், ஆனால் யெகோவாவுடைய உதவியுடன் என் வாழ்க்கைப் பாணியை மாற்றும் நம்பிக்கையில் இருக்கிறேன்.

K. J., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்