உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 6/8 பக். 32
  • கானரி பறவைகள் சாகும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கானரி பறவைகள் சாகும்போது
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • ‘உலக சிந்தையை’ உதறித்தள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • கானரித் தீவுகள்—சாதகமான சீதோஷ்ணநிலை, கவர்ந்திழுக்கும் இயற்கைக் காட்சி
    விழித்தெழு!—1994
  • பாடும் பறவைகள் புரிந்துகொள்ளுதலுக்குச் சவால்விடும் இசைக் கலைஞர்கள்
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 6/8 பக். 32

கானரி பறவைகள் சாகும்போது

மனிதர்களைவிட கானரி பறவைகள் நச்சுத்தன்மையான வாயுக்களுக்கு அதிக கூருணர்ச்சியுடையதாய் இருக்கின்றன. இதன் காரணமாக முற்காலங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளிகள் நச்சுத்தன்மையான வாயுக்கள் இருக்கின்றனவா என்பதை கண்டுபிடிக்க சுரங்கத்திற்குள் கூண்டிலடைக்கப்பட்ட கானரி பறவையை எடுத்துச் செல்வர். கானரி பறவை செத்துப்போனால் சுரங்கத் தொழிலாளிகள் அபாயத்திலிருந்து வெளியேற முடியும். சுரங்கம் நல்ல காற்றோட்ட வசதியோடு ஆக்கப்படும் வரை அவர்கள் உள்ளே போகாமல் இருக்கலாம். இந்தச் சூழமைவை மனதில் வைத்திருந்தால், கானடாவில் இருக்கும் புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர் டேவிட் சுசுக்கியின் குறிப்புகளை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

நம் கோளமாகிய பூகோளத்துக்கு அண்மையில் வர இருக்கும் அழிவைக் குறித்து கவலைப்பட்டு, அவர் பின்வரும் உதாரணத்தை உபயோகித்தார்: “ஒரு நிலக்கரி-சுரங்கத் தொழிலாளி கானரி பறவையை நிலக்கரி-சுரங்கத்திற்குள் எடுத்துச் சென்று அந்தக் கானரி பறவை செத்துவிட்டால், ‘ஓ, அந்தப் பறவை அப்படியே செத்துவிட்டது, ஆனால் நான் ஒரு பறவை அல்ல’ என்று அந்த நிலக்கரி-சுரங்கத் தொழிலாளி சொல்லவில்லை. அந்தக் கானரி பறவை செத்துப்போனது ஏனென்றால் அது அதே காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது.”

“செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவில் 22 வெள்ளைத் திமிங்கிலங்கள் செத்துப்போவதை நீங்கள் பார்த்து, அவைகள் நச்சுப் பொருட்களால் நிறைந்துள்ளபடியால் அவைகளைத் தொடுவதற்கு நீங்கள் கையுறைகளையும், முகமூடியையும் அணிந்து கொள்ள வேண்டியிருந்தால், கியுபெக்கிலுள்ள சர்க்கரை தரும் மரக்காடு பத்தாண்டுகளுக்குள் செத்துவிடும் என்று ஜனங்கள் நம்மிடம் சொன்னால், ஒரு மணிநேரத்துக்கு இரண்டு உயிரின வகைகள் மறைந்து போகின்றன என்று ஜனங்கள் நம்மிடம் சொன்னால், வட கடலில் 10,000 கடல் நாய்கள் செத்துப்போயின, ஆனால் அவர்களுக்கு ஏன் என்று தெரியவில்லை என்றால், நிச்சயமாகவே . . . அவைகள் எல்லாம் கானரி பறவைகள். அதே சுற்றுச்சூழலில் நாம் இருந்து கொண்டில்லை என்று நாம் நினைத்தோம் என்றால் நாம் முட்டாள்கள்” என்று அவர் கூடுதலாக சொன்னார்.

அரசியல்வாதிகள் இந்தக் “கானரி பறவைகளுக்கு” வெகு குறைவான அல்லது எந்தக் கவனமும் செலுத்துவதில்லை என்றும் பிள்ளைகள் பெரும் எண்ணிக்கையில் இறக்க ஆரம்பிக்கும் வரை, அவர்கள் இந்தச் சூழ்நிலைமையின் மோசமானத்தன்மையை பார்க்கமாட்டார்கள் என்ற உண்மையைச் சொல்லி டாக்டர் சுசுக்கி வருந்துகிறார். “நம்முடைய பிள்ளைகள் நம்முடைய கானரி பறவைகளாக ஆகும்படி நாம் விட்டு விடுவோமா?” என்று அவர் சொல்கிறார்.

மெய்க் கிறிஸ்தவர்கள் இதைக் குறித்து கவலைப்பட்டாலும், நம்பிக்கை இழந்துவிடுவதில்லை. பூமியை படைத்தவராகிய யெகோவா “பூமி வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்த”படியால் குறுகிய நோக்குடைய, பேராசையுள்ள மனிதர்கள் நம்முடைய சுற்றுச்சூழலை என்றென்றுமாக தொடர்ந்து பாழ்ப்படுத்தும்படி அனுமதிக்க மாட்டார். “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கப்”போவதாக அவர் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளில் வாக்களிக்கிறார்.—ஏசாயா 45:18; வெளிப்படுத்துதல் 11:18. (g91 1/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்