உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 3/8 பக். 29
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • சூதாடுவதில் என்ன தவறு?
    விழித்தெழு!—2002
  • சூதாட்டத்தில் புதிதாக சேரும் ஆட்கள் இளைஞர்!
    விழித்தெழு!—1995
  • சூதாட்டம் எனும் கண்ணியை தவிருங்கள்
    விழித்தெழு!—2002
  • சூதாட்டம் உண்மையில் அவ்வளவு கேடுள்ளதா?
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 3/8 பக். 29

எமது வாசகரிடமிருந்து

கடத்தல் “முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே அல்லது உன்னைக் கொன்றுவிடுவேன்,” (டிசம்பர் 8, 1992) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிகவும் நன்றி. நான் கண்ணீர் சிந்தும்படி அசைவிக்கப்பட்டேன். லீசா டாவன்போர்ட்டைப்போல எந்தவொரு சம்பவத்தையும் ஒருபோதும் நான் அனுபவித்ததில்லை. ஆனால் சிறிது காலமாக அழுத்தத்தில் இருந்ததன் காரணமாக, சில சமயங்களில் நான் இறந்துவிட விரும்பினேன் என்று உணர்ந்தேன். யெகோவா தேவன் கொடுக்கும் உறுதியான ஆதரவையும், தேவையானபோதெல்லாம் எவ்வாறு அவர் உதவுகிறார் என்பதைப்பற்றியும் அந்தக் கட்டுரை என்னை ஆழமாக சிந்திக்கவைத்தது.

N. O., ஜப்பான்

குடும்பங்கள் நெருங்கி வாருங்கள் “குடும்பங்கள்—காலம் கடந்துவிடுவதற்கு முன்பு நெருங்கி வாருங்கள்,” (அக்டோபர் 8, 1992) என்ற தொடர்வரிசை கட்டுரைகளைப் பற்றி நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். அதன் அழகான அட்டைப் படத்தைக் கண்டபோது என் கண்கள் கண்ணீரினால் நிரம்பின. மேலும், ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் மிக கவனமாக தெரிந்தெடுக்கப்பட்டு, மிகவும் கனிவுடன் எழுதப்பட்டுள்ளன! நெருக்கமாக பிணைக்கப்பட்ட குடும்பத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி எங்களுக்கு நினைவூட்டுவதற்காக உங்களுக்கு நன்றி.

K. E., ஐக்கிய மாகாணங்கள்

இதுவரை நான் வாசித்த, உள்ளத்தை ஆழமாகத் தொடும் கட்டுரைகளுள் இந்தக் கட்டுரைகளும் உள்ளன. வெறுமனே நம்முடைய குழந்தைகளோடு பைபிளைப் படித்து, அவர்களைக் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று, பிரசங்க வேலையில் அவர்களோடு ஒன்றுசேர்ந்து வேலைசெய்திருந்தால் பெற்றோராக நாம் வெற்றி காண்போம் என்பதாக நம்மில் அநேகர் நம்பியிருந்தோம். வெற்றிகரமான பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உறவுமுறையையும்கூட வைத்திருந்தனர் என்று கண்டுகொண்டேன். இது பெற்றோரின் அன்பைப்பற்றி பிள்ளைகளுக்கு உறுதியளிக்கும் ஒரு கட்டு ஆகும். இந்தக் குறிப்பு இதற்கு முந்தின கட்டுரைகளில் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அது என்மீது கொண்டிருக்கும் பாதிப்பு இப்பொழுதைவிட அதிகம் எப்போதுமிருந்ததில்லை.

T. H., ஐக்கிய மாகாணங்கள்

விவாகமாவதற்கு முன் நான் ஒரு கணக்கராக பணியாற்றினேன். நான் செய்த வேலையை நான் அதிகம் அனுபவித்தேன். குழந்தைகள் பிறந்த பிறகு, வேலையிலிருந்து நின்றுவிட்டு வீட்டில் பிள்ளைகளோடு இருக்கலாம் என்று தீர்மானித்தேன். சில சமயங்களில், நான் ஒன்றுக்கும் உதவாதவளாக உணர்ந்து மீண்டும் வேலைக்குப் போக விரும்பினேன். உங்களுடைய கட்டுரையைப் படித்த பின்னர், நான் என் குழந்தைகளினிடமாக ஒரு புதுப்பிக்கப்பட்ட பொறுப்பை உணர்கிறேன்.

S. M., ஐக்கிய மாகாணங்கள்

சூதாட்டம் “இளைஞர் கேட்கின்றனர் . . . சூதாட்டம் உண்மையில் அவ்வளவு கேடுள்ளதா?” (நவம்பர் 8, 1992) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. எங்களுடைய பள்ளியில், சூதாட்டம் மிகவும் பிரபலமாகும். ஒரு சூதாட்ட விளையாட்டில் வெற்றிபெற்றவருக்கு 20 யென் (Yen) கிடைக்கும்; என் வகுப்பு மாணவரில் சிலர் பள்ளிக்கு 2,000 யென் கொண்டுவருகின்றனர்! ஒருமுறை சேர்ந்துகொள்ளும்படி நான் அழைக்கப்பட்டேன். சூதாட்டம் உண்மையில் அவ்வளவு கேடுள்ளதா என நான் ஆச்சரியப்படத் தொடங்கினேன், மேலும் ஒரே ஒருமுறை விளையாடிப் பார்க்க தூண்டப்பட்டேன். ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, சூதாட்டம் ஒரு நல்ல விளையாட்டல்ல, ஒரே ஒருமுறை விளையாடி பார்த்தால், மீண்டும் மீண்டும் விளையாட விரும்புவீர்கள் என்று இப்பொழுது அறிந்துகொண்டேன்.

N. N., ஜப்பான்

உடலின் எச்சரிப்பு சிறியது என்று நான் கருதிய மருத்துவ பிரச்னைகள் எனக்கு வர தொடங்கியபோது என்னுடைய மருத்துவர் விடுமுறையிலிருந்தார். “உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துதல்,” (அக்டோபர் 8, 1992) என்ற கட்டுரையை நான் பெறுமுன், என்னுடைய எச்சரிப்பூட்டும் பிரச்னைகளை அசட்டைசெய்ய மனதாயிருந்தேன். கூறிய ஆலோசனையின்படி, நான் மருத்துவ உதவியை நாடினேன், எனக்குப் புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. என்னுடைய உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்தினதால், அது முன்னதாகவே கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

S. S., ஐக்கிய மாகாணங்கள்

வாசித்தல் நான் ஓர் இளைஞன். நான் வாசித்தலை மிகவும் அனுபவிப்பதுண்டு. எனினும், நான் என்ன படிக்கின்றேனோ அதை எல்லா சமயங்களிலுமே புரிந்துகொள்வதுகிடையாது, மேலும் கடினமான வார்த்தைகளை நான் கவனிக்காது விட்டுவிட நேரிடும். “உங்கள் அறிவின் எல்லையை விரிவாக்க வாசியுங்கள்,” (ஆகஸ்ட் 8, 1992) என்ற கட்டுரை இந்த விஷயத்தில் நான் முன்னேற உதவிற்று.

A. R. B., பிரேஸில்

பல வருடங்களாக நான் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் எல்லா பிரதிகளையும் வாசிக்க முயன்றேன். ஆனால் அவற்றைப் படிப்பதையும் உட்படுத்திய ஒரு கால அட்டவணையை நான் கொண்டிருந்தபோதிலும்கூட நான் தவறினேன். ஊக்கமற்ற வாசிப்புப் பழக்கம்தான் என்னுடைய பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் கட்டுரை உதவிற்று. என்னுடைய வாசித்தலை முன்னேற்றுவிப்பதற்கான ஆலோசனைகளை நான் போற்றுகிறேன்.

A. K. F. M., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்