உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • மார்பகப் புற்றுநோயைப்பற்றி பெண்கள் அறிந்திருக்க வேண்டியவை
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • உயிர்ப்பிழைப்பதற்கான திறவுகோல்கள்
    விழித்தெழு!—1994
  • மார்பகப் புற்றுநோய் மேற்கொள்ள... மீண்டுவர...
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

இரட்டை வாழ்க்கை “இளைஞர் கேட்கின்றனர் . . . இரட்டை வாழ்க்கை—யார் அறிந்திருக்க வேண்டும்?” (ஜனவரி 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் 16 வயதாயிருக்கையில், என் பெற்றோருக்குத் தெரியாமல் மது அருந்தினேன், புகைப்பிடித்தேன், காதல் சந்திப்புகள் செய்தேன். கூர்ந்து கவனிக்கிற கடவுளின் கண்களிலிருந்து எதையும் மறைத்து வைக்கமுடியாது என்பதைக் காண இக்கட்டுரைகள் உண்மையிலேயே எனக்கு உதவின.

T. T., பிஜி

பணத்தைப் பின்தொடருதல் “பணத்தைப் பின்தொடருதல்—அது எங்கே முடிவடையும்?” (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) என்ற தொடர் கட்டுரையை நான் இப்போதுதான் வாசித்தேன். அப்பொருளைப் பற்றி அக்கட்டுரைகள் முழு விளக்கத்தைக் கொடுத்தன. நாடு விட்டு நாடு செல்லும் வேலையாட்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் அப்படிப்பட்ட மோசமான நிலைமைகள் இன்னும் இருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் அவர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்.

G. M., ஐக்கிய மாகாணங்கள்

வேலை செய்யும் இடங்களின் மோசமான நிலைமையைப் பற்றியும் குறைவான ஊதியத்தைப் பற்றியும் நீங்கள் விவரித்த விதம் திருத்தமாக உள்ளது. சிலர் எவ்வாறு இந்த வேலையாட்களை நோக்குகின்றனர்—நம்மைப் போன்றே உணர்ச்சிகளுள்ள மனிதர்களைப் போல் அல்ல என்பதைப் பற்றிய விசனகரமான விளக்கவுரை அது. ஆம், “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்”!—பிரசங்கி 8:9.

K. V., ஐக்கிய மாகாணங்கள்

மார்பகப் புற்றுநோய் “மார்பகப் புற்றுநோய்—ஒவ்வொரு பெண்ணின் பயம்” (ஏப்ரல் 8, 1994) என்ற உங்களுடைய தொடர் கட்டுரையில், தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் வரும் சாத்தியத்தைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுவதைக் குறித்து நீங்கள் குறிப்பிடவேயில்லை.

B. J. M., ஜெர்மனி

இதைக் குறிப்பிட தவறியதைக் குறித்து நாங்கள் வருந்துகிறோம். என்றாலும், எங்களுடைய ஜனவரி 8, 1994, இதழில் வெளியான “தாய்ப்பாலுக்குச் சாதகமான அத்தாட்சி” என்ற கட்டுரையில் இந்தக் குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.—ED.

அறுவை சிகிச்சை மூலம் மார்புகள் நீக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரியோடு நான் சிறிது நேரம் செலவழித்தேன். அவர்களுக்கு வயது 62, அவர்கள் மிகவும் மனசோர்வுற்றிருந்தார்கள். ஆதரவாக அவர்களுக்கு என்ன சொல்வது என்பதைக் குறித்து என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அக்கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிட்டிருந்த குறிப்புகளுக்காக நன்றி, நான் இப்போது மதிப்புள்ள ஆதரவை அவர்களுக்கு கொடுக்கமுடியும்.

D. H., ஐக்கிய மாகாணங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மார்பகப் புற்றுநோய்க்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பொருளின் பேரில் தகவலைப் பெற்றுக்கொள்ள நான் மருத்துவ என்ஸைக்ளோப்பீடியா ஒன்றை வாங்கினேன், ஆனால் நான் அதில் அதிக விஷயத்தைப் பார்க்கவில்லை. ஆனால் உங்களுடைய கட்டுரை என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தது. அது உண்மையில் என்னை ஆறுதல்படுத்தியது.

M. G., இத்தாலி

ஒன்பது வருடங்களுக்கு முன் என் தாய் மார்பகப் புற்றுநோயால் இறந்து போனார்கள். அப்போது எனக்கு வயது ஒன்பது, அவர்கள் அனுபவித்ததை நான் புரிந்துகொள்ளவேயில்லை. அக்கட்டுரைகளை வாசிக்கையில் அவர்களைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது, என்னால் அழாமல் இருக்கமுடியவேயில்லை. அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளைப் பற்றி நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் உட்பார்வைக்காக போதுமான அளவு நன்றி உங்களுக்கு சொல்லவே முடியாது.

K. F., ஐக்கிய மாகாணங்கள்

எய்ட்ஸ் நோய்க்கு பலியானவர்கள் “எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு உதவுதல்” (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) என்ற உங்களுடைய கட்டுரையை நான் வாசித்தேன். எனக்கு HIV பாசிடிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அக்கட்டுரையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. புண்படுத்தப்பட்டு, வெறுத்தொதுக்கி வைக்கப்ட்ட உணர்ச்சிகளுக்காக என் குடும்பத்தார் அழுதனர்.

B. J., ஐக்கிய மாகாணங்கள்

நம் மத்தியில் இருக்கும் அப்படிப்பட்ட நோயுற்றோர் அனைவருக்காகவும் நாங்கள் பரிவிரக்கங்கொள்கிறோம். அவர்களுடைய தேவைகளோடு பெரும்பாலானோரின் அக்கறைகளை சமநிலைப்படுத்த எங்களுடைய கட்டுரை முயற்சி செய்தது. முழு தேசத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு இஸ்ரவேலருக்கு கொடுத்த கடவுளுடைய சட்டம் பலமான நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சிபாரிசு செய்வது பொருத்தமானதாய் இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். (லேவியராகமம் 13:21, 33 ஒப்பிடுக.) “எய்ட்ஸ் நோய் உள்ள மக்களோடு இருப்பதைக் குறித்து ஒருவர் அளவுக்கு மீறி பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். மருத்துவர்கள் உறுதியளித்திருந்தாலும்கூட, அநேகர் தொடர்ந்து பயத்தில் இருக்கின்றனர். ஆகையால் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மரியாதை காண்பிக்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்தியிருந்தோம், சரீர சம்பந்தமான பாசத்தை வெளிக்காட்டும்போது அவர்கள் அசெளகரியமாக உணரலாம். இந்நோயால் பாதிக்கப்படாதோர் இவ்விஷயத்தைக் குறித்து எதைத் தெரிந்துகொள்கின்றனர் என்பது அவர்களுடைய தனிப்பட்ட தீர்மானம். எதுவாயிருப்பினும், துன்புறுவோருக்கு தயவையும் இரக்கத்தையும் காண்பிக்க எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இருதயப்பூர்வமான விருப்பம் இருக்கவேண்டும்.—ED.

இரக்க உணர்வோடு நன்கு-எழுதப்பட்ட கட்டுரை கொடுக்கப்பட்டிருந்ததைக் குறித்து நான் மிகவும் உற்சாகப்படுத்தப்பட்டேன். “உலகமுழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்” எடுக்கப்படவேண்டும், அதே சமயத்தில் இரக்கம் காண்பித்து அனுதாபமுள்ள உதவியைக் கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை நான் விசேஷமாக போற்றினேன்.

M. H., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்