உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 12/8 பக். 12-13
  • ஏன் கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கல்ல

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கல்ல
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிறிஸ்மஸ் உண்மையில் எங்கிருந்து வந்தது?
  • புறமதத்தினரை கிறிஸ்தவராக்குவதா?
  • இயேசு கிறிஸ்து கிறிஸ்மஸை எவ்வாறு கருதுகிறார்?
  • கிறிஸ்மஸ் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • கிறிஸ்மஸ் ஜப்பானில் ஏன் இவ்வளவு பிரசித்திப்பெற்றுள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • நவீன நாளையகிறிஸ்மஸின் ஆரம்பம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் அவற்றின் ஆரம்பம் என்ன?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 12/8 பக். 12-13

பைபிளின் கருத்து

ஏன் கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கல்ல

‘கிறிஸ்மஸ் தடைசெய்யப்பட்டது! அதைக் கொண்டாடுகிற எவரும் அல்லது கிறிஸ்மஸ் தினத்தன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கிற எவரும்கூட தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவர்!’

இது விநோதமாகத் தோன்றினாலும், 17-ஆம் நூற்றாண்டில் இதுவே சட்டமாயிற்று. சீர்திருத்தச் சமயவாதிகள் இங்கிலாந்தில் இந்தக் கொண்டாட்டத்தை தடைசெய்வித்தனர். கிறிஸ்மஸிற்கு எதிராக இப்படிப்பட்ட உறுதியான நிலையை விளைவித்தது என்ன? கிறிஸ்மஸ் கிறிஸ்தவர்களுக்கல்ல என்றுணரும் லட்சக்கணக்கானோர் இன்று இருப்பதற்கு காரணமென்ன?

கிறிஸ்மஸ் உண்மையில் எங்கிருந்து வந்தது?

கிறிஸ்மஸ் இயேசு கிறிஸ்துவினால் தொடங்கப்படவில்லை, அது அவராலோ அவருடைய முதல் நூற்றாண்டு சீஷர்களாலோ கொண்டாடப்படவில்லை என அறிவதில் நீங்கள் ஆச்சரியப்படலாம். உண்மையில், கிறிஸ்து மரித்தப் பின்னர் 300 வருடங்கள் வரை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைப் பற்றிய பதிவுகளில்லை.

அந்நாட்களிலே வாழ்ந்த அநேக ஜனங்கள், சூரியனின் வருடாந்தர சுழற்சியின்மீது மிகவும் சார்ந்திருப்பதாக உணர்ந்தனர். ஆகவே சூரியனை வழிபட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் எகிப்திலும் பெர்சியாவிலும் சூரிய வழிபாட்டோடு விரிவான சடங்காச்சாரங்களும் அனுசரிக்கப்பட்டன. வெளிச்சத்தின் திரும்பிவருகை என்பதே இந்தப் பண்டிகைகளின் மையப்பொருளாகும். குளிர்காலத்தில் சூரியன் ஒளிக்குன்றித் தோன்றுவதால், தனது ‘தூரச்சுற்றித் திரிவுகளி’லிருந்து திரும்பி வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மகிழ்ச்சியான பொழுதுபோக்குகள், விருந்துகள், நடனமாடுதல், அலங்கார பொருட்களாலும் விளக்குகளாலும் வீடுகளை அலங்கரித்தல், பரிசுகளை வழங்குதல் போன்றவை இப்பண்டிகைகளில் உட்பட்டிருந்தன. இந்தச் செயல்கள் உங்களுக்கு பழக்கப்பட்டவையாக இருக்கின்றனவா?

எரிக்கப்படாத கிறிஸ்மஸ் கட்டைக்கு மந்திர சக்தியுண்டு, விழாப்பந்தம் சூரியக்கடவுளுக்கு வல்லமையைக் கொடுத்து அதை உயிருக்குத் திரும்பக் கொண்டுவர முடியும், பசுமைமாறா தாவரங்களால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் பிசாசை பயப்படுத்தித் துரத்தும், சூரியனின் திரும்பிவருகையின் எதிர்பார்ப்பாக கிறிஸ்மஸ் மரத்தை வழிபடவேண்டும், புல்லுருவியின் சிறுகிளைகளை தாயத்துபோல அணிவது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பவை சூரியவழிபாட்டினர் கொண்டிருந்த நம்பிக்கைகளுள் சில. இந்தக் காரியங்கள் இன்று எந்தப் பண்டிகையோடு தொடர்புள்ளவை?

கிறிஸ்மஸ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, பொய்மத ரோமில் டிசம்பர் மாதம் ஒரு பெரிய திருவிழா மாதமாக இருந்தது. ஒரு வாரகாலம் நடத்தப்படும் சாட்டர்னேலியா (வேளாண்மைத் தெய்வமாகிய சாட்டர்னுக்கு [சனி] அர்ப்பணம் செய்யப்பட்ட பெரிய ரோமப் பெருவிழா) மற்றும் வெல்ல முடியாத சூரியனின் பிறந்த நாள் (Dies Natalis Solis Invicti) போன்ற பண்டிகைகள் இந்தச் சமயத்தில் கொண்டாடப்பட்டன. மேலும், டிசம்பர் 25 பெர்சியரின் ஒளிக்கடவுள் மித்ராஸின் பிறந்த நாளாக கருதப்பட்டது.

புறமதத்தினரை கிறிஸ்தவராக்குவதா?

புறமதத்தினரை மாற்றும் முயற்சியில், வேதப்பூர்வமற்ற வகையில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் புறமத நம்பிக்கைகளோடு கலப்படம் செய்யப்பட்டன. எனவே மிக முக்கியமான புறமதப் பண்டிகைக்கு இணையாகவுள்ள ஒரு தேதியை சர்ச் கிறிஸ்மஸுக்கு தேர்ந்தெடுத்தது. கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்களைப்பற்றியதென்ன? அநேக கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்கள் “உண்மையான கிறிஸ்தவ பழக்கவழக்கங்களல்ல, ஆனால் சர்ச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது சகித்துக்கொள்ளப்பட்ட புறமத பழக்கவழக்கங்களாகும்,” என்று என்ஸைக்ளோபீடியா ஆப் ரிலிஜன் அன்ட் எதிக்ஸ் ஒப்புக்கொள்கிறது. தெளிவாகவே, இந்தப் பழக்கவழக்கங்களுக்கு வெறுமென ஒரு கிறிஸ்தவப் புறத்தோற்றம் கொடுப்பது, அவற்றில் பங்கெடுப்பவர்களை கிறிஸ்தவர்களாக்கிவிடும் என்று எண்ணப்பட்டது.

எனினும், புறமதங்களை கிறிஸ்தவமாக்குவதற்கு பதிலாக, இந்தப் பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவத்தை புறமதங்களாக்கின. இங்கிலாந்திலும் சில வடஅமெரிக்க குடியேற்றங்களிலும், 1600-களில், கிறிஸ்மஸின் தெளிவான புறமதத் தன்மையைப்பற்றி சீர்திருத்தவாதிகள் கொந்தளிப்படைந்ததன் காரணமாக இந்த விடுமுறைநாளை தடைசெய்வித்தனர். கிறிஸ்மஸின் தெளிவான புறமதத் தன்மையைப்பற்றி சீர்திருத்தச்சமயவாதிகள் கொந்தளிப்படைந்தனர். கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கோ அல்லது கிறிஸ்மஸ் தினத்தன்று வெறுமென வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருப்பதற்கோ தண்டனைகள் விதிக்கப்பட்டன. புதிய இங்கிலாந்தில் (ஐ.மா.), 1856 வரை கிறிஸ்மஸ் சட்டப்பூர்வமாக்கப்படாதிருந்தது.

ஆனால் சர்ச், புறமதத்தினர், அல்லது சீர்திருத்த சமயவாதிகள் ஆகியோர் கடந்த காலங்களில் கிறிஸ்மஸைப்பற்றி எப்படி கருதினரோ அதைவிட மிக முக்கியமான ஒரு காரியம் இருக்கிறது. அது உண்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பிரதான அக்கறைக்குரியதாயிருக்கிறது . . .

இயேசு கிறிஸ்து கிறிஸ்மஸை எவ்வாறு கருதுகிறார்?

உங்களை கனப்படுத்துவதற்காக ஒரு விழா நடத்தப்படவேண்டியிருந்தால், அது எப்படியிருக்க வேண்டும் என்பதைப்பற்றிய உங்களின் அங்கீகாரம் முக்கியமாக இருக்காதா? எனவே, நாம் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: புறமதத்தில் மூழ்கியிருக்கும் பாரம்பரியங்களை இயேசு எப்படி கருதுகிறார் என பைபிள் சுட்டிக்காட்டுகிறதா?

மதமாற்றப்பட்டவர்களைப் பெறுவதற்காக மெய் வணக்கத்தை விட்டுக்கொடுக்கும் மதத் தலைவர்களை இயேசு கண்டனம் செய்தார். அப்படிப்பட்டத் தலைவர்களிடத்தில் அவர் சொன்னார்: “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் (கெஹன்னாவின், NW) மகனாக்குகிறீர்கள்.”—மத்தேயு 23:15.

புறமத மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கலப்பதன் மூலம் மதமாற்றம் செய்யப்படக்கூடாது. இயேசுவின் அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே.” (1 கொரிந்தியர் 10:21) அவர்களுக்கு எழுதின அடுத்தக் கடிதத்தில், பவுல் மேலும் எழுதினார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. . . . கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?”—2 கொரிந்தியர் 6:14, 15.

கடமையுணர்ச்சியுள்ள ஒரு தாய் தன் குழந்தை சாக்கடையில் கிடக்கும் கற்கண்டை எடுப்பதைக் கண்டிருந்தால், அதை உடனடியாக எறிந்துவிடும்படியாக அவனைக் கட்டாயப்படுத்துவாள். அவன் அதை உண்பதை—தொடுவதையுங்கூட—நினைத்துப்பார்ப்பதுதானே அவளுக்கு வெறுப்பூட்டக்கூடியதாக இருக்கிறது. கிறிஸ்மஸ், பலருக்கு இனிப்பாக இருந்தாலும், அது அருவருப்பான இடங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இயேசுவின் மனநிலை, “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடதிருங்கள்,” என்று தன் நாளைய உண்மை வணக்கத்தாரை வற்புறுத்திய ஏசாயா தீர்க்கதரிசியின் மனநிலைக்கு ஒத்திருக்கிறது.—ஏசாயா 52:11.

எனவே, இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை. அவர்களுடைய நிலைநிற்கை மற்றவர்களுக்கு விநோதமாகத் தோன்றினாலும், இயேசு பாரம்பரியங்களை கருதியவிதமாகவே அவர்கள் கருதுகிறார்கள். “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்?” என்று கேட்கப்பட்டபோது “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” என்று அவர் பதிலளித்தார். அவர் மேலும் கூறினார்: “உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.”—மத்தேயு 15:2, 3, 6.

மனிதரின் பொய்மத பாரம்பரியத்தினால் கறைபடுத்தப்படாத “மாசில்லாத சுத்தமான பக்தியை [வழிபாட்டை, NW]” கடைப்பிடிப்பதன் மூலம் இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவோடுள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.—யாக்கோபு 1:27. (g91 12/8)

[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]

“நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?”—மத்தேயு 15:3

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்