உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 10/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 10/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

மார்பகப் புற்றுநோய் “மார்பகப் புற்றுநோய்—ஒவ்வொரு பெண்ணின் பயம்,” (ஏப்ரல் 8, 1994) என்ற தொடரைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு மிக்க நன்றி. நான் அவ்வப்போது என்னை பரிசோதித்துக் கொண்டு என்னுடைய சுரப்பிகள் வெறுமனே கட்டியாக இருக்கின்றன என்று நினைத்தேன். நிச்சயமற்றவளாக உணர்ந்ததால், அதைக் குறித்து நான் ஒன்றும் செய்யவில்லை. என்றபோதிலும், அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நான் மருத்துவமனைக்குச் சென்று, அது புற்றுநோய் என்று அறிந்தேன். ஒரு அறுவை சிகிச்சையைச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

T. Y., ஜப்பான்

என்னுடைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோயைப் பற்றி என்னால் எதையும் வாசிக்கவே முடியவில்லை. ஆகவே அந்தப் பத்திரிகை வந்தபோது, நான் அதைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் நான் எல்லா விழித்தெழு! வெளியீடுகளையும் முழுமையாக வாசிப்பது வழக்கம்; அன்று இரவு நான் கொஞ்சத்தை வாசித்துப் பார்த்துவிட்டு, பயமுறுத்துவதாக இருந்தால் நிறுத்திவிடுவதாகத் தீர்மானித்தேன். என்னால் அதை நிறுத்த முடியவில்லை. அது அவ்வளவு நன்றாக எழுதப்பட்டதாகவும் தகவலளிப்பதாகவும் அக்கறை காட்டுவதாகவும் இருந்தது.

G. K., ஐக்கிய மாகாணங்கள்

உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நோயை எதிர்ப்படுகையில் நமக்கு இருக்கும் பயங்களை யெகோவா எப்படிப் புரிந்துகொள்கிறார் என்பதைக் காண அந்தக் கட்டுரை எனக்கு உதவியது. இந்தவிதமாக உணர்ந்தால் மக்கள் பெலவீனமானவர்களாக அல்லது விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாக இருந்தார்கள் என்பதாக நான் எப்போதும் நினைத்தேன். யெகோவா வைத்திருக்கும் ஆழ்ந்த பரிவைக் காண அது உண்மையிலேயே எனக்கு உதவியது.

K. G., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு பத்திரிகை எப்போதாவது ஒருவரிடம் பேசியதென்றால், அந்தப் பிரதி நிச்சயமாக என்னிடம் பேசியது. என் கணவனும் நானும், என்னுடைய மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குரிய எல்லா மருத்துவ பில்களையும் எங்களைச் சுற்றி பரப்பி வைத்துக்கொண்டு படுக்கையில் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் காசோலைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பிக்கொண்டிருக்கையில், தபால்காரர் இந்த விழித்தெழு! பிரதியைக் கொடுத்துவிட்டுப் போனார். வழக்கத்திற்கு அதிகமான அக்கறையோடு நான் அந்தக் கட்டுரையை அன்றுதானே படித்தேன். அந்தக் கட்டுரைகளிலிருந்து ஆறுதலைப் பெறும் எல்லா பெண்களின் சார்பாகவும் உங்களுக்கு நன்றி.

E. J., ஐக்கிய மாகாணங்கள்

நகரங்கள் எனக்கு 16 வயது; நகரங்களைப் பற்றிய தொடரை வாசிப்பதில் நான் கிளர்ச்சி அடைந்தேன். புவியியல் வகுப்பில், எங்களுக்கு இஷ்டமான பொருளின்பேரில் ஒரு சிறிய பேச்சைக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். “மக்களால் நிரம்பியிருந்த ஒரு நகரம்” (ஜனவரி 22, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரையின் அடிப்படையில் என்னுடைய பேச்சைத் தெரிந்துகொண்டேன். என்னுடைய பேச்சை நான் வகுப்பில் சத்தமாக வாசித்தப்பின், எல்லாரும் கைத்தட்டி பாராட்டினார்கள். புவியியலைப் பற்றிய என்னுடைய புரிந்துகொள்ளுதலை முன்னேற்றுவிக்க உதவியதற்காக நன்றி.

T. R., ஜெர்மனி

“நமக்கு ஒரு நகரத்தைக் கட்டுவோம்,” என்ற கட்டுரையில் நீங்கள் இவ்வாறு சொன்னீர்கள்: “1900-ல், உலகிலேயே பத்து லட்சம் பேர் மக்கள்தொகையைக் கொண்டிருந்த நகரம் லண்டன் மட்டுமே.” (ஜனவரி 8, 1994, ஆங்கிலம்) ஆனால் அதைத் தொடர்ந்த வெளியீட்டில், இவ்வாறு சொன்னீர்கள்: “மத்திப 1800-களில், அது [இடோ, தற்போது டோக்கியோ என்று அழைக்கப்படுவது] பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.” எது சரியானது?

S. T., ஜப்பான்

லண்டனைப் பற்றிய கூற்று தவறாக இருப்பதாகத் தோன்றுகிறது. “இல்லஸ்ட்ரேட்டட் அட்லஸ் ஆஃப் தி உவர்ல்ட்” (ரான்ட் மக்நாலி அண்ட் கம்பெனி) என்பதன் 1985-ன் பதிப்பை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. என்றபோதிலும், 1900-ல் பல நகரங்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தாக “தி உவர்ல்ட் அல்மனக் அண்ட் புக் ஆஃப் ஃபாக்ட்ஸ் 1993” சொல்வது சரியானதாகத் தோன்றுகிறது. குழப்பத்திற்கு வருந்துகிறோம்.—ED.

பண வேட்டை விழித்தெழு!-வின் ஓர் இளம் வாசகராக, “பண வேட்டை—அது எங்குபோய் முடியும்?” (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) என்ற தொடரால் நான் உண்மையில் நெகிழ்விக்கப்பட்டேன். என்னுடைய சகாக்களுக்கு ஒரே ஒரு இலக்கு இருப்பதாகவே தோன்றுகிறது: தங்கள் பணப்பைகளை நிரப்புவது. என்றபோதிலும், அழிந்துபோகக்கூடிய காரியங்களை வழிபடுவதைக் காட்டிலும், யெகோவா போதிப்பதைப் பின்பற்றுவது மிக அதிக மதிப்பானதாக இருக்கிறது.

K. R., பிரான்ஸ்

போட்டி விளையாட்டுக்கள் “கடவுள் போட்டி விளையாட்டுக்களில் எப்பக்கத்தையாவது ஆதரிக்கிறாரா?” (பிப்ரவரி 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்காக நன்றி. தள ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக ஜெபித்த தவறை நான் செய்துவிட்டேன்; என்னுடன் போட்டியிட்டவர்களின் தோல்விக்காகவும் ஜெபம் செய்திருக்கிறேன். யெகோவாவின் சித்தம் போட்டி விளையாட்டுக்களுடன் தொடர்புடையதல்ல என்று இப்போது எனக்குத் தெரியும். நான் என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; அவர் உண்மையிலேயே என்னுடைய ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்றறிவதில் நான் அதிக திருப்தியடைகிறேன்.

J. T., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்