எமது வாசகரிடமிருந்து
“விழித்தெழு!” கல்லூரிக்குச் செல்கிறது நான் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். கடந்த ஏழு ஆண்டுகளாக நான் விழித்தெழு! பத்திரிகையை என் கல்லூரி கட்டுரை வகுப்புகளில் பயன்படுத்தி வருகிறேன் . . . விழித்தெழு! பத்திரிகையில் உள்ள கட்டுரைகள் தகவல் நிறைந்ததாகவும், மகிழ்விக்கிறதாகவும் மட்டுமின்றி இலக்கணத்திலும் உயர்ந்த தரத்தை உடையதாய் இருக்கிறது. நிறுத்தக்குறியீடுகள், மொழி வழக்குக்கு ஒத்த சொற்றொடர்கள், அடையாள மொழி, சொல் நடை ஆகியவற்றை சரியாக உபயோகிப்பதற்கு அவைகளை மேற்கோளாக எடுத்துக் காட்டுவேன்.
J.D.G., ஐக்கிய மாகாணங்கள்
(g90 2/22)
சண்டை போடும் பெற்றோர் “இளைஞர் கேட்கின்றனர் . . . என் பெற்றோர் சண்டை போட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?” (ஆகஸ்ட் 8, 1991) என்ற உங்களுடைய கட்டுரையில் பெற்றோர் சண்டை போடும் போது ஒரு இளைஞன் அவ்விடத்தை விட்டு தன் அறைக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் ஆலோசனை அளித்திருந்தீர்கள். இதை நான் அதிக ஆபத்தானதாக கருகிறேன். நான் அவ்வாறு சண்டைபோடும் இடத்திலிருந்து விலகிச் சென்றால், என்னுடைய முரட்டுத் தந்தை என் தாயாரைக் கொன்றுவிடக்கூடும்! எனவே அவர்கள் சண்டை போடும் போது, அவர்களைப் பிரிப்பதற்கு நான் அங்கு இருப்பது அதிக அவசியம்.
P.M.E., நைஜீரியா
அந்தக் கட்டுரையில் இருந்த அடிகுறிப்பு இவ்வாறு குறிப்பிட்டது: “முரட்டுத் தந்தை தன் குடும்ப அங்கத்தினர்களை வன்முறையால் மிரட்டும் நிலைகைளை நாங்கள் குறிப்பிடவில்லை.” சூழ்நிலைமைகள் வேறுபடும். ஒரு இளைஞன், தன்னுடைய பெற்றோரில் ஒருவரைப் பாதுகாக்க உண்மையான அக்கறை உடையவனாக இருக்கலாம். அடிக்குறிப்பு கூடுதலாக இவ்வாறு சொன்னது: “அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் உடலுக்குத் தீங்கு எதுவும் ஏற்படாதபடி பாதுகாத்துக் கொள்ள வெளி ஆட்களின் உதவியைப் பெற கட்டாயப்படுத்தப்படலாம்.”—ஆசிரியர்.
(g90 8/22)
“இளைஞர் கேட்கும் கேள்விகள்” புத்தகம். “இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்துக்கு வாசகரின் பிரதிபலிப்பு” என்ற கட்டுரையை நான் ஆர்வத்தோடு படித்தேன். (செப்டம்பர் 8, 1991) இந்த இதழை பெற்றுக் கொள்வதற்கு முன்பு, நான் இப்புத்தகத்தை ஒரு வயதான பைபின் மாணவியிடம் கொடுத்தேன். அதைத் தன் பேரப்பிள்ளையிடம் கொடுக்கும்படி நான் ஆலோசனைக் கூறினேன். அதற்குப் பிறகு நான் மறுபடியும் அவர்களைச் சென்று பார்த்தேன். அந்த வயதான பெண்தானே அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டிருந்தார்கள். “74 வயதான இளம் பெண்” என்று ஒரு பெண்ணைப் பற்றி அந்தக் கட்டுரையில் இருந்த பாகத்தை நான் அவர்களிடம் காண்பித்தேன். அதைப் படித்த போது அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “நான் ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய பேரப்பிள்ளைக்கு கொடுப்பதற்கு முன்பு புத்தகத்தில் உள்ள பொருளடத்க்கத்தை நான் அறிந்திருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். ஆனால் விரைவில் அதைப் படிப்பதில் மூழ்கிக் போனன்.’ அவர்கள் “80 வயது இளம் பெண்.”!
K.H., ஜப்பான்
(g90 12/22)
இளைஞர்—’90-களின் சவால். நான் ஒரு 13 வயது பெண். இளைஞர்களைப் பற்றி வந்த கட்டுரைகளை நான் உண்மையிலேயே படித்து மகிழ்ந்தேன் என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். விழித்தெழு! பத்திரிகைக்கு எனக்கு ஒரு சந்தா இருக்கிறது. ஆனால் அந்தப் பத்திரிகைகளைத் தபாலில் பெற்றுக்கொள்ளும்போது, அதை நான் ஒரு புறம் வைத்து விடுவேன். ஆனால் இந்த இதழ் என்னுடைய கண்களை ஈர்த்தது. ஆகையால் நான் அதை படித்து மகிழ்ந்தேன். அதற்குப் பிறகு விழித்தெழு! பத்திரிகையின் மற்ற இதழ்களை நான் வெளியே எடுத்து, அதிலிருந்த சில கட்டுரைகளை வாசித்தேன். இப்போது நான் என் அம்மாவை என்னுடன் பைபிள் படிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
A.P., ஐக்கிய மாகாணங்கள்
(g91 1/8)
குப்பைக் குவியல் என்னுடைய நண்பன் ஒருவன் விழித்தெழு! பத்திரிகைக்கு ஒரு பரிசு சந்தாவை அனுப்பினான். அது பல விதமான பொருள்களின் பேரில் வருகிறது, ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது. குப்பைக் குவியலின் பேரில் வந்த கட்டுரைகளை (நவம்பர் 8, 1991) நான் வாசித்தபோது கலக்கமடைந்தேன், ஏனென்றால், இந்த விஷயம் அவ்வளவு சிக்கலானது என்று நான் நினைத்ததேயில்லை. நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டாலும், உங்களுடைய பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் மிகச் சிறந்த கட்டுரைகளை நான் விரும்புகிறேன்.
L.R.A., பிரேசில்
(g91 2/22)
இரத்தம் விற்பனை “இரத்த விற்பனை—பெரிய வியாபாரம்” என்பதன் பேரில் வந்தக் கட்டுரைகள் (அக்டோபர் 8, 1991) எனக்கு விசேஷ அக்கறைக்குரியதாக இருந்தது. ஏனென்றால், இரத்த சேமிப்பு அக்கறைக்குரியதாக இருந்தது. ஏனென்றால், இரத்த சேமிப்பு வங்கி ஒன்றில் இரத்தத்தைச் சேமிப்பதற்காக, அதிக சம்பளம் பெறக்கூடிய ஒரு வேலை எனக்கு அளிக்கப்பட்டது. இது தவறு என்று இக் கட்டுரையை வாசித்த பிறகுதான் உணர்ந்தேன். நான் அதிக பணம் பெற்று அதை உபயோகித்திருந்திருக்கலாம், என்றபோதிலும் இரத்தத்தால் உண்டாகக்கூடிய ஆபத்தான விளைவுகளை சிந்தித்தபோது, நான் அந்த வேலையை ஏற்றுக்கொள்ளவில்லை.
R.M., ஐக்கிய மாகாணங்கள்
(g91 2/22)
வீட்டில் விடுமுறை உங்களுடைய கட்டுரை (செப்டம்பர் 8, 1991) எனக்காகவே எழுதப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். மற்றவர்களோடு சேர்ந்து காரியங்களைச் செய்தல், வீட்டைப் பழுதுபார்த்தல், என்னுடைய அறையை மேம்படுத்துதல், உள்ளூரிலுள்ள அக்கறைக்குரிய இடங்களைச் சந்தித்தல், கூடுதலாக பைபிள் வாசிப்பது போன்ற பரிந்துரைகள் அவ்வளவு நன்றாக இருந்தன. நான் இன்னும் பள்ளிக்குச் சென்று வருவதால், எனக்கு ஏழு வாரம் கோட விடுமுறை இருக்கிறது. உங்கள் உதவிக்கு நன்றி, இந்த நேரத்தை நான் இன்னும் அதிக ஞானமாகப் பயன்படுத்துவேன்.
M.K., ஜெர்மானிய கூட்டாட்சிக் குடியரசு
(g90 10/22)