உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 10/22 பக். 31
  • வெப்ப-நீரில் வாழும் கடல்நாயா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெப்ப-நீரில் வாழும் கடல்நாயா?
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • மத்தியதரைக் கடல் சீல்கள் பிழைக்குமா?
    விழித்தெழு!—2001
  • முத்திரை மோதிரம்
    சொல் பட்டியல்
  • மத்தியதரைக் கடல்—அடைபட்ட கடலின் ரணங்கள்
    விழித்தெழு!—1999
  • வாசகர் கேட்கும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 10/22 பக். 31

வெப்ப-நீரில் வாழும் கடல்நாயா?

கடல்நாய்கள் பொதுவாக ஆர்ட்டிக் அல்லது அன்டார்டிக்காவின் பனிக்கட்டி நிறைந்த பெரும் வெள்ளைப் பரப்புகளில் இருப்பதாக காண்பிக்கப்படுகின்றன. ஆனால் மித உஷ்ண மண்டலத்தில், வெறிச்சோடிக் கிடக்கும் கடற்கரை மணலின் மீது வெயிலில் படுத்துக் கிடக்கும் சில கடல்நாய்கள் செழிப்பாக இருக்கமுடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நடுநிலக் கடலின் சந்நியாசி கடல்நாயைச் சந்தியுங்கள். அதன் நீளம் 12 அடி வரை இருக்கும், இந்த வெப்ப-நீர் கடல்நாய் குட்டையான, அடர்த்தியான முடியையும், ஆங்காங்கே கருமை நிறத்தையும், அதோடுகூட வெள்ளை நிற வயிறு, மார்புகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இந்த விசேஷித்த நிறங்கள், சில மத அங்கத்தினர்களின் உடைக்கு ஒத்தாற் போல் இருப்பது, அதன் பெயரை ஒருவேளை விளக்கும்.

பைபிளின் அநேக பகுதிகளில் டாக்காஷ் (எபிரெயுவில்) என்றழைக்கப்படும் ஒரு தோல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பரிசுத்த கூடாரத்தில் இருந்த பலிபீடத்தையும் பாத்திரங்களையும் மூடியது. (யாத்திராகமம் 25:5; 26:14; எண்ணாகமம் 4:8) டாக்காஷ் என்பது கடல்நாய்களின் தோலைக் குறிக்கிறது என்று சில வல்லுநர்கள் சொல்கின்றனர். நடுநிலக் கடலின் சந்நியாசி கடல்நாயின் தோலாக அது இருக்கக்கூடுமா? பண்டைய நடுநிலக்கடலின் தண்ணீர்களில் இம்மிருகம் வாழ்ந்தது, இந்த எண்ணத்தை உறுதியாக்குகிறது.

சந்நியாசி கடல்நாய்கள் விசேஷித்த வல்லமைகளைக் கொண்டிருந்ததாக பண்டைய நாடோடிக் கதைகள் கூறுகின்றன. அதன் தோல், பண்படுத்தப்பட்ட நிலங்களின் மீது கல்மழை பொழிவதைத் தடுத்தது என்றும் இடி மின்னலை விலகச் செய்தது என்றும் சிலர் நம்பினர். கடல்நாய்களின் முடிகள் விறைப்பாக நின்றாலோ அல்லது தட்டையாக படுத்துக்கொண்டிருந்தாலோ, இடியுடன்கூடிய புயல் ஆரம்பமாகக் போகிறது அல்லது விரைவில் முடிவடையப் போகிறது என்பதைக் குறிப்பிடுவதாக சொல்லப்பட்டது.

சந்நியாசி கடல்நாய் அப்படிப்பட்ட வல்லமைகளைக் கொண்டிருந்ததாக நம்பப்பட்டதால், இரக்கமற்ற வேட்டைக்காரர்கள் அது முழுவதுமே இல்லாமற் போகும் அளவுக்கு செய்தனர். என்றபோதிலும், சமீபத்தில், கிழக்கு-மத்திப சார்டினியாவைச் சுற்றியுள்ள கடலில் அது காணப்பட்டது. கடவுளின் புதிய உலகில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஒத்திசைவு மறுபடியும் நிலைநாட்டப்படும் போது, நடுநிலக் கடலின் சந்நியாசி கடல்நாய் நிசப்தமான, அமைதியான கடற்கரைகளை மறுபடியும் கொண்டிருந்து, பேராசைமிக்க மனிதர்களின் அச்சுறுத்தலின்றி வெயிலில் படுத்துக் கிடக்கும்.—ஏசாயா 11:6-9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்