உலகத்தைக் கவனித்தல்
ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரிக்கிறது
கடந்த 30 ஆண்டுகளில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இரண்டு மடங்கு ஆகியிருக்கிறது என்பதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்திற்காக பிரசுரிக்கப்பட்ட ஹியூமன் டிவலப்மெண்ட் ரிப்போர்ட் 1992 சொல்கிறது. தேசீய சராசரிகளின் அடிப்படையில், 1960-ல் உலக மக்கள் தொகையின் மிகப்பெரிய பணக்காரர்களில் 20 சதவீதம் மிகவும் ஏழைகளில் 20 சதவீதத்தைவிட 30 மடங்கு அதிக பணக்காரராயிருந்தனர். அவர்கள் 1989-ல் 60 மடங்கு அதிக பணக்காரராயிருந்தனர். தனிநபர்களின் அடிப்படையில், உலகத்தின் 100 கோடி பெரிய பணக்காரர்கள் 100 கோடி மிகவும் ஏழைகளைக் காட்டிலும் குறைந்தது 150 மடங்கு அதிகம் பணக்காரராயிருக்கின்றனர். (g92 11/8)
மிகப்பழமையான ரொட்டிசெய்யுமிடம்?
ஒரு செய்தித்துறை அறிக்கையின்பிரகாரம் எகிப்தின் பிரமிடுகளுக்கு அருகில் வேலை செய்துகொண்டிருக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே மிகப்பழமையானதாக இருக்கக்கூடிய ரொட்டிசெய்யுமிடத்தைத் தோண்டியெடுத்திருக்கின்றனர். தெளிவாகவே இந்த ரொட்டிசெய்யுமிடம் பிரமிடுகளைக் கட்டும் தொழிலாளர்களுக்கு ரொட்டி தயாரித்துக் கொடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. எகிப்திய பழமை ஆய்வு வல்லுநரும் அகழாய்வின் இயக்குநர்களில் ஒருவருமான மார்க் லேனர் கூறினார்: “ஒரு நாளைக்கு 30,000 மக்களுக்கு உணவளிக்க போதுமான ரொட்டிகளைச் செய்யும் பிரம்மாண்டமான ரொட்டிசுடுமிடம் இங்கு இருந்ததைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.” இந்த ரொட்டிசுடுமிடத்தில் வேலைசெய்யும் சூழ்நிலைமைகள் உச்சநிலை வெப்பத்தோடும் அடர்த்தியான கரிய புகையோடும், ஒரு கொடும் அனுபவத்தைத் தருவதாக இருந்திருக்க வேண்டுமென லேனர் உருப்படுத்திக் காட்டுகிறார். அவர் சொல்கிறார்: “இதன் அறைகள் மழைநிறைந்த இரவு நேர வானத்தைப்போல இருந்திருக்கக்கூடும். மிருதுவான கருத்த சாம்பலாலாகிய கருப்பு வெல்வெட்டைப்போன்ற 45 சென்டிமீட்டர் தடிமனுள்ள படுகையைத் தோண்டியெடுத்தோம்.” இந்த ரொட்டிசெய்யுமிடம் பிரமிடு கட்டும் நாட்களுக்குரியது என நம்பப்படுகின்றன. (g92 10/22)
நைஜீரியா தன் ஜனங்களைக் கணக்கிடுகிறது
மார்ச் 20, 1992-ல் நைஜீரியாவின் எல்லா பிரபலமான செய்தித்தாள்களும் அதே எண்ணிக்கையைத் தலைப்புச் செய்தியாக கொண்டிருந்தன—8.85 கோடி. இந்த எண்ணிக்கை, துல்லியமாக 8,85,14,501, நவம்பர் 1991-ன் நைஜீரிய தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பில் எண்ணப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கையாக நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் இரண்டு ஆச்சரியங்களைக் கொண்டிருந்தன. ஒன்று, மற்ற அநேக நாடுகளில் உள்ளதற்கு எதிராக, ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட சிறிது அதிகமாயிருந்தது. இரண்டாவது, நைஜீரியர்களின் மொத்த எண்ணிக்கை, 1963-ல் இதற்குமுன் நடந்த கணக்கெடுப்பின் கணக்கீடுகளின் அடிப்படையில் இருந்து வந்த 10 முதல் 12 கோடி என்ற எண்ணிக்கையைவிட மிகச் சிறியதாக இருந்தது. ஆனால் மொத்த எண்ணிக்கை பொது கணக்கீட்டைவிட 20 சதவீதம் குறைந்திருந்தாலும், நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்திலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடாக உள்ளது. (g92 11/8)
போலிமருந்து எச்சரிக்கை
ஒவ்வொரு வருடமும், போலி மருந்துகளை விற்பனை செய்யும் கள்ளவியாபாரிகள் கோடிக்கணக்கான பணத்தைச் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மற்ற போலி பொருட்களைப் போலல்லாமல், “போலி மருந்துகள் ஆரோக்கியத்திற்கு வினைமையாக கெடுதிசெய்யக்கூடும் மேலும் அது கொல்லவும்கூடும்,” என்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு செய்தி வெளியீடு எச்சரிக்கிறது. மருந்துசக்தி குறைவாகவோ அல்லது மருந்துசக்தியே இல்லாததன் காரணமாக அநேக மருந்துகள், மலேரியா அல்லது நீரிழிவுநோய் போன்ற வினைமையான ஒரு நோயினால் துன்பப்படுபவர்களுக்கு உதவிசெய்யமுடிவதில்லை. சில மருந்துகள் தடைசெய்யப்பட்ட அல்லது நச்சுப் பொருட்களையும்கூட கொண்டிருக்கின்றன. “இருமலைக் குணப்படுத்தவேண்டியிருந்த ஒரு மருந்தை உட்கொண்ட பின் ஏற்பட்டதாக சமீபத்தில் அறிக்கை செய்யப்பட்ட நைஜீரிய குழந்தைகளின் மரணம், இதுபோன்ற சட்டவிரோதமான வியாபாரத்தின் வினைமைத்தன்மையைத் துயரகரமாக உறுதி செய்கிறது,” என்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் பிரச்னை குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு அபாயகரமாக உள்ளது. ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, நல்லதாக தோன்றுகிற ஒரு மருந்தை மிக மலிவு விலையில் கிடைப்பதாக எண்ணி அவர்கள் வாங்குகின்றனர். மருந்துகளின் மேலுள்ள பெயர் விவரச்சீட்டோ பொதியோ அது ஓர் உண்மையான பொருள் என உத்தரவாதம் தருவதில்லை. அவையும் அந்த மருந்தைப்போலவே போலியாக இருக்கலாம். (g92 11/8)
நவீனகால ஓவியம் ஒன்று சோதனையில் தோல்வியுறுகிறது
சமகால கலைஞர்களால் வரையப்பட்ட அநேக ஓவியங்கள் எதிர்ப்படும் ஆச்சரியப்பட வேண்டிய அபாயத்தின்பேரில் கலையுலகம் குழம்பியிருக்கிறது—அவை சீரழிந்துகொண்டிருக்கின்றன. டேவிட் ஹாக்னே, ஜேக்ஸன் பொல்லாக், மார்க் ரோத்கோ போன்ற கலைஞர்களால் தீட்டப்பட்ட ஓவியங்கள் வெளிறிப்போய் அல்லது விரிசலடைந்துகொண்டிருக்கின்றன. மற்றவர்களின் வேலைப்பாடு திரைத்துணிகளிலிருந்து படலங்களாக உரிந்து வீழ்ந்துகொண்டிருக்கின்றன என்று லண்டனின் தி ஸண்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் 1960-களில் பயன்படுத்தப்பட்டு வந்த அக்ரிலிக் பெயிண்ட்தான் என குறைகூறப்படுகிறது. நவீன இரசாயன அடிப்படையிலான பொருட்கள் 1962-ம் ஆண்டு முதன்முதல் வியாபாரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அவை நன்கு வரவேற்கப்பட்டிருந்தாலும், நியூ யார்க் நகரிலுள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் இணைக் காப்பாளர் கரோல் ஸ்ட்ரிஞ்சாரி, சொல்கிறார்: “முதன் முறையாக அக்ரிலிக் பெயிண்ட்டில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு தூசியை ஒருசிலர் எடுக்க முயன்று, அது வராது என்பதாக உணர்ந்தனர். இன்னும் அதை எவ்வாறு எடுப்பதென்று எங்களுக்குத் தெரியவில்லை.” (g92 11/8)
காசநோய் திரும்பிவருகிறது
பழைய கொள்ளைநோயாகிய காசநோய் இப்பொழுது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் உயிர்களைப் பலிவாங்குகிறது என உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கையிடுகிறது. ஒவ்வொரு வருடமும் புதிதாக தோன்றும் 80 லட்சம் நோயாளிகளில் 96 சதவீதம் வளரும் நாடுகளில் காணப்படுகிறது என்றும், இது அந்நாடுகளில் இருக்கும் குறைந்த மருத்துவ கவனிப்பினாலும் மற்ற தேவைகளின் விநியோகத்தின் பற்றாக்குறையினாலுமாகும் என்றும் கனடாவின் டோரோன்டோ நகர தி க்ளோப் அண்ட் மெய்ல் விவரிக்கிறது. “காசநோய் ஒரு சமூக-பொருளாதார நோயாக மாறி ஏழ்மையிலுள்ளவர்களைக் கடுமையாகத் தாக்குகிறது,” என விவரிக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் ஹிரோஷி நாகாஜிமா. வசதிபடைத்த நாடுகளில், இது முக்கியமாக முதியோர், சிறுபான்மை இனத்தவர், அயல்நாட்டுக் குடியேற்றக்காரர்கள் போன்றவர்களைத் தாக்குகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், போதைப்பொருள் துர்ப்பிரயோகம் அல்லது எய்ட்ஸ் முதலியவற்றால் தங்களுடைய எதிர்ப்புத்திற அமைப்புப் பாதிக்கப்பெற்ற அநேக நோயாளிகளை இது உட்படுத்துகிறது என ஓர் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் ஒருவர் சொன்னார். (g92 11/8)
வேலைசெய்யுமிடங்களில் பெண்கள்
உலகில் அதிகமதிகமான பெண்கள் “பொருளாதார ரீதியில் சுறுசுறுப்புள்ளவர்களாக” மாறிவருகின்றனர் அல்லது சம்பள வேலைகளிலே இருந்துவருகின்றனர், ஆனாலும் அவர்கள் அதிக தடைகளை எதிர்ப்படுகின்றனர். இவ்வாறு உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் போன்ற அமைப்புகளால் வெளியிடப்பட்ட நிதியும் வளர்ச்சியும் (Finance & Development) என்ற ஒரு பத்திரிகை கூறுகிறது. உலக முழுவதிலும் சுமார் 83 கோடி பெண்கள் பொருளாதார ரீதியில் சுறுசுறுப்புள்ளவர்களாக இருந்துவருகின்றனர், மேலும் அவர்களில் 70 சதவீதம் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் என இப்பத்திரிகை மதிப்பிடுகிறது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும், ஆண்களைவிட மிகக்குறைந்த பெண்களே இடைநிலைப்பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். எனவே 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள பெண்களில் சுமார் 75 சதவீதத்தினர் படிப்பறிவில்லாதவராக இருக்கின்றனர், இதனால் இப்படிப்பட்ட பெண்களுக்கு ஒரு நல்ல மதிப்புள்ள வேலை கிடைப்பது அடிக்கடி கடினமாயிருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆண்களைவிட மிகக்குறைவான எண்ணிக்கையுடைய பெண்களே பொருளாதார ரீதியில் சுறுசுறுப்புள்ளவர்களாக இருந்துவந்தாலும், புள்ளிவிவரங்கள் வீட்டுவேலைகளை அல்லது குடும்பத்தால் நடத்தப்படும் வேலைகளைப்பற்றியன்றி முறைப்படியான வேலையைப்பற்றியே குறிப்பிடுவதனால், பெண்கள் வேலைசெய்கின்றனரா என்பதை இது பிரதிபலிக்கவில்லை. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், பசிபிக் பகுதிகளிலும், சராசரி பெண் சராசரி ஆணைவிட ஒவ்வொரு வாரமும் 12 அல்லது 13 மணிநேரம் அதிகம் வேலை செய்கிறாள் என்று ஆராய்ச்சிகள் காட்டியிருக்கின்றன. (g92 10/22)
பாலின தாக்குதல்கள் வேடிக்கை புத்தகங்கள் (Comic Books) பழிசுமத்தப்படுகின்றன
ஜப்பானின் டோக்கியோ நகர காவல்துறை, ஒரு 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவன் 25 முறை பாலின தாக்குதல் நடத்தியதாக சமீபத்தில் குற்றம் சாட்டியது. அந்த இளைஞன் ஆபாசமான வேடிக்கை புத்தகங்கள் மீது பழிசுமத்தினான். ஒரு சம்பவத்தில் அவன் நெடுநேரம் திறந்திருக்கும் ஒரு கடையில் வெளிப்படையாக ஆபாசத்தைச் சித்தரிக்கும் ஒரு வேடிக்கை புத்தகத்தை வாங்கி, ஒரு பத்து வயதுள்ள ஒரு பெண்குழந்தையை ஓர் ஓய்வு அறைக்குள் அழைத்துச் சென்று அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் இழிவான காட்சிகளில் ஒன்றைத் தன்னோடு நடித்துக் காட்டும்படி பலவந்தப்படுத்தினான். இதேபோல 24 தாக்குதல்களை நடத்தியிருக்கிறான் என்றும் அவற்றில் பெரும்பாலானவை இழிவான வேடிக்கை புத்தகங்களினால் தூண்டப்பட்டவை என்பதாகவும் காவல்துறையினரிடத்தில் அவன் ஒப்புக்கொண்டிருக்கிறான். “கடந்த வருடம், இழிவான வேடிக்கை புத்தகங்களினால் தூண்டப்பட்டதாக நம்பப்படுகிற, வயது நிரம்பாத இளைஞரை உட்படுத்திய 86 பாலின குற்றங்கள் டோக்கியோவில் அறிக்கை செய்யப்பட்டன,” என்று தி டெய்லி யொமியூரி அறிக்கை செய்கிறது. (g92 10/22)
சாராயமும் கொழுப்பும்?
அளவுக்குமீறி சாராய மதுபானங்களை அருந்துபவர்கள் அதிக பருமனடைய நேரிடுகின்றது என்பது மக்களுக்குத் தெரியாமலிருக்கிறது. ஆனால் ஏன்? சுவிட்ஸர்லாந்திலுள்ள சூரிச் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி அக்கறையூட்டும் ஒரு சாத்தியத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. தெளிவாகவே வெறுமனே சாராயத்திலுள்ள கலோரிகள் மட்டுமே அவ்வளவு பருமனாக்குவதில்லை, ஆனால் கொழுப்பை எரிப்பதற்கான உடலின் திறமையைச் சாராயம் பாதிக்கும் விதமும் ஆட்களைப் பருமனாக்குகிறது. கொழுப்பை எரிக்கும்போது உடல் சிறிது மெதுவாக இயங்குகிறது, மேலும் சர்க்கரையையோ கார்போஹைட்ரேட்டுகளையோ எரிக்கும்போது இவற்றை மிகவும் உடனடியாக பயன்படுத்திவிட்டுக் கொழுப்பைத் தங்கவைத்துவிடுகிறது என்பதைச் சத்துணவு ஆராய்ச்சியாளர்கள் வெகுகாலத்திற்கு முன்னே அறிந்திருக்கின்றனர். ஆனால் சாராயமானது, நம்முடைய உடல், கொழுப்பை இன்னும் மெதுவாகவே எரிக்கும்படியாக செய்கிறது. ஒரு பரிசோதனையில், ஆண்கள் ஒரு நாளைக்கு 3 அவுன்ஸ் சுத்தமான சாராயத்தை (இது ஆறு பீர்களுக்கு [Beer] சமம்) உள்ளடக்கிய உணவுக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டனர். இந்த உணவில், இந்த ஆட்கள் வழக்கமாக எரித்திடும் கொழுப்பைவிட மூன்றிலொரு பங்கு குறைவாகவே எரித்திடும். இயற்கையாகவே, ஒருவருடைய உணவில் எவ்வளவதிகம் கொழுப்பு இருக்கிறதோ அந்தளவு இந்தப் பாதிப்பும் அதிகரிக்க நேரிடும். (g92 10/22)
தானிய பற்றாக்குறை
அடுத்த வருடத்தில் சுமார் 100 லட்சம் டன் மக்காச்சோளம் தென்னாப்பிரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படவேண்டும் என்பதாக ஒரு வட்டார முன்னெச்சரிப்புப் பிரிவாகிய தென்னாப்பிரிக்க வளர்ச்சி ஒருங்கிணைப்பு மாநாடு அறிக்கை செய்கிறது. “எதிர்ப்பார்க்கப்படும் இந்தளவு தானிய இறக்குமதியைக் கையாளுவதற்காக அந்த வட்டாரத்தில் இருக்கும் துறைமுகம், இரயில் போக்குவரத்து, சாலை மற்றும் சேமிப்புக் கிடங்கு போன்ற வசதிகளைப்பற்றிய அதிக கவலை இருந்து வருகிறது,” என்பதாக அதன் செய்தி வெளியீடு கூறுகிறது. முந்தின வருட உற்பத்தி சராசரியைவிட குறைவாக இருந்தபோதிலும், இந்த ஆண்டின் மக்காச்சோள உற்பத்தி கடந்த வருடத்தைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவை இந்நூற்றாண்டில் பாதித்திருக்கும் வறட்சிகளிலேயே இது பெரும்பாலும் கொடியதாக இருக்கும். (g92 11/8)
புகைத்தலைச் சகித்ததற்கான வழக்கு
ஆஸ்திரேலியாவில் நியூ செளத் வேல்ஸின் மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் ஒரு 64 வயது பெண்மணிக்குப் பெரிய தொகையை நஷ்டஈடாக கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. இந்தப் பெண்மணி தான் புகை நிறைந்த சூழலில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலை செய்தபின் தனக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்டதாக அவளால் கூறப்படும் வினைமையான பிரச்னைகளுக்காக, இதற்குமுன் தனக்கு வேலை கொடுத்தவர்களுக்கெதிரே வழக்குத் தொடுத்திருந்தாள். இதற்குமுன் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்துக்குப் போகாமலேயே தீர்க்கப்பட்டிருக்கின்றன, ஆனால் இந்தக் குறிப்பிடத்தக்க தீர்ப்பில், நீதிமன்றம் 85,000 (ஆஸ்திரேலிய) டாலர்களை வழக்குத்தொடுத்தவருக்குக் கொடுக்கும்படி தீர்ப்பளித்தது. புகைப்பவர் ஒருவர் தான் வெளிவிடும் புகை கலந்த காற்றைச் சுவாசிக்கும் புகைக்காதவரின் ஆரோக்கியத்திற்குக் கேடுவிளைவிக்கமுடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதுவே முதல் முறையாகும் என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்தது. இந்தத் தீர்ப்பானது உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், இரவு கிளப்கள், மற்றும் மற்ற வேலைசெய்யுமிடங்களிலும் பரவலான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதாக சிலர் கருதுகின்றனர். ஏனென்றால் இங்கு புகையற்ற வேலை சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவில்லையென்றால் தொழிலாளிகள் அதிக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுக்கமுடியும். (g92 10/22)
முதிருமுன் பாலுறவும் மனக்குழப்பமும்
பாலுறவு இளைஞரில் பால்வினை நோய்களோடு அநேக பிரச்னைகளை உண்டாக்கும். லா ஸ்டாம்பா என்ற இத்தாலிய செய்தித்தாள் கூறுகிறபடி, அகால பாலுறவு வாழ்க்கை “முரண்பாடான நடத்தைமுறை, மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல், குற்றச்செயல் போன்றவற்றை உண்டாக்கக் கூடிய அளவுக்கு, இளைஞரின் மனதிலும் அவர்களுடைய தனிப்பட்ட உறவிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் மனநோய்க்கு” வழிநடத்துகிறது என்பது உணரப்படாத ஓர் அபாயமாகும். மனநிலைசமூக ஆராய்ச்சி மையமும் இத்தாலிய நீதி அமைச்சரகமும் சேர்ந்து ரோமில் நடத்திய ஒரு மாநாட்டில், இளைஞர் மிகக் குறைவான வயதிலேயே பாலுறவுகொள்ள தொடங்குகிறார்கள் என்றறிவிக்கப்பட்டது. ஓர் ஆலோசகரின்படி, சராசரி வயது 17 ஆகும். (g92 10/22)