உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 3/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 3/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

விளையாட்டு பொம்மைகள் மிக அண்மையில்தான் “பெற்றோரே—உங்கள் பிள்ளையின் விளையாட்டு பொம்மைகளை ஞானமாக தெரிந்தெடுங்கள்,” (செப்டம்பர் 8, 1994) என்ற நேர்த்தியான கட்டுரையை வாசித்து முடித்தேன். ஒரு பெற்றோராக நான் தகவலை மிகவும் போற்றுகிறேன். என்றபோதிலும், எச்சரிக்கையான ஒரு ஆலோசனையை நான் சேர்க்க விரும்புகிறேன். சிறிதளவே திரவங்களைக் கொண்ட வாளிகளில்கூட சிறிய பிள்ளைகள் மூழ்கிவிடலாம் என்பதைக் குறித்து வாசகர்களை தயவுசெய்து எச்சரிக்கையாய் இருக்கச் சொல்லவும்.

ஈ. வி., ஐக்கிய மாகாணங்கள்

நினைப்பூட்டுதல் போற்றப்படுகிறது.—ED.

என்னுடைய மகனுக்குப் பொருத்தமற்றது என்பதாக நினைத்த ஒரு விளையாட்டு பொம்மையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதாக விரும்பியதைப் பற்றிய ஒரு உரையாடலின் மத்தியில் நானும் அவனும் இருந்தோம். சிறுவனாக என்னுடைய நியாயவிவாதத்தை ஒப்புக்கொள்வதை அவன் கடினமாக கண்டான். பேசிக்கொண்டிருக்கையிலேயே நாங்கள் தபாலைத் திறந்தோம், அதில் அண்மையில் வெளிவந்திருந்த விழித்தெழு! பத்திரிகையும் வந்திருந்தது. “உங்கள் பிள்ளை எதை வைத்து விளையாடுகிறதென்று தெரியுமா?” என்ற தலைப்பைப் பார்த்து நாங்கள் இருவருமே ஆச்சரியமடைந்தோம். கட்டுரைகள் அவன் மனதைக் கவர்ந்தன, என்னுடைய நியாயவிவாதத்தை அவன் புரிந்துகொள்ள ஆரம்பித்தான்.

டபிள்யூ. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்

கட்டுரைகளுக்கு உங்களுக்கு நன்றி. எனக்கு ஏறக்குறைய 13 வயதாகிறது, நான் வீட்டிற்கு வெளியே செய்யப்படும் வேலைகளையும், கலை மற்றும் கைவினை, மற்றும் பியானோ வாசிப்பதையும் அனுபவித்து மகிழ்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, எனக்கு வேண்டிய விளையாட்டு பொம்மைகளை நானே செய்துகொள்வேன். வீடியோ விளையாட்டுக்களைவிட இந்தக் காரியங்களைச் செய்வதை விரும்புகிறேன், ஏனென்றால் அவை எனக்கு ஒரு சாதனை உணர்வைக் கொடுக்கின்றன. இந்தக் காரியங்கள் எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை மற்ற பிள்ளைகள் உணருவதற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்று நம்புகிறேன்.

சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

நீர்யானை “காப்பாற்றும் பணியில் நீர்யானை!” (அக்டோபர் 8, 1994) செய்திக் குறிப்பைப் பிரசுரித்தமைக்காக உங்களுக்கு நன்றி. அந்த இம்பாலாவை நீர்யானை காப்பாற்றிய விதத்தைப்பற்றி வாசித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். இப்பொழுது வரையாக, நீர்யானை என்பது என்னைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ஒரு உடலையுடைய, மிகப் பெரிய பற்களைக் காட்டுவதற்காக மிகப் பெரிய ஒரு வாயைத் திறந்துகாட்டி தண்ணீரில் வாழும் ஒரு மிருகமாக மாத்திரமே இருந்தது. அந்த மிருகங்களை நான் விரும்பியதாக என்னால் சொல்லியிருக்க முடியாது, ஆனால் இந்தக் கட்டுரை என்னுடைய கருத்தை மாற்றிவிட்டது.

ஒய். எச்., ஜப்பான்

இஸ்ரேலிய படைவீரனின் கதை “பயிற்றுவிக்கப்பட்டதோ கொல்ல, இப்பொழுது தருவதோ உயிரை,” கட்டுரையை இப்போது தானே வாசித்து முடித்தேன். (செப்டம்பர் 8, 1994) அநேக தடவைகள் உங்களுக்கு என்னுடைய போற்றுதலை வெளிப்படுத்தி எழுதுவதற்கு உந்தப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்பொழுது கட்டாயப்படுத்துவது போல முன்னொருபோதும் உணர்ந்ததில்லை. அநேக சமயங்களில் யெகோவாவின் ராஜ்யத்தினுடைய நற்செய்திக்கு யூதர்களின் பிரதிபலிப்பைக் குறித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது நீங்கள் ராமி ஓவெட்டின் தனிச்சிறப்புவாய்ந்த, இதயத்தைக் கனியவைக்கும் சரிதையை அளித்துள்ளீர்கள். எல்லா தடங்கல்களையும் கடவுளுடைய வார்த்தை வெற்றிகொள்வதைப் பற்றி வாசிப்பது என்னே ஒரு சந்தோஷம்!

ஜே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

எங்களுடைய குடும்பமும் யூத பரம்பரையைச் சேர்ந்ததாக இருப்பதால் இந்த சரிதை என்னை மிகவும் நெகிழச்செய்தது. தங்கள் குடும்பங்களுக்கும் மேலாக பைபிளின் சத்தியத்தைத் தெரிந்துகொள்ளும் அநேக ஆட்களுக்கு சூழ்நிலைமைகள் கடினமாகிவிடுகின்றன, ஆனால் யூதர்களுக்கு அது விசேஷமாக கடினமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்களுடைய குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் உங்களை மரித்துப்போனவர்களாக கருதுகின்றனர். ஆனால் என்னுடைய பெற்றோர் எவரையும் பிரியப்படுத்துவதற்காக சத்தியத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்டபோது என் பெற்றோரின் குடும்பத்தார் பக்குவமடைந்து மென்மையாகிவிட்டார்கள்!

எஃப். கே., ஐக்கிய மாகாணங்கள்

கண் அறுவைசிகிச்சை “ஆரை கருவிழித்திறப்பு—அது என்ன?” (செப்டம்பர் 22, 1994) கட்டுரையை நான் மிகவும் ஆர்வத்தோடு வாசித்தேன். நான் இந்த அறுவைசிகிச்சையை இன்னும் சில மாதங்களில் செய்துகொள்ள இருப்பதால், தெளிவான தகவலை வெகுவாக போற்றினேன். என்னுடைய கண் மருத்துவர் எனக்கு அளித்த தகவலைவிட இது அதிக விரிவாக இருந்தது.

ஜீ. சி., இத்தாலி

துன்புறும் பிள்ளைகள் “பிள்ளைகளுக்கான நம்பிக்கை என்ன?” (மே 8, 1994) என்ற உங்கள் தொடர் கட்டுரைகள் நடைமுறைக்கேற்றதாயும் மிக நன்றாக எழுதப்பட்டவையாகவும் இருந்தன. பயங்கரமான அனுபவங்களையும் சாவுக்கேதுவான நோய்களையும், அநேக பிள்ளைகள் துன்புறும் பயங்கரமான வாழ்க்கை சூழ்நிலைமைகளையும் வாசித்தது என்னை துக்கத்திலாழ்த்தியது. ஆனால் கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்தை ஆளும்போது கைகூடிவர இருக்கும் பிள்ளைகளுக்கான உண்மையான நம்பிக்கையைப் பற்றி வாசித்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்.

டி. ஜி., பாப்புவா நியூ கினீ

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்