உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 6/22 பக். 20-21
  • அநேகருடைய வாழ்க்கையை அவள் தொட்டாள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அநேகருடைய வாழ்க்கையை அவள் தொட்டாள்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இளைஞர்கள் கடவுளை சேவிக்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்
  • வயதானவர்களும் உற்சாகமடைகின்றனர்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • அலாஸ்காவில் கடவுள் விளையச் செய்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • அவர்கள் விடாப்பிடியாய் இருக்கிறார்கள்
    விழித்தெழு!—1999
  • இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்துக்கு வாசகரின் பிரதிபலிப்பு
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 6/22 பக். 20-21

அநேகருடைய வாழ்க்கையை அவள் தொட்டாள்

நவம்பர் 19, 1994-ம் தேதி கேத்தி ராபர்சன் 26 வயதில் இறந்தாள். அவள் மரித்த அந்த வாரம் வரையாக உண்மைத்தன்மையுடன் கூட்டங்களுக்கு ஆஜராகியிருந்தாள். ஒன்பது வயதிலிருந்தே புற்றுநோயுடன் அவள் போராடிய சரிதை, ஆகஸ்ட் 22, 1994, விழித்தெழு! இதழில் “வாழ்க்கை சுலபமாக இல்லாதபோது” என்ற தலைப்பில் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு, உலகம் முழுவதிலிருந்தும் அநேகர் கடிதங்கள் எழுதி, கேத்தியின் தைரியமான உதாரணம் அவர்களை எவ்வாறு ஆழமாகத் தொட்டது என்பதை விவரித்திருந்தனர்.

இளைஞர்கள் கடவுளை சேவிக்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்

ஸ்பெய்னிலிருந்து, லாய்டா இவ்வாறு எழுதினாள்: “எனக்கு வயது 16, கேத்தியின் சகிப்புத்தன்மையைப் பற்றிய அனுபவத்தை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இறப்பதைக் குறித்து நான் பயப்பட்டதுண்டு. ஆனால் இந்தக் கட்டுரைக்கு நன்றி. அவள் சொல்லியிருப்பதுபோல, ‘உண்மையில் முக்கியமாயிருப்பது என்னவென்றால் இப்போது நாம் உயிரோடிருக்கிறோமா சாகிறோமா என்பதல்ல, நித்திய ஜீவனை அளிக்கக்கூடியவராகிய யெகோவா தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறோமா என்பதுதான்,’ என்பதை புரிந்துகொண்டேன்.”

ஜப்பானிலிருந்து மாரி எழுதியதாவது: “எனக்கும் கிட்டத்தட்ட கேத்தியின் வயதாக இருப்பதாலும், நானும் அதே நாளில் முழுக்காட்டுதல் பெற்றதாலும், அவளுடைய அனுபவத்தை வாசித்ததானது நெருங்கிய தோழியிடமிருந்து வந்த உற்சாகமூட்டும் ஒரு கடிதத்தை வாசித்ததுபோல் இருந்தது. தங்கள் ஆரோக்கியத்தை வீணான நாட்டங்களில் உபயோகிக்காமல் ஞானமாகக் கடவுளுடைய சேவையில் உபயோகிக்கும்படி அநேகரை அவளுடைய அனுபவமானது, தூண்டும் என்ற அவளது நம்பிக்கை எனது இருதயத்தைத் தூண்டியது. காரணம் நான் ஒழுங்கான பயனியர் சேவையை [முழுநேர ஊழியம்] தொடங்கவிருக்கிறேன்.”

இத்தாலியிலிருந்து நாயேமீ அதேபோல எழுதினாள். இளைஞர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தை வீணான நாட்டங்களில் உபயோகிக்காமல் ஞானமாகக் கடவுளுடைய சேவையில் உபயோகிக்கவேண்டும் என்ற கேத்தியின் விருப்பம், “என்னையும் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்,” என்று கூறினாள். நாயேமீ தொடர்ந்து கூறினாள்: “இவையனைத்தும் ஒழிந்துபோயிருக்கும் புதிய உலகில் நான் அவளைப் பார்க்க பேராவலோடு காத்திருக்கிறேன். என்னுடைய மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவுடனே நான் பயனியர் சேவையைத் தொடங்கப்போகிறேன்.”

“எனக்கு வயது 18. இப்போது கொஞ்ச காலமாகவே பயனியர் சேவையைப்பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ‘வாழ்க்கை சுலபமாக இல்லாதபோது’ என்ற கட்டுரையை நான் வாசித்தபோது, என்னைப் போன்ற வாலிப பெண் ஒருத்தி அத்தகைய கஷ்டங்களைச் சகித்ததைப் பார்த்தது எனக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. கேத்தி சொன்னதுபோல, என்னுடைய ஆரோக்கியத்தை ‘வீணான நாட்டங்களில் உபயோகிக்காமல் ஞானமாக யெகோவாவின் சேவையில் உபயோகிக்கும்படி’ அவள் என்னைத் தூண்டுவித்தாள்,” என்று எழுதினாள் அ.ஐ.மா.-வின் ஃப்ளாரிடாவைச் சேர்ந்த ரஷெல்.

மைக்ரோனீஷியாவில் உள்ள சூக் தீவிலிருந்து சில மிஷனரிகள் இவ்வாறு எழுதினார்கள்: “எங்களுடைய பயனியர்கள் பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்களாக இருக்கின்றனர். இருப்பினும், தங்களுக்கு இருப்பதைப் போற்றுவதற்கு சகோதரி ராபர்சனின் அனுபவம் அவர்களுக்கு உதவிற்று. பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்களாக இருந்தாலும் யெகோவாவை முழுநேரம் சேவிப்பதை சாத்தியமாக்கும் உரம்வாய்ந்த உடல் அவர்களுக்கு இருப்பதால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தனர். தங்களுக்கு என்ன இருக்கிறதோ அதற்காக நன்றியுள்ளவர்களாக இருந்து தங்களுடைய பலத்தை யெகோவாவின் சேவையில் பயன்படுத்துவதற்கான ஒரு நல்ல நினைப்பூட்டுதலாக அது இருந்தது.”

பிரான்ஸில் பயனியர் பள்ளியில் கற்றுக்கொண்டிருந்த 16 மாணவர்கள் அடங்கிய ஒரு தொகுதி, கேத்திக்கு லில்லி மலர்களின் ஒரு போட்டோவை, உற்சாகமளிக்கும் பின்வரும் வார்த்தைகளோடு அனுப்பிவைக்கும்படி உந்துவிக்கப்பட்டனர்: “நம்முடைய மகத்தான படைப்பாளருக்காக நம்முடைய நேரத்தைப் பயன்படுத்தும்படி நீங்கள் கொடுத்த அறிவுரையை நாங்கள் மறக்கமாட்டோம்.”

பிரான்ஸிலிருந்து மற்றொரு வாலிபப்பெண் எழுதினாள்: “இளமைப்பருவத்தில் இருப்பதாலும் சாத்தானின் பிரதான குறியிலக்குகளாக இருப்பதாலும், யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக தொடர்ந்து இருப்பது கடினம் என்பதாக அவ்வப்போது நாம் உணருகிறோம். எனினும், இத்தகைய தனிச் சிறப்புவாய்ந்த, உத்வேகப்படுத்தும் அனுபவங்களை நாம் வாசிக்கும்போது, கேத்தியைப்போன்ற மற்ற இளைஞர்களும் துன்பத்தின் மத்தியிலும் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்கின்றனர் என்று அறிந்து, புதுப்பிக்கப்பட்ட பலத்தையும் வைராக்கியத்தையும் நாம் பெறுகிறோம். என்னே அருமையானதோர் முன்மாதிரி!”

“எனக்கும் உங்கள் வயதுதான் ஆகிறது, மிக நல்ல ஆரோக்கியமும் உண்டு,” என்று எழுதினாள் அ.ஐ.மா.-வின் ஒஹாயோவைச் சேர்ந்த நேடின். “பல வேளைகளில் சிறிய சிறிய காரியங்கள் யெகோவாவுக்கான என்னுடைய சேவையில் குறுக்கிடும்படி அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய அனுபவத்தை வாசித்தது என்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து ஆராயச் செய்து, விலைமதிப்புள்ள எவ்வளவு நேரத்தை நான் வீணாக்கிவிட்டேன் என்று உணரச் செய்தது. நீங்கள் எனக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறீர்கள்.”

பிரேஸிலில் இருந்து ஒரு வாலிபப்பெண் சொன்னாள்: “அவள் என் இருதயத்திற்குள் பேசி, நம் கடவுளை இன்னும் முழுமையாக சேவிப்பதற்கான ஆசையை அதிகரித்துவிட்டிருக்கிறாள்.”

கனடாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் எழுதியதாவது: “எனக்கு வயது 15. எனக்கு ஆட்டோஇம்மியூன் ஹெபடைடஸ் வியாதி இருப்பது இரண்டு வருடங்களுக்குமுன் தெரியவந்தது. கேத்தி ராபர்சனின் அனுபவத்திற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த உடல்நிலையிலும் இன்னும் காலம் இருக்கும்வரை நானும்கூட யெகோவாவை உண்மையுடன் சேவிக்கலாம் என்றும், முழுவதும் குணமடைவதற்கு கடவுள் வாக்குறுதியளித்துள்ள புதிய ஒழுங்குமுறைக்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் நான் உணர்ந்துகொண்டேன்.”

அ.ஐ.மா.-வின் நியூ ஜெர்ஸியிலிருந்து, ஜனெட் எழுதினாள்: “அவள் மேற்கொண்ட அனைத்துத் தடைகளும், அவள் காண்பித்த விசுவாசமும், நமக்கு என்ன கஷ்டங்கள் இருந்தாலும் யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்வதற்குத் தொடர்ந்து முயற்சிக்கும்படி தீர்மானமாய் இருக்க நம் அனைவருக்கும் உதவுகின்றன. என்னுடைய பைபிள் மாணாக்கர்களில் சிலர் தங்களுடைய பள்ளி படிப்பை முடித்தவுடனே பயனியர் சேவையைக் குறிக்கோளாக வைக்கும்படி தூண்டிவிட அவளுடைய அனுபவத்தை அவர்களிடம் உபயோகிக்க திட்டமிடுகிறேன்.”

வயதானவர்களும் உற்சாகமடைகின்றனர்

அ.ஐ.மா.-வின் கலிபோர்னியாவிலிருந்து ஒரு பெண்மணி எழுதினார்: “நம் வாழ்க்கையில் உள்ள சிறிய சிறிய பிரச்சினைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கையை அதன் அடித்தளத்திற்கே—யெகோவாவோடுள்ள நம் உறவாகிய இன்றியமையாத அம்சத்திற்கே—கொண்டுவந்துவிட்டாய்.” அவர் மேலும் கூறினார்: “எனக்கு அதிக வயதாகிவிட்டிருந்தாலும், உன்னுடைய அனுபவங்களாலும், நோக்குநிலைகளாலும் நான் ஆழமாகத் தொடப்பட்டு, தூண்டுவிக்கப்பட்டேன். என்னுடைய முன்னுரிமைகளை மறுபார்வை செய்ய அது எனக்கு உதவிற்று.”

கலிபோர்னியாவில் இருந்து வந்த மற்றொரு கடிதம் சொன்னதாவது: “நீ அனுபவித்தது, ஜெர்மனியிலோ அல்லது மலாவியிலோ அல்லது நான் வாசித்திருக்கிற வேறு எந்த இடத்திலோ உள்ள எந்தச் சகோதர சகோதரிகளுக்கும் ஏற்பட்டதைப் போன்ற பெரிய சோதனைதான். எனக்கு இப்போது 68 வயதாகிறது, ஆகவே நான் அநேக அனுபவங்களைப் பார்த்தும், கேட்டும், வாசித்துமிருக்கிறேன். உன்னுடைய சரிதை இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.”

அ.ஐ.மா., தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் ஒரு குழந்தையல்ல. எனக்கு ஏறக்குறைய 70 வயதாகிறது.” அவர் போற்றுதலோடு இவ்வாறு எழுதினார்: “நீ மற்றொரு யோபு. இளைஞர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரும் உன்னுடைய சகிப்புத்தன்மையைக் கவனத்தில் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”

வேறொரு கடிதம் இவ்வாறு சொன்னது: “கேத்தியின் விசுவாசமும் தீர்மானமும் எனது இருதயத்தைத் தொட்டது. எனக்குக் கிட்டத்தட்ட 57 வயதாகிறது. நான் ஓய்வுபெறும்போது யெகோவாவின் சேவையில் அதிக நேரத்தைச் செலவிடுவது என்னுடைய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் சமீபத்தில் எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான் வாலிபத்தில் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த சமயத்தில் யெகோவாவுக்காக அதிகத்தைச் செய்யவில்லையே என்று எவ்வளவு வருத்தப்படுகிறேன்! அந்தச் சிலாக்கியத்தை எப்போது ஒரு மோசமான வியாதி வந்து கொள்ளையாடிக்கொண்டு போகும் என்று நம்மில் யாராலும் சொல்லவே முடியாது.”

கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் எழுதினார்: “என்னுடைய விசுவாசத்தைச் சோதிக்கக்கூடிய எதிர்பாராத மாற்றங்கள் என் வாழ்க்கையில் ஏற்படும்போது நான் வாசிப்பதற்காக இந்தக் கட்டுரையை ஒரு விசேஷித்த ஃபைலில் வைத்திருக்கப்போகிறேன். இந்தக் காரிய ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்குகையில், கஷ்டங்களால் தாக்கப்படும் அன்பார்ந்த நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படும்வகையில் இந்தக் கட்டுரையை என்னுடைய மேய்ப்புச் சந்திப்பு ஃபைலிலும் வைக்கப்போகிறேன்.”

சந்தேகமின்றி, நம்முடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் அனைத்து அங்கத்தினர்களின் விசுவாசத்தினாலும், தைரியத்தினாலும் நாம் பலப்படுத்தப்படுகிறோம். (1 பேதுரு 5:9) கேத்தி எதிர்நோக்கியிருந்தது போலவே, நாம் அனைவரும் “இனி மரணமுமில்லை” என்று சொல்லப்படக்கூடிய காலத்தைப்பற்றி பைபிள் கொடுக்கும் வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்காக எதிர்நோக்கியிருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 21:3, 4) ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாதிருக்கும்’ அச்சமயம் என்னே ஒரு மகத்தான சமயமாக இருக்கும்.—ஏசாயா 33:24.

[பக்கம் 20-ன் படம்]

கேத்தி ராபர்சன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்