உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 5/22 பக். 17-19
  • கறையான்—நண்பனா பகைவனா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கறையான்—நண்பனா பகைவனா?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கறையான் கோட்டை
  • கறையானின் சமுதாயம்
  • நண்பர்களா பகைவர்களா?
  • புத்திக்கூர்மையுள்ள பொறியாளர்கள்
    விழித்தெழு!—1994
  • உலகைகவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1989
  • பூச்சிகளின் விந்தை உலகம்
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 5/22 பக். 17-19

கறையான்—நண்பனா பகைவனா?

கென்யாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

“கூம்பெ! ம்ஷ்வா!” கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் இவ்வாறு கூவினார். அவரும் குழுவாக மற்றவர்களும் சேர்ந்து எடுத்துச்செல்லத்தக்க மரத்தால் ஆன நீச்சல் தொட்டியைத் தூக்கியபோது, இவ்வாறு கூவினார். கென்யாவில், யெகோவாவின் சாட்சிகளுடைய வட்டார மாநாட்டில் முழுக்காட்டுதல் தொட்டியாக அதைப் பயன்படுத்த நினைத்திருந்தார்கள். ஆயினும், அவர்கள் கலக்கம் கொள்ளும் விதத்தில், மரத்தின் பெரும் பகுதி அரிக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். எனவேதான் அவருடைய ஏமாற்றத்தின் கூற்றாக இருந்தது. மொழிபெயர்த்தால் அதன் அர்த்தமானது: “ஓ! கறையான்களே!”

இந்தச் சிறிய கறையான், உடைமைகளை நாசமாக்குவதில் அவ்வளவு அடிக்கடி சம்பந்தப்பட்டிருப்பதைப்போல் ஒருவேளை மற்ற எந்தப் பூச்சியினமும் சம்பந்தப்பட்டிருக்காது. ஆனால் இந்தப் பூச்சி உண்மையிலேயே மனிதனின் பகைவனா? பதிலுக்காக, நாம் கறையானை உற்றுகவனிப்போமாக.

கறையான் கோட்டை

கென்யாவில், கறையானின் புற்றுகள் உயர்ந்தோங்குவதைப் பெரும்பாலும் ஒருவர் காணமுடியும். புகைக்கூண்டைப் போன்ற அமைப்பையுடைய இவை, தரைமட்டத்திற்கு மேல், 5-லிருந்து 6 மீட்டர் உயரம் வரை நீண்டுள்ளன. அந்தப் புற்றுகள் உறுதியான கோட்டையை ஒத்திருப்பதாலும் அவ்வளவு நுட்பமாகக் கட்டப்பட்டிருப்பதாலும் கறையான்கள் கட்டடக்கலை வல்லுநர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவை ஊர்ந்து செல்லும் வேகம் அதிகக் குறைவாகவும் குருடாகவும் இருந்தபோதிலும், இத்தகைய பிரமிப்பூட்டும் கோட்டைகளை எழுப்ப இந்தச் சிறுபூச்சிகளால் கூடுமோ என்று யோசிப்பதே சவாலாக இல்லையா?

புற்றுக்கு உள்ளே நுட்பமான திகைப்பூட்டும் அறைகள், சுரங்கங்கள் உள்ளது. இந்த ஆரவாரமான முக்கிய நகரம் சிறப்பான கால்வாய் அமைப்புக்கும் காற்றோட்டத்திற்கும் காற்றுக் கட்டுப்பாட்டிற்கும்கூட பெருமைக்குரியதாய் இருக்கிறது. சூடான காற்று உச்சியிலிருக்கும் திறப்பின் வழியே வெளியேறிவிடும். குளிர்ச்சியான காற்று அடிப்பக்கத்திலிருந்து வருகிறது. மேலும் எளிய நீராவியாக மாற்றும் அமைப்பினால் குளிர்விக்கப்படுகிறது: கறையான்கள் சுவர்களில் உமிழ்நீரை உமிழ்ந்து, தண்ணீரைச் சுவரில் பரவச்செய்கின்றன. தண்ணீர் நீராவியாகி, காற்றைக் குளிர்வித்து, காற்றோட்டத்திற்கு துணைபுரிகிறது. இவ்வாறாக கறையானின் புற்று இதமான 30 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் இருக்கும்.

கறையானின் சமுதாயம்

கறையானின் சமுதாயம் இன்னும் வெகு ஆச்சரியமானது. சில கறையான் புற்றுகள், குடிமக்களின் எண்ணிக்கையில் ஐம்பது லட்சத்தைத் தொட்டுவிட்ட திறமையுடைய சமுதாயங்களுக்கு அல்லது குடியிருப்புகளுக்குப் புகலிடங்களாகத் திகழ்கின்றன. தாறுமாறான குடியிருப்பைப் போன்று இருப்பதற்குப் பதிலாக திறமையான ஒன்றிற்கு எடுத்துக்காட்டாகும். தொழிலாளர்கள், போர்வீரர்கள், இனப்பெருக்கிகள் என்று கறையானின் குடும்பம் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தங்களுடைய உமிழ்நீரைப் பூசி, உண்மையில் புற்றுகளைக் கட்டுவது தொழிலாளர்களே.

போர்வீரர்கள்தான் குடும்ப அங்கத்தினருள் அதிக முரட்டாட்டமுள்ளவர்கள். வலிமையான தாடைகளையும் கூரிய பற்களையும் கொண்டு, அவர்கள் படையெறும்புகள் போன்று படையெடுத்துவரும் பகைவர்களிடமிருந்து கோட்டையைப் பாதுகாக்கின்றனர். உணவைத்தேடி புற்றுக்கு வெளியே செல்லும் தொழிலாளர்களைப் பாதுகாக்க மெய்க்காவலர்களாகவும் செயல்படுகின்றனர். தேவைப்படுமானால், பிரத்தியேக சுரப்பிகளிலிருந்து லெத்தால் திரவத்தைச் சுரந்து, அதைப் பீச்சும் துப்பாக்கியைப்போல் உபயோகித்து, ரசாயனப் போர் புரிகின்றனர்.

இந்தப் போர்வீரர்கள் அவர்களின் சேவைக்காக எவ்வாறு பலனளிக்கப்படுகின்றனர்? ஆம், அவர்களின் தாடைகள் அவ்வளவு பெரியதாக இருப்பதால், தாங்களாகவே உணவை மென்று உட்கொள்ள முடியாததாகத் தோன்றுகிறது. ஆகவே ஒரு போர்வீரனுக்கு எப்போது பசியெடுக்கிறதோ அப்போது தன்னுடைய உணர்வுக்கொம்புகளால் வெறுமனே தொழிலாளியின் தலையை உரசும். அதன் அர்த்தமானது “எனக்கு உணவூட்டு!” இதற்கு அந்தத் தொழிலாளி உணவைப் போர்வீரனின் வாயில் வைப்பதன் மூலம் பிரதிபலிக்கிறான்.

இனப்பெருக்கிகள்—அரசனும் அரசியும்—முற்றிலும் இருள் மூடிய அரச அறையில் வாழ்கின்றனர். அரசியை அதன் சிறிய துணைவருடன் ஒப்பிடுகையில் உருவத்தில் அரசி மிகவும் பெரியவள். அவளுடைய அடிவயிறு முட்டைகளால் உப்பியிருப்பது அவளுடைய அபார இனப்பெருக்கத் திறன்களுக்குச் சான்று. நாள் ஒன்றுக்கு அவள் 4,000-திலிருந்து 10,000 முட்டைகள் வரை இடக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் அரசியை “முட்டையிடும் தானியங்கி இயந்திரம்” என்று அழைப்பதில் வியப்பேதுமில்லை.

எனினும், தொழிலாளர் கறையான் குழுவினரால் பராமரிக்கப்படுவதினால், அரச தம்பதியினருக்கு அவ்வளவாகத் தனிமை கிடைப்பதில்லை. அவர்கள் அரசியைச் சூழ்ந்துகொண்டு, உடனடித் தேவைகளைக் கவனித்து, அவளுக்கு உணவு அளிக்கின்றனர். முட்டைகள் உற்பத்தி ஆக ஆக, தொழிலாளர்கள் அவற்றை தங்கள் தாடைகளின் இடையே கவ்விக்கொண்டு குழந்தையர் காப்பறைக்கு எடுத்துசெல்கின்றனர்.

நண்பர்களா பகைவர்களா?

வியப்பூட்டும் பூச்சிகள் இவை என்பதை சிலர் மறுத்தபோதிலும், இன்றும்கூட அநேகரால் நாசம்விளைவிக்கும் பகைவர்களாகவே இவர்கள் கருதப்படுகின்றனர். டாக்டர் ரிச்சர்ட் பாஷீன், இன்வெர்ட்டிபிரெட் ஜூவாலஜி டிப்பார்ட்மென்ட் ஆஃப் நேஷனல் மியூஸியம் ஆஃப் கென்யாவின் தலைவர் விழித்தெழு!-விடம் இவ்வாறு கூறினார்: “கறையான்கள் அதிகமாக சேதம் விளைவிக்கும் பூச்சியினங்களுள் ஒன்றாக மக்களால் காணப்படுவது உண்மைதான். ஆனால் விஞ்ஞானிகள் கறையான்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அவற்றின் இயற்கையான குடியிருப்பால் கறையான்கள் தாவரத்திற்கும் விலங்கு சமுதாயத்திற்கும் பயனுள்ள அங்கத்தினர்கள்.

“முதலில் அவை இறந்த தாவர மூலக்கூறுகளைச் சிதைத்து எளிய கூட்டுச்சேர்மங்களாக மாற்றுகின்றன. இந்த விதத்தில் கறையான்கள் தாவரங்களுக்குத் தேவையான நைட்ரேட்டை மீண்டும் சுழலச்செய்கின்றன. இரண்டாவது அவை முக்கியமான உணவு மூலம் ஆகும். எல்லா வகையான பறவைகள், பெருவாரியான பாலூட்டிகள், ஊர்வன, நில நீர் வாழ்வன, மற்ற பூச்சிகள் போன்றவற்றால் உட்கொள்ளப்படுகின்றன. மேற்கு மற்றும் வடக்கு கென்யாவிலுள்ள மக்கள் அவற்றின் இனிமையான, மிகுதியான ருசியை அனுபவிக்கிறார்கள், அவை கொழுப்பும் புரதமும் செறிந்தவை. மூன்றாவது, அவை மண்ணை ஒழுங்குசெய்ய உதவுகின்றன. கறையான்கள் தங்களுடைய வீடுகளைக் கட்டும்போதும் பழுதுபார்க்கும்போதும் கீழ் மண்ணையும் மேல் மண்ணையும் கலக்கின்றன. அவை இறந்த தாவர மூலக்கூறுகளின் பெரிய துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக சிதைத்து மக்கிய சத்துள்ள மண்ணாக உருவாக்குகின்றன. மண்ணுக்கிடையே செல்வதால் தாவரங்களின் வேர்களுக்குத் தேவையான காற்றுக்கும் நீருக்கும் பாதைகளை அமைக்கின்றன. இவ்வாறாக மண்ணின் தன்மை, கட்டமைவு, வளம் ஆகியவற்றை கறையான்கள் மேம்படுத்துகின்றன.”

பின்பு ஏன் கறையான்கள் மனிதரின் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கின்றன? டாக்டர் பாஷீன் கூறுகிறார்: “உண்மையில் மனிதர்கள் தான் கறையான்களின் குடியிருப்புகளுக்குச் சென்று, கறையான்கள் பயன்படுத்தும் பெரும்பாலான தாவர மூலங்களை அகற்றிவிட்டனர். கறையான்கள் உயிர்வாழ உண்ணவேண்டும், அவை பெரும்பாலும் இறந்த தாவரங்களை உட்கொள்கின்றன. இவை எல்லாம் அவற்றிடமிருந்து அகற்றப்படும்போது, மனிதன் அமைத்த கட்டமைப்புகளான வீடுகள், களஞ்சியங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன.”

ஆகவே இந்தக் கறையான் சிலசமயங்களில் நாசம்விளைவிப்பதாக ஒருவேளை தோன்றினாலும், உண்மையில் நம் பகைவன் அல்லன். நிச்சயமாகவே, இது யெகோவாவின் படைப்பு பெருந்திறனுக்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். (சங்கீதம் 148:10, 13; ரோமர் 1:20) விரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில், மனிதன் மிருகங்களின் உலகத்தோடு ஒருமித்து வாழ கற்றுக்கொள்ளும்போது, சந்தேகமில்லாமல் இந்தச் சிறிய உயிரியாகிய கறையானை ஒரு பகைவனாக அல்ல, ஒரு நண்பனாகவே நோக்குவான்.—ஏசாயா 65:25.

[பக்கம் 17-ன் படங்கள்]

கோட்டை போன்ற கறையான் புற்று

உள்படம்: தொழிலாளி கறையான்கள்

[பக்கம் 18-ன் படம்]

பெரிய தலையுடனும் விஷ ரசாயனங்களை உற்பத்திசெய்யும் சுரப்பிகளுடனும், கறையான் குடியிருப்பைக் காக்க தயார்நிலையில் இருக்கும் போர்வீரன் கறையான்

[பக்கம் 18-ன் படம்]

அடிவயிறு முட்டைகளால் உப்பியுள்ள அரசி

[பக்கம் 18-ன் படம்]

தன் பணிவிடைக்காரர் கூட்டத்துடன் அரசி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்