சாத்தான் வழிபாடு—எழுச்சியும் வீழ்ச்சியும்
விட்டுவிட்டு எரியும் மெழுகுவர்த்திகள் சுவர்களில் அச்சுறுத்தும் நிழல்களை உருவாக்கும்போது, பலிபீடத்தின் மீது கட்டி வைக்கப்பட்டுள்ள பலியாட்களுக்காக மந்திரங்களை ஓதி, இருட்டான நிலவறைகளில் கறுப்புக் கச்சைகளை அணிந்த பூசாரிகள் சாத்தானிய சடங்காச்சாரங்களை நடத்த, அவர்களுடைய கடவுளாகிய சாத்தானின் வணக்கம் தொடர்கிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டதோடு கொஞ்சம் தொடர்புடைய ஏதோவொரு ஒரு புதிரைப் பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்ட ரகசிய அறிவால் ஒன்றுசேர்க்கப்பட்டவர்களாய், இந்த மாயமந்திரப் பயணத்தில் பங்கெடுக்கும் இந்த இளைஞர், அந்தச் சூழலை நிரப்பும் உள்ளக்கிளர்ச்சியில் இன்பம் அடைகின்றனர். அவர்களுக்கு மட்டுமே உரியதாகக் கொண்டிருக்கிற ஒரு இயல்புக்கு மாறான உணர்வோடு அந்தப் பீடத்தை நெருங்குகிறார்கள்.
இது கேடுவிளைவிக்காத, கடந்துபோகிற ஒரு கொள்கைப் பாணியா? அல்லது இன்றைய சமுதாயத்தை ஊடுருவும் பேய்த்தனமான தீமையா?
சாத்தானிய மதப்பழமைவாத அமைப்பினரின் கொடூரமான செயல்களைப் பற்றி செய்தித்தாள்கள், பத்திரிகைள் மற்றும் புத்தகங்களில் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. வன்முறையான சாத்தானிய தொகுதிகளின் பரந்தளவிலான செயல்களைப் பற்றிய விவரங்கள், தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவிலுள்ள சிறிய மற்றும் பெரிய நகரங்களிலும் போலீஸாருக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகி இருக்கிறது.
இன்றைய இளைஞருக்குச் சாத்தான் வழிபாடு ஒரு விசேஷித்த கவர்ச்சியை உடையதாக இருக்கிறது. ஜூன் 1993 டீன் பத்திரிகை அறிக்கை செய்தபடி, சர்ச் ஆஃப் சேட்டன் என்பதைத் தோற்றுவித்தவர் அதற்கான காரணத்தை விவரிக்கிறார்: “அங்கத்தினர்கள் தங்களுடைய இயற்கையான தூண்டுதல்களை அடக்கிவைக்கும்படி கட்டளையிடுவதற்குப் பதிலாக, அவர்கள் அவற்றைப் பின்பற்றும்படியாக நாங்கள் கற்பிக்கிறோம். இது உடல்சம்பந்தமான இச்சையையும், பழிவாங்குவதற்கான ஆசையையும், பொருள்சம்பந்தமான ஆஸ்திகளுக்கான தூண்டுதலையும் உட்படுத்துகிறது.”
பேய்த்தனமாக ஏவப்பட்ட இந்தத் தத்துவத்தால் சாத்தான் எவ்வளவு திருப்தியடைந்திருக்க வேண்டும், ஏனென்றால் அது கடவுளால் ஏவப்பட்ட கிறிஸ்தவ நியமங்களுக்கு எதிராகச் செல்கிறது!
சாத்தான் வழிபாடு அதிகரித்து வருகிறது. அது ஒரு வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக இருக்கிறது, ஆனால் அதன் மறைவு அண்மையில் சம்பவிக்கும். அதன் கடவுள் மரண தீர்ப்பின்கீழ் இருக்கிறான். அவ்வாறே சாத்தானின் உலகமும் அதன் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்; ஏனென்றால் ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19; ரோமர் 6:16) சாத்தானின் வணக்கத்தாருக்கும், அறிந்தோ அறியாமலோ சாத்தானுடைய நோக்கங்களைச் சேவிக்கும் மற்ற அனைவருக்கும் யெகோவாவின் செய்தி என்னவென்றால், “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.”—ரோமர் 16:20.
அப்போது துன்பப்படும் மனிதகுலத்திற்கு ‘சமாதானத்தின் தேவனிடமிருந்து’ என்ன எதிர்காலம் வரும்? பின்வரும் மூன்று கட்டுரைகளும், சாத்தான் வழிபாட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், அதை மாற்றீடு செய்யும் பூமியின் நிலைமைகளையும் பற்றி தெரிவிக்கும்.