எமது வாசகரிடமிருந்து
விடுமுறை நாட்கள் நவம்பர் 22, 1993, ஆங்கில விழித்தெழு!-வில் வந்த “விடுமுறை நாட்கள்—சில பிள்ளைகள் ஏன் அவற்றைக் கொண்டாடுவதில்லை” என்ற தொடர்கட்டுரையை வாசித்து முடித்ததும் என் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடுவதைக் கண்டேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக வளர்க்கப்பட்டேன். ஆகவே மேற்கோள் காட்டப்பட்டிருந்த அநேகப் பிள்ளைகளைப் போன்ற அதே உணர்வுதான் எனக்கும் இருந்தது. அத்தகைய நேர்த்தியான முன்மாதிரிகளாக இருப்பதற்கு நம் இளைஞரை நான் பாராட்ட விழைகிறேன்! ஒரு பெற்றோராக, அநேக பிள்ளைகள் இவ்வளவு இளம்வயதில் யெகோவாவை சந்தோஷப்படுத்த விரும்புகின்றனர் என்று அறிவதில் நான் உற்சாகமடைகிறேன்.
T. K., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு வயது ஒன்பது. புனிதர்களின் நினைவு நாள் (Halloween) அவ்வளவு வெறுக்கத்தக்கதாகவும் அருவருப்பூட்டுவதாகவும் இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் அதை இழந்துவிட்டதாக உணரவில்லை.
A. C., ஐக்கிய மாகாணங்கள்
நான் ஒரு பிள்ளையாய் இருந்தபோது, கிறிஸ்மஸுக்காகவும் ஈஸ்டருக்காகவும் ஆவலாய் காத்துக்கொண்டிருந்ததுண்டு. ஆனால் இவையெல்லாம் பொய்மத பண்டிகைகள் என்றும், வெறுமனே பாரம்பரியத்தைப் பின்பற்றுவது வீணானது என்றும் இப்போது எனக்குப் புரிகிறது. கொடுக்கப்பட்டிருந்த விளக்கம் முழுமையானதாகவும் விவரமானதாகவும் இருந்தது.
S. L. P., ஜெர்மனி
என்னுடைய 6 வயதிலிருந்தே நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்டேன். இப்போது நான் என் 30-களின் துவக்கத்தில் இருக்கிறேன். என்னுடைய சகோதரனும், சகோதரிகளும், நானும் எதையோ இழந்துவிட்டோம் என்பதாக அநேகர் நினைத்தனர். நாங்கள் வருடம் முழுவதும் பரிசுகளைப் பெற்றோம், மேலும் எங்களுடைய பெற்றோர் தங்களுடைய நேரத்தையும் தங்களையும் எங்களுக்குத் தாராளமாகக் கொடுத்தார்கள் என்று நான் அவர்களுக்கு விளக்கினேன். பல காரியங்களை நாங்கள் ஒன்றாக சேர்ந்து செய்தோம். என்னுடைய அப்பாவும் எங்களுடைய வாராந்தர குடும்ப பைபிள் படிப்பை தவறாது நடத்திவந்தார். அதுதான் தலைசிறந்த ஆவிக்குரிய பரிசு! விடுமுறை நாட்களைக் கொண்டாடாததற்கு நான் ஒருபோதும் கோபித்துக்கொண்டது கிடையாது.
D. Y., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு வயது 14. என்னிடம் சொல்வதைப் புரிந்துகொள்ளும் விவரம் எனக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மற்ற இளைஞர் சத்தியத்திற்காக நிலைநிற்கையை எடுக்கிறார்கள் என்று அறிவது என்னை பலப்படுத்திற்று.
C. A., ஐக்கிய மாகாணங்கள்
விடுமுறை நாட்களைக் கொண்டாடாததால் எதையோ இழப்பதாக நான் உணரவில்லை. என் குடும்பத்தினர் எனக்குத் தேவையானபோது பரிசுகளும் பணமும் கொடுக்கின்றனர். என்னுடைய வயதிலுள்ள [12] மற்ற குழந்தைகள் வைத்து விளையாடி மகிழக்கூடிய அதே விளையாட்டுப் பொருட்களில் சில என்னிடம் உள்ளன.
L. C., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரை என்னுடைய அநேக ஜெபங்களுக்கு ஒரு பதிலாக இருந்தது. ஏன் ஒருவர் தன்னைக் கேலி செய்கிறார் என்று உங்களிடம் கேட்பதைப் போன்று உங்களையே உற்றுநோக்குகிற கண்ணீர் ததும்பும் ஒரு ஜோடி கண்களை உங்கள் முன் நீங்கள் காணும்வரை பிள்ளை வளர்ப்பின் சந்தோஷமும் பயமும் என்ன என்று நீங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்ளுகிறதில்லை. எங்களுடைய மகள் இந்த வருடம் பாலர் பள்ளிக்குப் போகத் தொடங்கியிருக்கிறாள். விடுமுறை நாட்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் வாசித்திருந்தாலும், அவளுக்கு அது இன்னும் கடினமாகவே இருந்து வந்தது. பள்ளியில் அவள் நன்கு உறுதியாகவும் தைரியமாகவும் இருப்பதற்கு நாங்கள் ஒவ்வொரு இரவும் ஜெபம் செய்தோம். அப்போதுதான் அந்த விழித்தெழு! கட்டுரைகள் வெளிவந்தன. ஏழாவது வகுப்பில் படிப்போர் வாசிக்குமளவுக்கு அவளுக்கு வாசிக்கத் தெரியும். ஆகவே நான் செய்யவேண்டியிருந்ததெல்லாம் இதை வாசிப்பதற்காக அவளிடம் கொடுப்பதுதான். மற்ற பிள்ளைகள் சொல்கிறவற்றை வாசித்து, அவர்களுடைய படத்தைப் பார்த்தபோது அவளுடைய இருதயம் திடனடைந்தது. அடுத்த நாளே தன் ஆசிரியைக்கு ஒரு பிரதியை அளித்தாள்.
G. M., ஐக்கிய மாகாணங்கள்
பள்ளியில் உள்ள பிள்ளைகளில் சிலர் நான் விடுமுறை நாட்களைக் கொண்டாடாததால் என்னை கேலிசெய்தனர். ஆகவே நான் அந்தப் பத்திரிகையை நகல்கள் எடுத்து அவற்றில் சிலவற்றை அவர்களுக்குக் கொடுத்தேன். நான் எதையும் இழந்துவிடவில்லை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியுமாதலால், என்னைக் கேலிசெய்வது நிற்கும் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன்.
K. H., ஐக்கிய மாகாணங்கள்
பேருந்து பயணம் நான் தாழ்வாக உணரும்போது, சிலசமயங்களில் நான் தைத்துக்கொண்டே என்னுடைய விழித்தெழு! கேசட்டுகளைப் போட்டுக்கேட்கிறேன். “ஆஸ்திரேலியாவின் மையத்துக்கு ஒரு பேருந்து பயணம்,” (செப்டம்பர் 8, 1993) என்ற கட்டுரை எனக்கு கிளர்ச்சியூட்டுவதைக் கண்டு நான் உண்மையிலேயே வியப்பில் ஆழ்ந்தேன். இந்தப் பிரயாணிகள் அனுபவித்த சந்தோஷத்தையும் கிளர்ச்சியையும் நானும் அங்கிருந்து பகிர்ந்துகொண்டது போல் எனக்குத் தோன்றிற்று. மிக்க நன்றி.
A. W., ஐக்கிய மாகாணங்கள்