எமது வாசகரிடமிருந்து
தற்கொலை பயத்தோடும் பரபரப்போடும் “தற்கொலைதான் பரிகாரமா?” (ஏப்ரல் 8, 1994) கட்டுரையை நான் வாசித்தேன். எனக்கு 20 வயதாகிறது, இப்பொழுது ஒரு முழு நேர ஊழியம் செய்பவளாக இருக்கிறேன். ஆனால் கொஞ்ச காலத்துக்கு முன்பு, தற்கொலைசெய்துகொள்ளும் மனச்சாய்வுள்ளவளாக இருந்தேன். யெகோவா எனக்கு உதவினார், தொடர்ந்து தம்முடைய கரங்களால் என்னைக் காத்துவருகிறார். ஒருசில நாட்களுக்கு முன்பு, என்னுடைய மிக நெருக்கமான சிநேகிதிகளில் ஒருத்தி, தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக சொன்னாள். மனம் முறிந்துவிடாதிருப்பதற்கு அவளுக்கு உதவக்கூடிய நடைமுறையான ஆலோசனைக்காக தேடிக்கொண்டிந்தேன். என்னுடைய ஜெபங்களுக்கு இந்தக் கட்டுரை பதிலளித்தது.
A. C., இத்தாலி
கடந்த வாரம்தானே தற்கொலை எண்ணங்கள் என் இருதயத்தில் பலமாக இருந்தன. ஒரு கிறிஸ்தவ மூப்பரும் அவருடைய மனைவியும் என்னுடைய நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள், தற்கொலை எண்ணங்களை வெற்றிகரமாக சமாளிக்க உதவினார்கள். மனச்சோர்வு பற்றிய உங்கள் அநேக கட்டுரைகள் என்னுடைய உயிரைக் காப்பவையாக இருந்திருக்கின்றன.
D. J., ஐக்கிய மாகாணங்கள்
கட்டுரைக்காக நான் என்னுடைய ஆழ்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்தாக வேண்டும். என்னால் நினைவுகூர முடிந்தவரை எந்தச் சமயத்திலும் இதற்கு முன் படித்திருக்கும் எந்தக் கட்டுரையும் என்னில் இத்தனை பலமான உணர்ச்சிகளை ஏற்படுத்தியது கிடையாது. சில வருடங்களுக்கு முன்பாக தற்கொலை தெரிவுசெய்யக்கூடிய ஒரு போக்கு—சகித்துக்கொள்ள முடியாத சூழ்நிலைமைகளில் தப்பிக்க ஒரு வழி—என்பதாக நம்பிக்கொண்டிருந்தேன். இருந்தபோதிலும், பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியோடு, உயிர்வாழ்வதற்கு எல்லாவற்றுக்கும் மேலான மிகச் சிறந்த ஒரு காரணம் இருப்பதை அறியவந்தேன்—நான் உயிர்வாழ வேண்டும் என்று யெகோவா விரும்பினார்.
M. V., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரை சுருக்கமாகவும் நன்றாகவும் எழுதப்பட்டிருந்ததை நான் கண்டேன். தற்கொலை எண்ணங்களைக் கொண்டிக்கும் எவருக்கும் உதவுவதற்கு இது மிகவும் மதிப்புவாய்ந்த ஒரு கருவியாக இருப்பதாக நினைக்கிறேன். அதில் சேர்க்கப்பட்டிருக்கும் எல்லா உதாரணங்களும் என்னைத் தொட்டுவிட்டன.
L. S., ஐக்கிய மாகாணங்கள்
நடைபயணி ஹிப்பி ரிச்சர்ட் ஃபீலிட் என்பவரைப் பற்றிய “நடைபயணி ஹிப்பியிலிருந்து தென் அமெரிக்க மிஷனரி” (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) கட்டுரைக்காக உங்களுக்கு நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். எங்களுடைய திருமணத்தைத் தொடர்ந்து என்னுடைய வருங்கால மனைவியும் நானும் பிரசங்க வேலையில் உதவிசெய்வதற்காக ஹங்கேரிக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். இப்பொழுது வரையாக வாழ்க்கைப் பாணியில் முழுமையான ஒரு மாற்றத்தைப்பற்றியும் புதிய ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைப் பற்றியும் மிகவும் அச்சமான உணர்வு எனக்கு இருந்திருக்கிறது. கட்டுரையானது, முக்கியமாக இருப்பது, தனிப்பட்ட கவலைகள் அல்ல, ஆனால் நாம் பிரசங்கிக்கவேண்டிய ஆட்களே என்பதைத் தெளிவாக காண்பித்தது.
S. H., ஜெர்மனி
விவாகமில்லாத ஆட்கள் அனைவரும் இந்தக் கட்டுரையைப் படித்து நீங்கள் யெகோவாவின் ஓர் ஊழியக்காரராக மற்றும் ஒரு துணையில்லாமல் சந்தோஷமுள்ளவராக இருக்கலாம் என்பதை உணரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விவாகமில்லாத ஒரு மனிதன் எவ்விதமாக மத்தேயு 6:33-ஐ தன்னுடைய வாழ்க்கையில் முழுமையாக பயன்படுத்தினார் என்பதை வாசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக, முழுநேர சுவிசேஷகனாக சேவிக்க ஆரம்பித்தது முற்கொண்டு ரிச்சர்ட் ஃபீலிட்டைப் போன்றே சந்தோஷங்களை அனுபவித்து வந்திருக்கிறேன்.
D. M., ஐக்கிய மாகாணங்கள்
தகப்பனில்லாத பையன்களுக்கு இரக்க உணர்ச்சியுடைய ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டபோது நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். நான்கு பையன்களோடு ஒற்றைத் தாயாக இருக்கிறேன். ஒரு கிறிஸ்தவ சகோதரர் அவர்களில் ஒருவன் பேரில் அக்கறை எடுத்துக்கொண்டார், இப்பொழுது அந்த மகன் விரைவில் முழுக்காட்டுதல் பெற தயாராகிக் கொண்டிருக்கிறான். தகப்பனில்லாத பையன்களை எவராவது சென்றெட்டும்போது அது வெகுவாக போற்றப்படுகிறது.
P. T., ஐக்கிய மாகாணங்கள்
சிலி இப்போதுதான் மே 8, 1994 பிரதியை வாசித்தேன், “சிலி—தனித்தன்மைவாய்ந்த நாடு, தனித்தன்மைவாய்ந்த மாநாடு” கட்டுரையை குறிப்பாக அனுபவித்து வாசித்தேன். நான்தானே மாநாட்டில் ஆஜராயிருந்தது போல உணர்ந்தேன். நிகழ்ச்சிநிரல் முடிவடைந்தபோது தயக்கத்தோடு அங்கிருந்து புறப்பட்டு வரும் உணர்வுகூட ஏற்பட்டது.
K. K., ஜப்பான்
காம்பேக்ட் டிஸ்க் “காம்பேக்ட் டிஸ்க்—அது என்ன?” (ஏப்ரல் 22, 1994) என்ற உங்கள் கட்டுரைக்கு நன்றி. இந்த டிஸ்க்குகளைப் பற்றிய என்னுடைய அறியாமையை இது போக்கிற்று. நண்பர் ஒருவரின் காம்பேக்ட் டிஸ்க்கிலிருந்து கேட்ட பிறகு, இசையை மீண்டும் ஒலிக்கச்செய்யும் இதன் அமைப்பு மற்றவற்றைவிட மிக உயர்ந்த தரமுடையதாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
S. D., நைஜீரியா