உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 5/8 பக். 31
  • சுதந்திர குறியீட்டெண்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுதந்திர குறியீட்டெண்
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு ஜனம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகளுக்கு நல்வரவு!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 5/8 பக். 31

சுதந்திர குறியீட்டெண்

வித்தியாசமான 88 நாடுகளில் மக்களால் எவ்வளவு சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டுக்காட்டிய ஒரு “மனித சுதந்திர குறியீட்டெண்”ணை ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டம் (UNDP) தயாரித்துள்ளது. சர்வதேசீய மனித உரிமை அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் 40 உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் அடிப்படையில், இந்தக் குறியீட்டெண் ஒவ்வொரு சுதந்திரத்திற்கும் ஒரு புள்ளி என்ற வீதத்தில் ஒரு நாட்டுக்கு அளிக்கிறது.

ஐரோப்பிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தி கூரியர் என்ற ஒரு பத்திரிகையின்படி, UNDP அளவிட்டிருக்கிற சுதந்திரங்களில் சில: அமைதியுடன் கூடிவந்து கூட்டுறவுகொள்ள உரிமை; பள்ளிகளில் கட்டாய மதம், தேசீய கொள்கை போன்றவற்றிலிருந்து சுதந்திரம்; சுயேச்சையாக புத்தகங்கள் வெளியிடுவதற்கான சுதந்திரம்; சொந்த உடைமைகளை விதிக்கட்டின்றி கைப்பற்றுதலிலிருந்து சுதந்திரம்; எந்த மதத்தையும் அப்பியாசிக்கும் தனிப்பட்ட உரிமை போன்றவை. நாடுகள் எவ்வாறு தேறுகின்றன?

எந்த நாடும் 40 புள்ளிகள் எடுக்கவில்லையென்றாலும், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் 38 புள்ளிகளெடுத்து அண்மையில் வந்தன. நெதர்லாந்து 37 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை வகித்தது. பட்டியலில் கீழ்நோக்கி ஒன்று அல்லது இரண்டு என சில புள்ளிகளே பெற்ற நாடுகள் உள்ளன. பட்டியலில் எல்லாவற்றிற்கும் கீழ் உள்ள ஒரு நாட்டுக்கு ஒரு புள்ளிகூட கொடுக்கப்படவில்லை. எனினும், “இந்தக் குறியீட்டெண் 1985-ன் நிலைமைக்கு உரியது,” அதிலிருந்து உலகம் மிக அதிக சுதந்திரம் அடைந்துள்ளது என்பது கவனிக்கப்படவேண்டும் என்று UNDP அறிக்கை கூறுகிறது.

இன்டர்நேட்ஸ்யனால ஸாமன்உவர்கின் என்ற டச் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “கோஸ்டா ரிகா (18-வது இடம்), பாப்புவா நியூ கினியா (20-வது), வெனிசுவேலா (22-வது) போன்ற வளரும் நாடுகள், அயர்லாந்து (23-வது), ஸ்பெய்ன் (24-வது) போன்ற ஐரோப்பிய நாடுகளைவிட பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன.”

ஒரு பொது நியதியாக, சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது, என்று அந்த அறிக்கை முடிக்கிறது. அதிக அளவு சுதந்திரத்தைக் கொண்ட பெரும்பாலான நாடுகள் அதிகளவு மனிதஇன வளர்ச்சியையும் அனுபவிப்பதாகத் தோன்றுகின்றன. அதேசமயம் குறைந்த சுதந்திரத்தைக் கொண்டுள்ள நாடுகள் குறைவான வளர்ச்சியோடு அழுத்தப்பட்டிருந்தன. UNDP அறிக்கை குறிப்பிடுகிறது: “சுதந்திரம் தங்களுக்காகவும் தங்களுடைய சமுதாயத்திற்காகவும் பொருளாதார வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்ள மக்களின் ஆக்கசக்தியை அவிழ்த்துவிடுகிறது.”

சந்தேகமின்றி, மனித சமுதாயத்தில் விரும்பப்படும் குறிக்கோள்களாக UNDP-யால் பட்டியலிடப்பட்டிருந்த 40 சுதந்திரங்கள், வியாதி, முதிர்வயது, மரணம் ஆகியவற்றின் அழிவுக்குரிய விளைவுகளிலிருந்து விடுதலையை உட்படுத்தவில்லை. கடவுள் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் கைகளில் ஒப்படைத்துள்ள ராஜ்யம் மட்டுமே அப்படிப்பட்ட சுதந்திரங்களைத் தரும். “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்,” என பைபிள் உறுதியளிக்கிறது.—ரோமர் 8:21. (g93 2/8)

[பக்கம் 31-ன் படம்]

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது கிழக்கு ஐரோப்பாவில் அதிக சுதந்திரத்தைக் குறித்தது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்