உங்கள் தோட்டத்தில் ஒரு ஃபிரிட்டில்லரி—இருக்கிறதா?
இருந்தால், அதன் அழகு உங்களைக் கவர்ந்திருக்கும். ஃபிரிட்டில்லரி என்பது என்ன? இது நம்முடைய உலகை அழகுபடுத்தும் ஆயிரக்கணக்கான பல வகையான வண்ணத்துப்பூச்சிகளில் ஒன்றாகவும் ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கனடாவில் காணப்படும் 750-க்கும் மேற்பட்ட இனங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இங்கே காண்பிக்கப்பட்டிருக்கும் பளபளப்பான வஸ்து வர்ஜீனியா நாட்டில் வளப்பமுள்ள நாட்டுப்புறத்திலுள்ள ஒரு தோட்டத்தில் படமெடுக்கப்பட்டது. பளபளப்பான இந்த வஸ்துவின் பின்புற இறகின் கீழ்ப்புறத்தில் வெள்ளி ஜிகினா காணப்படுகிறது. உயரமாக வளர்ந்து வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் காட்டுப்பூக்களைத் தோட்டத்தில் ஒரு துண்டு நிலத்தில் தோட்டக்காரர் வேண்டுமென்றே விதைத்திருக்கிறார்—அங்கே மஞ்சள் நிற வட அமெரிக்கத் தோட்ட மலர்ச் செடிகளும் தென் அமெரிக்க மலர்க் கொத்து செடியினங்களும் இருந்தன.
உங்கள் தோட்டத்துக்குள் வண்ணத்துப்பூச்சிகளை நீங்கள் கவர்ந்திழுக்க விரும்பினால், காட்டுப்பூக்களை ஒரு துண்டு நிலத்தில் வளர்த்துப் பாருங்கள். இந்த மென்மையான வண்ணத்துப்பூச்சிகளை உங்களிடமாக கவர்ந்திழுக்கும் ஒரு ஓவியரின் வண்ணக் கலப்பு நிறங்களில் வளரும் காட்டுப்பூ விதைகள் ஒரு பாக்கட்டை நீங்கள் ஒருவேளை வாங்கலாம். உலகில் பொருத்தமான ஒரு பகுதியில் நீங்கள் வாழ்ந்துவந்தால், அழகிய செந்நீல அல்லது மஞ்சளுடன் சேர்ந்த சிவப்புநிற மலர்க்கொத்துக்களையுடைய புதர் ஒரு காந்தத்தைப் போல வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். பின்னர் ஒரு காமிராவையும் பைனாக்குலரையும் கொண்டு அனுபவித்து மகிழுங்கள்!