உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 8/8 பக். 14
  • கோபத்தின் உயர்ந்த கிரயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கோபத்தின் உயர்ந்த கிரயம்
  • விழித்தெழு!—1992
  • இதே தகவல்
  • கோபம்—அது என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • கோபங்கொள்வது எப்பொழுதுமே தவறா?
    விழித்தெழு!—1994
  • சீற்றத்தின் காலத்தை தூண்டிவிடுவது எது?
    விழித்தெழு!—2002
  • கோபத்தின் கால்தடங்கள்
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 8/8 பக். 14

கோபத்தின் உயர்ந்த கிரயம்

மிகக் குறைந்தளவே எரிச்சலூட்டப்படுகையில் கோபமடைந்து மூர்க்கத்துடன் வெடிக்க முற்படும் மனச்சாய்வுள்ளவர்களாயிருக்கிறீர்களா? எப்போதெல்லாம் எவராவது உங்களை உதாசீனப்படுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் ஆழமாய் புண்பட்டவர்களாய் பல நாட்களுக்கு அதை வைத்து உள்ளுக்குள்ளாகவே, கொந்தளிப்படைந்து குமுறிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களை சுற்றியுள்ளவர்களை பகைத்துக்கொள்வதை காட்டிலும் அதிகத்தை செய்வீர்கள்; கோபத்தினால் நீங்கள் ஒருவேளை உங்களையே கொல செய்துகொள்வீர்கள்.

கோபம் உண்மையில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடுமா? ஒரு நியூ யார்க் டைம்ஸ் செய்தி சேவை-யிலிருந்து வந்த அறிக்கையின்படி அதற்கான சாத்தியம் ஒருபோதும் வெகு தூரமாயில்லை. ஓர் எடுத்துக்காட்டாக, “அகால மரணத்துக்கு வழிநடத்தும் ஆபத்தான காரியமாக புகைபிடித்தல், உடல்பருமன் மற்றும் மிகுதியான கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றிற்கு இணையாகவோ அல்லது அதையும் மிஞ்சிவிடக்கூடிய அளவுக்கு இந்தத் தீராத கோபம் உடலுக்கு கேடுவிளைவிக்கிறது” என்று அந்த அறிக்கை ஊர்ஜிதம் செய்கிறது.

ஒரு சான்றாக அந்த அறிக்கை அநேக விஞ்ஞான ஆராய்ச்சிகளை குறிப்பிடுகிறது. அவற்றில் ஒன்று சுமார் 25-வயது பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்வேறு அன்றாட சூழ்நிலைமைகளில் தாங்கள் உணர்ந்த பகைமை உணர்ச்சியின் திட்டமான அளவை தீர்மானிக்க ஆள்தன்மை பரீட்சைகள் கொடுக்கப்பட்டன. 25 ஆண்டுகளுக்கு பிற்பாடு ஆராய்ச்சியாளர்கள் இந்த மாணவர்களை தொடர்ந்து கண்காணித்தார்கள். மிக குறைந்தளவான பகைமை உணர்ச்சியை வெளிக்காட்டியவர்களென மதிப்பிடப்பட்டவர்கள் மிக குறைந்த மரண எண்ணிக்கையை உடையவர்களாயிருந்தனர். 50 வயதில் வெறும் 4 சதவிகிதமான ஆட்கள் மட்டுமே மரணமடைந்தனர். ஆனால் மிகுதியான பகைமையுணர்ச்சியுள்ளவர்கள் உடல்நலமுடனிருக்கவில்லை—20 சதவிகிதமானோர் மரித்துவிட்டனர்! இளமையில் மிகுதியான பகைமையுணர்ச்சியுடையவர்களாக மதிப்பிடப்பட்டவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் இருதய நோயின் மிகுதியான ஆபத்தில் தங்களை வைக்கக்கூடிய தீங்கிழைக்கும் கொழுப்பு பொருளை மிக உச்ச அளவில் கொண்டிருக்கும் நிலையிலிருந்தனர் என்று மற்றொரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது.

தங்கள் பிரச்னைகளை கையாளுவதற்கு நேரிய வழிகளை கண்டுபிடிப்பதற்கு மாறாக கடுங்கோபாவேசத்தை அடக்கி உள்ளுக்குள்ளாக குமுறிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியதென்ன? டாக்டர் மாரா ஜூலியஸ் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் 18 ஆண்டு காலப்பகுதிக்கு மேற்பட்ட பெண்கள் தொகுதியை ஆய்வு செய்தாள். அதில், தீராத அடக்கிவைக்கப்பட்ட பகைமையுணர்ச்சியின் வெளிப்பாடான அறிகுறிகளை கொண்டிருந்தவர்களின் மரண விகிதமானது இப்படிப்பட்ட கோபத்தை தங்களுக்குள் பேணிவளர்க்காதவர்களை காட்டிலும் மூன்று மடங்கு உயர்வாக இருந்தது. அவளுடைய முடிவுரையானது: “அநேக பெண்களுக்கு தொடர்ச்சியான அடக்கிவைக்கப்பட்ட கோபம் தானே புகைபிடித்தலை காட்டிலும் சீக்கிரமான சாவு எண்ணிக்கைக்கு ஒரு பலமான அபாய அம்சமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட எந்த ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் கோபவேசத்துக்கு எதிராக எச்சரித்தது. “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்று ஒரு வசனம் சொல்கிறது. (எபேசியர் 4:26) “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு” என்று மற்றொரு வசனம் அறிவுரை கூறுகிறது. (சங்கீதம் 37:8) இன்னும் அதிக குறிப்பிடத்தக்க விதத்தில் பைபிள், நமது உணர்ச்சி நிலைக்கும் நமது உடல் ஆரோக்கியத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை உறுதிப்படுத்தியது: “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்.”—நீதிமொழிகள் 14:30. (g91 7⁄22)

[பக்கம் 14-ன் படம்]

சவ அடக்கம் செய்யும் வெட்டியான் கோபாவேசமுள்ள ஒரு மனிதனை பார்த்து, தனக்கு ஒரு “வாடிக்கையாளன்” கிடைப்பதை மகிழ்ச்சியுடனே எதிர்பார்க்கிறான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்