தூய்மைக்கேட்டின் முடிவு அருகாமையில் இருக்கிறதா?
ஒரு தூய்மையான பூமியின் எதிர்ப்பார்ப்பு உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இது உண்மையிலேயே கூடிய காரியமா? தூய்மைக்கேட்டை பொறுத்தவரை சில நாடுகள் நிலைமையை முன்னேற்றுவிப்பதற்கு கடின முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றன. வானங்களிலிருந்து வெளியேற்றப்படும் வாயுக்களின் ஈய அடக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் காற்றுத் தூய்மைக்கேட்டில் ஒரு குறைவு இப்பொழுது அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில், தொழிற்சாலையின் தூய்மைக்கேடு குறைக்கப்பட்டிருப்பதுபோலும் காணப்படுகிறது. ஆகிலும், இது எப்பொழுதும் கட்டுப்படுத்துதல்களினால் இல்லை. அதற்கு பதிலாக, இது அவ்வப்போது உலக பொருளாதார நிலைமை மூலமாக கொண்டுவரப்பட்ட தொழிற்சாலையின் மறு அமைப்பின் விளைவாகும்.
பூமி—தானாகவே சுத்தம் செய்துகொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா?
கூடுதலாக, இயற்கையாக சுத்தம் செய்யும் நுட்பங்கள் வேலை செய்கின்றன. உதாரணமாக, ஃபிரான்சிலுள்ள நைஸின் மருத்துவ சமுத்திர விஞ்ஞான மையத்தின் டாக்டர் ஆபர்டின் பிரகாரம், ஃபிஸ்டோபிளாங்டன் கடலிலுள்ள பிரதான தூய்மைக்கேட்டுக்கு எதிரான இயக்கிகளில் ஒன்று. இந்த நுண்ணிய உயிரினங்கள் சுரக்கும் இயற்கையான உயிர்வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருட்கள் தொற்றுநோய் பொருட்களை அழிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவைகள் மூழ்கடிக்கப்படுகின்றன. இத்தாலியில் வெனிஸ், மற்றும் அருகாமையிலுள்ள ஏட்ரியாட்டிக் கடல் கடற்பாசி வகைகளினால் பொங்கிக்கொண்டு வருகிறது. ஏட்ரியாட்டில் கோட காலத்தில் “நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தெற்கு நோக்கி பரவியுள்ள, ஒரு நாற்றமுடைய குழைசேற்றுத் தன்மை வாய்ந்த பாகு, மஞ்சள், காவி, சாம்பல் நிறமுடைய கடற்பாசியை” இந்தத் தூய்மைக்கேடு உற்பத்தி செய்கிறது. (தி குளோப் மற்றும் மெயில், டொரான்டோ, கானடா) ஒரு துணையுதவி காரணக்கூறு, “15 மில்லியன் ஜனங்களுக்கு மேலானவர்களிடமிருந்து வரும் சாக்கடை நீர் இத்தாலியிலுள்ள பெரிய தொழிற்சாலைகள் அநேகத்திலிருந்து வரும் கழிவு . . . 5 மில்லியன்களுக்கும் மேலான பன்றிகளின் உரத்தோடு” போ என்ற ஆற்றிலிருந்து வரும் சாக்கடை நீராகும்.
நில தூய்மைக்கேட்டைப் பற்றியதென்ன? ஓர் ஐ.மா. சக்தியின் துறையோடு இணைந்து ஒரு பெரிய இரசாயன நிறுவனத்தின் ஆராய்ச்சி, பூமியிலுள்ள பாக்டீரியா, காளான்கள், மற்றும் அமீபாக்களின் அநேக வகைகளின் தோற்றம், சில மேற்பரப்புக்கு 850 அடிகள் கீழேயுள்ளன என்று வெளிப்படுத்தியுள்ளது. ஃபிளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் டாக்டர் டேவிட் பால்க்வெல் குறிப்பிட்டார்: “இந்த ஆழத்திலுள்ள நுண்ணிய உயிரினங்கள் நன்றாக மண்கலந்த நீரை (இயற்கை மண்நீர்) சுத்தப்படுத்தக்கூடும்.” மாற்று வகையாக, டாக்டர் பால்க்வெல், தோற்றத்தைப் பற்றிய பொறியியலாளர்கள் இந்த நிலத்திற்கு கீழான நுண்ணிய உயிரினங்கள் “குறிப்பிட்ட தூய்மைக் கேடுண்டாக்குபவைகளை ஜீரணிக்க” தூண்டுவதற்கு செய்ய இயலும் என்று நம்புகிறார்.
ஆகிலும், உள்ளதன் கண் ஆர்வமாக, இந்தத் தற்கால சூழ்நிலை பூமியிலுள்ள சடப்பொருள் சார்ந்த மாசுபடுத்தலுக்கு ஒரு விரைவான முடிவுக்கான நல்ல முன்னறிகுறி கொடுக்கவில்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். இன்னும் தூய்மைக்கேட்டின் முடிவு கண் முன் இருக்கிறது என்று நாம் நிச்சயமாயிருக்க முடியும். ஏன்?
ஒழுக்கத் தூய்மைக்கேட்டை நீக்குதல்
இந்தக் கோளம் உண்மையிலேயே ஒரு சுத்தமான வீடாக மனிதவர்க்கத்திற்கு இருக்கவேண்டுமானால், இதனுடைய குடியிருப்பாளர்கள் ஒழுக்கத்திலும் சரீரத்திலும்கூட ஒரு சுத்தமான ஜனமாக இருக்கவேண்டும். மனிதர்கள் அவர்களுடைய அடிப்படையான தன் முனைப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் சுயநலமற்ற குணாதிசயங்களை முன்னேற்றுவித்துக்கொள்ள வேண்டும், அவர்களுடைய உடன் மானிடருக்கும் அவர்களுடைய மிருக அயலகத்தாருக்கும் கரிசனை காட்ட வேண்டும். இதைச் செய்ய முடியுமா?
பத்தாண்டுகளுக்கு மேலாக, யெகோவாவின் சாட்சிகள் இது முடியுமென கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் பைபிளின் ஆள்தன்மையை மாற்றியமைக்கும் வல்லமையை சோதனைக்கு வைத்திருக்கிறார்கள். மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் மேல் பயனுள்ள விளைவுகளோடு, ஜனங்களை மாற்றியமைப்பதற்கு இந்தப் புத்தகம் வலிமையுள்ளது என்று கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளின் பெரிய மாநாடுகளில் கலந்துகொள்ளும் கூட்டங்களின் ஒழுங்கையும் சுத்தத்தையும் குறித்து அரங்கின் அதிகாரிகள் கிளர்ச்சியடைகிறார்கள். ‘சாட்சிகள் நுழையும்போது இருந்ததைவிட சுத்தமாக அரங்கம் விட்டுசெல்லப்பட்டது’ என்பது ஒரு வழக்கமான குறிப்பாக இருக்கிறது.
போர்ச்சுகல்லிலுள்ள லிஸ்பனில் விளையாட்டு அரங்கத்தின் அலுவலக பணியாள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம் விவரித்துரைத்தார்: “உங்களைக் குறித்து நான் என்ன எண்ணுகிறேன் என்று ஜனங்கள் என்னைக் கேட்கும்போது, நான் ஒரு பொய்யும் சொல்ல முடிவதில்லை. நான் அவர்களிடத்தில் யெகோவாவின் சாட்சிகள் நல்நடத்தை, சுத்தம் மற்றும் அமைப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். . . . நீங்கள் ஒரு காரியத்தை அசுத்தப்படுத்த நேர்ந்தால், 99-ஐ சுத்தப்படுத்துகிறீர்கள் என்று சொல்லுகிறேன்!”
சாட்சிகளின் சரீர சுத்தத்தின் வற்புறுத்தல் அவர்களுடைய உயர்ந்த ஒழுக்க கொள்கைகளோடு சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. என்ன கொள்கைகள்? அவை கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்வாங்குபவர்களைக் குறித்து, பைபிள் இவ்வாறு சொல்லுகிறது, கடவுளுடைய வழிகள் ‘அவர்களுடைய வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தது, அவருடைய நினைவுகள் அவர்களுடைய நினைவுகளைப் பார்க்கிலும் உயர்ந்தது.’ (ஏசாயா 55:7-9) இன்னும், நாம் கடவுளுடைய வழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் கடவுள் தாமே அவருடைய சட்டங்களை அவைகளின் பிரகாரமாக வாழவேண்டும் என்று விரும்புவோருக்கு கிடைக்கும்படியாக செய்திருக்கிறார். இந்தத் தெய்வீக கல்வி நம்முடைய எதிர்காலத்துக்கு முக்கியமானது.
இன்று இலட்சக்கணக்கான சாட்சிகள் இந்தத் தூய ஒழுக்க தராதரங்களின்படி வாழ்வதற்கு கடின முயற்சி செய்கிறார்கள், அதனால் அதிக பயனடைகிறார்கள். ஆகிலும், அநேகருக்கு இது அவர்களுடைய பழக்கவழக்கங்களிலும் வாழ்க்கை பாணிகளிலும் பெரிய மாற்றங்களை குறித்திருக்கிறது.
போதை மருந்துகள், அடிகள், மற்றும் வெற்றி
இங்கிலாந்திலுள்ள ஒரு நகரத்தின் வன்முறை நிறைந்த பகுதியிலிருந்து வந்த, 13 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தில் ஒருத்தியாகிய மாரியின் காரியத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
“என்னுடைய குடும்பம் முரட்டுதனமாக இருப்பதற்கு நன்கு அறியப்பட்டிருந்தார்கள், மற்றும் அங்கிருந்த மற்றவர்களைப்போலவே, நானும் கொடுமைக்காரியாக அறியப்பட்டிருந்தேன். 15 வயதில் கருச்சிதைவு செய்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய மகள் பிறந்தாள், மேலும் நான் தனிமையில் அவளை கவனித்துக்கொள்ள விடப்பட்டேன். என்னுடைய ஆண் நண்பன் [சீர்த்திருத்தம்] பள்ளியில் வைக்கப்பட்டிருந்தான். அவன் தலைமறைவாகிவிட்டான். மற்றும் நான் மறுபடியும் கர்ப்பமானேன். இந்தக் கர்ப்பத்தை முடிவுக்கு கொண்டுவர நான் எல்லா வழிகளையும் முயற்சி செய்து, கடைசியாக வெற்றியடைந்தேன், ஆனால் நான் என்னுடைய ஜீவனையே இழக்கும் தருவாயிலிருந்தேன்.
“என்னுடைய ஆண்-நண்பன் கஞ்சா புகைக்க ஆரம்பித்து, நான் மறுபடியும் கர்ப்பமாயிருந்தும்கூட என்னிடத்தில் மிகவும் மூர்க்கமாக நடந்துகொள்பவனாக மாறினான். நானும்கூட புகைப்பதிலும் கஞ்சா விற்பதிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இப்பொழுது நான் விபசாரிகள் நிறைந்த ஒரு வீட்டில் வாழ்ந்தேன். அவர்களைடைய பிள்ளைகளை நான் கவனித்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.
“நான் வேறொரு ஆணிடத்தில் அக்கறை கொண்டபோது, என்னுடைய முதல் ஆண்-நண்பன் இவனை எட்டு தடவைகள் கத்தியால் குத்தியதன் மூலம் இந்த உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். இதற்காக அவன் மறுமுறையும் கைது செய்யப்பட்டான். சிறையிலிருந்து அவனுடைய விடுதலைக்கு பின்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டு, இருவருமாக ஒரு பெரிய அளவில் போத மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டோம்.”
யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொண்டு அவர்களோடு பைபிளை படிக்க ஆரம்பித்த பின்பு, இந்த இளம் நபர் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தாள். படிப்படியாக ஒரு மாற்றம் ஏற்பட்டது. மாரி விவரிக்கிறாள்:
“புகைத்தலும் போத மருந்து உட்கொள்ளுதலும் தவறு என்பதை நான் உணர ஆரம்பித்தேன். நான் இவை எல்லாவற்றையும் நிறுத்தப்போகிறேன் என்று என் கணவனிடம் சொல்லிய பின்பு மறுபடியும் போத மருந்து உட்கொள்வதற்கு என்னை ஏமாற்ற முயற்சி செய்து அவனுடைய கஞ்சா சிகரெட்டிலிருந்து புகையை என்னுடைய முகத்தில் ஊதுவது வழக்கமாக இருந்தது. நான் மறுபடியும் கர்ப்பமானேன். அதற்கு பின்பு என்னுடைய கணவன் இரவு முழுவதும் வீட்டிற்கு திரும்பாமல் இருக்க ஆரம்பித்தான்.
“எட்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து அவனுடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு என்னைவிட்டு பிரிந்துசென்றான். இதை மேற்கொள்வதற்கு எனக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன், அவர் உதவினார். பின்பு, மூன்று மாதங்களுக்குப் பிறகு, என்னுடைய கணவன் வீடு திரும்பினான். சரியானதை செய்வதற்கு பலத்திற்காக ஜெபித்தேன். மறுபடியும் ஒருமுறை என்னுடைய விவாகத்தில் வெற்றியை காண நான் முயற்சி செய்தேன். ஆனால் ஆறு மாதங்களுக்குள்ளாக என்னுடைய கணவனின் வன்முறைச் செயலின் அடியின் விளைவாக, என் கண்ணைச் சுற்றி போடப்பட்ட 14 தையல்களை நான் சுகப்படுத்தி வருவதில் ஈடுபட்டிருந்தேன். போத மருந்து இன்னும் அவன் நேசித்த முதல் காரியமாக இருந்தது. இந்த முழு பகுதிக்கும் எங்களுடைய வீடு ஒரு பிரதான போத மருந்து சேமிப்பு கிடங்காக இருந்தது. அது அவனுடைய ‘நண்பர்களால்’ நிறைந்திருந்தது, இவர்களில் பெரும்பான்மையோர் போத மருந்துகளில் மிதந்தார்கள்.
“யெகோவாவின் உதவியோடு, நான் துணிவை திரட்டி இந்த மனிதர்களை எதிர்ப்பட்டேன். அவர்கள் தொடர்ந்து அவர்களுடைய போத மருந்துகளை புகைக்க விரும்பினால் வெளியே போய்விடும்படி நான் மரியாதையோடு அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். இதை என்னுடைய கணவன் கேட்டபோது, அவன் கோபப்பட்டு சமையலறைக்குள் என்னை வரும்படி அழைத்து சுவற்றின் மேல் என் தலையை இடிக்கத் துவங்கினான். பிள்ளைகளின் பேரில் அக்கறை கொண்டிருக்கிறேன் என்றும் ஒரு சுத்தமான, நல்ல சூழ்நிலையில் வளர்வதற்கு அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க விரும்புகிறேன் என்றும் அவனிடத்தில் சொல்வதற்கு போரடினேன். என்னுடைய கணவன் மிக வேகமாக அவனுடைய நண்பர்களிடத்தில் திரும்பினான். நான் ஜெபம் செய்துகொண்டு காத்திருந்தேன். அவன் மறுபடியும் சமையலறைக்குள் வந்தான், அவன் என்னைக் கொல்லப்போகிறான் என்று நான் நினைத்தேன்.
“ஆகிலும் அப்பொழுதிலிருந்து காரியங்கள் வெகுவாக அமைதலாயிற்று. பின்பு அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றுவிட்டோம். போத மருந்து அடிமைகள் சந்திக்க வந்தபோது, அவர்கள் முன்புபோல கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கவோ அல்லது அவர்களுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கைகளை குறித்து பேசவோ இல்லை. இது எங்கள் பேரில் அவர்களுக்கு மரியாதை இருந்ததாக காணப்பட்டது.”
சுத்தமான ஒழுக்கங்கள் மற்றும் ஒரு தூய்மைக் கேட்டற்ற வாழ்க்கைக்கான மாரியின் நிலைநிற்கை அவளுடைய கணவனின் இருதயத்தைத் தொட்டது. கடைசியில் அவனும்கூட யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தான். மாரியும் அவளுடைய கணவன் இருவரும் இப்போழுது முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாகவும் பைபிள் அறிவின் உதவியோடு மற்றவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவுவதில் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள். மாரி சொல்லுகிறாள்:
“என் கணவன் ஒரு ஜெபத்தை சொல்லுவதை அல்லது யெகோவாவுக்கு தன்னுடைய அன்பை வெளிக்காட்டுவதை நான் கேட்கும்போது என்னுடைய இருதயம் எவ்வளவாக துடிக்கிறது! அவருடைய தோற்றத்திலுள்ள மாற்றம் அவருடைய முன்னாள் நண்பர்களை ஆச்சரிப்படுத்துகிறது. இப்பொழுது எங்களுடைய குடும்பம் உண்மையிலேயே ஐக்கியப்பட்டிருக்கிறது. நான் ஒருபோதும் இவ்வளவு மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை, மற்றும் இந்தத் தூய்மைக் கேடாக்கப்பட்ட காரிய ஒழுங்கிலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி செல்வதை நான் நிறுத்துவதே இல்லை.”
ஒழுக்கத் தூய்மைக்கேடு போரட்டத்தில் இவ்விதமான வெற்றி கடவுளுடைய வார்த்தையின் வலிமையை வெளிப்படுத்துகிறது. மேலுமதிகமாக, இது எல்லா வகையான தூய்மைக்கேட்டின் ஒரு விரைவான முடிவின் நம்பிக்கையை குறிப்பிடுகிறது. இதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?
ஒரு தூய்மையான பூமி—நிச்சயமான ஒன்று
தற்போதைய காரிய ஒழுங்கின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று வேதாகமத்தின் கவனமான படிப்பு தெரிவிக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) சுற்றுப்புறச் சூழ்நிலையின் ஒரு நிலை இதை நிரூபிக்கிற அத்தாட்சியின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கிறது. ஒரு சுத்தமான பூமிக்கான நம்முடைய நம்பிக்கையைக் குறித்ததில் இது எதை அர்த்தப்படுத்துகிறது?
கடவுள் விரைவில் மனித விவகாரங்களில் தலையிடப் போகிறார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அவர் சீக்கிரத்தில் எல்லா ஒழுக்க மற்றும் சடப்பொருள் சார்ந்த தூய்மைக் கேட்டினை நம்முடைய கோளத்திலிருந்து அகற்றுவதற்கு வல்லமையுள்ள ஒரு வழியில் செயல்படுவார், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் “பூமியைக் கெடுத்தவர்களை கெடுப்பார்”, என்று அவர் வாக்களிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.
உண்மையிலேயே, ஒரு சுத்தமான, தூய்மைக்கேடில்லாத பூமியை கொண்டுவருவதற்கு கடவுள் ஒருவரே வல்லமையுள்ளவராக இருக்கிறார். அதைச் செய்வதற்கு அவர் நோக்கங்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. சமீப எதிர்காலத்தில் அவர் செயல்படும்போது, அவர்தாமே சொல்வதுபோல் இது இருக்கும்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” (வெளிப்படுத்துதல் 21:5) அப்பொழுது, கடைசியாக, நம்முடைய கோளமானது சுத்தமான, செவ்வையான ஜனங்களுக்கு ஒரு தகுதியான வீடாயிருக்கும், இதனுடைய நிறைவை அவர்கள் என்றென்றும் அனுபவிப்பார்கள். (g90 5⁄8)