உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 9/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • வானிலைக்கு என்ன ஆயிற்று?
    விழித்தெழு!—2003
  • வன்முறையான டிவி கார்ட்டூன்கள் தீங்கானவையா?
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 9/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

துக்கம் “பைபிளின் கருத்து: உங்கள் துக்கத்திற்கு உதவி” (மார்ச் 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. கிறிஸ்தவ சபையில் மூப்பராக இருந்த என் கணவர் சமீபத்தில் ஒரு விபத்தில் கொல்லப்பட்டார். எங்களுடைய மூன்று பிள்ளைகளும் நானும் அனுபவித்த இழப்பை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அந்தக் கட்டுரையை வாசித்து, நாங்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகள் இயல்பானவையே என்று அறிவது என்னே ஓர் ஆசீர்வாதம்!

N. S., ஐக்கிய மாகாணங்கள்

மூன்று வருடங்களுக்கு முன் என் தாயாரும், மூன்று மாதங்களுக்கு முன் என் தந்தையும் மரணமடைந்தனர். உயிர்த்தெழுதல் நம்பிக்கை நிச்சயமானதாக இருந்தாலும், மரணத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரிவு இன்னும் வேதனையாக இருக்கிறது. எப்போதையும்விட அதிகமாக ராஜ்ய நம்பிக்கையில் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் தொடர்ந்து கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்யவும் உங்கள் கட்டுரை என்னைத் தூண்டுவித்திருக்கிறது.

K. S., ஜப்பான்

நான் ஒரு மாதத்திற்கு முன் என் தந்தையை இழந்தேன். ஒரு மகளின் துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உங்கள் கட்டுரை மிக சமயோசிதமானதாக இருந்து, நான் உணரும் வேதனையின் மத்தியிலும் சோர்வால் மூழ்கடிக்கப்படாதபடி காத்துக்கொள்ள உதவியிருக்கிறது.

A. P. L., பிரேஸில்

கார்ட்டூன்கள் “வன்முறையான டிவி கார்ட்டூன்கள் தீங்கானவையா?” (மார்ச் 8, 1994) என்ற கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு எட்டு வயது; நான் இந்தக் கார்ட்டூன்களைப் பார்ப்பதுண்டு. ஆனால் உங்கள் பத்திரிகையைப் படித்தபோது, அப்படிப்பட்ட கார்ட்டூன்கள் நல்லவை அல்ல என்பதை அறிந்துகொண்டேன்; இப்போது இனிமேலும் நான் அவற்றைப் பார்ப்பதில்லை.

L. T., இத்தாலி

புது யுகம் “புது யுகம்—அது வருமா?” என்பதைப் பற்றிய மார்ச் 8, 1994, விழித்தெழு!-வை (ஆங்கிலம்) இப்போதுதான் வாசித்து முடித்தேன். பிற்பட்ட 60-கள் மற்றும் ஆரம்ப 70-களின் தியான குழுக்கள், சுய முன்னேற்றுவிப்பு, மற்றும் மன ஆற்றல் ஆய்வியல் ஆகியவற்றில் நான் ஈடுபட்டிருந்தேன். எதையோ தேடிக்கொண்டிருந்தேன் ஆனால் அதைக் கண்டுபிடிக்காமல் இருந்தேன். பின்னர் என் மனைவி யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொண்டாள்; ஒருமுறை அந்தப் படிப்பைக் கவனித்துக்கேட்டேன். சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! முழுக்காட்டுதல் பெற்று, இப்போது இங்கு கானாவில் ஒரு மிஷனரியாகச் சேவைசெய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். இந்தப் பத்திரிகைக்காக நன்றி. இதேபோன்று எதையோ தேடிக்கொண்டிருக்கும் மற்றுமநேகர் இருக்கிறார்கள்.

D. D., கானா

புது யுக இயக்கம் என்பது ஒரு விரிவான பொருளாக இருந்தாலும், அவ்வளவு குறைவான வார்த்தைகளால் அக்கறையூட்டும் விதத்தில் அதன் பல்வேறு அம்சங்களை நீங்கள் சிந்தித்துவிட்டீர்கள்! அவசியமாக தங்களில்தானே வேதப்பூர்வமற்றதாக இல்லாத உடல்நலம், இசை, சுற்றுச்சூழல் அக்கறைகள் போன்ற புது யுக இயக்கத்துடன் சம்பந்தமுடைய அந்தக் காரியங்களை நீங்கள் எப்படி பிரித்தெடுத்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். அந்தத் தொடர், புண்படுத்தாதவிதத்திலும், அதேசமயத்தில் மக்கள் கேட்கவேண்டிய தெளிவான சத்தியங்களைச் சொல்வதிலிருந்து தவறாமலும் இருந்தது. என்னுடைய சகோதரி புது யுக தத்துவங்களில் அக்கறையுள்ளவள்; இந்த வெளியீட்டின் ஒரு பிரதியை நான் அவளுக்கு அனுப்பி வைப்பேன்.

R. H., ஐக்கிய மாகாணங்கள்

பூமி உஷ்ணமடைதல் “நோயற்ற உலகம்—சாத்தியமா?” (மார்ச் 8, 1994) என்ற தொடரின் சம்பந்தமாக அமைந்த “பூமி உஷ்ணமடைதலும் மலேரியாவும்,” என்ற பெட்டிக்குப் பதிலளிக்க நான் எழுதுகிறேன். நான் சூழலியல் துறையில் பணிபுரியும் ஒரு அறிவியலாளராக இருக்கிறேன்; பூமி உஷ்ணமடைதல் பிரச்சினையைக் குறித்து எவ்வித நம்பிக்கையோடும் ஒரு நிலைநிற்கையை எடுப்பது அதிகப்படியாகக் கடினமாகிக்கொண்டே வருகிறது. அதிகரிக்கும் உஷ்ணமானது மொத்தமாக விலங்கின சமுதாயங்களில் ஒரு பாதிப்பைக் கொண்டிருக்கும்படி எதிர்பார்க்கப்படலாம் என்பது உண்மையே. ஆனால் நிஜமாகவே, பூமி உஷ்ணமடைந்து வருகிறதா இல்லையா என்பதைக் குறித்து நிச்சயமாக இருப்பது அதிக கடினமாகவே இருக்கிறது. செய்யப்பட்டிருக்கும் ஆய்வு அதிக சந்தேகத்திற்குரிய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே நிற்கிறது. காற்றுமண்டலத்தில் கரியமில வாயுவின் அதிகரிக்கும் அளவுகள் உண்மையில் பூமியின் பரப்பை குளிரடைய செய்யும் என்றுகூட சில அறிவியலாளர்கள் நம்புகின்றனர்!

K. O., இங்கிலாந்து

பூமி உஷ்ணமடைதல் கோட்பாடு, எமது செப்டம்பர் 8, 1989, (ஆங்கிலம்) பிரதியில் அதிகப்படியாக கலந்தாலோசிக்கப்பட்டது; அது ஓரளவிற்கு முரண்பாடுள்ள பொருளே என்பது உண்மைதான். ஆகவே அந்தச் சுருக்கமான எமது பகுதி, அந்தக் கோட்பாட்டை ஆதரிப்பதற்காக அல்ல, ஆனால் உண்மையிலேயே பூமி உஷ்ணமடைந்து கொண்டு வருகிறதென்றால் என்ன சம்பவிக்கக்கூடும் என்பதற்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாகவே இருந்தது.—ED.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்