உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 1/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 1/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வீட்டுக் கல்வி “வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?” (ஜூலை 8, 1993) என்ற உங்கள் கட்டுரையை நான் போற்றினேன். நானும் வீட்டில் கற்பிக்கப்பட்டு வருகிறேன். என்னுடைய பள்ளிப்பாட வேலைகளில் நான் பின்தங்கியிருக்கிறேன். ஆனால் உங்களுடைய கட்டுரையைப் படித்தபோது, அது என் மனதை எழுச்சியடையச் செய்தது. இப்போது நான் மீண்டும் அட்டவணைப்படி செய்துவருகிறேன்.

N. S., ஐக்கிய மாகாணங்கள்

குடும்பக் கட்டுப்பாடு “குடும்பக் கட்டுப்பாடு—ஓர் உலகளாவிய பிரச்னை” என்ற உங்களுடைய ஜூன் 8, 1993-ன் முக்கியக் கட்டுரைகளால் நான் பெரிதும் புண்படுத்தப்பட்டேன். பொறுப்புள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தின் அளவுகளைக் கட்டுப்படுத்தும் தேவையுள்ளது என ஆலோசனை கூறுவது அபத்தமானது. ஆதியாகமத்தில் உள்ள [‘பூமியை நிரப்புங்கள்’ என்ற] கடவுளுடைய கட்டளை கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறதில்லை என்று நீங்கள் எந்த ஆதாரத்தின்பேரில் ஆலோசனை கூறுகிறீர்கள்?

A. D., ஐக்கிய மாகாணங்கள்

‘பூமியை நிரப்புங்கள்’ என்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுக்கப்பட்ட கடவுளுடைய கட்டளை நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் திரும்பக் கூறப்பட்டது. எனினும், பிள்ளை பெறுவதற்கான கட்டளையை பைபிளின் எப்பகுதியும் கிறிஸ்தவர்கள்மேல் சுமத்தவில்லை. (ஆதியாகமம் 1:28; 9:1-5; அப்போஸ்தலர் 15:29) உண்மையில், “பரலோகராஜ்யத்தினிமித்தம்” திருமணம் செய்துகொள்ளாமலிருக்கும் கிறிஸ்தவர்களை பைபிள் பாராட்டுகிறது. (மத்தேயு 19:12; 1 கொரிந்தியர் 7:38) ஆகவே, பிள்ளை பெறுதல், பிறப்புக் கட்டுப்பாடு போன்ற காரியங்களில் தம்பதிகள் தனித்தனியாக தங்களுடைய சொந்த தீர்மானங்களை எடுக்கவேண்டும். கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் சரீரப்பிரகாரமான, உணர்ச்சிசம்பந்தமான, மற்றும் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறபடியால், அப்படிப்பட்ட கவனத்தைக் கொடுக்கும்படி தங்களுடைய குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்திக்கொள்வது விவேகமானது என்று பொறுப்புள்ள பெற்றோர் உணரலாம். (1 தீமோத்தேயு 5:8) இது எவ்வகையிலும் “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்” என்ற உண்மையை மறைக்கிறதில்லை. (சங்கீதம் 127:4)—ED.

குடிப்பழக்கம் ஏப்ரல் 8 மற்றும் மே 8, 1993-ன் இதழ்களில் வெளியான “குடிப்பழக்கம் என்னை உண்மையிலேயே அதற்கு அடிமையாக்கிவிடுமா?” மற்றும் “குடிப்பழக்கத்தை நான் எப்படி நிறுத்தமுடியும்?” போன்ற மிகச் சிறந்த “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. நான் 48 வயதான, குடிப்பழக்கத்திலிருந்து மீண்டும் பழையநிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கும் ஒரு நபர். இந்தச் சரீரத்தின், மனதின் மற்றும் ஆவியின் ‘நோயின்’ அழிவுக்கேதுவான விளைவுகள் கடுந்துயரை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டேன் என்று உணரத் தொடங்கியபோது, யெகோவாவால் என்னை ஒருபோதும் மன்னிக்கமுடியாததுபோல நான் உணர்ந்தேன். ஆனால் நான் மூப்பர்களிடம் சென்றேன், அவர்களும் அன்புடன்கூடிய உதவியை எனக்களித்தனர். குடிப்பழக்கத்தில் மீண்டும் ஒருமுறை விழுந்தபின், ஒரு குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான சிகிச்சையை மேற்கொண்டேன். இப்போது குடிப்பதற்கான தூண்டுதல் ஏற்படும்போது, நான் ஜெபம் செய்துவிட்டு கடவுளின் புதிய உலகைப்பற்றி தியானிக்கிறேன். மேலும் நான் குடிப்பழக்கத்தை ஆராயும் அல்லது உற்சாகமூட்டும் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் அநேக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! கட்டுரைகளைப் படிக்கிறேன். யெகோவாவின் ஜனங்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப்பற்றிய புரிந்துகொள்ளுதலுக்காகவும் எங்களுக்குச் சிறந்த கட்டுரைகளைக் கொடுப்பதற்காகவும் உங்களுக்கு நன்றி.

C. D., ஐக்கிய மாகாணங்கள்

வீட்டுப்பாடம் “இளைஞர் கேட்கின்றனர் . . . இவ்வளவு அதிக வீட்டுப்பாடத்தைப்பற்றி நான் என்ன செய்யமுடியும்?” (ஜூலை 8, 1993) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிகவும் நன்றி. அளவுக்கதிகமான வீட்டுப்பாடத்தினால் நான் உண்மையிலேயே அழுத்தத்தில் இருந்த சமயத்தில்தான் அந்தக் கட்டுரையைப் படித்தேன். தளர்ந்த ஓய்வு எடுக்கவோ கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தயார் செய்யவோ எனக்கு நேரமே இல்லாமலிருந்தது. இப்போது நான் உங்களுடைய ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகித்துக் கொண்டிருக்கிறேன்.

M. H., ஐக்கிய மாகாணங்கள்

“இவ்வளவு அதிக வீட்டுப்பாடத்தைப்பற்றி நான் என்ன செய்யமுடியும்?” (ஜூலை 8, 1993) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அதில் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை உடனடியாக நான் பொருத்திப் பிரயோகித்தேன், உண்மையிலேயே அவற்றிலிருந்து நான் பயனடைந்திருக்கிறேன். இப்போது ஆவிக்குரிய காரியங்களுக்காக என்னால் அதிக நேரத்தை ஒதுக்கிவைக்க முடிகிறது. மிக்க நன்றி!

M. M., இத்தாலி

ஊனங்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் ஊனமுற்றுத் துன்பப்படவேண்டும்?” (செப்டம்பர் 8, 1993) என்ற கட்டுரை இந்தப் பிரச்னையை நடைமுறையில் கையாண்டது. நான் எனது இரண்டு கால்களிலும் ஊனமுற்றவன். ஜனங்கள் என்னை இரக்கம் காட்டும் வகையில் நோக்கும்போது நான் மிக உணர்ச்சிவேகப்பட்டு உணருகிறேன். என் உணர்ச்சிகளை ஆழமாகப் புண்படுத்துவது என்னவென்றால் யாராவது ஒருவர்—நான் ஏதோ ஒரு பிச்சைக்காரனைப் போல—எனக்கு ஒரு நன்கொடை கொடுப்பதாகும்! எனக்கு ஆறுதலளிப்பது என்னவென்றால், யெகோவா சரீரப்பிரகாரமான நிலைமையைப் பார்ப்பதில்லை, ஆனால் “இருதயத்தைப் பார்க்கிறார்,” என்றறிவதே.—1 சாமுவேல் 16:7.

A. A. A. S., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்