உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 1/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • அநேகருடைய வாழ்க்கையை அவள் தொட்டாள்
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 1/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஓட்டுவதில் ஆபத்து “ஓட்டும்போது களைப்பா?” (“உலகத்தைக் கவனித்தல்,” பிப்ரவரி 22, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைப் பகுதியை வாசித்தது, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு லாரி (டிரக்) டிரைவராக இருக்கும்போது நடந்த காரியங்களை ஞாபகத்திற்கு கொண்டுவந்தது. வீட்டிற்கு வண்டியில் வருவதற்கு ஒரு முழு நாளும் எடுத்ததால், ஓட்டிக்கொண்டே தூங்கிவிட்டேன். திடீரென்று, ஒரு பெரிய முட்டு என்னை விழிக்கப்பண்ணியது. அதிர்ச்சியடைந்து எழுந்து பார்க்கையில், சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டிச்சென்றிருந்தேன். ஒரு குறட்டுக் கல்லில் போய் மோதிவிட்டிருந்தேன், ஆனால் அக்கம்பக்கத்தில் எந்தக் கார்களோ பாதசாரிகளோ இல்லை. எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்தேன், ஆனால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு பாடமாக அது இருந்தது. தேவைப்படும்போது வெறுமனே பிரேக்கை போடாததால் யாராவது ஒருவருடைய உயிரைப் போக்கியிருப்பேன். என்னுடைய ஆலோசனை? விழித்தெழு!-விலுள்ள அந்தக் கட்டுரைப் பகுதியைப் படித்து அதைப் பின்பற்றுங்கள்!

எம். ஒய்., இங்கிலாந்து

அதிக எடை “நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்?” என்று ஏப்ரல் 22, 1994-ல் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைக்கு என்னுடைய விசேஷ நன்றிகளை நான் சொல்ல விரும்புகிறேன். எனக்கு வயது 13, எடை அட்டவணைகள் மிதமான எடையைக் காண்பித்தாலும், தடியாயிருப்பதாகவே கருதினேன். இந்த மனநிலையின் காரணமாக, என்னிலிருந்த நம்பிக்கை எல்லாவற்றையும் இழந்து, மனச்சோர்வினால் அவதிப்பட்டேன். செத்தால் நல்லாயிருக்கும் என்றுங்கூட ஒரு முறை ஆசைப்பட்டேன். பைத்தியக்காரத்தனமாகப் படுகிறது, ஆனால் அப்படித்தான் உணர்ந்தேன். யெகோவாவுக்கும் அந்தக் கட்டுரைக்கும் நன்றி, என்னுடைய மனச்சோர்வை நன்றாக என்னால் சமாளிக்க முடியும்.

சி. எஸ்., ஜெர்மனி

இளம் கேன்ஸர் நோயாளி “வாழ்க்கை சுலபமாக இல்லாதபோது,” கேத்தி ராபர்சன் சொன்னபடி என்ற கட்டுரையைச் சமீபத்தில் படித்ததும், நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன் என்று சொல்ல வேண்டும். (ஆகஸ்ட் 22, 1994) அத்தகைய அருமையான கட்டுரைக்கு என்னுடைய ஆழமான போற்றுதலை எழுத்துமூலம் தெரியப்படுத்த வேண்டும். எனக்கு வயது 14, யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருப்பதால் பள்ளியில் துன்புறுத்தலை அனுபவித்துவந்தேன். என்னுடைய சூழ்நிலை கேத்தி ராபர்சனுடைய நிலைமை மாதிரி அவ்வளவு கஷ்டமாக இல்லை, ஆனால் அவளுடைய சோதனை காலம் முழுவதும் யெகோவா எவ்வாறு அவளைக் காப்பாற்றினார் என்பதை அறிவது ஊக்கமூட்டுவதாயிருந்தது.

சி. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

என்னே ஒரு தலைசிறந்த கட்டுரை! ஒன்பது வயதாயிருக்கையில் நானும் மிகவும் வியாதிப்பட்டு, இறுதியில் ஆஸ்பத்திரியில் மாதக்கணக்காகக் கிடந்தேன். என்றபோதிலும், மேனிலைப் பள்ளி பிரவேசிப்பதற்குள்ளாக ஆரோக்கியம் அடையக்கூடியவளாக இருந்தேன். திரும்பவும் திரும்பவும் அந்த நோய் வந்ததானது கேத்தி ராபர்சனுக்கு எப்படிக் கஷ்டமாயிருந்திருக்கும். அவளுடைய மனநிலையும் பலமும் இன்னும் அதிக சாதகமான மனோபாவத்தைக் கொண்டிருக்க எனக்கு உதவியிருக்கின்றன.

டி. வி., ஐக்கிய மாகாணங்கள்

தாய்ப்பாலூட்டுதல் எங்களுடைய இரண்டாவது குழந்தை இன்னும் மூன்று மாதங்களில் எனக்கு பிறக்கப்போகிறது. ஆகையால், ஆகஸ்ட் 22, 1994, விழித்தெழு! இதழைப் பெற்றவுடன், “தாய்ப்பாலூட்டுதலின் அடிப்படைகள்” என்ற கட்டுரையைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உயிரின் மூலகாரணருக்குப் புகழ்ச்சியையும் துதியையும் அளித்த கட்டுரையை வாசித்தது உண்மையிலேயே புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ஒரு தாய் எவ்வாறு தன் குழந்தையைப் போஷிக்க முழுமையாக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதைக் கருத்தில் கொள்கையில், ஒரு ஞானமுள்ள, அன்புள்ள படைப்பாளர் இருக்கிறார் என்பதை ஒருவரால் எப்படி மறுக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை.

எல். கே., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரைக்கு நீங்கள் அநேக பாராட்டுக் கடிதங்களைப் பெறுவீர்கள் என்பதில் நான் நிச்சயமாயிருக்கிறேன். கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தால், எங்களுடைய மூன்று குழந்தைகளுக்குமே தாய்ப்பாலூட்டியது எவ்வளவு ஆசீர்வாதமாகவும் நடைமுறையான தெரிவாகவும் இருந்திருக்கிறது என்பதை அறியவருகிறேன். இந்தக் கட்டுரை தாய்மாரையும் தாய்மாராகப் போகிறவர்களையும் உற்சாகமூட்டும் என்று அறிந்திருக்கிறேன்.

சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

திறம்பட்ட கைவண்ணம் ஜூன் 8, 1994 இதழில் உயிர்த்தெழுதல் படத்தைப் பார்த்ததும் என்னுடைய இருதயம் துள்ளிற்று. அதிசயமான அந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கான என்னுடைய போற்றுதல் இன்னும் மிக ஆழமானது. நிச்சயமாகவே, பிற்கால பரதீஸில் என்னுடைய தங்கையைப் பார்க்கக்கூடிய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளில்லை.

எம். யூ., ஜப்பான்

பண ஆசை “பண ஆசை—அதிக தீமைக்கு வேராயிருக்கிறது” என்ற கட்டுரைக்கு நன்றி. (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) என்னுடைய நாட்டில் கொள்ளையும், கன்னமிட்டுத் திருடுதலும், பொது மக்களை ஒடுக்குவதும் பெருத்திருக்கின்றன; இவை யாவுமே பணத்தைப் பறிப்பதற்காகச் செய்யப்படுகின்றன. எனவே, இந்தப் பத்திரிகை சமயோசிதமாகவும் பொருத்தமாகவும் இருந்தது, பிறரிடம் இந்த இதழைத் தருவதில் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன். உண்மையில் சொல்லப்போனால், என்னிடம் போதுமான பிரதிகள் இல்லாதபோது, ரொட்டி விற்கும் சில ஆட்கள் அவற்றிற்காகச் சண்டை போட்டுக்கொண்டார்கள்!

ஏ. எஃப். எஸ்., மேற்கு ஆப்பிரிக்கா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்