உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 8/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • “இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 8/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

பேச்சுத்தொடர்பு “திருமணத்தில் பேச்சுத்தொடர்பு” தொடர் கட்டுரைகளைத் தாங்கிவரும் ஜனவரி 22, 1994 ஆங்கில இதழை நான் இன்று கிடைக்கப்பெற்றேன். நான் இதுவரை வாசித்த தொடர் கட்டுரைகளிலேயே ஒருவேளை இதுதான் மிகச் சிறந்ததாக இருக்கலாம். எனக்கும் என் கணவருக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. எங்களுக்குள் மிகவும் நல்ல உறவு இருந்து வருகிறது, ஆகவே நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இருப்பினும், அவ்வப்போது பேச்சுத்தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பதைப்பற்றி விழித்தெழு! ஆழமான உட்பார்வையைத் தருகிறது. மூன்றாம் முறையாக நான் இந்தக் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்குமுன், காலத்திற்கேற்ற இத்தகைய தகவல்களை வெளியிடுவதற்காக யெகோவாவுக்கும் உங்களுக்கும் நன்றிகூற விழைகிறேன்.

C. M., ஐக்கிய மாகாணங்கள்

என் கணவர் நல்ல ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும் முழுநேர பிரசங்கியாகவும் இருந்து வருகிறார். எனினும், நாங்கள் திருமணம் செய்துகொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே பேச்சுத்தொடர்பில் பிளவு ஏற்பட்டிருக்கிறது; சமாளிக்கமுடியாத நிலைமைகளை எதிர்ப்பட்டிருந்திருக்கிறோம். பிரச்சினையின் காரணங்கள் எவை என்று இந்தக் கட்டுரைகள் ஒளிவுமறைவின்றி காண்பித்தன. அவை எங்களுடைய உறவை முன்னேற்றுவிக்க உதவும் என்று நாங்கள் நிச்சயமாய் இருக்கிறோம்.

C. A., ஜப்பான்

“பேம்மின்” பிரதிபலிப்புகளை வாசிக்கும்போது, என்னுடைய உணர்ச்சிகளை என்னால் இதைவிட அழகாக வருணித்திருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். என் கணவர் மற்றும் “ஜெர்ரியின்” விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறது. வெறுமனே விளைவுகளை மட்டுமே கையாள உதவாமல் அவற்றிற்கான காரணத்தைக் கையாள இந்தக் கட்டுரை உதவிசெய்கிறது. கட்டுரைகள் முக்கியமான இந்தப் பொருளை மனதைக் கவரும்வகையில் அளித்தது என்னைக் கவர்ந்தது.

E. F., இத்தாலி

தற்போது எனக்கு 17 வயதுதான் ஆகிறது; இன்னும் சில வருடங்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசையும் இல்லை. இருந்தபோதிலும் மக்கள் ஏன் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான ரீதியில் நடந்துகொள்கின்றனர் என்பதன்பேரிலான இந்த ஆழ்ந்த கருத்துக்களை நான் பெரிதும் போற்றினேன். அடுத்த சில வருடங்கள் முழுவதும் கிரமமாக வாசிப்பதற்காக இந்தக் கட்டுரையை பத்திரமாக வைத்திருக்க நான் திட்டமிடுகிறேன். நான் திருமணத்திற்குத் தயாராக இருக்கும்போது முக்கியமாக இது எனக்குத் தேவைப்படும்!

N. B., ஐக்கிய மாகாணங்கள்

என்னுடைய அப்பா “ஜெர்ரியை” போலவேதான். ஆனால் அவர் என்னோடு பேசவேபேசாமல் அமைதியாய் இருக்கும்போது அது அவருடைய உரிமை என்று நான் இப்போது புரிந்துகொள்கிறேன். இந்தக் கட்டுரை நல்ல அறிவைத் தருவதாக இருந்தாலும், அவர் என்ன செய்கிறாரோ அது சரி என்று உறுதிப்படுத்திக்கொள்ள அந்தக் கட்டுரையை உபயோகித்துவிடுவாரோ என்று யோசிக்கிறேன்.

A. B., ஐக்கிய மாகாணங்கள்

ஆண்களும் பெண்களும் ஏன் ஒருசில மாதிரி உணருகிறார்கள் அல்லது நடந்துகொள்கிறார்கள் என்பதை வாசகர்களுக்குப் புரிந்துகொள்ள உதவிசெய்வதே இந்தக் கட்டுரைகளின் நோக்கமாக இருந்தது. இருப்பினும், ஆண்களோ பெண்களோ எந்தக் காரணத்திற்காகவாவது பேச்சுத்தொடர்பு கொள்ளாதவர்களாக இருக்கவோ, தகாதமுறையில் நடந்துகொள்ளவோ உரிமையுண்டு என்பதை நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. ‘பிள்ளைகளைக் கோபப்படுத்துவதை’ தவிர்க்கும்படி வேத எழுத்துக்கள் தந்தைமார்களுக்கு அறிவுரை கூறுகின்றன. (கொலோசெயர் 3:21) இது பெற்றோரின் வழிநடத்துதலைப் பிள்ளைகள் கேட்கும்போது, அவர்களுக்குத் தேவைப்படும்போது அநியாயமாக நீண்ட சமயம் பேசாதிருப்பதை இது தடைசெய்கிறது.—ED.

இந்தக் கட்டுரைகளுக்காக பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தயவுசெய்து என்னுடைய பாராட்டுதல்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். “ஜெர்ரி,” “பேம்” இருவரையும் பற்றிய கட்டுரையில் அவர்களுடைய பெயர்களுக்கு பதிலாக நீங்கள் என் மனைவியின் பெயரையும் என்னுடைய பெயரையும் போட்டிருக்கலாம். என் மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்திருந்திருக்க வேண்டுமென்று நான் எவ்வளவு விரும்புகிறேன்! நான் “ஜெர்ரியை” போலவேதான், ஏதோ அவளுடைய தேவைகளை மட்டும் பூர்த்திசெய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய நான் விரும்புவதைப்போலவே செய்துவந்தேன். 20 வருடங்கள் என் மனைவியாக இருந்தவள் என்னை மணவிலக்குச் செய்துவிட்டாள். இந்தக் கட்டுரைகள் ஒருவேளை என்னுடைய மனைவியின் நெஞ்சத்தையும் தொடலாம். அப்படியானால் எங்களுடைய திருமணத்தைத் திரும்பக் கட்டுவதற்கு நாங்கள் முயற்சிக்கலாம்.

J. K., ஐக்கிய மாகாணங்கள்

பைபிள் வினாடிவினா ஜனவரி 8, 1994-ன் ஆங்கில இதழில் “எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?” என்ற பக்கத்தை நான் எவ்வளவு ரசித்தேன். நான் அந்தப் பக்கத்தின் நகல்களை எடுத்து என்னுடைய நண்பர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் ஆர்வம் காட்டும் மற்றவர்களுக்கும் அனுப்பிவைத்தேன். ஒவ்வொரு வசனத்தையும் திறந்து வாசித்து, கேள்விகள் ஏதேனும் எழுமானால் அதை எழுதிவைக்கும்படி நான் உற்சாகப்படுத்தினேன். அத்தகைய ஆட்களோடு பைபிள் கலந்தாலோசிப்பு நடத்துவதற்கான ஒரு மிக நல்ல கருவியாக அது இருக்கிறது. தயவுசெய்து அதுபோல பக்கங்கள் தொடர்ந்து வரும்படி செய்யுங்கள்!

M. S., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்