உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தண்ணீர் நெருக்கடி
  • அழிந்துபோகும் ஒரு ஜப்பானிய பாரம்பரியமா?
  • உடற்பயிற்சிகளைக் குறித்து எச்சரிப்பு
  • சீனாவில் ஏன் வெகுசில கார்களே உள்ளன
  • கேமராக்கள் வித்தியாசத்தை உண்டுபண்ணுகின்றன
  • 1914-ன் சந்ததி
  • பூச்சிகளைப் பாதுகாத்து வையுங்கள்
  • மறைந்து போகும் மொழிகள்
  • பாம்பின் பிளவுபட்ட நாவு
  • நோயாளிகள் கொடுக்கும் பாலுறவு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்
  • தீப்புண்படும் விழி வெண்படலங்கள்
  • பள்ளிவளாகக் குற்றச்செயல்கள்
  • பாலினத் தொல்லை—ஓர் உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—1996
  • செக்ஸ் தொல்லைகளை சமாளிப்பது எப்படி?
    விழித்தெழு!—2000
  • பாலினத் தொல்லை—உங்களைப் பாதுகாப்பது எப்படி
    விழித்தெழு!—1996
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

தண்ணீர் நெருக்கடி

ஆண்டு 2000-க்குள் பூமிமுழுவதும் சுமார் 30 நாடுகளில் அதிகக் கடினமான தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் என்று ஐக்கியநாட்டு சங்கத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) சமீபத்திய அறிக்கை சொல்கிறது. குறைவாக உள்ள தண்ணீர் வளஆதாரங்களுக்கு போட்டி அதிகரித்துக்கொண்டே செல்வதால், கோடிக்கணக்கான மக்கள் உயிர்பிழைத்து வாழ்வதற்கு தேவையான மிகக்குறைவான தண்ணீரும்கூட பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கூறுகிறது. வட மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா, சமீபத்திய கிழக்கு, ஹங்கேரி ஆகிய தேசங்களிலுள்ள ஜனத்தொகையே மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. பூமியின் சுத்தமான நீரில் சுமார் 70 சதவீதத்தை (வளரும் நாடுகளில் 90 சதவீதத்தை) வேளாண்மை, நீர்ப்பாசனத்துக்காக உபயோகிக்கிறது என்று பாரிஸ் செய்தித்தாள் லி மான்ட்-ல் வெளியான அறிக்கை சொல்கிறது. திறமையற்ற நீர்ப்பாசன முறைகளின் காரணமாக இந்தத் தண்ணீர் 60 சதவீதம் வரை வீணாக்கப்படுகிறது என்று FAO மதிப்பிடுகிறது.

அழிந்துபோகும் ஒரு ஜப்பானிய பாரம்பரியமா?

ஜப்பானிய மக்கள் வயதானவர்களுக்கு பாரம்பரியமாக காண்பித்து வந்த ஆழ்ந்த மரியாதை குறைந்துகொண்டே போவதாக தெரிகிறது. சரீர சம்பந்தமாகவும் மன சம்பந்தமாகவும் வயதானவர்களைத் தவறாக நடத்துவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வல்லுநரின்படி, அநேக நவீன-நாளைய குடும்பங்கள் தங்கள் வயதான உறவினர்களை விருப்பமின்றி கவனித்துக்கொள்வதாகவும், அதன் காரணமாக வரும் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும்கூட மினெச்சி டெய்லி நியூஸ் விளக்குகிறது. அவர்கள் அவ்வப்போது அவர்களை வன்முறையாக நடத்தி கவனியாமல் விட்டுவிடுகின்றனர். மினெச்சி டெய்லி நியூஸ்-ன்படி, ஒரு ஆள் “தன் 75 வயது தகப்பன் ஓய்வுஊதிய பணத்தைக் கொடுக்க மறுத்தபோதெல்லாம் அவருக்கு காயம் ஏற்படும் வரை அடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்.” மற்றொரு உதாரணத்தில், முதுமையினால் தளர்ச்சியுற்றிருந்த தாயின் கைகளையும் கால்களையும் கட்டி, பின்னர் ஓர் அறையில் வைத்துப் பூட்டி அவர்கள் வாயில் கந்தைத் துணிகளை அடைத்து விட்டிருக்கிறார்கள்.

உடற்பயிற்சிகளைக் குறித்து எச்சரிப்பு

“பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளை மிகவும் தீவிரமாக நாடுவது” உள்-காதுகளில் காயம் ஏற்படுவதில் விளைவடையலாம் என்று லண்டனில் உள்ள தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அதிக சுறுசுறுப்புடன் குதிப்பதில் அநேக பயிற்சி நேரங்களைக் கொண்டிருப்பது, உள்-காதில் உள்ள மென்மையான சிறு துகள்களில் நிரந்தரமாக காயம் ஏற்படுத்திவிடக்கூடும். சாதாரணமாக ஏற்படும் அறிகுறிகள், தலைச்சுற்று, சமநிலை இழத்தல், பிரயாணம் செய்கையில் ஏற்படும் வியாதி, காதுகளில் ஒலி கேட்பது போன்றவை. பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் உடற்பயிற்சி வகுப்புகளை ஒரு நாளுக்கு இருமுறை நடத்தும் பெண்களில் 83 சதவீதம் உயர்வான அலை அதிர்வெண்ணுள்ள ஒலிகளைக் கேட்பதில் பிரச்சினைகளைக் கொண்டிருந்தனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிக்காட்டியது. கவலைக்குரிய மற்றொரு காரணம், சில பெண்கள் “உடற்பயிற்சி பசி” உடையவர்களாய், அளவுக்குமீறி சுறுசுறுப்பாய் உடற்பயிற்சி செய்வதற்கு அடிமைகளாகி விடுகின்றனர். அதற்கு அடிமையாகிறவர்கள் “முழுவதுமாக சோர்வடைந்து விடுகின்றனர். அழுத்தத்தின் காரணமாக எலும்பு முறிவு, தசைகளில் தளர்வு ஏற்படுகிறது, மிகவும் தீவிரமான வகுப்புகளில் பங்குகொண்டால் சமநிலை இழக்கும் பிரச்சினைகள் உண்டாகின்றன,” என்று தி டைம்ஸ் குறிப்பிடுகிறது.

சீனாவில் ஏன் வெகுசில கார்களே உள்ளன

நூறு கோடிக்கும் மேலான ஜனத்தொகையுடைய சீனாவில், தனிப்பட்டவர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கும் கார்கள் 50,000 மட்டுமே. என்றபோதிலும், சைனா டுடே-வின்படி, இந்த எண்ணிக்கை “பேரளவான உயர்வை” பிரதிநிதித்துவம் செய்கிறது. 1983-ல் அந்தத் தேசத்தில் தனிப்பட்டவர்களின் கார்கள் 60 மட்டுமே இருந்தன! சொந்தமாக காரை உடையவர்களின் எண்ணிக்கை சமீப எதிர்காலத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், கார் வாங்கும் எண்ணம் உடையவர்கள் செலவுகளைக் குறித்து சிந்திக்க வேண்டும். சீனாவில் ஒரு காரின் விலையை அதிகரிப்பதற்கு 40 வித்தியாசமான வரிகள் உள்ளன. உதாரணமாக, “சீனாவில் ஒரு கார் 3,00,000 யுஅன் (சுமார் 37,000 ஐ.மா. டாலர்கள்) என்ற விலையில் விற்கப்படலாம். ஆனால் மற்ற தேசங்களில் 10,000 ஐ.மா. டாலர்களைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்காது.” ஆனால் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ள ஏற்படும் செலவைப் பற்றியென்ன? ஓர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி, “நடுத்தரமான வருமானம் பெறுபவரின் வருடாந்தர வருமானத்தின் இரு மடங்கைக் கேட்கிறது,” என்று சைனா டுடே குறிப்பிடுகிறது.

கேமராக்கள் வித்தியாசத்தை உண்டுபண்ணுகின்றன

வேகமாகச் செல்லும் வாகனங்களின் லைசன்ஸ் பதிவுத்தட்டுகளைப் புகைப்படம் எடுப்பதற்கு கேமராக்கள் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில், வேகக் கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள லண்டன் போக்குவரத்துத் துறை அறிக்கைச் செய்கிறது. இந்த கேமராக்கள் அதிகாரிகளுக்குப் புகைப்படங்களை அளிக்கின்றன. வேகமாகச் செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. சிவப்பு நிற போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்களை நிறுத்தாதவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு அத்தாட்சியையும் கூட அவர்கள் கொடுக்கலாம். அந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட சமயத்திலிருந்து, “சாலைகளில் அதிக மோசமாக காயம்பட்டவர்களின் எண்ணிக்கை முன்பிருந்ததை விட, மூன்றில் ஒரு பாகம் குறைந்துள்ளது,” என்று நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. கேமராக்கள் வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து, சட்டப்பூர்வமான அதிகபட்ச வேகத்துக்கு மேல் ஒரு மணிநேரத்துக்கு 32 கிலோமீட்டர் சென்ற வாகனங்களின் சராசரி எண்ணிக்கை ஒரு நாளுக்கு 1000-லிருந்து 30-ஆக குறைந்துள்ளது. “போக்குவரத்து சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறுவதற்கு முன்னால் சென்ற ஓட்டுநர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது. பாதைகள் குறுக்கிடும் இடங்களில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது,” என்று நியூ சைன்டிஸ்ட் குறிப்பிடுகிறது.

1914-ன் சந்ததி

ஐக்கிய மாகாணங்களில் முதல் உலகப்போரில் பங்குபெற்ற 47,43,826 ஆண்கள் மற்றும் பெண்களில் 2,72,000 பேர் மட்டுமே 1984-ல் உயிரோடிருந்தனர். (விழித்தெழு!, ஏப்ரல் 8, 1988) இன்று அந்த எண்ணிக்கை 30,000-ஆக குறைந்துள்ளது. அவர்களுடைய சராசரி வயது 95 என்று ஓய்வுபெற்ற படைவீரர்களின் துறை சொல்கிறது. என்றபோதிலும், உலகமுழுவதிலும் 1992-ல், 1914-ல் பிறந்த சந்ததியினர் அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்—6,14,86,000 நபர்கள் இன்னும் உயிரோடிருந்தனர்.

பூச்சிகளைப் பாதுகாத்து வையுங்கள்

பூச்சிகளும் மற்ற முதுகெலும்பற்ற விலங்குகளும் இல்லாவிடில், “பூகோள உயிரின வாழ்க்கைச்சூழல் அமைப்பு அழிந்து போய்விடும். மனிதர்களும் மற்ற முதுகெலும்புள்ளவைகளும் வெகு சில மாதங்கள் மட்டுமே நீடித்திருக்கும். இந்தக் கோளம், பெரும்பாலும் பாசி மற்றும் காளான்களுக்கு உரிய இடமாகிவிடும்,” என்று தி நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு டைம்ஸ் கட்டுரை எச்சரிக்கிறது: திமிங்கலங்கள், புலிகள், ஆபத்திலிருக்கும் வேறு உயிரின வகைகளைப் பற்றி அதிக பிரபலமாக இருக்கும் கவலைகளில் முதுகெலும்பற்ற விலங்குகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தச் சிறிய உயிரினங்கள், முக்கியமான உயிரின வாழ்க்கை வழிமுறைகள் பலவற்றுக்கு காரணமாய் இருக்கின்றன. அழுகிப்போகும் பொருட்களை உண்ணுதல், செடிகளுக்கு பூந்தாது இடுதல், விதைகளை பரவச்செய்தல், கழிவுப்பொருட்களை நீக்குதல் போன்றவை இதில் அடங்கும். ஐக்கிய மாகாணங்களில் மட்டும், மனிதர்கள் சுமார் 13 கோடி டன்கள் எடையுள்ள கழிவுப்பொருட்களை உண்டாக்குகின்றனர். கால்நடைகள் இன்னும் கூடுதலாக 1,200 கோடி டன்கள் உண்டாக்குகின்றன. ஒரு வல்லுநரின்படி, இந்த கழிவுபொருட்களில் 99 சதவீதத்தை “முதுகெலும்பற்ற விலங்குகள் அழுகச் செய்கின்றன.”

மறைந்து போகும் மொழிகள்

பல்வேறு மொழிவாரியாக பிரிக்கப்பட்டிருக்கும் பாப்புவா நியூ கினீ தேசத்தில், அநேக மொழிகள் மறைந்துபோகும் அபாயத்தில் உள்ளன. கடந்த 40 வருடங்களில் ஏற்கெனவே ஐந்து மொழிகள் அழிந்துபோய் விட்டிருக்கின்றன. அதன் காரணமாக “அத்தேசத்தில் வெறும் 867 மொழிகள் மட்டுமே உள்ளன,” என்று பாப்புவா நியூ கினீயின் போஸ்ட் கூரியர் சொல்கிறது. “தேசத்தின் மத்தியில் காடுகளடங்கிய மலைப்பகுதிகளின் திணைநிலங்களில் அநேக மலைவாழ் பழங்குடி மக்கள் பல்வேறு இடங்களில் வாழ்வதுதான் இத்தனை மொழிகள் இருப்பதற்குக் காரணம்,” என்று போஸ்ட் கூரியர் விளக்குகிறது. “22 மொழிகளை 100 பேருக்கும் குறைவானவர்கள் பேசுகின்றனர், ஏழு மொழிகளை 20 பேருக்கும் குறைவானவர்கள் பேசுகின்றனர், 10 மொழிகளை 10 பேருக்கும் குறைவானவர்கள் பேசுகின்றனர்,” என்று அச்செய்தித்தாள் கூடுதலாக சொல்கிறது. மறைந்துபோகும் ஆபத்தில் உள்ள மொழிகளில் ஒன்று யுருவா, அதை ஐந்து பேர் பேசுகின்றனர். பினா, யோபா என்ற மொழிகள் ஒவ்வொன்றையும் இரண்டு பேர்தான் பேசுகின்றனர்.

பாம்பின் பிளவுபட்ட நாவு

ஒரு பிளவுபட்ட நாவு பாம்புக்கு எவ்வாறு உதவுகிறது? ஒலி வரும் திசையைக் கண்டுபிடிப்பதற்கு நம் இரண்டு காதுகளும் ஒன்றுசேர்ந்து வேலை செய்வதுபோல, நாவு மணத்தைக் கொண்டு தடம் தேடிச்செல்ல உதவுகிறது என்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூன்-ன் அறிக்கை ஒன்று சொல்கிறது. அதன் இரையை அல்லது துணையை தேடிச் செல்கையில், அது அவ்வப்போது தன் நாவை வெளியே நீட்டி, அதன் நுனிகளை முடிந்தளவு விரித்து வைக்கிறது. இம்முறையில் அப்பாம்பு இரு முனைகளில் மோப்பத்தின் பலத்தைப் பரிசோதிக்கிறது. அது தேடிச் செல்லும் மிருகத்தின் திசையை அறிந்துகொள்ள அதற்கு உதவுகிறது.

நோயாளிகள் கொடுக்கும் பாலுறவு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்

வேலையில் இருக்கும்போது இழைக்கப்படும் பாலுறவு தொந்தரவுகள் அநேக பெண் மருத்துவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெளிப்படுத்துகிறது. அந்த ஆய்வில் பங்குகொண்டோரில் 77 சதவீதத்தினர் “நோயாளிகள் ஏதாவது ஒரு விதத்தில் பாலுறவு சம்பந்தப்பட்ட தொந்தரவு கொடுப்பதாக,” அறிக்கை செய்தனர் என்று தி மெடிக்கல் போஸ்ட் விளக்குகிறது. இப்பிரச்சினை மருத்துவர்கள் மூலமே தீர்க்கப்பட்டுவிடமுடியும் என்று அநேகர் நம்புகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கையில் அவர்கள் வினைத்திட்பமுள்ளவர்களாகவும் வாழ்க்கைத் தொழிலராகவும் நடந்துகொள்ள வேண்டும், மருத்துவ துறையில் உள்ளவர்கள் அணியும் வெள்ளை மேற்சட்டையையும், திருமண மோதிரத்தையும் அணிந்துகொள்ள வேண்டும் என ஊக்கமளிக்கப்படுகின்றனர். வேறு சிலர், பெண் மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறுவு தொந்தரவுகளைக் குறித்து எதுவும் செய்யப்பட முடியாது என உணருகின்றனர். தி போஸ்ட் இந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறது: “ஒரு பெண்ணாக இருப்பதில் பாலுறவு தொந்தரவுகளும் அதைப் பற்றிய பயமும் உட்பட்டுள்ள ஒரு சமுதாயத்தின் பாகமாக பெண் மருத்துவர்கள் இருக்கின்றனர்.”

தீப்புண்படும் விழி வெண்படலங்கள்

அநேக இளம் பெண்கள் தங்கள் முடியை ஒப்பனை செய்துகொள்ளும்போது, முடியை சுருள்களாக செய்யும் கருவியைத் தற்செயலாக தங்கள் கண்களுக்குள் சட்டெனத் தள்ளுவதன் மூலம் விழி வெண்படலம் தீப்புண்படுகிறது. பென்சில்வேனியாவின் பல்கலைக்கழக கண் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் டென் ஒவானோ-வின்படி, இது “விழி வெண்படலத்துக்கு சாதாரணமாக ஏற்படும் தீக்காயம்.” அநேக சந்தர்ப்பங்களில் இது கண்ணுக்கு நீண்ட-கால கெடுதியை விளைவிப்பதில்லை, தீப்புண்பட்ட கண் மூன்று நாட்களுக்குள் குணமாகிவிடுகிறது என்றபோதிலும், டொரன்டோவில் உள்ள பாக்நர் கண் நிறுவனத்தின் மருத்துவர் ஆல்பர்ட் செஸ்கஸ், தற்செயலாக நிகழும் இதை “அதிக ஆபத்தானதாக” இருக்கக்கூடும் என்று விவரிக்கிறார். “முடியைச் சுருள்களாக செய்யும் கருவிகள் அதிகமதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, பெண்கள் அவசரத்தில் இருக்கின்றனர்,” என்று அவர் கூடுதலாக சொல்கிறார்.

பள்ளிவளாகக் குற்றச்செயல்கள்

“பள்ளி வன்முறை வெறுக்கத்தக்கதாக உள்ளது, பரவலாக உள்ளது. கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்படும் அதிக தீவிரமான, அவசரமான பிரச்சினையாக ஆகிவருகிறது,” என்று டொரன்டோ ஸ்டார் உரிமைபாராட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்துசெல்லுகையில், வன்முறையான செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. டொரன்டோ பிராந்தியத்தில் 1993-ல் நடந்த பள்ளிவளாகக் குற்றச்செயல்கள்—810 முரட்டுத் தாக்குதல்கள், 131 பாலுறவு சம்பந்தமான தாக்குதல்கள், 7 விஷப்படுத்துதல்கள், 141 பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல். காவல் துறையினர், “துப்பாக்கிகள், கத்திகள், பிரம்புகள், மட்டைகள், மற்ற ஆயுதங்கள் அடங்கிய படைக்கொட்டிலை மாணவர்களிடமிருந்து கைப்பற்றியிருக்கின்றனர்,” என்று ஸ்டார் கூடுதலாக சொல்கிறது. துயரால் கொதித்தெழும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்கு பள்ளிகளை ஆபத்தான இடமாக காண்கின்றனர். பள்ளிகள் கல்வி பெறுவதற்கு சிறந்த இடங்களாக ஒரு சமயத்தில் இருந்தன. “ஆனால் இப்போது கும்பல்கள், சகாக்களின் அழுத்தம், ஆயுதங்கள் போன்றவற்றை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள்,” என்று ஸ்டார் அறிக்கையிடுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்