இத்தனை அழகான இறகுகளை அவை எவ்வாறு பெற்றுக்கொண்டன?
இளஞ்சிவப்பு மார்புடைய பாடும் பறவைகள் (Lilac- Breasted Rollers) மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்காவில் சாதாரணமாக தங்கி வாழும் உயிரினங்களாக உள்ளன. அவைகள் அநேகமாக சாலைப் பக்கமாக உள்ள மரங்கள் அல்லது தொலைபேசி கம்பிகளின் மீது உட்கார்ந்திருக்கின்றன. இது பூச்சிகளுக்காகவும் மற்ற உணவு பொருட்களுக்காகவும் தங்கள் சுற்றுப்புறத்தை கூர்ந்து பார்ப்பதற்கு அவைகளுக்கு வசதியான இடமாக அமைகிறது.
நீங்கள் போட்சுவானா அல்லது சிம்பாப்வே வழியாக பிரயாணம் செய்வீர்களானால், இந்தப் பறவைகளில் ஒன்று சாலையின் குறுக்காக பறந்து செல்கையில் பளபளப்பான இறகுகளின் நீல நிற ஒளிக்கீற்றை நீங்கள் காணக்கூடும். ரோலர் என்ற பெயர் சுட்டிக்காண்பிப்பது போலவே, குட்டிக்கரணம் போட்டு வித்தைக் காட்டி வர்ணமிக்கத் தங்கள் இறகுகளைப் பிறர் பார்க்க வேண்டும் என்று அவை சில சமயங்களில் காண்பிக்கின்றன. இப்பக்கத்திலுள்ள பறவையின் படமும் அதன் சிறகின் உள்வரைப்படமும் ரோலரின் பளபளப்பான வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. சிறகின் இறகுகள் நான்கு வகையான நீல நிறங்களும் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களின் கலவையாக இருக்கின்றன. இளஞ்சிவப்பு நிற மார்பு, ஆரஞ்சு நிற கன்னம், வெண்மையான நெற்றி, வெண்மைக்கலந்த பச்சைநிற தலையுச்சி ஆகியவற்றோடு இது எத்தனை நேர்த்தியாக முனைப்பாக வேறுபட்டு காணப்படுகிறது! இது முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறது: இத்தனை அழகான இறகுகளை அவை எவ்வாறு பெற்றுக்கொண்டன?
ரோலரின் பாதங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், அவை இறகுகளால் அல்ல, செதிள்களால் மூடப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். பரிணாமக் கோட்பாட்டாளர்கள் கற்பிப்பதைப் போன்று அவைகளின் இறகுகள் ஊர்வனவற்றின் செதிள்களிலிருந்து தற்செயலாக வளர்ச்சியடைந்தனவா?
சரி, ஓர் இறகு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமாக இருப்பதை கவனியுங்கள். இறகின் நடுத்தண்டிலிருந்து பார்புகள் என்ற கிளைத்தண்டுகள் பிரிகின்றன. “சேர்ந்துள்ள இரண்டு கிளைத்தண்டுகள் பிரிந்து போகுமானால்—இறகுப் பரப்பை தனியாக பிரித்தெடுக்க கணிசமான சக்தி தேவையாயிருக்கிறது—அவை விரல் நுனியைக் கொண்டு இறகை இழுத்து இணைப்பதன் மூலம் உடனடியாக ஒன்றாகச் சேர்த்துப் பூட்டப்படுகின்றன,” என்று விலங்கியலின் முழுமையான நியமங்கள் (Integrated Principles of Zoology) என்ற அறிவியல் பாடபுத்தகம் விளக்குகிறது. “பறவை, நிச்சயமாகவே, இதைத் தன் அலகினால் செய்கிறது.”
தனியொரு இறகை உண்டுபண்ணும் நூற்றுக்கணக்கான திறமையுள்ள சிப்பர்கள் என்ற இழைவரிகள் தற்செயலாக தோன்றியிருக்க முடியுமா? ஒரு செதிளே உண்மையில் ஓர் இறகாக வளர்ந்தது என்பதற்கு விஞ்ஞானிகளுக்கு ஏதாவது அத்தாட்சி இருக்கின்றதா? “நவீன நாளைய பறவைகள் செதிள்களையும் (விசேஷமாக தங்கள் பாதங்களில்) இறகுகளையும் உடையனவாய் இருந்தபோதிலும் இரண்டிற்குமிடையே ஓர் இடைப்பட்ட நிலையில் எதுவும் புதைப்படிவங்களில் அல்லது உயிர்வகைகளில் கண்டுபிடிக்கப்படாதது விநோதமாக உள்ளது,” என்று மேலே குறிப்பிடப்பட்ட புத்தகம் ஒப்புக்கொள்கிறது.
நிச்சயமாகவே, இறகுகள் அழகிய வண்ணங்களை நயமாக இணைப்பதில் கைத்தேர்ந்தவரான ஒரு பொறியாளருக்கு சாட்சி பகருகின்றன. இளஞ்சிவப்பு மார்புடைய பாடும் பறவை போன்ற உயிரினங்கள், மெய்க்கடவுளாகிய “யெகோவாவின் நாமத்தைத் துதிக்கும்” “இறகுள்ள பறவைகளில்” அடங்கும்.—சங்கீதம் 148:7, 10-13, NW. (g90 10/22)