உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 11/8 பக். 28-29
  • “வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்”
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சொந்தமாக வாழ்த்திதழ்களை உண்டாக்குதல்
  • பொருத்தமான ஒரு செய்தி
  • வாழ்த்திதழ்கள் அனுப்புவதற்கு ஏற்ற காலங்கள்
  • எனக்கு கிரெடிட் கார்டு தேவையா?
    விழித்தெழு!—1999
  • JW.ORG கான்டாக்ட் கார்டுகளை நன்றாக பயன்படுத்துகிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் புதிய ஏற்பாடு
    நம் ராஜ்ய ஊழியம்—2004
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 11/8 பக். 28-29

“வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்”

“அது என்னே ஒரு மகிழ்ச்சிதரும் வார இறுதியாக இருந்தது!” நண்பர்களைக் காணச் சென்று வீடு திரும்பும் நீங்கள், அந்த ஓய்வுநேரத்தைப் பற்றிய இனிய நினைவுகளைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு விருந்தோம்பியவர்கள் என்னே உபசரணையுள்ளவர்களாக இருந்தனர்! உங்களுடைய போற்றுதலை வெளிக்காட்ட, உங்கள் குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்லுகிறீர்கள்: “வாழ்த்திதழ் ஒன்றை அனுப்புவோம்.”

ஒரு வாழ்த்திதழ் வாங்க உள்ளூர் கடைகளுக்குப் போகிறீர்கள். ஏராளமாக வரிசையான இதழ்களைக் காண்கிறீர்கள். ஆனால் அவை உங்களுக்குக் குழப்பமுண்டாக்குகின்றன. ‘எந்த வாழ்த்திதழை நான் தேர்ந்தெடுப்பது?’ ‘எந்த இதழ் மிகவும் பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது?’ அதைத் தேர்ந்தெடுப்பது எவ்வகையிலும் எளிதல்ல! எனவே நீங்கள் ஏன் சொந்தமாக வாழ்த்திதழை உண்டாக்கக்கூடாது?

சொந்தமாக வாழ்த்திதழ்களை உண்டாக்குதல்

நீங்கள் முதன்முதலில் நினைப்பதைவிட இது எளிதாக இருக்கும். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு சுத்தமான தாள் அல்லது ஒரு மெல்லிய அட்டையும், எழுதுவதற்கான ஒரு பொருளும், சந்தேகமின்றி, ஒரு செய்தியுமே. உங்களுடைய சொந்தத் தெரிந்தெடுப்பாகிய ஓர் உருவரையோடு உங்களுடைய சொந்த உள்ளுணர்ச்சிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். எப்படி? இரண்டு ஆலோசனைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(1) உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தைத் தேர்ந்தெடுங்கள். அது ஒரு பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்து உங்கள் அட்டையில் ஒட்டக்கூடிய ஒரு காட்சியாக இருக்கலாம். தங்களுடைய 25-வது திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாட ஒரு மனைவி ஒரு புதுவிதமான வாழ்த்திதழால் தன் கணவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள். தன்னுடைய மற்றும் தன் கணவனுடைய சிறிய புகைபடங்கள் இரண்டை வெட்டியெடுத்தாள். தாங்கள் பகிர்ந்துகொண்ட வாழ்க்கைக்கான சந்தோஷத்தை வெளிக்காட்டும்பொருட்டு அவற்றை ஓர் எளிய அட்டையின் மேல் ஒட்டினாள்.

(2) பூக்களை உபயோகப்படுத்துங்கள். அவை ஏற்கெனவே அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அழுத்தி உலரவைத்தப் பிறகு, மகிழ்ச்சிதரவும், ரசனையைக் கூட்டவும் அவற்றை உங்களுடைய அட்டையில் ஒட்டுங்கள்.—பெட்டியைப் பார்க்கவும்.

என்னதான் அலங்கரிப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், நிச்சயமாகவே, அதில் உள்ள செய்தியே மிகவும் மதிப்புள்ளதாக இருக்கிறது. நீங்கள் சொந்தமாக வாழ்த்திதழ்களை உண்டாக்குவது உங்களுடைய மனநிலைகளை உள்ளபடி வெளிக்காட்டும் வார்த்தைகளை உருவாக்கும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிறது.

பொருத்தமான ஒரு செய்தி

‘இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க’ பண்டைய சாலொமோன் ராஜா ‘வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.’ (பிரசங்கி 12:10) அத்தகைய தெரிந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் எழுதப்பட்ட உங்கள் செய்தியை வாசிப்போருக்கு “வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமான”மாக ஆக்கும்.—நீதிமொழிகள் 25:11.

மகிழ்ச்சியை விளைவிக்கும் வார்த்தைகளைத் தெரிந்தெடுங்கள். உண்மையான உங்களுடைய உணர்ச்சிகளைத் தெரியப்படுத்த பைபிளின் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தைகளில் சிலவற்றை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். அவை மிகவும் வரவேற்கப்படும்.

அந்த வார்த்தைகளை நீங்கள் அந்த அட்டையில் எவ்வாறு எழுதுகிறீர்கள் என்பதும் ஒரு செய்தியைக் கொடுக்கிறது. அவற்றைச் சுத்தமாகவும் தெளிவாகவும் எழுதுவது அனுப்புநராகிய உங்களைப்பற்றி அதிகத்தைத் தெரியப்படுத்துகிறது.

வாழ்த்திதழ்கள் அனுப்புவதற்கு ஏற்ற காலங்கள்

திருமணங்கள் தம்பதிகள் தங்களுடைய தோழர்களையும் உறவினர்களையும் அழைக்க விரும்பும் சந்தோஷமான நிகழ்ச்சிகளாக இருக்கின்றன. அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்களானால், அழைப்பிதழில் அது தொடங்கி முடியும் நேரங்களைப் பற்றிய குறிப்புகளை உட்படுத்துவதன் மூலம் தூரத்திலிருந்து வருவோரின் நலனில் அக்கறையை வெளிக்காட்டலாம்.

ஒரு குழந்தையின் பிறப்பும் வாழ்த்திதழ் அனுப்புவதற்கேற்ற வேறொரு வாய்ப்பாக இருக்கலாம். இது நீங்களும் அவர்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுகிறீர்கள் என்பதைப் பிறந்த குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்கிறது.

இதுபோன்ற வாய்ப்புகள் மட்டுமல்லாமல், ஜனங்கள் உங்களுக்குக் காண்பித்திருக்கிற தயைக்கு நன்றி செலுத்துவது என்ன ஒரு சிந்தனையுள்ள தன்மையைக் காண்பிக்கிறது. நோயுற்றிருப்போருக்கும் மருத்துவமனையில் இருப்போருக்கும் நீங்கள் ஆறுதலளிக்கலாம்; அவர்களுக்கு உங்களுடைய அன்பையும் அக்கறையையும் திரும்பவும் உறுதியளிக்கலாம். உங்களுடைய வாழ்த்திதழ் கொண்டுவரக்கூடிய ஊக்கமளிக்கும் வாழ்த்துரையும் மகிழ்ச்சிதரும் அந்தப் படமும் அழுத்தத்திலிருந்தும் கவலையிலிருந்தும் விடுதலையளிக்கின்றன. உண்மையிலேயே, பண்டைக்கால நீதிமொழி சொல்லுகிறதுபோல, “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!”—நீதிமொழிகள் 15:23.

தூரத்திலிருக்கும்போதோ அருகிலிருக்கும்போதும்கூட, தங்களுடைய பிரியமான ஒருவரை மரணத்தில் இழந்துவிட்டிருப்பவர்களுக்கு உங்களுடைய இரக்கத்தைத் தெரியப்படுத்துங்கள். பைபிள் தருகிற உயிர்த்தெழுதலின் ஆச்சரியகரமான நம்பிக்கையைப்பற்றிய ஒரு நினைவூட்டுதல் தகுந்ததாக இருக்கலாம்.

ஆகவே, மற்றவர்களுக்கான உங்கள் உணர்ச்சிகளைத் தெரிவிக்க உந்துவிக்கப்படுவதாக எப்பொழுதெல்லாம் உணருகிறீர்களோ, ஏன் ஒரு வாழ்த்திதழை அனுப்பக்கூடாது? சந்தேகமின்றி, வாய்க்கும்போது அந்நபரோடு நேரில் பேசுவதற்கு இது சமமாகாது. அதைவிட, இது அன்பாயிருப்பதற்கான ஒரு கூடுதல் வாய்ப்பாகவே இருக்கிறது. (g93 8/8)

[பக்கம் 28, 29-ன் பெட்டி]

தனித்தன்மைவாய்ந்த ஓர் அலங்கரிப்பு

அழுத்தப்பட்ட பூக்களைக் கொண்டு உங்களுடைய வாழ்த்திதழ்களை அலங்கரிப்பது அதற்கு வனப்பூட்டும். இது உங்களுடைய வாழ்த்திதழுக்குத் தனித்தன்மைவாய்ந்த ஒரு பாணியைக் கொடுக்கக்கூடிய எளிய, செலவில்லாத ஒரு வழியாகும். மிகவும் குறைவான உபகரணங்களே உங்களுக்குத் தேவைப்படும்.

பூக்களைச் சேகரித்தல்

◻ உங்களுக்குத் தேவையான பூக்களைப் பறிக்க அனுமதி இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

◻ மழை பெய்யும்போது பறிப்பதைத் தவிருங்கள்.

◻ பழைய பூக்களையோ இலைகளையோ பறிக்காதீர்கள்.

◻ பூக்களை வீணாக்காதீர்கள்.

சில பூக்கள் சதைப்பற்றுள்ளவையாக இருந்தாலோ (fleshy) (ப்ளூ பெல் பூக்கள், லில்லி பூக்கள், ஆர்க்கிட் பூக்கள்) சீரான வடிவமற்றவையாக இருந்தாலோ (டேஃபடில் பூக்கள், லிலேக் பூக்கள், பெரிய ரோஜா பூக்கள், திஸ்ல் பூக்கள்) நன்றாக அழுந்துவதில்லை.

பூக்களை அழுத்துதல்

◻ இரண்டு ப்ளைவுட் ஷீட்டுகளுக்கு இடையில் பற்றிறுக்கியில் (clamp) வைத்து இறுக்கப்பட்டுள்ள மை ஒற்றுத் தாள்களுக்கு இடையே பூக்களை வையுங்கள். ஒரு சில அடுக்குச் செய்தித்தாள்களையும் அதனோடு சேர்த்து வைப்பது ஈரத்தை உறிஞ்ச உதவும். பூக்கள் உலர உலர பற்றிறுக்கியைத் தினமும் இறுக்கிவிடுங்கள்.

◻ இறுக்கி வைத்ததைத் திறக்க குறைந்தது ஒரு வாரமாவது காத்திருங்கள்.

◻ அந்தப் பூக்கள் நன்றாக அழுந்தியிருக்கின்றனவா என்று விரைவில் பாருங்கள்; தேவைப்பட்டால், உலர்ந்த தாள்களில் அவற்றை முன்பு இருந்ததுபோலவே வைத்து இறுக்கிவிடுங்கள்.

◻ பற்றிறுக்கியை மூடி மீண்டும் இறுக்கிவிட்டு, வெதுவெதுப்பான உலர்ந்த இடத்தில் இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வைத்து அதன்பின் பூக்களை அகற்றுங்கள்.

பூக்களை ஒட்டுதல்

◻ குறைந்தளவு பசையை மட்டும் உபயோகியுங்கள்.

◻ உலர்ந்த பூக்களைக் கவனமாக, தேவைப்பட்டால் ஓர் இடுக்கியைக்கூட உபயோகித்து, கையாளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்