பலவீன நிலையிலிருந்து கடவுளைச் சுறுசுறுப்பாக போற்றும் நிலைக்கு
பிப்ரவரி 1984-ல் வீட்டிற்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளில் இருவர், பியூர்டோ ரிக்கோவின் ஆன்யாஸ்கோவில் உள்ள கார்க்கவாட் கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணோடு பேசினார்கள். வீட்டிற்குள் இருந்து வந்த சப்தத்தைக் கேட்டு, இங்கு யாரேனும் சுகமில்லாமல் இருக்கிறார்களா என்று கேட்டறிந்தார்கள்.
அவள் பதில் சொன்னாள்: “ஆம், அவர் என்னுடைய கணவர். 14-வருடங்களாக பலவீனமுள்ளவராக இருக்கிறார், குளிப்பதற்கும் சாப்பிடவும் தவிர வேறு எதற்கும் அறையை விட்டு வெளியே எப்போதும் வருவதில்லை.”
அந்த இரண்டு சாட்சிகள், அவர்கள் கணவரோடு பேச அனுமதியுண்டா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, அவர் யாரிடமும் பேச விரும்புவதில்லை, ஆனால் சாட்சிகள் உள்ளேபோக விரும்பினால் அவர்கள் போய்பேசட்டும் என்று சொன்னாள்.
“அறைக்குள் சென்றோம்,” சாட்சிகளில் ஒருவர் விளக்கினபிரகாரம், “அந்த மனிதர் படுத்திருப்பதைக் கண்டோம். அவருடைய நிலையைக் காணும் போது நாங்கள் அவருக்காக மிகவும் மனதுருகினோம். அவர் அவ்வளவு வலிமையற்று இருந்ததினால், அவர் நடுங்கினார். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்தும் நோயில்லாத அல்லது மரணம்கூட இல்லாத ஓர் உலகத்தில் வாழக்கூடிய நம்பிக்கையைப் பற்றியும் அவரிடத்தில் கூறினோம். அவருடைய முகமெல்லாம் கண்ணீரினால் நிறைந்துவடிந்தது. யாருமே நோய்வாய்ப்பட்டிராத இப்படிபட்ட புதிய உலகில் வாழ்வதற்கு அவர் விரும்புகிறாரா என்று நான் அவரைக் கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
“ஆம்,” என்று அவர் பதிலளித்தார். “நாங்கள் மறுபடியும் வந்து பைபிளை அவரோடு கலந்துரையாட வாய்ப்பளித்தோம். அவருடைய அனுமதியோடு நாங்கள் திரும்பிப்போய், அவர் கட்டிலில் படுத்திருந்தவண்ணமாகவே பைபிள் படிப்பு நடத்தப்பட்டது.
“ஒருசில சந்திப்புகளுக்குப் பிறகு, படிப்பது அவருக்கு எளிதாயிருக்கக்கூடும் என்பதால் அவர் கட்டிலில் எழுந்து உட்காரும்படி சிபாரிசு செய்தேன். முதலில் வெறுமென சிறிது நேரமே உட்கார்ந்திருக்க முடிந்தாலும் அவர் முயற்சிசெய்தார், ஏனென்றால் அவர் மயக்கமாக உணர்ந்தார். இன்னும் ஒருசில படிப்புகளுக்குப் பின்பு அவர் அதிக பலம் பெற்றபோது, படிப்பை பொதுவறையில் கொள்ளலாம் என்று ஆலோசனைக் கொடுத்தேன். அவர் இதற்கு ஒத்துக்கொண்டார், ஆகவே ஒவ்வொரு வாரமும் அவர் அங்கு நடந்துசெல்வதற்கு நாங்கள் அவருக்கு உதவிசெய்யமுடிந்தது.
“அவர் மிகவும் அரிதாகவே பார்க்கமுடிந்தாலும் மற்றும் உருப்பெருக்காடியைப் பிடிக்க முடியாதளவிற்கு அவருடைய கைகள் நடுங்கினபோதிலும், அந்த மனிதர் தன்னுடைய படிப்புகளில் நல்ல முன்னேற்றம் அடைந்தார். தான் சுகமில்லாமலிருந்த 14 வருடங்களில் அவர் ஒரு மருத்துவரையும் சந்திக்க போகவில்லை, ஏனென்றால் அவர் வீட்டை விட்டு வெளியே போக முடியாதவராக இருந்தார், என்று அவர் எங்களிடம் சொன்னார். ஆகவே, மருத்துவரிடம் இவரை எடுத்துக்கொண்டுபோக நாங்கள் ஏற்பாடுகளைச் செய்தோம்.
“அவருடைய கண்களில் ஓர் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, மேலும் விரைவில் உருப்பெருக்காடியின் உதவியில்லாமலேயே பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய கைகளுங்கூட நடுக்கமற்றவைகளாயின. வீட்டைச்சுற்றி ஒழுங்காக நடக்க ஆரம்பித்தார், இறுதியில் படுக்கைக்கு இரவில் தூங்க மட்டும்தான் போகக்கூடியவராக இருந்தார். இதற்குப்பின்பு சிறிதுகாலத்தில் இராஜ்ய மன்றத்தில் நம்முடைய கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்.
“காலப்போக்கில், யெகோவா தேவன் மீதும் அவருடைய வாக்குகள் மீதும் முன்னாள் வலிமையற்றவராக இருந்தவருடைய அன்பு, அவர் கற்றுக்கொண்டதைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்வதற்கு அவரை உந்துவித்தது. மிக சீக்கிரத்தில், அவர் வீட்டுக்குவீடு ஊழியத்தில் எங்களோடுகூட ஈடுபட்டார். இது, அவருடைய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையும் நண்பர்களையும் மிகப்பெரிதளவில் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அவருடைய பண்ணையில் அவர் வேலைபார்க்கும் அளவிற்கு, அவருடைய உடல் நலம் மேம்பட்டது.”
நவம்பர் 1988-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் ஒரு வட்டார மாநாட்டில் இந்த அனுபவம் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த மனிதன், பேத்ரோ மார்ட்டினேஸ், மேடையின் மேல் காட்சியளித்தார். இறுதியில், நவம்பர் 1989-ல், அவருடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினார். (g91 10⁄22)