உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 8/22 பக். 3-4
  • திரும்பவும் கல்வி ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திரும்பவும் கல்வி ஏன்?
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இந்தப் பிரச்சினை?
  • கூடுதலான கல்வி வேண்டுமா, வேண்டாமா?
    விழித்தெழு!—1994
  • ஒரு நோக்கமுடைய கல்வி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பெற்றோர்களே—உங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய எதிர்காலத்தை விரும்புகிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கல்வி கற்பதை பைபிள் ஆட்சேபிக்கிறதா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 8/22 பக். 3-4

திரும்பவும் கல்வி ஏன்?

ராபர்ட் வேலைக்காகத் தேடியலைந்து நொந்துபோனான். மூன்று ஆண்டு காலமாக அதற்காக அவன் தேடியலைந்தான். கடைசியாக, 21-ம் வயதில், கோடைக்கால பொழுதுபோக்குத் திடலில் ஓர் ஆலோசகனாக வேலைக்கு அமர்த்தப்பட்டான். இப்போது ஓரளவு கவலைப்படாமல் இருந்தாலும், ராபர்ட் வேலைக்காக தேடியலைந்து அலுத்துப்போனான். “நம் பெற்றோருக்கு விளங்குவதே கிடையாது. இப்போது வேலை கிடைப்பதென்றால் சும்மாயில்லை,” என்று அவன் சொல்கிறான்.

ராபர்ட்டைப் போலவே, தற்போது கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் எண்ணிலடங்கா வாலிபர், ஒவ்வொரு ஆண்டும் வேலை வேண்டி தங்கள் பெயர்களைக் கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர். திட்டங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையர் தாங்கள் எதிர்பார்த்த வகையான வேலை கிட்டாமற்போகிறதாக காண்கின்றனர்.

ஆகவே, அநேகர் கூடுதலான கல்வியை மேற்கொள்கின்றனர்.a “கல்வியின் பயன்களைக் குறித்து எழுபதுகள் பாதகமான சமிக்கையை அனுப்பியதென்றால், எண்பதுகள், ஒரு டிகிரி வாங்காவிட்டால் அவ்வளவுதான் என்ற வித்தியாசமான சமிக்கையை மக்களுக்கு ஊக்குவித்தன,” என்று செல்வவளம் (Fortune) இதழ் சொல்கிறது.

ஏன் இந்தப் பிரச்சினை?

துணைக் கல்வி ஏன் அடிக்கடி அவசியமாக இருக்கிறது? முதல் காரணம் என்னவென்றால், இன்றுள்ள பெருவாரியான வேலைகள் அதிகப்படியான திறமையைக் கேட்கின்றன. “வங்கியில் வெறுமனே பணத்தை வாங்கும் காசாளரின் வேலையைப் பண இயந்திரம் நீக்கிவிடுகிறது. இப்போது [காசாளர்] பண முதலீட்டுத் துறையில் மூன்று வகையான பண வைப்புகளைக் குறித்து எனக்குத் தெரிவித்து, மற்றதைவிட ஏன் இது அவசியப்படுகிறது என்று எனக்கு விளக்கவேண்டும்,” என்று ஐ.மா. தொழிலாளர் துறை சார்பாளர் சொல்கிறார். வீட்டுக் கல்விக்கும் தொழில்துறை குழுவிற்கும் தலைவரான வில்லியம் D. ஃபோர்ட் சொல்கிறார்: “சுலபமான வேலைகள் இல்லாமற்போய்விட்டன.”

இரண்டாம் காரணம் என்னவென்றால், கல்விநிலையங்கள் மாணாக்கர்களுக்கு போதுமான கல்வியை வழங்குவது கிடையாது என்று சிலர் நினைக்கின்றனர். போதைப்பொருள் தகாப்பிரயோகம், எய்ட்ஸ், கருத்தடை போன்ற பிரச்சினைகளுக்குக் கவனம் கொடுக்கப்பதானது, வாசிப்பது, எழுதுவது, கணக்குப்போடுவது ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதைவிட மிக முக்கியமாகிவிடுகின்றன என்று அவர்கள் சொல்கின்றனர். “பள்ளியின் பாகமாக கருதப்பட்டிராத பிரச்சினைகளைக் கையாளும்” பாரத்தையுடைய “சமூக சேவை ஸ்தாபனமாக” கல்லூரி அமைப்பு மாறிவிட்டிருப்பது போல் தெரிகிறது என்று 27 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரியும் டாக்டர் ராபர்ட் ஆப்பில்டன் வருத்தத்தோடு சொல்கிறார்.

சில கல்வி நிலையங்கள் மாணாக்கர்களுக்கு தேவையான திறமைகளைக் கற்றுக்கொடுக்கத் தவறுவதால் உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்த அநேகர் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். “வேலை செய்ய அவர்கள் கற்றுக்கொடுக்கப்படவில்லை. வாலிபரைப் பொருத்ததில் அவர்கள் மிக நன்றாக எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று வேலை அமர்த்துநர்கள் என்னிடம் பெரும்பாலும் சொல்கின்றனர். அவர்களால் வேலைக்கான மனுவைப் பூர்த்திசெய்ய முடியவில்லை,” என்று ஃப்ளாரிடா வேலைவாய்ப்பு ஏஜென்சி அலுவலகத்தில் மேலாளராயிருக்கும் ஜோசஃப் W. ஷ்ரோடர் சொல்கிறார்.

அநேக நாடுகளில் பெருவாரியான கல்லூரி பட்டதாரிகள் வேலை வாய்ப்புக் கூடத்தில் திரண்டிருப்பது துணைக் கல்வி தேவையாயிருப்பதற்கான மூன்றாம் காரணமாகும். “திறமைகளுக்கான தேவையைக் காட்டிலும் கல்லூரி பட்டதாரிகள் மிஞ்சிவிடுகிறார்கள்,” என்று தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. “இப்படி அளவுக்கு அதிகமான ஆட்கள் இருப்பதால் வேலை அமர்த்துநர்கள் உயர்நிலைப் பள்ளி முடித்தவர்களுக்கு வேலை கொடுக்கத் தயங்குகின்றனர்,” என்று அந்த அறிக்கை பின்னும் சொல்கிறது.

போதுமான அளவு தங்களைக் கவனித்துப் பராமரிப்பதற்கான வேலைக்குத் தகுதிபெற, அநேகர் கல்வி கற்க திரும்புகின்றனர். ஐக்கிய மாகாணங்களில், 59 சதவீதத்தினர் உயர்நிலைப் பள்ளிப்படிப்புக்கு மேல் தங்கள் கல்வியைத் தொடருகின்றனர். பல பத்தாண்டுகளாகத் தேங்கியிருந்த 50 சதவீத எண்ணிக்கையை விஞ்சக்கூடிய குறிப்பிடத்தக்க அதிகரிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.

வேறு நாடுகளிலும் இப்படிப்பட்ட போக்குகள் கவனிக்கப்படுகின்றன. உதாரணமாக, 1960-கள் முதற்கொண்டு, பிரிட்டனில் கட்டாயப் படிப்புக்கு அப்பால் கல்வியைத் தொடரும் மாணாக்கர்களின் வீதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கவனிக்கப்பட்டிருக்கிறது. சமீப ஆண்டில், ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கும் 85 சதவீதத்தினர், வித்தியாசப்பட்ட பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர விண்ணப்பித்திருக்கின்றனர். ஜப்பானிலுள்ள சுமார் 95 சதவீத மாணாக்கர்கள் கூடுதலான மூன்றாண்டு படிப்புக்காக தேர்வுகளை எழுதுகிறார்கள்; இவ்வாறு வேலைக்கோ கல்லூரிக்கோ அவர்கள் தயாராகிறார்கள்.

ஆனாலும், துணைக் கல்வி, ஆசைப்படுகிற பயன்களை எப்போதும் வழங்குவதில்லை. அதன் பலாபலன்கள் யாவை?

[அடிக்குறிப்புகள்]

a படிப்பு நிலைகளின் பெயர்கள் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமாயிருக்கின்றன. இக்கட்டுரைகளில் “உயர்நிலைப் பள்ளி” என்பது கட்டாயமாக படிக்கவேண்டிய முழுக் கல்வியைக் குறிக்கிறது. “கல்லூரி,” “பல்கலைக்கழகம்,” “தொழிற்நுட்ப கல்வி,” “தொழிற்கல்வி” ஆகியவை சட்டம் தேவைப்படுத்தாத துணைக் கல்வியின் வகைகளாக இருந்தபோதிலும், ஒருவர் இஷ்டப்பட்டு எடுத்துப் படிக்கும் படிப்புகளைக் குறிக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்