உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 2/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 2/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துதல் கடந்த வருடம் கருப்பை கோளாறு காரணமாக நான் மூன்று மாதங்களுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். பல வருடங்களாக என் உடல் எச்சரிப்பு அறிகுறிகளைக் கொடுத்துக்கொண்டிருந்தது, ஆனால் நான் அதிக கவனம் செலுத்தவில்லை. இறுதியாக ஒரு மருத்துவ மனைக்குச் சென்று, உடனடி அறுவை சிகிச்சை அவசியம் என்றறிந்தேன். “உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துதல்” (அக்டோபர் 8, 1992) என்ற உங்களுடைய கட்டுரை அப்பொழுது எனக்குக் கிடைத்திருக்குமேயானால், முன்னதாகவே ஒரு மருத்துவரிடம் செல்வதற்கான தைரியத்தை நான் பெற்றிருப்பேன்.

M. U., ஜப்பான்

ஏர் கண்டிஷனிங் நான் 35 வருடங்களுக்கு மேல் ஏர் கண்டிஷனிங் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் பணியிலிருந்ததனால் “ஏர் கண்டிஷனிங் உங்களுக்குத் தேவையா?” (ஜூலை 8, 1992) என்ற கட்டுரை என்னுடைய கவனத்தை ஈர்த்தது. நான் 1950-களில் முதன்முதலாக என்னுடைய தொழிலைப் படித்தபோது Btu என்ற தலைப்பில் பல நாட்களுக்குப் படிக்கவேண்டியிருந்தது. இந்த விஷயத்தை மிக சுலபமாகவும் தெளிவாகவும் ஒரே ஒரு பத்தியில் நீங்கள் விவரித்து விட்டீர்கள்! இந்தக் கட்டுரை எனக்கு அப்பொழுது கிடைத்திருக்க விரும்புகிறேன்.

A. D., ஐக்கிய மாகாணங்கள்

குடும்பங்களை அமைத்தல் ஒரு புதிய பைபிள் மாணாக்கராக “உலகமுழுவதும் குடும்பங்களை அமைத்தல்—அன்பு, சிட்சை, முன்மாதிரி, மற்றும் ஆவிக்குரிய மதிப்பீடுகளோடு பெற்றோரின் பாகத்தை நிறைவேற்றுதல்” (அக்டோபர் 8, 1992) என்ற கட்டுரை எனக்கு அதிக உற்சாகமூட்டுவதாக இருந்தது. நாங்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகத் தொடங்கியபோது, என் மகன் பைத்தியம் பிடித்தவனைப்போல பாவனை செய்து அழுவான். ஆனால் எங்களோடு பைபிளைப் படித்த பெண்மணியின் உதவியினாலும் நீங்கள் பிரசுரித்த பத்திரிகையிலிருந்து கிடைத்த உற்சாகத்தாலும், நான் இப்பொழுது பலனை அறுவடை செய்கிறேன். இரண்டரை வயதான என்னுடைய மகன் இப்பொழுது கூட்டங்களின்போது அமைதியாக உட்கார்ந்திருக்கிறான், மேலும் சிறிய குறிப்புகளையும்கூட கொடுக்கிறான்.

M. T., ஜப்பான்

வீண்பேச்சு நான் ஒரு வினைமையான வீண்பேச்சாளனாக இருந்தேன். ஆனால் ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து “வீண்பேச்சு—புண்படுவதை எப்படி தவிர்ப்பது” (ஏப்ரல் 8, 1992) என்ற தொடர் கட்டுரைகளை வாசித்தேன். உங்களுடைய உதவியினால் அந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து என்னால் விடுபடமுடிந்தது. வீண்பேச்சு அவ்வளவு வினைமையானது என்றும் அது ஒருவருடைய நற்பெயரைக் கெடுக்கக்கூடும் என்று அறியாமலிருந்தேன். இந்தத் தகவலுக்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

F. B., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரைகள் சொல்லர்த்தமாகவே என்னுடைய வேலையைக் காப்பாற்றின. நான் வேலை செய்யும் தொழிற்சாலையை மூடப்போகிறார்கள் என்று பேசப்பட்ட வதந்தியை நான் மீண்டும் மீண்டும் சொன்னேன். அந்த நாள் முடியுமுன் நான் என்னுடைய மேற்பார்வையாளரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். நான் வீண்பேச்சில் ஈடுபட்டேன் என்றும் வேலை கிடைப்பது மிக அரிதாகையால் இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்புவது ஜனங்களை பயமுறச் செய்யும் எனவும் அவர் சொன்னார். என் தொழிற்சாலையில் ஆட்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர், மற்றும் இது என்னை வேலையிலிருந்து நீக்குவதற்காக அவர்கள் காட்டும் சாக்கு என்பதைப் புரிந்துகொண்டேன். நான் வீண்பேச்சின்பேரில் வந்த விழித்தெழு! பத்திரிகையைப் பெற்றபோது, அது பரத்திலிருந்து வந்த ஆலோசனையாக எடுத்துக்கொண்டேன். அதை என் மேற்பார்வையாளரிடம் காண்பித்து நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பதையும் வீண்பேச்சிலிருந்து விலகியிருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்றும் சொன்னேன். அவர் எனக்கு நன்றிசெலுத்தினார்—இன்றும் நான் என் வேலையிலிருக்கிறேன்.

L. G., ஐக்கிய மாகாணங்கள்

சர்வதேச கட்டுதல் “அதை நீங்கள் செய்தேதீர வேண்டும்.” (செப்டம்பர் 8, 1992) என்ற கட்டுரையைப் பெறுவதற்குத் திளைப்படைந்தோம். நானும் என் மனைவியும் தென் அமெரிக்காவின் கொலம்பியாவில் உவாட்ச் டவர் சங்கத்தின் ஒரு கட்டுதல் திட்டத்தில் வாலண்டியராக சேவை செய்ய புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அது வந்தது. இந்தக் கட்டுரை நாங்கள் எதை எதிர்ப்பார்க்கவேண்டும் என்பதைப்பற்றி ஒரு ‘மறைபொருளின் முற்காட்சியாய்’ இருந்தது. நாங்கள் புறப்படுவதற்கு முன் குடும்பத்தினரிடமும், வேலை அளித்தவர்களிடமும், அக்கறை காட்டுபவர்களிடமும், பைபிள் மாணாக்கர்களிடமும் அநேக பிரதிகளை எங்களால் அளிக்கமுடிந்தது. நாங்கள் பங்கேற்க சிலாக்கியம் பெற்றிருந்த வேலையைப் பற்றி ஒரு நல்ல புரிந்துகொள்ளுதலைப் பெற அது அவர்களுக்கு உதவிற்று.

T. G., ஐக்கிய மாகாணங்கள்

வேண்டாதப் பொருட்கள் சேருவது “வேண்டாதப் பொருட்கள் சேருவது கட்டுக்கடங்காமல் போகும்போது” (ஆகஸ்ட் 8, 1992) என்ற உங்களுடைய கட்டுரைக்காக நன்றி. என்னுடைய 44 வருட வாழ்க்கையின் பெரும்பகுதியில், இதில் போராட்டத்தைக் கொண்டிருந்தேன், எனக்குக் கிடைக்கும் எந்த உதவியையும் நான் உபயோகிக்கமுடியும். மிகவும் நடைமுறையான உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி.

C. R., ஐக்கிய மாகாணங்கள்

என் கணவர் முதலாவதாக இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு எங்களுடைய வீட்டில் வேண்டாத பொருட்கள் சேர்ந்துவிட்டிருக்கிறது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார்! அப்போதுதான் சமீபத்தில் எங்களுடைய இளவேனிற்கால சுத்தம் செய்தல் முடிந்திருந்தது, இருப்பினும் எங்களுடைய வீடு ஒருபோதும் சுத்தமாக காணப்பட்டதில்லை என நான் நினைத்தேன். நான் மீண்டும் சுத்தம் செய்வதற்கான சமயம் வந்தது. என்னுடைய வீட்டின் உண்மையான நிலையை உணர்ந்தபோது நான் எப்படி சிரித்தேன்! மலைகளைப்போல குவிந்துகிடந்த வேண்டாத பொருட்களை அகற்ற உங்கள் கட்டுரை உதவிற்று. உங்களுக்கு நன்றி.

S. C., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்