புகையிலைக்குப் பெருமளவில் பலியாகும் ஆட்கள்
அறுவை மருத்துவர்களின் 1989-ம் ஆண்டு பொது அறிக்கை குறிப்பிட்டுக் காண்பிக்கிறதாவது, எவ்வளவு இளமையில் ஒருவர் புகைபிடிக்க ஆரம்பிக்கிறாரோ, அவ்வளவாக அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. “25 வயதுக்குப் பின்னர் புகைபிடிக்க ஆரம்பிப்பவர்கள் புகைக்காதவர்களில் காணப்படுவதைவிட நுரையீரல் புற்றுநோய் 5 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது; 20 முதல் 24 வயதுகளில் புகைபிடிக்க ஆரம்பிக்கிறவர்களில் 9 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. 15 முதல் 19 வயதுகளில் புகைக்க ஆரம்பிக்கிறவர்களில் 14 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது, மற்றும் 15 வயதில் புகைக்க ஆரம்பிப்பவர்களில் புகைக்காதவர்களில் காணப்படுவதைவிட 19 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.”
அநேகருடைய விஷயங்களில் புகைபிடித்தல் வெறுமனே ஒரு போதை மருந்துப் பயணமாகவே இருக்கிறது. 12 முதல் 17 வயதுகளில் புகைக்கும் இளைஞர்கள் மரிஹுவானா பயன்படுத்துவது 10 மடங்காக இருப்பதும் கொக்கேய்ன், ஹாலுசினோஜென்ஸ், அல்லது ஹெராயின் பயன்படுத்துவது 14 மடங்காக இருப்பது காணப்பட்டிருக்கிறது. மதுபான வெறியரிலும் ஹெராயினுக்கு அடிமைப்பட்டவர்களிலும் 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள் பயங்கரமாகப் புகைப்பவர்கள் என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீவிர ஆய்வு, 21 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களில் புகைப்பதைத் தடை செய்வதை 64 சதவீதத்தினர் ஆதரித்தினர் என்றும் “அப்படிப்பட்ட சட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இளைஞருக்கு சிகரெட் விற்று பணம்பண்ணும் பெரியவர்களிடமிருந்து மட்டுமே வருகிறது.”—உளநூல், மனநல, நடத்தை மருத்துவ செய்தி புதுநிலை, மார்ச்-ஏப்ரல் 1990, பக்கம் 1. (g90 9/22)