எமது வாசகரிடமிருந்து
முதியோரை கனம்பண்ணுங்கள் “நீங்கள் முதியோரை கனம் பண்ணுகிறீர்களா?” என்ற கட்டுரைகளுக்கு உங்களுக்கு நன்றி. (ஜனவரி 8, 1992) நாற்பது வருடங்கள் கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்த பிறகு, அல்ஷீமர் வியாதியின் காரணமாக என் அம்மாவுக்கு முழு-நேர கவனிப்பு தேவைப்பட்டது. காவற்கோபுர சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட நாட்காட்டி ஒரு பெரும் உதவியாக இருந்தது, ஏனென்றால் அவர்களைப் பார்க்க வந்தவர்கள் தங்களுடைய பெயர்களை அவர்கள் வந்த நாளில் எழுதி வைப்பர். பாதிக்கும் மேலான நாட்கள் பெயர்களால் நிறைந்திருப்பதால் அவர்களைப் பார்ப்பதற்கு நான் மட்டும் வருவதில்லை என்பதை நான் அவர்களுக்கு நினைப்பூட்டுவேன்! நோயாளிகளைக் கவனித்துப் பேணும் இல்லத்து பணியாளர்களிடமிருந்தும் அவர்கள் நல்ல கவனிப்பை பெற்றுக்கொண்டார்கள், ஏனென்றால் என் அம்மாவின் நலனில் அநேகர் அக்கறையாயிருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். எங்கள் மீது உங்களுடைய அக்கறைக்காக உங்களுக்கு நன்றி.
W. J. H., ஐக்கிய மாகாணங்கள்
பக்கவாதத்தின் காரணமாக என் அம்மாவுக்கு இடுப்பிலிருந்து கீழே உணர்ச்சியில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் நாங்கள் அவர்களை முழுவதுமாக கழுவவேண்டும், படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டும். அவர்களுக்கு உடை உடுத்தி, உணவு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும். என்னுடைய கணவனும், பிள்ளைகளும் உதவியாக இருக்கின்றனர். என்றாலும் எனக்கு தான் பொறுப்பு அதிகம். நான் உற்சாகமிழந்துவிடும் சமயங்கள் உண்டு. என்னுடைய விருப்பங்களை கட்டுப்படுத்த வேண்டிய தன்மை எப்போதும் தேவைப்படுகிறது. ஆகையால் உங்களுடைய கட்டுரைகளை நான் அதிக மகிழ்ச்சியோடு படித்தேன். என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி.
L. D., இத்தாலி
விலங்கு கட்டுரைகள் விலங்குகள் மற்றும் இயற்கை மீதான உங்களுடைய கட்டுரைகளுக்கு இருதயப்பூர்வமான நன்றி. படங்கள் அழகாகவும் மற்றும் வண்ணம் நிறைந்ததாகவும் உள்ளன என்பதை நான் எப்போதும் கவனித்திருந்தபோதிலும், அந்தக் கட்டுரைகளுக்கு முதலில் நான் உண்மையிலேயே அதிக கவனம்செலுத்தியதில்லை. ஒருநாள் ஒருவர் தான் படித்திருந்த குடு என்றழைக்கப்படும் ஒரு மறிமானைப் பற்றிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டார். இது அந்தக் கட்டுரையைப் படிப்பதில் உள்ள என்னுடைய ஆர்வத்தைத் தூண்டிற்று. கீரியைப்பற்றியுள்ள ஒரு கட்டுரையைப் போன்ற மற்றக் கட்டுரைகளையும் நான் படிக்கத் தொடங்கிவிட்டேன். இந்தக் கட்டுரைகள் யெகோவாவை அவருடைய படைப்புகளின் மூலம் “பார்க்க” எனக்கு உதவிசெய்தது.
B. T., ஐக்கிய மாகாணங்கள்