உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 4/8 பக். 29
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 4/8 பக். 29

எமது வாசகரிடமிருந்து

குடும்பம் நாசியை எதிர்த்து நிற்கிறது எனக்கு வயது 90, நான் யெகோவாவின் சாட்சிகளோடு படித்துக்கொண்டு இருக்கிறேன். “யெகோவாவே, என் வாலிப மகளை உண்மையுள்ளவளாக இருக்கச்செய்யும்!” (ஜனவரி 8, 1994) என்ற கட்டுரையை நான் படித்தேன். ஹிட்லரின் கொடூரமான ஒடுக்குதலின்கீழும் யெகோவாவின் போதனைகளைக் கைக்கொள்ள ஒரு துணிவான போராட்டத்தைப் போராடிய சாட்சி பெற்றோரைப் பற்றியும் அவர்களுடைய மகளைப் பற்றியும் அது சொன்னது. அதைப் படித்தபோது நான் கண்ணீர் வடித்தேன். இன்னும் அதிக உள்ளார்வ நோக்கத்தோடு யெகோவாவின் போதனைகளைக் கற்றுக்கொள்ள நான் தீர்மானமாய் இருக்கிறேன்.

S. T., ஜப்பான்

இந்த அனுபவம் என்னை ஆழத் தொட்டது. சீமோன் அர்னால்ட் லீப்ஸ்டர் ஒரு சிறுபெண்ணாகவே இருந்தாள். யெகோவாவுக்கான தன்னுடைய கீழ்ப்படிதலின் காரணமாக அவளுடைய பெற்றோர் இல்லாமல் ஓர் இளைஞர் சீர்திருத்தப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தாள். விசுவாசத்தின் என்னே ஓர் அதிசயமான எடுத்துக்காட்டு!

M. C. L. S., பிரேஸில்

அவளும் அவளுடைய பெற்றோரும் தங்களுடைய வாழ்க்கையில் காண்பித்த யெகோவாவின் மீதான நம்பிக்கையும், அன்பு, மதிப்பு, பலம் போன்றவையும் யெகோவாவிடமாக நான் கொண்டிருந்த தனிப்பட்ட உறவை மறுபரிசீலனை செய்யும்படி என்னைத் தூண்டிற்று. அது என்னை சிறுமைப்படுத்தப்பட்டவளாக உணரவைத்து, சகிப்புத்தன்மை மற்றும் விசுவாசம் ஆகிய ஆவிக்குரிய சொத்துக்களை போற்ற எனக்கு உதவிற்று.

V. B., ஆஸ்திரேலியா

தனிமை தனிமையின் பேரிலான (ஜனவரி 8, 1994) அந்தக் கட்டுரைகளை நான் மூன்று, நான்கு முறைகள் வாசித்தேன். ஒருவர் நடனமாடி, பாட்டுப்பாடிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென ஆலோசனை கொடுக்கிறீர்கள். ஆனால் வேதியியல் சமநிலையின்மை எவ்வாறு ஒருவரைத் தற்கொலை உணர்ச்சிகளைக் கொண்டிருக்கச்செய்யும் என்பதைப்பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே.

P. C., ஐக்கிய மாகாணங்கள்

அந்தக் கட்டுரைகள் தீவிர மனச்சோர்வினாலோ தற்கொலை நாட்டங்களினாலோ துன்பப்படுபவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. அவற்றிற்குப் பொதுவாக விசேஷித்த கவனம் தேவைப்படுகிறது. மாறாக, அன்பார்ந்தவர்களின் மரணத்தைப்போன்ற துயர்மிகுந்த சூழ்நிலைகளின் காரணமாக ஏற்படுகிற தனிமையின் தற்காலிக தாக்குதல்களால் அல்லல்படுபவர்களுக்காக அவை எழுதப்பட்டவையாகும். எங்களுடைய அக்டோபர் 22, 1987-ன் ஆங்கில இதழிலும், இந்த இதழின் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரையிலும் மனச்சோர்வைப்பற்றிய பொருள் வெளியிடப்பட்டது.—ED.

வடதுருவ வைகறை அரோரா போரியேலஸ் என்பதைப்பற்றிய “ஆகாயமண்டலக் காற்றுகளின் மர்ம சவாரிக்காரர்கள்” (ஆங்கிலத்தில், செப்டம்பர் 22, 1993) என்ற உங்களுடைய கட்டுரையை நான் வாசித்து மகிழ்ந்தேன். ஆனால் அந்த ஒளிகளை ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் காணமுடியும் என்பதைக் குறிப்பிட நீங்கள் தவறிவிட்டீர்கள். ‘பழைய அபர்டீனின் வடதுருவ வைகறையை’ குறித்து ஒரு பாட்டும்கூட இருக்கிறது!

G. S., ஸ்காட்லாந்து

கூடுதல் தகவலுக்காக நன்றி.—ED.

வனவிலங்குகளைப் பாதுகாத்தல் நான் உள்ளூர் சுற்றுச்சூழல் ஸ்தாபனத்தின் தலைவராக இருக்கிறேன். சுற்றுச்சூழலைப்பற்றி திருத்தமான தொடர்வரிசை கட்டுரைகளைக் காண்பது மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. (“நம் வனவிலங்குகளை யார் பாதுகாப்பார்?,” ஆங்கிலத்தில், நவம்பர் 8, 1993) கடவுள் மட்டும் கவனிக்காதிருந்தால், நாம் ஏற்கெனவே அழிந்துபோயிருப்போம் என்பது பல வருடங்களாக என்னுடைய வாதமாக இருந்துவந்திருக்கிறது.

M. S., ஐக்கிய மாகாணங்கள்

கடவுள் நிச்சயமாகவே பூமியை அழிவுகளிலிருந்து மீளக்கூடிய தன்மையோடு படைத்தார். அதை அழிப்பதற்கான மனிதனின் முயற்சிகளை அது எதிர்த்துநிற்பதற்கான காரணம் அதுவே என்பதில் சந்தேகமில்லை. இறுதியில், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதே’ அவருடைய தீர்வாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18)—ED.

எய்ட்ஸ் எய்ட்ஸின்பேரிலான “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடர்கட்டுரைகளை (டிசம்பர் 8, 1993, ஜனவரி 8, 1994) வாசித்து நான் மிகவும் மகிழ்ந்தேன். எனக்கு வயது 20. நான் கன்னிமையோடு இருப்பதைக்குறித்து நான் சங்கோஜப்பட்டுவந்திருக்கிறேன். ஆனால் அந்தக் கட்டுரைகளை வாசித்தப்பிறகு, என்னுடைய கன்னிமை யெகோவாவிடமிருந்து வந்த ஒரு பரிசு என்பதை உணர்ந்துகொண்டேன்.

L. K., ஐக்கிய மாகாணங்கள்

இருபாலினப் புணர்ச்சி ஒத்த பாலினத்தவரின் புணர்ச்சிக்கு சமமான ஆபத்தை விளைவிக்கும் வகையைச் சேர்ந்தது என்று அர்த்தப்படுத்துவது தவறாகும். HIV வருவதற்கான மிக அதிக வாய்ப்பு ஒத்த பாலினப் புணர்ச்சிக்காரர்களுக்கே உள்ளது என்று அனைத்து ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன.

J. S., ஐக்கிய மாகாணங்கள்

ஒத்த பாலினப் புணர்ச்சிக்காரர்கள் HIV தொற்றுவதற்கான அதிக வாய்ப்பை உண்மையிலேயே கொண்டிருக்கின்றனர் என்று ஆராய்ச்சி காண்பிக்கிறது. இருந்தாலும், இருபாலினப் புணர்ச்சியினால் ஏற்படும் தொற்று கவலைக்கிடமான அளவில் அதிகரித்துவருகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐ.மா. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பிரதிநிதி ஒருவர் சொல்கிறபடி, பெண்கள் “இந்த நாட்டில் HIV தொற்றப்பட்டுவரும் மக்கள்தொகுதியில் அதிவிரைவில் வளர்ந்துவரும் ஒரு தொகுதியினராக இருக்கின்றனர்.” எப்போதுமே பெண்கள்தான் தவறுசெய்கின்றனர் என்பது அல்ல; அநேகர் ஒழுக்கங்கெட்ட கணவன்மார்களிடமிருந்து தொற்றப்பெறுகின்றனர்.—ED.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்