உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 4/8 பக். 31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 1990-களில் எய்ட்ஸ்
  • தீர்மானங்களைச் செய்தல்
  • கிழக்கத்திய மருந்துகளுக்காக விலங்குகளை அத்துமீறி பிடித்தல்
  • இரத்தம் அளிக்கப்படுதல் மூலம் எய்ட்ஸ்
  • பாலைவனங்களை மலரச் செய்தல்
  • வெற்றியும் தோல்வியும்
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
  • புலி! புலி!
    விழித்தெழு!—1996
  • எய்ட்ஸ் ஏன் இவ்வளவு பரவலாகப் பரவியிருக்கிறது?
    விழித்தெழு!—1989
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 4/8 பக். 31

உலகத்தைக் கவனித்தல்

1990-களில் எய்ட்ஸ்

ஃபிரான்சிலுள்ள மார்செய்ல்ஸ் நகரில் நடந்த ஒரு மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் எய்ட்ஸ் பூகோளத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ஜோனத்தான் மாண், 1990-களில் எய்ட்ஸ் நோய் பூகோளம் முழுவதும் ஒரு பெரிய அளவில் பரவும் வாய்ப்பைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். உலக முழுவதும் 152 நாடுகளில் இப்பொழுது ஒரு கோடி மக்கள் எய்ட்ஸ் நோய்க் கிருமியினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். 2000-வது ஆண்டுக்குள் எய்ட்ஸ் 60 லட்சம் மக்களைக் கொல்லக்கூடும். லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை ஆப்பிரிக்கா தேசம்தான் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காண்பிக்கிறது. டான்சானியாவிலுள்ள டார் எஸ் சலாமில் மதுக்கடைகளிலும் உணவகங்களிலும் வேலை செய்யும் பெண்களில் 42 சதவீதத்தினர் இந்த நோய்க் கிருமியைக் கொண்டவர்கள் என்று அறிவிக்கப்படுகிறது. கோட் டி ஐவாயரில் வயதில் பெரியவர்களாயிருக்கும் 10 பேரில் மூன்று பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் இந்த நெருக்கடி நிலைகுறித்து, “ஒரு பேரழிவு அமெரிக்கா மீது பரவுகிறது,” என்று ஹட்சன் நிறுவனம் எச்சரிக்கிறது. 2002-க்குள் இந்த வைரஸ் ஏறக்குறைய 1.45 கோடி அமெரிக்கரைப் பாதித்திருக்கும், மற்றும் தேசத்தின் சரித்திரம் முழுவதிலும் நடந்திருக்கும் போர்களில் மாண்டவர்களின் எண்ணிக்கையைவிட 1990-களில் அதிகமான அமெரிக்கர்களை இது கொன்றுவிடும் என்று அது எச்சரிக்கிறது. (g90 2/22)

தீர்மானங்களைச் செய்தல்

நீங்கள் எப்பொழுது உங்களுடைய மிகச் சிறந்த தீர்மானங்களைச் செய்கிறீர்கள்—நீங்கள் நின்றுகொண்டிருக்கும் போத அல்லது உட்கார்ந்துகொண்டிருக்கும் போத? தெற்குக் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வின்படி, “அழுத்தத்தின் கீழ் இருக்கும் மக்கள் கடினமான தீர்மானங்களை உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக நிற்கும்போது 20% வேகமாகச் செய்கின்றனர்,” என்று அமெரிக்கன் ஆரோக்கியம் என்ற பத்திரிகை அறிக்கைசெய்கிறது. இந்த ஆய்வு கணணியின் மூலம் உட்கார்ந்திருக்கும் நிலையிலும் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் வரிசையாகக் கேள்விகள் கேட்பதை உட்படுத்தியது. நின்றுகொண்டிருப்பதுதானே மிகச் சிறந்த பலன்களைத் தந்தது. வயதில் பெரியவர்களும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களும் நின்று கொண்டிருக்கும்போது தீர்மானங்களைச் செய்வதில் முன்னேற்றம் காண்பித்தனர். இது ஆச்சரியமான காரியமல்ல, ஏனென்றால் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் போது இருதயத் துடிப்பு வேகம் நிமிடத்திற்கு பத்து அதிகமாக இருக்கிறது, இது “ஊக்குதலைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளைத்” தூண்டிவிடுகிறது. வேலை செய்யும் நாளினுடே எழுந்து ஒழுங்காகக் கை கால்களை நீட்டி அசைவிப்பதை உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் அலுவலருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. (g90 2/8)

கிழக்கத்திய மருந்துகளுக்காக விலங்குகளை அத்துமீறி பிடித்தல்

வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் கானடா தேசத்து வனாந்திரத்திலே பாதங்களும் பித்தப்பையும் நீக்கப்பட்ட கரடிகளின் செத்த உடல்களை அதிகளவில் கண்டனர். ஒரு கரடியிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பாகங்கள் மட்டுமே அத்துமீறி இவற்றைப் பிடிப்பவர்களுக்கு 5,000 டாலர் சம்பாதித்துத் தரும் என்று மெக்ளீன் பத்திரிகை அறிக்கை செய்கிறது. இவைக் காலாகாலமாக இருந்துவரும் ஆசிய மருந்துகளைத் தயாரிக்கத் தேவையான ஒரு பொருளாக விற்கப்படுகின்றன. இது வேதனையையும் வீக்கத்தையும் குறைப்பதாகவும், அல்லது பாலுறவு விஷயத்தில் ஒருவரின் ஆண்மையைப் பெருக்குவதாகவும் கருதப்படுகிறது. இவை வனவிலங்குகளின் உறுப்புகளும் மற்ற பாகங்களும் விற்பனையாகும் மாபெரும் வியாபாரத்தின் ஒரு சிறிய பகுதி; இந்த வியாபாரம் எல்லாமே சட்டவிரோதமானதல்ல. கொம்புள்ள மான் மற்றும் மரையின் தோல், கடல் நாய் மற்றும் புலிகளின் இனப்பெருக்க உறுப்புகள், உலர வைக்கப்பட்ட கடற்குதிரைகள், மற்றும் மானின் கருவுங்கூட விரும்பி நாடப்படுகிறது. (g90 2/22)

இரத்தம் அளிக்கப்படுதல் மூலம் எய்ட்ஸ்

சோவியத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 40 சதவீதத்தினர் வரை இந்த வைரஸை பாதிக்கப்பட்ட இரத்தம் மூலம் பெற்றிருக்கின்றனர் என்று தி டொரான்டோ ஸ்டர் அறிக்கை செய்கிறது. இந்த நிலையை “மிகவும் எச்சரிப்புக்குறியது” என்று குறிப்பிட்டு மருத்துவ விஞ்ஞானத்தின் சோவியத் கல்வி நிறுவனத்தின் தலைவர் வாலன்டீன் போக்ரோவ்ஸ்கி பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் இரத்தத்தின் மூலம் எய்ட்ஸ் வைரஸ் கடத்தப்படுகிற நோயாளிகளின் எண்ணிக்கையில் சகித்துக்கொள்ள முடியாதளவுக்கு உயர்ந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறோம்.” தெற்கு நகரங்களாகிய எலிஸ்டா மற்றும் ஓல்கோகிராடில் மருத்துவமனையில் இந்நோய்கிருமி ஊசிகளால் கடத்தப்பட்டிருப்பது உயர்ந்த எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது. அங்கு குறைந்தபட்சம் 81 பிள்ளைகளாவது இந்த நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். (g90 2/8)

பாலைவனங்களை மலரச் செய்தல்

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிடும் ஒரு பேராசைத் திட்டத்தில் செளதி அரேபியாவில் தேசம் பாலைவனங்களை மலரச் செய்கிறது. செளதியின் பாலைவனங்களில் புள்ளிகளாய் அமைவதுதான் நூற்றுக்கணக்கான பச்சை வட்டங்கள், ஒவ்வொன்றும் 200 ஏக்கர் அளவுடையது, இவை அதிக ஆழத்தில் கிடைக்கும் தண்ணீரின் பாசனத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் பாலைவன நிலத்தை விளைநிலமாக மாற்றுவதற்கான செலவு மலிவாக அமைந்துவிடுவதில்லை. அரசு இந்தத் திட்டத்துக்காக ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மில்லியன் டாலர்களைச் செலவிட்டிருக்கிறது. “செளதி அரேபியாவில் கோதுமை வளர்ப்பது வட துருவத்தில் கண்ணாடியறையில் முலாம்பழம் வளர்ப்பதற்கு உண்டாகும் செலவாக இருக்கிறது,” என்று தி எக்கானமிஸ்ட் கூறுகிறது. பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கும் பணம் வரம்பற்றிருப்பதாகத் தென்பட்டாலும், தண்ணீர் அந்தளவுக்குக் கிடைப்பதில்லை. பயன்படுத்தப்படும் தண்ணீரில் பேரளவு, புதுப்பிக்கமுடியாத, கைப்பற்றப்பட்ட “புதைப்படிவ” தண்ணீரிலிருந்து கிடைக்கிறது. தண்ணீர் உபயோகம் இன்றைய அளவில் தொடர்ந்தால், அந்த நீர்த்தேக்கங்கள் 10 முதல் 20 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.

வெற்றியும் தோல்வியும்

“அதிருஷ்டம் இருப்பது உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்” என்ற தலையங்கத்தின்கீழ், பிரேசில் செய்தித்தாள் ஓ எஸ்டாடோ டெ சாவொ பாலோ, அண்மையில் ஒரு பரிசுச் சீட்டில் வெற்றி பெற்றவரின் பரிதாபமான அனுபவத்தை அறிக்கை செய்தது. அந்த லாட்டரியின் ஒரே வெற்றி வீரர் 9,30,000 நோவோஸ் க்ரூஸேடாஸ் (சுமார் 4,00,000 ஐ.மா. டாலர்கள்) பெற்றார். என்றபோதிலும், அதற்குப் பின்பு, அந்தப் பரிசுச் சீட்டுப் பணத்திற்காக நாடிய திருடர்கள் தன்னுடைய உறவினரில் மூன்று பேரை கொன்றுபோட்ட துயரமான செய்தியையும் அவன் கேள்விப்பட்டான். (g90 1/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்