இளைஞர் கேட்கின்றனர் . . .
உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில்களும் அழகுப் போட்டிகளும் பற்றியதென்ன?
“கடந்த ஆண்டு நியு யார்க்குக்குப் பயணம் செய்யும்போது, ஹோட்டல் நடத்தும் ஒருவர் என் அம்மாவிடம், ‘உங்கள் மகளை ஓர் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாக அமையும் தொழில் பள்ளியில் சேர்க்க வேண்டும். . . . அவள் அழகாய் இருக்கிறாள்,’” என்று சொன்னதை 12 வயது ஏமி நினைவுகூர்ந்தாள்.
அநேக கவர்ச்சியான இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருந்திருக்கிறது. பதினைந்து வயது ரேசினுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு மனிதன் அவளையும் அவளுடைய தங்கையையும் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழிலில் அக்கறையைத் தூண்டிட முயன்றான். தென் ஆப்பிரிக்காவில் ஓர் இளம் பெண் அழகு போட்டியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். இந்தக் கவர்ச்சியான அழைப்பு பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. ஓர் ஆண் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் பணியில் சேர இளம் ஜோனத்தான் அழைக்கப்பட்டான்.
ஆம், உலகமுழுவதுமே, எல்லா வயது இளம் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில்கள், அழகுக் காட்சிகள் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான அழகு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்று அறிக்கை செய்யப்படுகிறது. வெற்றி பெறுகிறவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களைப் பணமாகவும், பரிசுகளாகவும், படிப்பு உதவி தொககளாகவும் பெறுகின்றனர். ஒரு சிலருக்கு, அழகுக் காட்சிகளில் வெற்றிபெறுவது கவர்ச்சியான பொழுதுபோக்குகளிலும் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் வாழ்க்கைப்பணிகளிலும் விளைவடைந்திருக்கிறது.
ஓர் இளம் பெண் இப்படியாகக் குறிப்பிடுகிறாள்: “என்னுடைய வாழ்க்கை முழுவதுமே நான் ஒரு நவநாகரிக உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமைபவளாக—உள்ளூர் பத்திரிகைகளுக்கும் நவநாகரிக கண்காட்சிகளுக்கு உடை மாதிரிப் பெண்ணாக இருக்க விரும்பினேன். சம்பளம் மணிக்கு 25 டாலர் முதல் 100 டாலர் வரை செல்கிறது. பெரிய நிலைக்கு வந்த சில உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழிலில் பிரவேசித்திருக்கும் ஆட்கள் நாள் ஒன்றுக்கு 2,500 டாலர் சம்பாதிப்பதாக அறிக்கை செய்யப்படுகிறது! அப்படியிருக்க, சில கிறிஸ்தவ இளைஞர் தங்களுடைய நல்ல தோற்றத்தைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் சோதனையை எதிர்ப்பட்டிருக்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சியான வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்பட்டால் நீங்கள் எவ்விதம் பிரதிபலிப்பீர்கள்?
அழகு பயன்படக்கூடும்
யூதக் கன்னியாகிய எஸ்தர் “ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்” என்று சொல்லப்பட்டது. (எஸ்தர் 2:7) உண்மை என்னவெனில், அவள் தனக்குத் தெரியாமலேயே ஓர் அழகு போட்டியில் கலந்துகொண்டாள் என்றும் நீங்கள் சொல்லக்கூடும். எந்தச் சூழ்நிலையில்? கீழ்ப்படியாமையின் காரணத்தால் பெர்சிய ராணியாகிய வஸ்தி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டாள். அவளுக்குப் பதில் ஒரு தகுதியான நபரைக் கண்டுபிடிப்பதற்காக, அகாஸ்வேரு அரசன் தன்னுடைய அரச அதிகார எல்லை முழுவதிலுமிருந்து மிக அழகிய கன்னிப் பெண்களைக் கூட்டிச்சேர்த்தான். 12 மாத காலத்துக்கு அந்த இளம் பெண்கள் விசேஷ உணவைப் பெறும்படியும், வெள்ளைப்போளத் தைலத்தாலும் சுகந்தவர்க்கங்களினாலும் தவறாது உருவி விடப்படவும் ஏற்பாடு செய்தான். பின்னர் ஒவ்வொரு பெண்ணின் அழகும் பரிசீலனை செய்யப்பட்டது. எஸ்தரின் சமயம் வந்தபோது, அவள் புதிய ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள்!—எஸ்தர் 1:12–2:17.
என்றபோதிலும், எஸ்தர் ஏன் அதில் கலந்துகொண்டாள்? அவள் வீண் புகழ்ச்சியை நாடுகிறவளாய் இருந்தாளா? இல்லை, எஸ்தர் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றிக்கொண்டிருந்தாள், அதை அவள் தன்னுடைய தேவபயமுள்ள ஒன்றுவிட்ட சகோதரனும் காப்பாளருமாயிருந்த மொர்தெகாய் மூலம் திரும்பத் திரும்ப நாடினாள். (எஸ்தர் 4:5-17) ஆமான் என்ற ஒரு பொல்லாதவன் கடவுளுடைய மக்களின், இஸ்ரவேல் தேசத்தாரின் அழிவுக்காகச் சதி செய்துகொண்டிருந்தான். அந்த ‘அழகுப் போட்டி,’ எஸ்தரை ஒரு பிரபல ஸ்தனத்துக்கு வரவும், அந்த நிலையில் அவள் இந்தச் சதி திட்டத்தை முறியடிக்கச் செய்யவும் காரியங்களை வழிநடத்திட யெகோவாவை அனுமதித்தது. இப்படியாக எஸ்தரின் நல்ல தோற்றம் கடவுளுடைய அனைத்து மக்களுக்கும் ஓர் ஆசீர்வாதமாக நிரூபித்தது!
இன்று எப்படி? ஒருவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்பது நிச்சயமாகவே வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரியம் இல்லை.a என்றபோதிலும், மனத்தாழ்மை மற்றும் அடக்கம் உடன் செல்லும்போது, கவரக்கூடிய தோற்றம் ஓர் உடைமையாக இருக்கக்கூடும். என்றாலும், இந்த உடைமையைப் பயன்படுத்துவதற்கு ஒரு மாதிரி அல்லது அழகுப் போட்டிக் காட்சிகளில் பங்குகொள்வது விவேகமான வழி என்று அர்த்தமாகுமா? அல்லது பெயர், புகழ், அல்லது செல்வம் என்ற கவர்ச்சிக்கு அப்பால் கவனிக்கவேண்டிய அம்சங்கள் இருக்கின்றனவா?
மின்னுகின்றவற்றிற்குப் பின்னால்
நவநாகரிக உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழிலுக்குத் தனி பொலிவு உண்டு. அருமையான ஆடை, விலையுயர்ந்த ஆபரணம், நல்ல சம்பளம், பயணம் செய்யும் வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சியில் தோற்றங்கள்—இந்த அனைத்துமே கவர்ச்சியாயிருக்கின்றன. கூடுதலாக, உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில் பயிற்சி இளம் பெண்களையும் ஆண்களையும் தன்மையோடு நடக்கவும், நம்பிக்கையோடும் நிதானத்தோடும் பேசுவதற்கும் உதவியிருக்கிறது. ஆனால், அந்தப் பொலிவுக்கும், மின்னுதலுக்கும், ஜொலிப்புக்கும் பின்னே ஒரு கிறிஸ்தவனுக்கு உண்மையான ஆபத்து இருக்கக்கூடும்.
உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமைவது தன்னில்தானே கெட்டது என்பதல்ல. சில உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் காரியம் நேர்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கக்கூடும்: ஒரு பொருளைக் கவர்ச்சியாக தோன்றச் செய்வது. பத்திரிகை அமைப்பிலும், தொலைக்காட்சி வர்த்தகப் பகுதியிலும் நகப் பாலீஷைக் காட்டுவதற்கு அழகிய கைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல, நல்ல கட்டுடைய ஆண்களும் பெண்களும் உடைகளைக் காட்டிட பயன்படுத்தப்படுகின்றனர். அப்படிப்பட்ட உடை அடக்கமாக இருக்கிறது என்று ஊகிக்குமிடத்து, ஒரு கிறிஸ்தவன் அதை அணிந்து உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் இருப்பதற்காக சம்பளம் கொடுக்கப்படுவதற்குத் தடை இல்லாமல் இருக்கலாம்.
என்றபோதிலும் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் காரியத்தில் பல பிரச்னைகள் இருக்கலாம், அவை எல்லா சமயத்திலுமே தவிர்ப்பதற்கு எளியவையாய் இருக்க முடியாது. உதாரணமாக, நீங்கள் எவ்விதம் பிரதிபலிப்பீர்கள்? அல்லது நிழற்படம் எடுப்பவர் உங்களை அடக்கமற்ற, கவர்ச்சியான வகையில் நிற்க தந்திரமான முறையில் அழுத்தம் கொண்டுவந்தால்? மேலும் நிழற்படங்கள் எவ்விதம் பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஒருவர் நிச்சயமாய் இருக்க முடியாது. உதாரணமாக, பொய் மத விடுமுறைகளை ஊக்குவிக்கும் அல்லது ஒழுக்கக்கேட்டிற்குரிய ஓர் அமைப்பில் அந்தப் படங்கள் பயன்படுத்தப்படலாம்.
பின்னர் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைப்பணி ஒருவருடைய ஆள் தன்மையில் ஏற்படுத்தும் பாதிப்பும் இருக்கிறது, எதிர்மறையான தன்மைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கக்கூடும். “இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்”தை அறிவுறுத்துவதற்குப் பதில் ஒருவருடைய வெளித் தோற்றத்தைத் தொடர்ந்து அறிவுறுத்தக்கூடும். (1 பேதுரு 3:4) மேலும், விலையுயர்ந்த உடை, நகை, போன்ற காரியங்களுடன் வேலை செய்தல் பொருளாசை சம்பந்தப்பட்ட யோசனை வேர்கொள்வதற்கு இடமளிக்கக்கூடும்.—1 தீமோத்தேயு 6:10.
நவநாகரிக உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில் ஒருவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களை வெளிப்படுத்துவதற்கு, வாழ்க்கைப் பணியில் முன்னேறுவதற்குக் கைமாறாக பாலுறவு காரியங்களில் தயவு பண்ண வற்புறுத்தக்கூடும். உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் பணியில் முன் இருந்த ஒருவர் சொன்னார்: “நீங்கள் எந்த இடத்திற்கும் செல்ல [பாலுறவு] காரியங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்.” இப்படியாக ஆண் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமைகிறவர்கள் மத்தியில் ஆண்புணர்ச்சி அதிகமாகக் காணப்படுகிறது என்றும் சிலர் உரிமைபாராட்டுகின்றனர். இது எல்லா சமயத்திலுமே உண்மையாய் இல்லாதிருக்கலாம் என்றாலும், மற்ற பணிகளில் இருப்பதைவிட உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் தொழில்களில் இந்தப் பிரச்னை அதிகமாகவே இருக்கக்கூடும்.
அழகுக் காட்சிகள்
மேல் குறிப்பிடப்பட்டவற்றில் அநேக காரியங்களை அழகு காட்சிகளைக் குறித்தும் சொல்லலாம். என்றபோதிலும், அத்துடன்கூட கடுமையான போட்டியின் அழுத்தமும் இருக்கிறது. இது உடன் போட்டியாளர்களை வேண்டுமென்றே ஒழித்துக்கட்டுவதில் ஈடுபடச் செய்திருக்கிறது. ஓர் அறிக்கையின்படி, “சில போட்டியாளர்கள் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று அந்தளவுக்கு விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பதால், எதிர்த்துப் போட்டியிடுபவர்களின் நீச்சல் ஆடையை உதட்டுப்பூச்சு வண்ணக்கோலால் கறைப்படுத்திட அல்லது ‘எதிர்பாராத வகையில்’ அவர்களுடைய மாலை ஆடைகளை கோலா போன்ற குளிர்பானங்களால் கறைபடுத்திட தயங்குவதில்லை.”
மேலும், அழகுக் காட்சியை ஏற்படுத்துகிறவர்கள் தங்கள் அழகு பெண்கள் விற்பனையாளர்களாக அல்லது பொதுத் தொடர்பு பிரதிநிதிகளாக இருக்க முழுமையாக ஒப்புக்கொள்வதை எதிர்பார்க்கிறார்கள். இது அநேகமாக விடியும்வரை சமூக கூட்டுறவுகளில் ஈடுபடுவதைக் கேட்கிறது. ஓர் இளம் பெண்ணிடம் இப்படியாகச் சொல்லப்பட்டது: “அன்பே, நீ ஒருபோதும் களைப்படையக்கூடாது. அதை மறந்துவிடாதே. ஒரு விருந்திற்கு முதல் வருவதும் நீயே, முடிந்ததும் கடைசியாகப் போவதும் நீயே.” குறைந்தபட்சம், இது ஒரு கிறிஸ்தவ இளைஞனை ஆரோக்கியமற்ற கூட்டுறவுக்குத் திறந்தவனாகவும், ஒருவர் ஓர் அவிசுவாசியுடன் காதல் கொள்வதற்கும் வழிநடத்தக்கூடும்.—2 கொரிந்தியர் 6:14.
கடைசியாக, அழகுப் போட்டிகள் ரோமர் 1:25-லுள்ள பைபிள் நியமத்தை அவமதிக்கிறது; இது ‘சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிக்கிறவர்களைக்’ கண்டனம் செய்கிறது. (அப்போஸ்தலர் 12:21-23-ஐ ஒப்பிடவும்.) அந்த அடிப்படையில்தானே, ஒரு கிறிஸ்தவ இளைஞன் அழகுப் போட்டியில் கலந்துகொள்வதை மறுத்திடுவான், ஒருவேளை பள்ளியில் ஒரு சிறிய அளவில் இருந்தாலும் அப்படிச் செய்வான்.
உண்மையான அழகு
முன்னதாகக் குறிப்பிடப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய சொந்த தீர்மானங்களைச் செய்வதில் இந்த உண்மைகளை நிதானித்துப் பார்க்க வேண்டும். ஓர் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய் அமையும் ஒரு வாழ்க்கைப் பணியைத் தொடருவது தன்னில்தானே தவறாக இல்லை என்றாலும், ஏமியும் ரேசினும் அப்படிச் செய்வதில்லை என்று தீர்மானித்தார்கள். அதுபோல, ஜோனத்தானும் ஓர் ஆண் உடை ஒப்பனைப் பாணிகளுக்கு மாதிரியாய்த் தன்னை அமைத்துக்கொள்ளும் ஒரு வேலைவாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டு, இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில், முழுநேர ஊழியத்தில் ஒரு வாழ்க்கைப் பணியைத் தொடருகிறான். ஆனால் மற்றொரு அழகிய பெண் அழகு போட்டிகளில் கலந்துகொண்டு, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாள். இன்று அவள் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவதில்லை. “கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும் ஒன்று எப்பொழுதுமே நல்லதாயிருப்பதில்லை; ஆனால் நல்லதாயிருப்பது எப்பொழுதுமே அழகாக இருக்கிறது,” என்ற வழக்கச்சொல் எவ்வளவு உண்மையாக இருக்கிறது.
மீண்டும் எஸ்தர் நம் நினைவுக்கு வருகிறாள். அவளுடைய உடல் அழகின் காரணமாக, அரசனின் மனைவியாக இருக்கும் வரிசையில் சேர்க்கப்பட்டாள். என்றபோதிலும், அவளுடைய அடக்கம், கீழ்ப்படிதல் மற்றும் பேராசை இல்லாதிருத்தல் ஆகியவை அவளை உண்மையிலேயே அழகுள்ளவளாக்கியது. (எஸ்தர் 2:13, 15-17) அவள் பேதுருவின் வார்த்தைகளுக்கு விளக்கமாய் அமைந்தாள்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” (1 பேதுரு 3:3, 4) இந்தக் கிறிஸ்தவ தன்மைகளை வளர்ப்பது, காலப்போக்கில் உடல் அழகின் குறைந்த கால பலன்களைக் காட்டிலும் மிகுந்த பலனை உடையதாயிருக்கும். (g90 1/8)
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 8, 1986 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் வந்திருக்கும் “தோற்றம் எந்தளவுக்கு முக்கியமானது?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 12-ன் படங்கள்]
கிறிஸ்தவ தன்மைகள் உடல் அழகின் குறைந்த கால பலன்களைக் காட்டிலும் மிகுந்த பலனை உடையது